புதுடெல்லி: கடந்த 2002-ம் ஆண்டு, குஜராத் கலவரம் நடந்த போது அங்கு மூத்த ஐ.பி.எஸ். காவல் துறை அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பகத் தற்போது உளவுத்துறையில் பணியாற்றுகிறார்.
அவர் உச்சநீதி மன்றத்தில் குஜராத் கலவரம் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
குஜராத் கலவரத்துக்கும், முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு. அவர் அப்போது கலவரக் கும்பலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் நரேந்திர மோடி காவல்துறைக்கு உத்தரவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பகத் மனு தாக்கல் செய்துள்ளார்.
கலவரம் நடந்த போது நான் அங்கு பணியாற்றினேன். உச்சநீதி மன்றம் அமைத்துள்ள புலனாய்வு குழுவினரிடம் நான் இதை தெரிவித்தேன். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. எனவே நான் தனியாக உச்சநீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்கிறேன்.