கேள்வி : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை மேடையேற்றி கௌரவித்து விழாக்கள் நடத்த இஸ்லாம் அனுமதிக்கிறதா?
shaik shaik abdul rahman – india

ஆனால் இப்படி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை கவுரவித்து விழாக்கள் நடத்துவதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் எங்கும் வழிகாட்டுதல் கிடையாது. நபியவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்த காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஸஹாபாக்கள் எவரையும் அவர்கள் மேடையேற்றி கவுரவப்படுத்தவுமில்லை, விழாக்கள் நடத்தவுமில்லை.
ஒருவருக்குறிய கவுரவம் என்பதே அவர் இஸ்லாத்தை ஏற்று அதன்படி நடப்பதுதானே தவிர அவருக்காக விழாக்கள் நடத்தி அவரை மேண்மைப்படுத்துவது அல்ல.
ஆக இப்படியான காரியங்களை நாம் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.
பதில் : ரஸ்மின் MISc