கேள்வி : assalumu allaikum,why dont wearing gold .... what reason say to islam... but i know few information sir .... pls explain full details.sir....
தமிழாக்கம் : இஸ்லாம் தங்கத்தை ஆண்களுக்குத் தடை செய்தது ஏன்?
by yusuf, india
பெண்களுக்கு தங்கம் அணிவதை இஸ்லாம் தாராளமாக அனுமதிக்கின்றது. இதே நேரம் ஆண்களுக்கு தங்கம் அணிவதை முழுமையாக இஸ்லாம் தடை செய்துள்ளது.
பெண்கள் தங்கம் என்ற உலோகத்தை அணிகலனான அணிந்து கொள்ள முடியும். ஆனால் ஆண்கள் அதனை அணிவது தடையாகும்.
இதற்கு என்ன காரணம் என்பது மார்க்கத்தில் எங்கும் கூறப்படவில்லை. ஆண்கள் தங்கம் அணியக் கூடாது என்ற தடையும், பெண்கள் தாராளமாக அணியலாம் என்ற அனுமதியும் மாத்திரம் தான் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதைப் பற்றி சில அறிஞர்கள் அனுபவ ரீதியிலான தங்கள் கருத்துக்களை தெளிவுபடுத்தியுள்ளார்கள். (அறிவியல் ரீதியில் இது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டதாக நமக்குத் தெரியவில்லை.)
அதாவது தங்கம் எனும் உலோகம் வெப்பத்தை விரைவில் வெளியேற்றக் கூடியது என்று சோதனைகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. உலகில் உள்ள உலோகங்களை நெருப்பில் பழுக்கக் காய்ச்சி தண்ணீரில் போட்டு உடனே வெளியே எடுத்தால் அதில் உள்ள வெப்பம் முழுமையாக வெளியேறாமல் அது சிறிது நேரம் சூடாகவே இருக்கும். அதிக நேரம் சென்ற பிறகு தான் அதன் வெப்பம் தணியும்.
ஆனால் தங்கத்தைச் சூடேற்றி அதைத் தண்ணீரில் போட்டு உடனே வெளியே எடுத்தால் அதன் வெப்பம் முழுமையாக வெளியேறி இருக்கும்.
இந்தச் சோதனை அடிப்படையில் ஆண்கள் தங்கம் அணியும் போது அவர்களின் உடலில் உள்ள வெப்பம் வேகமாக வெளியேற்றப்படும். ஓரளவு சூடாக இருக்க வேண்டிய ஆணகளின் உடல் சூட்டை அதிகம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தாம்பத்தியத்தையும் பாதிக்கும்.
தாம்பத்திய உறவுக்கு ஆண்களின் உடல் ஓரளவுக்கேனும் சூடாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதன் சரியான இன்பத்தை அடைந்து கொள்ள முடியும்.
ஆனால் பெண்களின் உடல் ஆண்களின் உடலை விடக் குளிர்ச்சியாக இருந்தால் தான் அவர்களிடம் அழகு மிளிரும். அவர்கள் தங்கம் அணிவதால் அது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
இனி வரும் காலங்களில் அறிவியல் ரீதியில் ஆய்வுகள் நடத்தப்படும் நேரங்களில் இது தொடர்பான மேலதிக தகவல்கள் வெளிவரும் என்பதில் ஐயமில்லை.
அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
பதில் : ரஸ்மின் MISc