அண்மையில் நார்வே தலைநகர் ஓஸ்லோவிலும், உதோயோ தீவிலும் பயங்கரத் தாக்குதலை நடத்தி 92 பேரைக் கொன்று குவித்த பயங்கரவாதியான அன்டெர்ஸ் பேரிங் பிரிவிக் இந்தப் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளான்.
ஓஸ்லோவிலுள்ள பிரதமர் அலுவலகத்தைக் குறி வைத்து பிரிவிக் நடத்திய குண்டு வெடிப்பில் பலர் பலியானதோடு, பிரதமர் அலுவலகமும் பாதிக்கு மேல் சேதமடைந்தது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த நேரத்தில் அங்கு பிரதமர் ஸ்டோல்பர்க் இல்லாததால் அவர் உயிர் தப்பினார்.
இஸ்லாமிய எதிர்ப்பை வெறியாகக் கொண்டிருக்கும் பிரிவிக், ஐரோப்பாவில் இஸ்லாம் வேகமாக பரவி வருவதில் அதிருப்தியுற்று இந்தத் தாக்குதலை நடத்தி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளான். தனது வலைப்பூ (பிளாக்)வில் இஸ்லாம் மற்றும் பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரத்திற்கு எதிரான வெறியூட்டும் கருத்துகளை வெளியிட்டு வந்திருக்கிறான் இந்த யூத சியோனிச வெறியன்.
இந்த வலைப்பூவில் வியன்னா பள்ளி சித்தாந்தத்தை தான் ஆத ரிப்பதாகவும், (வியன்னா பள்ளி சித்தாந்தம் என்பது நார்வேயில் இஸ்லாமிய பரவலைத் தடுப்ப தாகும்) இஸ்லாமிய எதிர்ப்பு அர சியல் தலைவரான கீரிட் வில் டர்ஸ் தன் ஆதர்ஷ நாயகன் என் றும் குறிப்பிட்டுள்ளான்.
ப்ரீமேஸன் என்கிற யூத அமைப்பின் தீவிர உறுப்பினர் தான் இந்த பிரிவிக், ப்ரீமேஸன் என்பது உலகிலுள்ள எல்லா அமைப்புகளிலும் ஊடுறுவி அதன் மூலம் யூத மேலாதிக் கத்தை ஏற்படுத்துவதற்காக ரகசியமாக செயற்படும் சர்வதேச அமைப்பு. இந்த அமைப்புக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தொடர்பு உண்டு என்று கூறப் படுகிறது.
யூத சியோனிச கொள்கையும், ஆர்.எஸ்.எஸ். கொள்கையும் ஏறக் குறைய ஒன்றுதான். ஆர்.எஸ். எஸ்.ஸின் சித்தாந்தங்கள் யூத சித்தாந்தங்களுடன் பொருந்திப் போகக் கூடியவை. அதனால் தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை போற்றுகிறான் பயங்கரவாதி பிரிவிக்.
இந்தியாவிலுள்ள இந்துத்துவ தலைவர்களை புகழ்ந்து போற்றும் பிரிவிக், இந்துத்துவாவினரின் (முஸ்லிம்களுக்கு எதிரான) திட்டங்களை மேற் கோள்காட்டி எழுதியுள்ள ஆவணங்கள் பரபரப்பையும், இந்துத் துவாவிற்கு கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
"ஐரோப்பாவின் சுதந் திரப் பிரகடனம்' என்ற தலைப்பில் பிரிவிக் எழு தியுள்ள 1500 பக்க சதித் திட்ட ஆவணங்களில் சுமார் 100 பக்கங்க ளுக்கு மேல் இந்தியா வைப் பற்றியும், இந்துத்துவச் சக்திகளைப் பற்றியும் எழுதியுள்ளான். இஸ்லாம் ஐரோப்பாவில் பரவுவதை தடுக்க தங்களோடு இந்துத்துவ சக்திகள் கைகோர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்துக்கள் முஸ்லிம்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற பொய்ப் பிரச்சா ரத்தை பாஜக, ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி. வி.பி. ஆகியவற்றின் இணைய தளத்திலிருந்து எடுத்து மேற்கோள் காட்டும் பிரிவிக், இந்துத்துவா தலைவர்களோடுதான் இமெயில் மூலம் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளான்.
வி.ஹெச்.பி.யின் தலைவர்களில் ஒருவரான வினோத் பன்சால், பிரிவிக் இந் துத்துவா தலைவர்க ளைப் பற்றி பேசியிருப்பது தேவையற்றது என்று நடுக்கத்துடன் கூறினாலும், பாஜகவின் எம்.பி.யான சிங்காலோ பிரிவிக்கின் சித்தாந் தத்தைதான் ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.
தேசியவாதி வேடம் போடும் இந்துத்துவா தலைவர்க ளின் வெளிநாட்டுத் தீவிரவாதிக ளுடனான அண்டர் கிரவுண்ட் தொடர்பு நார்வே தாக்குதலின் மூலம் வெளிப்பட்டுள்ளது. ஏற் கென வே காவி பயங் கரவாதம் தான் நாட் டின் பாதுகாப்பிற்கு அச்சு றுத்தலாக உள்ளது என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித் திருப்பது இங்கு நினைவு கூறத் தக்கது.
வெளிநாட்டு பயங்கரவாதி களோடு இந்துத்துவா தலைவர்க ளுக்கு இருக்கும் தொடர்பு இந்தியாவின் பாதுகாப்பிற்கும், எதிர்கால நாட்டின் நலனுக்கும் கேடு விளைவிக்க் கூடியது. அத னால், இந்துத்துவா தலைவர்க ளுக்கு வெளிநாட்டுத் தீவிரவாதி களோடு இருக்கும் தொடர்பை மத்திய அரசு கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும்.
இனி, நார்வே அரசும் இந்துத் துவா தலைவர்களுக்கு விசா மறுக்கும் முயற்சிகளைத் துவங் கும் என்பதை எதிர்பார்க்கலாம். அந்த முயற்சியை நார்வே அரசு மேற்கொண்டால் அது அந்நாட் டின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவே இருக்கும்.
நீதிமன்றத்தில் விஷமப் பிரச்சாரம்?!
35 வயதான பிரிவிக் கடந்த ஜூலை 25ம் தேதி ஓஸ்லோ நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப் பட்டான். முஸ்லிம்களுக்கு எதிரான விஷம் கக்கும் பிரச்சாரத்தை நீதி மன்ற விசாரணையின்போதே பகி ரங்கமாக மேற்கொள்ள திட்டமிட்டு, அவனது அமைப்பின் சீருடை அணிந்து வருவதற்கும், பகிரங்க நீதிமன்ற விசாரணைக்கும் தனது வழக்கறிஞர் மூலம் அனுமதி கோரியிருந்தான்.
இவனது திட்டத்தை அறிந்து கொண்ட விசாரணை அதிகாரிகள் முஸ்லிம்கள் மற்றும் நார்வே குடியேற்ற வாசிகளுக்கு எதிராக பிரிவிக் பிரச்சாரம் செய்யவே இந்த அனுமதி கோருகிறான் என்பதை அறிந்து, பிரிவிக் கின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிம் ஹேக்கர், பிரிவிக்கின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
ஆசிரியர் :ஃபைஸல் (கீற்று.காம்)