கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!
இடப்பற்றாக்குறை காரணத்தினால் இம்முறை பெரிய அரங்கத்தில் FRTJ நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். முக்கியமாக பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் தூய மார்க்கத்தை அறிந்திடும் வண்ணமாக அதிகளவில் திரண்டிருந்தனர்.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக FRTJ வின் தலைவர் அதீன் அவர்கள் தலைமையுரை ஆற்றி துவக்கி வைத்தார்கள். அதன் பிறகு ஆன்லைன் மூலம் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. அனைத்து மக்களும் தெளிவாக பார்க்கும் வகையில் அகலமான projecter வசதி செய்யப்பட்டிருந்தது. மார்க்க சமுதாய கேள்விகளுக்கு சிறப்பான முறையில் சகோ.P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதிலளித்தார்கள்.
தத்தெடுத்தல்,பைஅத் வாங்குதல்,மனைவியை அடிக்கலாமா,TNTJவில் பெண்கள் உறுப்பினராக சேரலாமா,பெண் ஆட்சியாளரை ஆதரிக்கலாமா போன்ற கேள்விகள் இந்நிகழ்ச்சியில் கேட்கப்பட்டன.
வாய்ப்பு கிடைக்காத சகோதரர்களுக்கு அடுத்த முறை முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதிஅளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை நமது சகோதரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஏற்பாடு செய்திருந்தனர்.நிகழ்ச்சியின் இறுதியாக FRTJ செயலாளர் இன்சாப் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியின் கேள்வி பதில் வீடியோவை நமது(www.frtj.net) இணையத்தளத்தில் விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ். மேலும் நிகழ்சிக்காக பொருளுதவி மற்றும் ஆலோசனைகள் உழைப்புகள் செய்து பங்களிப்பு செய்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், நிகழ்ச்சி அரங்கம் ஏற்பாடு மற்றும் அரங்கத்தை கொடுத்து உதவியவர்களுக்கும் FRTJ சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.ஜசாக்கல்லாஹ் கைரன். தொடர்ந்து தங்களின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.