புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


dimanche 23 novembre 2014

ஹஜ் செய்பவருக்கான தகவல்கள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்,,
                                                   ஹஜ் செய்பவருக்கான தகவல்கள்
ஹஜ்ஜூக்கான முன் தயாரிப்புகள்


இஹ்ராம் உடை
இஹ்ராம் ஆடை என்பது இரண்டு தைக்கப் படாத துணிகளில் ஒன்றை மேலங்கியாக வும்   மற்றொன்றை இடுப்பிலும் அணிவதாகும் .தற்போது இஹ்ராம் துணியிலேயே பெல்ட் வைத்து pin பண்ணி பட்டன் வைத்துள்ளார்கள்.
(இது பிரான்சில் metro couronnes என்னுமிடத்தில் 25-30 euro விலைகளில் கிடைக்கிறது.)
இடுப்பை சுற்றி தைக்கப் படாத பெல்ட் அணிந்து கொள்ளலாம்.
செருப்பும் தைக்கப் படாமல் இருக்க வேண்டும்.
மருந்து மாத்திரைகள் எடுத்துகொள்ள வேண்டும்.
ஹரமிர்க்குள் காலணிகள் கொண்டு செல்ல முதுகில் மாட்டிக் கொள்ள கூடிய bag எடுத்துக் கொள்ள வேண்டும்.
குரான் மற்றும் துஆ கையேடுகள் அவசியமாக எடுத்துக் கொள்ள  வேண்டும்.
செல்போன் எடுத்துக் கொள்ள வேண்டும்.  
ஒரு சிறிய  kit bag இல் பல் துலக்கும் brush,பேஸ்ட் சோப்,கத்தரிகோல் எடுத்துக் கொள்ளலாம்.



நபிவழி ஹஜ் செய்யும் முறைகள் புத்தகம் படித்தும்  மற்றும் விளக்க வீடியோபார்த்தும்  மற்றும் ஹஜ் சென்றவர்களிடம் விளக்கமாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
முக்கியமாக இரண்டு மாதங்கள் முன்கூட்டி நடைபயிற்சி செய்தல் பயனுள்ளதாக இருக்கும்.


“ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும்.அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டா வாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்! “(2:197)


நிய்யத்
வீட்டிலிருந்து கிளம்பும் போது நன்றாக குளித்து விட்டு நறுமணம் பூசிவிட்டு இஹ்ராம் உடை அணிந்து நறுமணம் பூசிவிட்டு கிளம்ப வேண்டும்.
கையில் இஹ்ராம் துணிகள்,செருப்பு, பெல்ட் போன்றவைகளை கைப் பெட்டியில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Transit அதாவது Egypt போன்ற ஒரு நாட்டில் இறங்கி செல்பவர்கள் அங்கு சென்றும் குளித்துவிட்டு இஹ்ராம் அணிந்து கொள்ளலாம்.
விமானத்தில் ஏறியவுடன் பிரயாண துஆ வை ஓதிக் கொள்ள வேண்டும்.


உம்ரா செய்முறை


வெளிநாட்டிலிருந்து செல்பவர்கள் பெரும்பாலும் "தமத்துவ்" என்ற முறையில் ஹஜ் செய்பவர்களாக உள்ளார்கள்.அவரவர் நாட்டிற்கு  நிர்ணயிக்கப் பட்ட எல்லை வந்தவுடன் நிய்யத் வைத்துக் கொள்ள வேண்டும்.விமானத்தில் செல்லும் போது எல்லை வரும்போது அறிவிப்பு செய்வார்கள் அப்போது "லெப்பைக்க உம்ரதன்" என்று நிய்யத் வைத்துக் கொள்ள வேண்டும்.




அதிலிருந்து
لَبَّيْكَ اَللهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لآ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لآ شَرِيْكَ لَكَ


"லெப்பைக் கல்லாஹும்ம லெப்பைக்,லெப்பைக்க லாஷரீக்க லக்க லப்பைக்,இன்னல் ஹம்த வ நிஃமத்த லக்கவல் முல்க் லாஷரீக்க லக்!
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1549, 5915


என்ற தல்பியாவை தொடர்ந்து ஓதிக் கொண்டே இருக்க வேண்டும்.


மஸ்ஜிதுல்ஹரமில் பிரவேசிக்கும் முன் பள்ளிவாசல்களில் நுழையும்போது ஓதும் துஆ வை ஓதிக் கொள்ள வேண்டும்.
பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க
பொருள்: இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.  ஆதாரம்: முஸ்லிம் 1165


நுழையும் போது “பாபு பனீ ஷைபா” பாபுஸ்ஸலாம் என்ற நுழைவாயில் வழியாக
பிரவேசிப்பது நபிவழியாகும்.
ஹரமில் பிரவேசித்த உடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.


தவாஃப் அல்குதூம்
ஹரமிர்க்குள் வருகை தந்த பிறகு காபாவை வலம் வரும்வருதலை  ‘தவாஃப் அல்குதூம்’ என்றழைக்கப் படுகிறது.
ஒருவர் மக்காவிற்கு  எப்போது வருகை தருகிறாரோ அப்போது இந்த  ‘தவாஃப் அல்குதூம்’ மை
செய்ய வேண்டும்.
கஃபா ஆலயத்தை ஏழு முறை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள்  ‘தவாஃப் அல்குதூம்’ செய்யும் போது மட்டும் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நன்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல் புஹாரி 1644, 1617


தவாஃப் செய்யும்போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது தோல் புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக யஃலா பின் முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்கள் :திர்மிதி 787 அபூதாவூத் 1607


ஹஜ்ருல் அஸ்வத்

ஹஜ்ருல் அஸ்வத் கல் பதிக்கப் பட்ட மூலையிலிருந்து தவாஃபை துவக்க வேண்டும்.
அடையாளத்திற்காக ஹஜ்ருல் அஸ்வத் எதிரில் உயரமான இடத்தில பச்சை விளக்கு வைத்திருப்பார்கள்.
முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் மற்ற நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்ய வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத்திலிருந்து ஹஜ்ருல் அஸ்வத் வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: 2213, 2214.


ஹஜ்ருல் அஸ்வத் கல்லை மிகுந்த கூட்ட நெரிசலில் தொடுவதற்காக வயதானவர்கள்,சிறியவர்கள்,
பெண்கள் போன்றவர்களை இடித்துக் கொண்டும், முண்டியடித்துக் கொண்டும் செல்வது கூடாது.
இயன்றால் முத்தமிடலாம் அல்லது தொட்டு முத்தமிடலாம் அல்லது கையை உயர்த்தி தொடுவது போல சைகை செய்ய வேண்டும்.தக்பீரும் கூற வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள்.(ஹஜ்ருல் அஸ்வத் அமைந்த)
மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்( ரலி) நூல் புஹாரி 1612,1613,1632,5293
மற்ற ஆதாரங்கள்: புஹாரி 1611, 1606, 1608
ருக்னுல் யமானி


ருக்னுல் யமானி என்ற கஃபா வின் மற்றொரு மூலையை இயன்றால் தொட்டு முத்தமிடுவது நபிவழியாகும்.
நபி (ஸல்) அவர்கள் நான்கு மூலைகளில் ‘யமானி’ எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத்  தொட்டு நான் பார்த்ததில்லை.

அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல் : புஹாரி 166 , 1609


தவாஃப் செய்யும் போது ருக்னுல் யமானி மூலை  வரும்போது


رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار
“ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்”
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.


அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப் (ரலி),நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616


மேற்கண்ட துஆ வை ருக்னுல் யமானி மூலையிலிருந்து ஹஜ்ருல் அஸ்வத் கல்லின் மூலை
வரும் வரை ஒத வேண்டும்.அதன் பிறகு நீங்கள் குர்ஆனிலிருந்தோ  அல்லது நபி (ஸல்) அவர்கள்
கற்றுக் கொடுத்தோ துஆக்கலையோ அல்லது உங்களுக்காக பாவ மன்னிப்பு துஆ அல்லது
தேவைகள் இம்மை மறுமை வெற்றிக்காக எந்த துஆக்களையும் ஓதலாம்.


மகாமு  இப்ராஹிம்


கஃபா வை தவாஃப் செய்த பிறகு மகாமு இப்ராஹிமில் இரண்டு ரகஅத்கள் தொழ வேண்டும்.
அந்த தொழுகையில்  ‘குல்ஹுவல்லாஹு அஹத்’ சூராவையும் ‘குல்யா அய்யுஹல் காபிரூன்’
சூராவையும் ஓதிக் கொள்ள வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் தவாஃபை முடித்து விட்டு ‘மகாமு  இப்ராஹிம்’ என்ற இடத்தை அடைந்த போது
“மகாமு இப்ராஹிமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.” என்ற 2:125 வசனத்தை ஓதினார்கள்.இரண்டு ரகஅத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் ‘குல்யா அய்யுஹல் காபிரூன்’
சூராவையும் ‘குல்ஹுவல்லாஹு அஹத்’ சூராவையும் ஓதினார்கள்.பின்னர் திரும்பவும் ஹஜ்ருல் அஸ்வத்துக்கு சென்று அதைத் தொட்டு முத்தமிட்டார்கள்.பிறகு சஃபாவுக்குச் சென்றார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் முஸ்லிம் 2137


இந்த இரண்டு ரகஅத்கள் ‘மகாமு  இப்ராஹிம்’ அருகில் தவாஃப் செய்பவர்களுக்கு இடைஞ்சல்
கொடுக்கும் முகமாக இருக்கக் கூடாது.
ஸஃபா மர்வா வில் ஸஃயி செய்வது (ஓடுவது)

நபி (ஸல்) அவர்கள் ஸஃபா வை அடைந்ததும் “ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்.”

என தொடங்கும் குர் வசனத்தை ஓதிக் கொள்ள வேண்டும்,






2:158
ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை.  நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்;  அறிந்தவன். (அல்குர்ஆன் 2:158)


முஸ்லிம் 2137


மேலும் ஸஃபா விலிருந்து கிப்லாவை முன்னோக்கி


“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தா”
என்று மூன்று முறை கூறினார்கள்.பிறகு  துஆ செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல் முஸ்லிம் 2137


ஸஃபாவிலிருந்து மர்வா சென்றடைந்ததும் ஒரு சுற்று நிறைவடையும் மர்வாவிலிருந்து ஸஃபா
வந்தடைந்ததும் இரண்டு நிறைவடையும் இந்த அடிப்படையில் ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.


“நபி (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயி செய்தார்கள்.ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.”
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல் முஸ்லிம் 2137
ஸஃபாவில் சிறிது தூரம் நடந்ததும் பச்சை விளக்கு அடையாளம் வைத்திருப்பார்கள் அங்கிருந்து அந்த பச்சை விளக்கு முடியும்வரை ஓட்டமாக செல்ல வேண்டும்.


ஸஃபாவில் துஆ திக்ருகள் செய்தது போலவே மர்வா வந்ததும் செய்ய வேண்டும்.


முதல் சுற்று ஸஃபாவில் தொடங்கி ஏழாவது சுற்று மர்வாவில் நிறைவு செய்ய வேண்டும்.
ஏழு சுற்று நிறைவடைந்ததும் முடியை இறக்க வேண்டும்.விரும்பியவர் முடியை முழுமையாக இறக்க வேண்டும் விரும்பியவர் சிறிது கத்தரித்தும் கொள்ளலாம்.
பிறகு இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடலாம். சாதாரண உடையில் 8ம் நாள் ஹஜ்


8 ம்  நாள் மினாவுக்கு செல்லுதல் (தர்வியா)


மக்காவில் உள்ளவர்கள் தங்கியுள்ள இடத்திலேயே குளித்து நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராம் அணிந்து கொள்ளலாம். ஒரு சிலர் வசதிக்காக ஏழாம் நாள் இரவே மினாவிற்கு சென்று விடுவார்கள்.

8 ம் நாள் லுஹர் தொழுகைக்கு முன் மினாவிற்கு சென்றுவிட வேண்டும்.அங்கு லுஹரையும் அஸரையும் இரண்டிரண்டு ரக்அத் களாக தொழ வேண்டும்.
அதன் பிறகு மக்ரிப் மற்றும் இஷா தொழுகை களை அதனதன் நேரங்களில் தொழ வேண்டும்.
மக்ரிபை மூன்றாகவும் இஷாவை இரண்டு ரக்அத் களாக தொழ வேண்டும்.8 ம் நாள் இரவு மினாவிலேயே தங்க வேண்டும்.



9 ம் நாள் அராபா (அராபா நாள்)


ஹஜ் கிரியைகளில் இந்த நாள் மிக முக்கியமான நாளாக உள்ளது.
ஒன்பதாம் நாள் காலை சுப்ஹு  தொழுகையை மினாவிலேயே தொழுதுவிட்டு சூரியன் உதயமாகும் வரை தாமதித்து விட்டு  அங்கிருந்து அரபாவிர்ற்கு கிளம்ப வேண்டும்.
வழியில் தல்பியாவும் தக்பீரும் சொல்லிக் கொண்டே சொல்ல வேண்டும்.
இந்த அராபா நாளில் சிறிது நேரேமேனும் அரபா மைதானத்தில் தங்கிவிட்டால் ஹஜ்ஜை
அடைந்துகொள்வார்  என்பது நபிமொழியாகும்.
அங்கு (நமீரா)இமாம் குத்பா உரை நிகழ்த்துவார் அதை செவிமடுக்க வேண்டும். அதன் பிறகு லுஹர் தொழுகைக்கு பாங்கு சொல்லி இகாமத் சொல்லி இரண்டு ராகஅத் தொழ  வேண்டும் .
பிறகு இகாமத் கூறி அஸர் தொழுகையை ஜம்வு செய்து தொழ வேண்டும்.
அரபா நாளில் சிறிது நேரத்தை கூட வீணாக செலவழிக்க கூடாது.அங்கு கேட்கப் படும் துஆக்களை நிறைவேற்றுவதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான்.பின் வரும் நபிமொழியும்
அதன் முக்கியத் துவதை பறை சாற்றுகிறது. ஆகவே மறக்காமல் துஆ கையேடுகளை கொண்டு செல்ல வேண்டும்.மேலும் இம்மை மறுமை வெற்றிக்காகவும்,பாவமன்னிப்பு ,மற்றும் தேவைகளை கிப்லாவை முன்னோக்கி கேட்கலாம்.ஜபலுர் ரஹ்மத் மலை அடிவாரத்தில் துஆ செய்வது நபிவழி.


"ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான். பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (நூல்கள்: நஸயீ2966, 2994 திர்மிதீ 814)
நான் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள். (நூல்: நஸயீ2961)


அரஃபா தினத்தைக் காட்டிலும் வேறெந்த நாளிலும் அல்லாஹ் அடியார்களை மிக அதிகமாக நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை. அல்லாஹ் இந்நாளில் மலக்குகளிடம் மிக நெருக்கமாக வந்து, "இவர்கள் எதை விரும்புகிறார்கள்?'' என்று கேட்கின்றான். (நூல்: முஸ்லிம் 2402)


அரபாவில் சூரியன் அஸ்தமிக்கும் வரை தங்கிவிட்டு பிறகு முஸ்தலிபா விற்கு அமைதியாக செல்ல வேண்டும்.


முஜ்தலிபாவிற்கு செல்லுதல்  


அரபாவிலிருந்து சூரியன் மறைந்தபிறகு முஜ்தலிபாவிற்கு வந்துவிடவேண்டும். வந்தவுடன் ஒரு பாங்கும் இரு இகாமத்தும் கூறி மக்ரிபையும் இஷாவையும் தொழவேண்டும்.பிறகு அங்கு படுத்து உறங்கிவிட்டு மறுநாள் பஜ்ரு நேரம் வந்தவுடன் பாங்கு சொல்லி சுப்ஹு தொழவேண்டும்.அதன் பிறகு “மஷ்அருள் ஹராம்” என்ற இடம் வந்ததும் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தும் துஆவும் செய்து விட்டு சூரியன் உதயமாவதற்கு முன் அங்கிருந்து புறப்பட்டு  மீண்டும் மினாவிற்கு செல்ல வேண்டும்.


பெண்கள் வயதானவர்கள் பஜ்ரு வரை தாமதிக்காமல் இரவே சென்று விட அனுமதி உள்ளது.ஆனால்
அவர்களுடன் அனைவரும் சென்று விட்டனர்.இரவே செல்ல பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் தான் அனுமதி உள்ளது ஆனால் group ஐ வழிநடத்தும் guide கல் முஜ்தலிபாவில் ஹாஜிகளை
தங்கவைக்காமல் அவர்களின் வசதிக்காக மினாவிற்கே அழைத்து சென்று விடுகிறார்கள்.முஜ்தலிபாவில் தங்க வசதி இருக்காது ஏனென்றால் மலை அடிவாரத்தில்
அமைந்துள்ளது போகும்போது ஆளுக்கொரு பாயும் சிறிய போர்வையும் கொண்டு செல்வது நல்லது.
மக்காவில் குறைந்த விலையில் பிளாஸ்டிக் பாய் கிடைக்கிறது.ஜம்ராவில் கல்லெறிய முஜ்தலிபாவில்
மலை அடிவாரத்தில் கற்களை பொருக்கி கொள்ளலாம்.தண்ணீர் குடிக்கும் சிறிய காலிபாட்டில் களில் கற்களை நிரப்பிக் கொள்ளலாம்.மொத்தம் 50 க்கும் மேற்பட்ட கற்களை பொறுக்கிக் கொள்ளலாம்.


10 ம் நாள் ஜம்ராவில் கல்லெறிதல்


துல் ஹஜ் பத்தாம் நாள் மினாவிலிருந்து சூரியன் உதயமான பிறகு ஜம்ராவில் கல்லெறிய  செல்ல வேண்டும். வழியில் தல்பியாவும் தக்பீரும் சொல்லிக் கொண்டு செல்ல வேண்டும்.பெண்கள் மற்றும்
முதியவர்கள் முந்தைய நாள் இரவோ அல்லது 10 ம் நாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்போ
செல்ல அனுமதி உள்ளது.அதன் பிறகு


1 ஜம்ரதுல் அகபா எனப்படும் பெரிய ஜம்ராவில் தொடர்ந்து ஏழு கற்களை எறிய வேண்டும்.ஒவ்வொரு கல்லை எறியும் போதும் “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் கூற வேண்டும்.
2 பின்னர் குர்பானி கொடுக்க வேண்டும்.
3 அதன் பின்னர் தலை முடியை குறைக்கவோ அல்லது முழுவதுமாக மழிக்கவோ வேண்டும்.
4 பிறகு ஹஜ்ஜுடைய தவாபான “தவாபுல் இபாதா” வை செய்ய வேண்டும்.அதாவது ஏழு முறை
சுற்ற வேண்டும்.மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக் அத் தொழுதுவிட்டு பிறகு சபா மர்வாபில் சயீ செய்ய வேண்டும்.
5 பின்னர் இஹ்ராமிலிருந்து விலக்கப் பட்டவை அனைத்தும் ஹலால் ஆகிவிடும்.
6 அடுத்தடுத்த நாட்களில் கல்லெறிய மினாவிற்கு சென்று தங்கிவிட வேண்டும்.


11ம் 12 ம் மற்றும் 13 ம் நாட்கள். (அய்யாமுத் தஷ்ரீக்)


11 ம் நாள் அன்று சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் கல்லெறிய ஜம்ராவிற்கு செல்ல வேண்டும்.
முதலில் சிறிய ஜம்ரவான “ஜம்ரதுல் ஊலா” என்ற இடத்தில ஏழு சிறிய கற்களை எறிந்துவிட்டு பிறகு
கிப்லாவை முன்நோக்கி துஆ செய்யவேண்டும்.பிறகு நடு ஜம்ராவான “ஜம்ரதுல் உஸ்தா” என்னுமிடத்தில் ஏழு சிறிய கற்களை எறிந்துவிட்டு பிறகு கிப்லாவை முன்நோக்கி துஆ செய்யவேண்டும்.பிறகு நடு ஜம்ராவான “ஜம்ரதுல்அகபா ” என்னுமிடத்தில் ஏழு சிறிய கற்களை எறிந்துவிட்டு துஆ செய்யாமல் திரும்பிவிட வேண்டும் இவ்வாறு நபி(ஸல்) செய்துள்ளார்கள்.
11ம் 12 ம் நாட்கள் கல்லெறிந்து விட்டு விரும்பியர் மக்கா சென்று விடலாம்.விரும்பியவர்கள் 13 ம் மினாவில் தங்கி கல்லெறிந்து விட்டு திரும்பலாம்.


தவாஃபுல் விதாஃ


மினாவில் கல்லெறிந்து முடிந்தவுடன் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன.என்றாலும்
இறுதியாக விடை பெரும் தவாபான “தவாஃபுல் விதாஃ” பயண தவாபை (மாதவிடாய் பெண்கள் தவிர) நிறைவேற்ற வேண்டும்.


மக்கள் பல திசைகளிலும் புறப்பட்டு செல்லலானார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் “கடைசி கிரியையை அல்லாஹ்வின் ஆலயத்தில் (தவாப்ஃ) செய்து விட்டு புறப்படுங்கள்” என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)  நூல்: முஸ்லிம் 2350, 2351
  ஹஜ்ஜில் தடுக்கப் பட்டவைகள்

“ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும்.அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டா வாதம் புரிவதோ கூடாது.(2:197)






lundi 3 novembre 2014

ஹலால் டெஸ்ட் (சோதனை கருவி)

ஹலால் டெஸ்ட் (சோதனை கருவி)


முஸ்லிம்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் புதிய கருவி ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் சில உணவுப் பொருட்களில் பன்றியின் இறைச்சியோ அல்லது அதன் கொழுப்போ கலந்திருக்கும் அந்த உணவுப் பொருட்களின் உரையில் 

E 471 போன்ற E code முறையில் எழுதப் பட்டிருக்கும்.E471(lecithin de  soja) சோயாவில் இருந்து எடுக்கப் பட்ட கொழுப்பு என்றால் ஹலால்,அப்படி எழுதாமல் விட்டுருந்தால்
 அதில் எதாவது ஒரு விலங்கின் கொழுப்பு கலந்திருக்க வாய்ப்புள்ளது. ஆகையால் Ecode 
இருந்தாலே அதை  நம்மில் பெரும்பாலனோர் தவிர்த்து வருகின்றோம். இனி இந்த பிரச்சனையிலிருந்து விடுபட இறைவன் அருள் புரிந்து இருக்கின்றான்.

" HERTA HALAL" என்ற நிறுவனத்தின் இறைச்சிகளில் பன்றி இறைச்சி கலந்திருப்பது நினைவிருக்கலாம்.2011 வருடத்தில் அந்த 
நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் தடை செய்யப் பட்டது. 

இந்த "ஹலால் டெஸ்ட்" கருவியை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Abderrahmane Chaoui மற்றும் Vital Julien என்ற இரு இளைஞர்கள் Capital Biotech என்ற நிறுவனம் மூலம் உற்பத்தி செய்து வெளியிட்டுள்ளார்கள்.ஒரு கருவியின் ஆரம்ப விலை 6,99€ அல்லது 25 அடங்கியது  125€ என்ற அளவில் நிர்ணயம் செய்துள்ளார்கள்.

இந்த கருவி ஒரு குப்பி வடிவில் உள்ளது அதில் சிறிதளவு கொதி நீரை விட்டு அதில் சோதனை செய்ய வேண்டிய இறைச்சியின் சிறிய துண்டுப் பகுதியை உள்ளே வைக்க வேண்டும் பிறகு சிறிது நேர இடைவெளியில் அதனுடன் கொடுக்கப் பட்ட ஒரு சிறிய ஸ்ட்ரிப் பை அந்த குடுவை 
உள்ளே வைத்திருக்க வேண்டும் அந்த ஸ்ட்ரிப் பின் முதல் கோடு தோன்றும் அதன்பிறகு இரண்டாவது கோடும் தோன்றினால் அதில் பன்றி இறைச்சி கலந்துள்ளது என்பதை கண்டுகொள்ளலாம்.

மேலும் இந்த கருவியை வைத்து உணவிலோ அல்லது குளிர் பானத்திலோ "அல்கஹால்" கலந்துள்ளத்தையும் கண்டுபிடிக்க இயலும் என்பது 
மேலும் சந்தோசமான செய்தியாகும்.

விரைவில் ஆடு, மாடு போன்ற விலங்கில் இறைச்சி ஹலால் முறைப்படி அறுக்கப் பட்டதா என்பதையும் இனம் காணக் கூடிய ஒரு கருவியையும் 
கண்டுபிடிக்க போவதாக அறிவித்துள்ளனர்.ஒரு விலங்கின் இறைச்சியில் ஹலால் முறைப்படி அறுக்கப் பட்டு இரத்தம் வெளியேறி உள்ளதா 
அல்லது வெளியேறாமல் இறைச்சியில் தங்கியுள்ளதா என்ற அடிப்படையை வைத்து இனம் காணக் கூடியாத இருக்கும் என தெரிகிறது.

முஹம்மது இன்சாப்
FRTJ துணைத் தலைவர்
பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத்

ஆதாரம்: (thanks)
http://fr.metrotime.be/2014/10/20/must-read/halal-test-un-test-pour-detecter-les-traces-de-porc-dans-votre-repas/
http://tempsreel.nouvelobs.com/societe/20141014.OBS2062/des-tests-halal-pour-les-consommateurs-musulmans.html
http://www.20minutes.fr/societe/1464435-20141020-tests-halal-detecter-presence-porc-alcool-assiettes

dimanche 3 août 2014

சூனியம்- என்னதான் பிரச்சனை?

சூனியம்- என்னதான் பிரச்சனை?
நீண்ட ஆய்வுகள்,பயான்கள்,விளக்கங்கள்,விதண்டாவாதங்களுக்கு தக்க பதில்கள் போன்ற அனைத்தையும் கொடுத்தாகிவிட்டது. குர்ஆன் ஆயத்துக்களையும் ஹதீஸ் ஆதாரங்களையும் காட்டியும் தெளிவு படுதியாகி விட்டது.சூனியம் இருந்தது அல்லது இருக்கிறது என்று 
நிரூபித்து காட்ட சொல்லி அறைகூவலும் விடப் பட்டது.எதை சொன்னாலும் அதில் விதண்டாவாதம் செய்தே வருகிறார்களே அது ஏன்?
விளக்கம் 
1 TNTJ ஒன்றை இருக்கு என்றால் இவர்கள் அதை இல்லை என்று மார்க்க வழியில் மறுக்க பார்பார்கள்.இல்லை என்றால் இருக்கு என்பார்கள்.
2 மார்க்கத்தை நன்றாக அறிந்த உடன் அதில் வரம்பு மீறி நடந்து கொள்வார்கள்.
3 தங்கள் பத்வா கொடுத்து விட்டால், யாரவது தவறு என்று சுட்டிக் காட்டினால் திருத்தி கொள்ள மாட்டார்கள்.
4 ஹதீஸ்கள் குரானுக்கு முரண் பட்டாலும் அதை எதாவது விளக்கம் கொடுத்து நிறுவ பார்பார்கள்.

ஆகவே இது போன்ற எதாவது ஒரு காரணத்தை வைத்து தான் சூனியம் என்றால் magic என்றும் சூனியம் செய்பவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.
என நன்றாகத் தெரிந்திருந்தும் தெளிவான வழிகேட்டில் இருந்தும் அவர்களை நம்பியவர்களை வழிகேட்டில் விட்டும் வருகிறார்கள்.

சரி சூனியம் இருக்கிறதா இல்லையா?
1 யூதர்கள் மற்றும் நிராகரிப்பாளர்கள் இறைத் தூதர்களை சூனியம் செய்பவர்கள் என்றும் அவர்கள் கொண்டு வந்தது வேதமல்ல அது சூனியம் 
   என்றும் மக்களை நேர்வழி  இலிருந்து திசை திருப்ப பயன் படுத்தினார்கள்.
2 இந்த காலத்தில் சோதிடர்கள் மற்றும் ஜின்களை வைத்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் குறி காரர்கள் போன்ற வர்கள் தங்களை நாடி 
   வரும் மக்களுக்கு எதையாவது கூறி பணம் பறிக்க சூனியம் செய்கிறேன் என்று ஏமாற்றிவந்தார்கள்.
3 தவறு செய்பவர்கள்  தாங்கள் மாட்டிக் கொள்ள கூடாது என்பதற்காகவும் மன ரீதியாக ஏமாற்றவும் மிரட்டி காரியம் செய்வதற்க் காகவும் 
   சூனியம் என்று இல்லாத ஒன்றை காட்டி தப்பித்து வந்தார்கள்.
4 தகாத நோய் எதாவது ஒன்று வந்து விட்டால் அதை சொல்ல வெட்கப் பட்டுக்கொண்டு யாரோ சூனியம் செய்து விட்டார்கள் என்று 
   என்றும் மக்களை ஏமாற்றி வந்தார்கள்.
5 ஒருவன் ஒரு தவறான வழியில் பெண் தொடர்பு இருந்தால் அவள் அவனை சூனியம் செய்த காரணத்தினால்தான் அவ்வாறு செய்கிறான் என்று 
   அவனை காப்பாற்ற இல்லாத சூனியத்தை பயன்படுத்தி வந்தார்கள்.

சூனியம் வழிகேடு என்பதற்கும் சூனியக் காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள் என்பதற்கும் ஏராளமான குர் ஆன் ஆயத்துகளை காட்டி விட்டோம் 
ஷைத்தானிற்கு சூனியம் செய்ய முடியும் அளவிற்கு சக்தி உள்ளது என்ற நம்பிக்கை பெரிதா ?அல்லது எல்லாம் வல்ல இறைவன் தவிர வேறு 
எவனும் எந்தவித தீங்கும் செய்ய இயலாது.என் இறைவன் எனக்கு நல்லதே செய்வான் என்ற நம்பிக்கை பெரிதா? சிந்தியுங்கள்!

சூனியத்தால் எந்த தீங்கும் செய்ய இயலாது ஆனால் சூனியம் உள்ளது என்று 'இருக்கு ஆனால் இல்லை' என்ற ஸ்டைலில் மாற்றி மாற்றி பேசிவருகிறார்கள்.இவர்களை நம்பி இவர்கள் பின்னால் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.ஏனெனில் இருக்கு என்ற 
அவர்களது நம்பிக்கையே நாளை அவர்களுக்கு எதாவது ஒரு கேட்ட விஷயம் நடந்தால் சூனியத்தால் ஏற்பட்டிருக்குமோ என்ற எண்ண  வைத்து 
வழிகேட்டில் விழ வைத்துவிடும் .அல்லாஹ் காப்பாற்றுவானாக.ஆனால் சூனியத்தை நம்பாதவர்கள் ஒரு பிரச்சனை வந்தால் இது அல்லாஹ்வின் 
சோதனை என்று அவன் மேல் நம்பிக்கை வைத்து பொறுமை யாக இருப்பார்கள்.

ஆகவே சூனியம் இருக்கிறது அதற்க்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் உள்ளது என்று உங்களிடம் யாராவது வந்தால் அவர்களிடம் கூறுங்கள் 
நாங்கள் அல்லாஹ்வையே ஈமான் கொண்டோம் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம் நீங்களும் இந்த வழிகேட்டிலிருந்து விலகிவிடுங்கள் 
அல்லது நாங்கள் வழிகேட்டிலிருந்து விலகிவிட்டோம் என்று கூறி விடுங்கள்.அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள். அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி) நூல் : அஹ்மது (26212)

முஹம்மத் இன்சாப் .

dimanche 29 juin 2014

வித்ருத் தொழுகை

இஷாத் தொழுகைக்குப் பின்னால் ஃபஜருடைய பாங்கு சொல்லப்படும் வரை இடைப்பட்ட நேரத்தில்ஒற்றைப்படையாக உரியாக நாம் தொழும் தொழுகைக்கு வித்ருத் தொழுகை என்று கூறப்படுகின்றதுமேலும்இத்தொழுகைக்கு இரவுத்தொழுகை என்றும் கூறப்படுகின்றதுஇரவின் கடைசிப் பகுதியில் இத்தொழுகையைதொழுதால் அதற்கு தஹஜ்ஜத் தொழுகை என்று கூறப்படுகின்றது.
இத்தொழுகைக்கு மார்க்கத்தில் ஏராளமான சிறப்புகள் சொல்லப்பட்டிருக்கின்றது.
விலகி விடும் விலாப்புறங்கள்
அச்சத்துடனும்எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்துவிலகும்நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்செலவிடுவார்கள்அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாககண் குளிரும் வகையில் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.
(அல்குர்ஆன் 32:16,17)
நரகத்திலிருந்து பாதுகாப்பு
நபி (ஸல்அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம்நானும்ஒரு கனவு கண்டுஅதை நபி (ஸல்அவர்களிடம் எடுத்துரைக்க ஆசைப்பட்டேன்அப்போது நான் இளைஞனாகவும்பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாவும் இருந்தேன்இரண்டு மலக்குகள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டுசென்றார்கள்கிணற்றுக்குச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்ததுஅதற்கு இரண்டுகொம்புகள் இருந்தனஇதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர்அப்போது நான் நரகத்தை விட்டும்அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகின்றேன் என்று கூறினேன்அப்போது வேறு ஒரு மலக்கு என்னைச் சந்தித்து நீர்பயப்படாதீர் என்று கூறினார்இவ்வாறு நான் கனவு கண்டேன்இக்கனவை ஹஃப்ஸா (ரலியிடம் கூறினேன்அவர்கள் நபி (ஸல்அவர்களிடம் கூறினார்கள்அப்போது நபி (ஸல்அவர்கள், "அப்துல்லாஹ் இரவில் தொழுபவராகஇருந்தால் அவர் மனிதர்களிலேயே மிகவும் நல்லவர்!'' என்று கூறினார்கள்அதன் பின்னர் குறைந்த நேரமே தவிர நான்உறங்குவதில்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 1121, 1122
பொறாமை கொள்ளத்தக்க அமல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.
1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான்அதனை அவர் இரவு நேரங்களில் ஓதிவழிபடுகின்றார்.
2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான்.  அவர் அதனை இரவுபகல் எல்லா நேரங்களிலும்தானம் செய்கின்றார்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின்  உமர் (-),  நூல் : புகாரி 5025
வல்ல இறைவனின் வானுலக வருகை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்:
நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, "என்னிடம்யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன்யாரேனும் என்னிடம் கேட்டால் நான் அவருக்குக்கொடுக்கின்றேன்யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்'' என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (-)  நூல் : புகாரி 1145
கேட்டது கிடைக்கும் நேரம்
நிச்சயமாக இரவில் ஒரு நேரமுண்டுஒரு முஸ்லிமான மனிதர் சரியாக இந்த நேரத்தில் இம்மைமறுமை தொடர்பானஎந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லைஇது ஒவ்வொரு இரவிலும்நடக்கின்றது என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்ஜாபிர் (ரலி)
 நூல்முஸ்லிம் 1259
சுவனமே கூலி
"ஸலாமைப் பரப்புங்கள்ஏழைகளுக்கு உணவளியுங்கள்மக்கள் தூங்கும் போது தொழுங்கள்! (இதனால்)சொர்க்கத்தில் நுழையுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)
நூல் : திர்மிதீ 2409
தொழத் தொடங்கியவர் விடலாகாது
நபி (ஸல்அவர்கள் என்னிடம், "அப்துல்லாஹ்வேஇரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப்போல் ஆகி விடாதீர்!'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல் : புகாரி 1152
கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்தஅதிக நன்மையைப் பெற்றுத் தரக் கூடிய தொழுகை,இரவில் தொழும் தொழுகையாகும்.
"ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்புஅல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும்நோன்பாகும்கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகைஇரவில் தொழும் தொழுகையாகும்'' என்று நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்அபூஹுரைரா (ரலி)
நூல்முஸ்லிம் 1982
இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை)2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும்தொழுகைஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.
இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும்ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ளநாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.
ஒரு மனிதர் நபி (ஸல்அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றி கேட்டார்அதற்கு நபி (ஸல்அவர்கள், "இரவுத்தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும்உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றிஅஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும்அவர் (முன்னர்தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்'' என்று நபி(ஸல்அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்இப்னு உமர் (ரலி)
நூல்புகாரீ 990
இரவுத் தொழுகையின் நேரம்
இஷா தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம்நபி (ஸல்அவர்கள்அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.
நபி (ஸல்அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்11 ரக்அத்கள்தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)
நூல்முஸ்லிம் 1216
இரவின் கடைசியின் மூன்றிலொரு பகுதி நேரமான போது 11 ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்புகாரீ 7452
நபி (ஸல்அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்முஸ்லிம் 376
நபி (ஸல்அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்புகாரீ 183
நபி (ஸல்அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ர் தொழுதுள்ளார்கள்அவர்களின் வித்ர் (சில நேரங்களில்)ஸஹர் வரை நீடித்துள்ளது.
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)
நூல்புகாரீ 996
ரக்அத்களின் எண்ணிக்கை
8+3 ரக்அத்கள்
"ரமலானில் நபி (ஸல்அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?'' என்று ஆயிஷா (ரலிஇடம் நான் கேட்டேன்.அதற்கவர்கள், "நபி (ஸல்அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விடஅதிகமாகத் தொழுததில்லைநான்கு ரக்அத்கள் தொழுவார்கள்அதன்  அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே!பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதேபின்னர் மூன்று ரக்அத்கள்தொழுவார்கள்'' என்று விடையளித்தார்கள்.
"அல்லாஹ்வின் தூதரேவித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?'' என்று நான் கேட்டேன்அதற்கு நபி(ஸல்அவர்கள் "ஆயிஷாஎன் கண்கள் தாம் உறங்குகின்றனஎன் உள்ளம் உறங்குவதில்லை'' என்றுவிடையளித்தார்கள்.
அறிவிப்பவர்அபூஸலமா
நூல்கள்புகாரீ 1147, முஸ்லிம் 1220?
12+1 ரக்அத்கள்
நபி (ஸல்அவர்களின் மனைவியும் எனது சிறிய தாயாருமான மைமூனா (ரலிஅவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவுதங்கினேன்நான் தலையணையின் பக்க வாட்டில் சாய்ந்து தூங்கினேன்நபி (ஸல்அவர்களும் அவர்களதுமனைவியும் அதன் மற்ற பகுதியில் தூங்கினார்கள்இரவின் பாதி வரை - கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம் - நபி(ஸல்அவர்கள் தூங்கினார்கள்பின்னார் விழித்து அமர்ந்து தங்களுடைய கையால் முகத்தைக் தடவித் தூக்கக்கலக்கத்தைப் போக்கினார்கள்பின்னர் ஆலுஇம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களைஓதினார்கள்பின்னர் எழுந்து சென்றுதொங்க விடப்பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர் எடுத்து)உளூவை நல்ல முறையில் செய்தார்கள்நானும் எழுந்து நபி (ஸல்அவர்கள் செய்தது போன்று (உளூசெய்து விட்டுநபி (ஸல்அவர்களின் அருகில் போய் நின்றேன்அவர்கள் தங்கள் வலக்கரத்தை என் தலை மீது வைத்தார்கள்எனதுவலது காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்நிறுத்தினார்கள்இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்மேலும் இரண்டுரக்அத்கள் தொழுதார்கள்இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்இரண்டுரக்அத்கள் தொழுதார்கள்மேலும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்பின்பு வித்ரு தொழுதார்கள்பின்னர் பாங்குசொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள்பிறகு எழுந்து சுருக்கமாக இரு ரக்அத்கள் தொழுது விட்டு சுப்ஹுத்தொழுகைக்காக (வீட்டை விட்டுவெளியே சென்றார்கள்.
அறிவிப்பவர்இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்புகாரீ 183, முஸ்லிம் 1275
நபி (ஸல்அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள்.
அறிவிப்பவர்இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்புகாரீ 1138, முஸ்லிம் 1276
10+1 ரக்அத்கள்
நபி (ஸல்அவர்கள் இரவில் பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள்அவற்றில் ஒரு ரக்அத்தை வித்ராகத் தொழுதார்கள்.தொழுது முடித்த பின் (தம்மை அழைப்பதற்காகதொழுகை அறிவிப்பாளர் தம்மிடம் வரும் வரை வலப்பக்கம் சாய்ந்துபடுத்திருப்பார்கள். (அவர்வந்ததும் (எழுந்துசுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஸுப்ஹுடைய சுன்னத்)தொழுவார்கள்.
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)
நூல்முஸ்லிம் 1339
8+5 ரக்அத்கள்
நபி (ஸல்அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள்அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள்(ந்தஐந்து ரக்அத்)தில்  கடைசி ரக்அத் தவிர வேறெந்த ரக்அத்திலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)
நூல்முஸ்லிம் 1341
ரக்அத்கள்
நபி (ஸல்அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலிஅவர்களிடம் கேட்டேன்அதற்கவர்கள், "ஃபஜ்ருடையஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்ஏழுரக்அத்கள் (நபி (ஸல்அவர்கள் தொழுவார்கள்)'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்மஸ்ரூக்
நூல்புகாரீ 1139
ரக்அத்கள்
நபி (ஸல்அவர்களின் இரவுத் தொழுகை பற்றி ஆயிஷா (ரலிஅவர்களிடம் கேட்டேன்அதற்கவர்கள், "ஃபஜ்ருடையஸுன்னத் இரண்டு ரக்அத்கள் தவிர பதினொரு ரக்அத்கள், (சில சமயம்ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்ஏழுரக்அத்கள் (நபி (ஸல்அவர்கள் தொழுவார்கள்)'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்மஸ்ரூக்
நூல்புகாரீ 1139
ரக்அத்கள்
"வித்ரு தொழுகை அவசியமானதாகும்யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்யார் நாடுகிறாரோஅவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்யார் நாடுகிறாரோ  அவர் ஒரு ரக்அத் தொழட்டும்'' என்று நபி (ஸல்அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர்அபூஅய்யூப் (ரலி)
நூல்கள்நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180
ரக்அத்கள்
"வித்ரு தொழுகை அவசியமானதாகும்யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்யார் நாடுகிறாரோஅவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்யார் நாடுகிறாரோ  அவர் ஒரு ரக்அத் தொழட்டும்'' என்று நபி (ஸல்அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர்அபூஅய்யூப் (ரலி)
நூல்கள்நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180
ரக்அத்
"வித்ரு தொழுகை அவசியமானதாகும்யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்யார் நாடுகிறாரோஅவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்யார் நாடுகிறாரோ  அவர் ஒரு ரக்அத் தொழட்டும்'' என்று நபி (ஸல்அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர்அபூஅய்யூப் (ரலி)
நூல்கள்நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180
வித்ர் தொழும் முறை
நபி (ஸல்அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள்அவற்றிக்கிடையே ஸலாமைக் கொண்டோஅல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.
அறிவிப்பவர்உம்மு ஸலமா (ரலி)
நூல்கள்நஸயீ 1695, இப்னுமாஜா 1182, அஹ்மத் 25281
நபி (ஸல்அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள்அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமரமாட்டார்கள்.
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)
நூல்நஸயீ 1698
நபி (ஸல்அவர்களுக்கு உடல் கனத்த போது ஏழு ரக்அத்கள் தொழுதார்கள்அதில் அதன் கடைசி ரக்அத்தில் தவிரமற்ற ரக்அத்துகளில் உட்காரவில்லை.
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)
நூல்நஸயீ 1699
...நபி (ஸல்அவர்கள வயதாகி பலவீனம் அடைந்த போது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள்அதில் ஆறாவதுரக்அத்தில் தவிர மற்ற ரக்அத்களில் உட்காரவில்லைபின்னர் எழுவார்கள்ஸலாம் கொடுக்க மாட்டார்கள்பின்னர்ஏழாவது ரக்அத்தை தொழுவார்கள்பின்னர் ஸலாம் கூறுவார்கள்பின்னர் இரண்டு ரக்அத்கள் அமர்ந்துதொழுவார்கள்.
அறிவிப்பவர்ஆயிஷா (ரலி)
நூல்நஸயீ 1700
இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுதல்
இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக தொழுது கொள்வதற்கும் நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது.
ஆயிஷா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்நபி (ஸல்அவர்கள் தமது அறையில் தொழுபவர்களாக இருந்தனர்.அவர்களின் தலையை மக்கள் பார்க்கும் அளவிற்கு அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்ததுமக்கள் அவர்களைப்பின்பற்றி தொழலானார்கள்மறுநாள் காலையில் மக்கள் இது பற்றி பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்இரண்டாம் நாளில்நபி (ஸல்அவர்கள் தொழுதபோது மக்களும் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள்இவ்வாறு இரண்டு மூன்றுஇரவுகள் செய்யலானார்கள்அதன் பின் நபி(ஸல்அவர்கள் (தொழவராமல் உட்கார்ந்து விட்டார்கள்காலையில்மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ளலானார்கள். "இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்றுநான் அஞ்சினேன். (அதனாலேயே வரவில்லைஎன்று கூறினார்கள்.
நூல்புகாரி (729)
ஆயிஷா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்நபி (ஸல்அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்று தொழுதார்கள்.அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள்விடிந்ததும் மக்கள் இது பற்றிப் பேசிக் கொண்டார்கள். (மறுநாள்)முதல் நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி (ஸல்அவர்கள் பின்னால் நின்று தொழுதார்கள்விடிந்ததும் மக்கள்இது பற்றிப் பேசிக் கொண்டார்கள்இந்த மூன்றாம் இரவில் பள்ளிவாசலுக்கு நிறையப் பேர் வந்தனர்நபி (ஸல்)பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள்அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர்நான்காம் இரவில் பள்ளிவாசல்கொள்ளாத அளவிற்கு மக்கள் திரண்டனர்ஆனால் நபி (ஸல்அவர்கள் சுபுஹுத் தொழுகைக்குத் தான் வந்தனர்.ஸுப்ஹுத் தொழுகை முடித்ததும் மக்களை நோக்கி தஷஹ்ஹுத் மொழிந்து "நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துகூறுகிறேன்நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லைஎனினும் இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதைஉங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடும் என்று நான் அஞ்சினேன்'' எனக் கூறினார்கள்நிலைமை இப்படிஇருக்க (ரமலானின் இரவுத் தொழுகையை மக்கள் தனித் தனியாகவே தொழுது கொண்டிருக்கநபி (ஸல்அவர்கள்மரணித்தார்கள்.
நூல்புகாரி (2012)
உமர் (ரலிஅவர்களுடன் நாங்கள் ஓர் இரவு ரமலானில் பள்ளிவாசலுக்குச் சென்றோம்மக்கள் பல்வேறு குழுக்களாகஇருந்தனர்சிலர் தனியாகவும் வேறு சிலர் கூட்டாகவும் தொழுது கொண்டிருந்தனர்உமர் (ரலிஅவர்கள் இவர்களைஒரே இமாமின் பின்னே தொழுமாறு ஏற்பாடு செய்வது நல்லது என்று எண்ணி அவ்வாறே செயல்படுத்தினார்கள்உபய்பின் கஅப் அவர்களை இமாமாக ஏற்பாடு செய்தார்கள்பின்பு மற்றோர் இரவு (பள்ளிக்குவந்த அவர்கள் மக்கள் ஒரேஇமாமைப் பின்பற்றி தொழுவதைக் கண்டார்கள். "இந்த புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறதுஇப்போது தொழுதுவிட்டுப் பிறகு உறங்குவதை விட உறங்கி விட்டு இரவின் இறுதியில் தொழுவது மிகவும் சிறந்ததாகும்'' எனவும்கூறினார்கள்
அறிவிப்பவர்அப்துர் ரஹ்மான்
நூல்புகாரி (2010)
இப்னு அப்பாஸ் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்எனது சிறிய தாயாரும் நபி (ஸல்அவர்களின் மனைவியுமானமைமூனா பின்துல் ஹாரிஸ் (ரலிஅவர்களின் வீட்டில் நபி (ஸல்அவர்கள் தங்கியிருந்து இரவில் நானும்தங்கியிருந்தேன்நபி (ஸல்அவர்கள் (பள்ளியில்இஷா தொழுகை நடத்தி விட்டுப் பின்னர் தமது வீட்டிற்கு வந்துநான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு உறங்கினார்கள்பின்னர் எழுந்து "சின்னப் பையன் தூங்கி விட்டானோ?'' என்றுஅல்லது அது போன்ற ஒரு வார்த்தையைச் சொல்லி விசாரித்து விட்டு மீண்டும் தொழுகைக்காக நின்று விட்டார்கள்.நானும் (அவர்களுடன்அவர்களது இடப் பக்கமாகப் போய் நின்று கொண்டேன்உடனே என்னை அவர்களின் வலதுபக்கத்தில் இழுத்து நிறுத்தி விட்டு (முதலில்ஐந்து ரக்அத்துகளும் பின்னர் இரண்டு ரக்அத்துகளும் தொழுது விட்டுஅவர்களின் குறட்டை ஒலியை நான் கேட்குமளவிற்கு ஆழ்ந்து உறங்கிவிட்டார்கள்பிறது சுபுஹுத் தொழுகைக்குபுறப்பட்டார்கள்.
நூல்புகாரி (117)
அபூதர் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்நாங்கள் நபி (ஸல்அவர்களுடன் நோன்பு நோற்றோம். (கடைசிஏழுநாட்கள் எஞ்சியிருக்கின்றவரை நபி (ஸல்அவர்கள் அம்மாதத்தில் எதையும் தொழ வைக்கவில்லை. (அந்நாளில்)இரவில் ஒரு பகுதி செல்லும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்ஆறு (நாட்கள்)இருக்கும் போதுஎங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. (மாதம் முடியஐந்து நாள் இருக்கும் போது இரவின் பாதிவரை எங்களுக்குத்தொழுகை நடத்தினார்கள். "அல்லாஹ்வின் தூதரேஇந்த இரவு (முழுவதும்நீங்கள் எங்களுக்கு உபரியாகத்தொழுகை நடத்தக் கூடாதா?'' என்று நாங்கள் கேட்டோம்அதற்கு நபியவர்கள் "ஒரு மனிதர் இமாம் (தொழுகைநடத்திமுடிக்கின்ற வரை அவருடன் தொழுதால் அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மைகணக்கிடப்படுகிறது'' என்று கூறினார்கள். (மாதம் முடியநான்கு நாள் இருந்த போது எங்களுக்கு அவர்கள் தொழவைக்கவில்லை. (மாதம் முடியமூன்று நாள் இருந்த போது தம்முடைய குடும்பத்தார்களையும் மனைவிமார்களையும்ஒன்றிணைத்து எங்களுக்கு ஸஹர் (நேரம்தவறிவிடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு எங்களுக்கு தொழுகைநடத்தினார்கள்பிறகு மாதத்தின் மீதமுள்ள நாட்களில் அவர்கள் தொழுகை நடத்தவில்லை.
நூல்அபூ தாவூத் (1167)
நாங்கள் நபி (ஸல்அவர்களுடன் இருபத்தி மூன்றாவது நோன்பினுடைய இரவுப் பகுதியில் இரவின் முதல் பகுதியில்மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம்பிறகு இருபத்தைந்தாம் இரவில் அவர்களுடன் பாதி இரவு வரை தொழுதோம்.பிறகு இருபத்து ஏழாம் இரவில் அவர்களுடன் நாங்கள் ஸஹர் (உணவைஅடைய முடியாதோ என்று எண்ணும்அளவிற்குத் தொழுதோம்.
அறிவிப்பவர்நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்நஸயி (1588)
வீட்டில் தொழுவதே மிகச்சிறந்தது
நபி (ஸல்அவர்கள் ரமலான் மாதத்தில் பாயினால் ஒரு அறையை அமைத்துக் கொண்டார்கள்சில இரவுகள் அதனுள்தொழுதார்கள்அவர்களது தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள்இதைப் பற்றி அறிந்து நபி(ஸல்அவர்கள் (அந்த அறைக்கு வராமல்உட்கார்ந்து விட்டார்கள்பின்பு மக்களை நோக்கி வந்து "உங்களதுசெயல்களை நான் கண்டேன்மக்களே உங்களது இல்லங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்கடமையானதொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும்'' என்று கூறினார்கள்
அறிவிப்பவர்ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல்புகாரி (731)
இரவுத் தொழுகை தவறி விட்டால்...
ஆயிஷா (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்நபி (ஸல்அவர்களுக்கு நோய் முதலியவற்றால் இரவுத் தொழுகை தவறிவிட்டால் (அதற்கு ஈடாகப்பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
நூல்முஸ்லிம் (1358)
http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/vithru_sattam_enna/#.U7BTYxYWm6c