புதுடெல்லி, ஜுன்.13-
இந்திய ஹஜ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை அடுத்த மாதம் (ஜுலை) 25-ந் தேதிக்குள் அந்தந்த மாநில ஹஜ் கமிட்டியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.
அகில இந்திய ஹஜ் கமிட்டியின் மாநாடு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில், வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதர், ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதர், பல்வேறு மாநிலங்களின் ஹஜ் கமிட்டியின் தலைவர்கள், மத்திய ஹஜ் கமிட்டியின் உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.
மேற்கண்ட தகவலை, இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் தலைவருமான `பிரசிடெண்ட்' அபூபக்கர் தெரிவித்தார்.
- செய்தி : தினத்தந்தி