புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


vendredi 30 décembre 2011

புத்தாண்டு கொண்டாடலாமா?

கிரிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா (அலை) அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள். எனவே அந்த நாளை புனித நாளாக கொண்டாடுகின்றார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.

எனவே புத்தாண்டு கொண்டாட்டம் கிரிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்பாக நாம் நடக்கக்கூடாது.

3512 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ رواه أبو داود
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (3512)
மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?

ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.

இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களை தடைசெய்கின்றது.

மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக கருதிவந்தனர். இதை கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளக ஆக்கிக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

959 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ مَا هَذَانِ الْيَوْمَانِ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ رواه أبو داود
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும் என்ன? என்று நபி (ஸல்) கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்'' என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (959)
புத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுருவியதன் விளைவு அன்றைய நள்ளிரவில் விபச்சாரமும் மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. பெண்கள் ஒழுக்கம் கெட்டு நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது. வானவெடிகள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நாசமாக்கப்படுகின்றது. இவ்வளவு அனாச்சாரங்களும் புத்தாண்டு என்ற பெயரிலேயே நடக்கின்றன. எனவே புத்தாண்டை நாம் புறக்கணிக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் என்பதால் அதற்காக வாழ்த்துச் சொல்வதும் கூடாது. புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினால் புத்தாண்டை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்.

ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடுவது தான் மார்க்கத்தில் தடை. நாம் முஹர்ரம் முதல் நாளை இஸ்லாமிய அடிப்படையில் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று தவறாக விளங்கிக்கொண்டு “முஹர்ரம் பிறை 1 அன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் வழக்கமும் சில இடங்களில் உள்ளது”

மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், ”இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று சொல்வதும், அதை கொண்டாடுவதும் தவறாகும்.

- ஆன்லைன்பிஜே.காம்

mercredi 28 décembre 2011

தங்கம் பற்றிய ஸக்காத்தின் சட்டம்

கேள்வி : gold (thangam) patriya zakathin sattathittaththinai tayayu sethu vilakkavu?
தமிழாக்கம் :தங்கம் பற்றிய ஜக்காதின் சட்டத்தினை தயவு செய்து விளக்கவும்?

- mohidin farhan - uk

பதில் : இஸ்லாம் வசதியுள்ளவர்கள் மீது ஸக்காத் என்ற ஒரு கடமையை விதித்திருக்கிறது. இந்தச் சட்டம் சில சந்தப்பங்களில் வித்தியாசப்படும்.
  • கால்நடைகளுக்கு ஸகாத்.
  • விளை நிலங்களுக்கு ஸகாத்.
  • மானாவரியாக விளைபவற்றுக்கு ஸக்காத்.

தங்கம், வெள்ளிக்கு ஸக்காத், என்ற பலவிதமான ஸக்காத் முறைகளை இஸ்லாம் பிரித்துப் பிரித்து விளக்குகின்றது.

இதில் தங்கத்திற்குறிய ஸக்காத் என்ன என்பதுதான் உங்கள் கேள்வியாகும்.

தங்கத்திற்கு இரண்டரை சதவீதம் ஸக்காத் கடமையாகும். அதாவது 11 பவுன் தங்கம் (சுமார் 85 கிராம்) ஒருவரிடம் இருந்தால் அதில் இரண்டரை சதவீதத்தை ஸக்காத்தாக வளங்க வேண்டும்.


பதில் : ரஸ்மின் MISc

mardi 20 décembre 2011

மாதவிடாய் முடிந்த பெண்கள் குளிக்கும் முறை என்ன?

கேள்விmadavidai kalam mudintha piragu kulippadu eppadi. vilaakamaga kooravum...

fathima muzniya – usa

பதில்மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் மாத விடாய்க் காலம் முடிகின்ற வரை தொழக் கூடாது. மாதவிடாய் காலம் முடிந்ததின் பின்னர் குளித்துவிட்டு தொழுது கொள்ள முடியும்.
மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்துவிட்டு தொழுதுகொள்!'' என்றார்கள்.' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி (228)
குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை தொழுகையை நெருங்காதீர்கள். (அல்குர்ஆன் (4 : 43))
குளிப்பை நிறைவேற்றும் முறை

நிய்யத் என்ற பெயரில் குளிப்புக்காக பெண்கள் நவைத்து அனிஃதஸல குஸ்லன் மினல் ஹைலி வதஹாரத்தன் லில் பதனி வ இஸ்திஹ்பாபன் லிஸ்ஸலாத்தி என்ற வார்த்தைகளை சொல்கிறார்கள். இதைச் சொல்லிக் குளித்தால் தான் குளிப்பு நிறைவேறும் என்றும் எண்ணுகின்றனர். இது தவறாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்லுமாறு நமக்குக் கட்டளையிடவில்லை.

குளிக்கும் போது சில வாசகங்களை கூற வேண்டும் என்றும் ஆயத்துல் குர்ஸியை ஓத வேண்டும் என்றும் பலவிதமான நடைமுறைகள் சில ஊர்களில் உள்ளன. இதற்கும் நபிவழியில் எவ்வித ஆதாரமும் இல்லை.
அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியலின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் (552)
மாதவிடாய் குளியல் குளிக்கும் போது தண்ணீரோடு இலந்தை இலையை சேர்த்துக் குளிக்கும் படி சொல்கிறார்கள். இலந்தை இலை என்பது தூய்மையை வலியுறுத்தி சொல்லப்படுவதாகும். நாம் வாழும் தற்காலத்தில் இலந்தை இலைக்கு பதிலாக சவர்க்காரத்தை (சோப்) பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பின்னர் தலையின் அனைத்துப் பகுதிகளும் நனையும் வண்ணம் நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். அதன் பின்னர் உடம்புக்குத் தண்ணீர் ஊற்றிக் குளிக்க வேண்டும். இறுதியாக கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத் துண்டொன்ரை எடுத்து சுத்தம் செய்யும்படி நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கஸ்தூரி என்பதும் வாசனைக்காக சொல்லப்பட்டதுதான் அதனால் கஸ்தூரி கிடைக்காதவர்கள் அதற்கு பதிலாக அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சடைபோட்டுள்ள பெண்கள் சடையை அவிழ்க்க வேண்டியதில்லை.

சடைபோட்டுள்ள பெண்மணிகள் அதை அவிழ்த்துத் தான் குளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அல்லாஹ்வின் தூதரே நான் அதிகம் சடையுடைய பெண்ணாக இருக்கிறேன். கடமையான குளிப்பிற்காக அதை நான் அவிழ்க்க வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு தேவையில்லை. உன் தலைக்கு இரு கையளவு தண்ணீரை எடுத்து மூன்று முறை உன் தலையில் ஊற்றிக் கொள். பின்னர் உன் (உடல்) மீது ஊற்றிக்கொள். நீ தூய்மையடைந்து விடுவாய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி), நூல் : முஸ்லிம் (497)
மேற்கண்ட முறையைப் பேணி குளிப்பதுதான் நபி வழியாகும்.

பதில் : ரஸ்மின் MISc

jeudi 15 décembre 2011

லுஹருடைய சுன்னத்தை இரண்டிரண்டாகத்தொழலாமா?

கேள்விassalamualaikum ,luhar tholuhaikku mun sunnaththu 4 raka ath ethai 2+2 aaha tholaamaa allathu 4 rakkaa athaaha tholalaama vibaram.

தமிழாக்கம்லுஹருடைய சுன்னத்தை இரண்டிரண்டாகத் தொழ முடியுமா? விளக்கவும்.

abdul hadi – saudiarabia

பதில்நபியவர்கள் லுஹர் தொழுகைக்கு முன் சுன்னத்தை நான்கு ரக்அத்தாகவும் தொழுதுள்ளார்கள், இரண்டிரண்டாகவும் தொழுதுள்ளார்கள். இதற்கு கீழ் வரும் செய்திகள் ஆதாரமாகும்.

லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு அல்லது நான்கு ரக்அத்கள் தொழலாம். இது போல லுஹருக்குப் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழலாம்.
நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரக்அத்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரீ 937, முஸ்லிம் 1200
'லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும் சுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விட்டுவிடாதே' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ 1182
சிலர் சுன்னத்துத் தொழுகைகளை இரண்டிரண்டாகத் தான் தொழ வேண்டும் நான்காகத் தொழக் கூடாது என்று ஒரு ஆதாரத்தை முன் வைக்கிறார்கள். அதன் விபரத்தைக் காண்போம்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் சொற் பொழிவு மேடை (மிம்பர்)மீது இருந்து கொண்டிருக்கும் போது ஒரு மனிதர், "இரவுத் தொழுகை பற்றித் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(இரவுத் தொழுகை) இரண்டிரண்டு ரக்அத்களாகும். (அதன் நேரம் நுழைந்து விட்டது) பற்றி அஞ்சினால் (கடைசியில்) ஒரு ரக்அத் தொழுதுகொள்ள வேண்டும். அவர் முன்னர் தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும்'' என்றார்கள். (புகாரி – 472)
மேற்கண்ட செய்தியை ஆதாரம் காட்டி சுன்னத்தான தொழுகைகளை நான்காக தொழக் கூடாது இரண்டிரண்டாகத் தான் தொழ வேண்டும் என்று வாதிடுகிறார்கள் ஆனால் அவர்களின் வாதத்திற்கு மேற்கண்ட செய்தியில் எந்த ஆதாரமும் இல்லை.

ஏன் என்றால் இரவின் உபரியான தொழுகை தொடர்பாக நபியவர்களிடம் கேட்க்கப்படுகிறது. அதற்கு பதில் அளித்த நபியவர்கள் இரண்டிரண்டாகத் தொழுது கொள்ளுங்கள் என்றார்கள். இரவில் தொழும் உபரியான தொழுகைகளைத் தான் இரண்டிரண்டாகத் தொழ வேண்டுமே தவிர பகல் நேர உபரியான தொழுகைகளையும் இரண்டிரண்டாகத் தான் தொழ வேண்டும் என்று வாதிடுவதற்கு மேற்கண்ட செய்தியில் எந்த முகாந்திரமும் கிடையாது.

பதில் : ரஸ்மின் MISc

mardi 13 décembre 2011

ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்தின் ஆலோசனை கூட்டம்

கடந்த 11/12/2011 ஞாயிற்றுகிழமை அன்று பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் சகோதரர் ஹகீம் அவர்கள் வீட்டில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் முதலில் தலைவர் அதீன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள் பின்பு துணை செயலாளர் ருக்னுதீன் அவர்கள் ஹிஜ்ரியும் படிப்பினையும் என்ற தலைப்பில் மிக சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள். பின்பு செயலாளர் இன்சாஃப் அவர்கள் பிரான்ஸ்  தவ்ஹீத் ஜமாத்தின் இதுவரையான செயல்பாடுகளை பட்டியலிட்டு பேசினார்கள். 

பின்பு இரண்டாம் அமர்வில் உறுப்பினர்களின் கருத்துக்கள், ஆலோசனைகள், செயல்பாடுகள்,குறைகள் கேட்டு உடன் நிர்வாகிகளால் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் பின் பொருளாளர் பஜ்ருல் ஹக் அவர்கள் நிதிநிலை குறித்து விளக்கம் அளித்தார்கள்.பின்பு இஸ்லாம் ஒரு எளியமார்க்கம் online conference நடத்துவது சம்பந்தமாக ஆலோசனை நடத்தப் பட்டது.பிறகு துணை தலைவர் ஹக்கீம் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள். இந்த ஆலோசனை கூட்டம் மிக பயனுள்ளதாக அமைந்திருந்தது.

நெல்லையில் நடைபெற்ற TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு – முழு விபரத்துடன்!

நெல்லையில் கடந்த 11-12-2011 அன்று ஆயிரக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கு பெற்ற TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு கூட்டம் பற்றிய செய்தி தினகரன் தினமணி, தினத்தந்தி,தினமலர்,மாலைமுரசு, இந்தியன் எக்ஸ் பிரஸ் ,ஹிந்து உள்ளிட்ட தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

பிரம்மாண்டமாய் கூடிய 13 வது மாநிலப் பொதுக்குழு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழு கடந்த 11/12/2011 அன்று திருநெல்வேலி மாநகரத்தில் இருக்கும் பார்வதி சேஷ மஹாலில் காலை 10.30 க்கு கூடியது. மேலாண்மைக் குழுத்தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழுவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அலை கடலென திரண்ட நிர்வாகிகள் :

கடந்த 2011 ஜனவரி மாதம் சேலத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில், மாநிலத்திற்கு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் பொதுக்குழு அனைவரின் மத்தியிலும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இதில் 3000க்கும் அதிகமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

நெல்லை மாநகரில் இருக்கும் மண்டபங்களிலேயே மிகப்பெரியது இந்த பார்வதி மஹால்தான். இருந்தாலும் மக்கள் வெள்ளத்தால் இதுவும் கூட இடப்பற்றாக்குறையாய் இருந்தது. பொதுக்குழு உறுப்பினர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் அரங்கம் காலை 10 மணிக்கே நிரம்பி வழிய ஆரம்பித்தது. அரங்கத்தின் மாடி, பக்கவாட்டுப் பகுதிகள் அனைத்திலும் இருக்கைகள் நிரம்பி வழிந்தன. அரங்கத்திற்கு வெளியே ஷாமியானா பந்தல் போடப்பட்டு அதிலும் நாற்காலிகள் குவிக்கப்பட்டன. ஆனாலும் இடமின்றி மக்கள் பலர் நின்ற வண்ணமே இருந்தனர்.

வானுயர்ந்த உறுப்பினர்களின் கோஷம்:

பொதுக்குழுவின் முதல் நிகழ்ச்சியாக நிர்வாகக் குழு எடுத்த சில நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. சைபுல்லாஹ் ஹாஜாவின் தவறான செயல்பாடு காரணமாக அவரை நீக்கியதை பொதுக்குழுவில் அறிவித்து ஒப்புதல் கேட்கப்பட்டது. “அல்லாஹ் அக்பர்” என தங்களின் கைகளை உயர்த்தி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அதற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.

அதுபோல சொந்தக் காரணங்களுக்காகவும், வேலைப்பளு காரணமாகவும் தங்களின் பொறுப்புகளை ராஜினாமா செய்த சகோ.அப்துந்நாசர், தணிக்கைக் குழு உறுப்பினர் சகோ.தம்மாம் தவ்ஃபீக், மாநிலச் செயலாளர் சகோ.மாலிக் ஆகியோரின் விலகல் குறித்தும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.

எழுச்சியடைய வைத்த லுஹாவின் உரை:

பொதுக்குழுவின் முதல் அமர்வின் முதல் நிகழ்ச்சியாக மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி “கொள்கை உறவு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த ஜமாஅத்தில் இருக்கும் உறுப்பினர்கள் உறவுகளைப் பேணுபவர்கள், அதே நேரம் அந்த உறவுகள் கொள்கைக்கு மாற்றமாகச் செயல்படும் சமயத்தில் அதைத் தூக்கி எறிந்து விட்டு இந்த சத்தியக் கொள்கையைத் தூக்கிப் பிடிப்பவர்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) காலத்திய ஒரு வரலாற்றைச் சுட்டிக் காட்டி சிறப்பாக விளக்கினார்.

துல்லியமான கணக்கு வழக்குகள்:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை அதிகமான மக்கள் ஆதரிக்கும் ஒரு இயக்கமாக இருக்கின்றது. அதற்கான முக்கியக் காரணம், கணக்கு வழக்குகளில் இறைவனின் அருளால் இன்று வரை பிசகாமல் நிற்பதே ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை பொருளாளர் அன்வர் பாஷா சமர்ப்பித்தார். மாத வாரியான வரவு எவ்வளவு, செலவு எவ்வளவு என்பதைத் துல்லியமாக அறிவித்தார். இந்தக் கணக்குகளில் ஏதேனும் குறை இருந்தால் சுட்டிக் காட்டலாம் என தணிக்கைக் குழுத் தலைவர் எம்.ஐ. சுலைமானிடம் தெரிவித்தார்.

தணிக்கைக் குழுவின் நற்சான்றிதழ் :

பொருளாளர் தாக்கல் செய்த வரவு செலவுகள் குறித்து கருத்து தெரிவித்த தணிக்கைக் குழுத்தலைவர் எம்.ஐ. சுலைமான், கணக்கு வழக்குகள் ஏற்கனவே சகோ.ஈரோடு சாதிக் மூலம் பார்க்கப்பட்டு தொகுக்கப்பட்டதையும், தணிக்கைக் குழுவும் அதை மறு ஆய்வு செய்ததில் அதில் எவ்வித குளறுபடிகளும் இல்லை என்பதையும் தெரிவித்தார்.

அனல் பறந்த ஆண்டறிக்கை:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆண்டறிக்கையை பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தாக்கல் செய்தார். இந்த ஆண்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார். மாதந்தோறும் அதிகரிக்கும் ஜுமுஆ தொழுகைகள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாற்று மதத்தவர் அழைப்புப் பணிகள், புத்தகங்கள், பிரசுரங்கள் வாயிலாக தவ்ஹீத் பிரச்சாரங்கள், பேனர்கள், போஸ்டர்கள் மூலமாக தெருக்கள் தோறும் திருக்குர்ஆன், ஹதீஸ் வசனங்கள் அத்தோடு சிறுவர் இல்லம், முதியோர் இல்லம் போன்ற சேவை இல்லப் பணிகள், இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்ட மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு முற்றிலும் இலவசப் பயிற்சிகள், சத்தியத்தை எத்தி வைக்கும் விவாதங்கள் போன்ற மார்க்கப் பணிகள் இந்த வருடத்தில் எவ்வளவு அதிகரித்துள்ளது என்பது பற்றிய புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தார். அதுபோல தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த வருடமும் இரத்த தானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளதையும் விளக்கினார். ஆண்டறிக்கையின் ஒவ்வொரு வாசகமும் தக்பீரைக் குவித்தன.

புஸ்வாணமாகிப் போன பொறம்போக்குகளின் அவதூறு :

பீஜேக்கு எதிராக, மின்னஞ்சல் முகவரியைத் திருடியவர்கள் அவதூறுப் பிரச்சாரம் செய்து வருவது குறித்து பீஜே தானாக முன்வந்து விளக்கம் அளித்தார். இவ்வாறு அவதூறு பரப்பப்பட்டு வருவது முதல் இன்றைய தேதிவரை எட்டு நபர்கள் மட்டுமே என்னிடம் கேட்டுள்ளனர்., அவர்களும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கோரினார்கள். இந்தப் பொய்யை ஒரு பொதுக்குழு உறுப்பினர் கூட நம்பவில்லை என்ற போதும் இது குறித்து நானாக முன்வந்து விளக்கம் அளிக்கிறேன் எனக் கூறி விளக்கம் அளித்தார். விளக்கம் அளித்து முடித்த பின்னர் இதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா என்று பீஜே கேட்ட போது, இல்லை என்று அனைவரும் கைகளை உயர்த்தி கூறினார்கள். திருடர்கள் மீது சட்டப்படி எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் பீஜே விளக்கினார்.

பைலா திருத்தம்:

அடுத்ததாக பைலாவில் சில திருத்தங்களைச் செய்து அறிவித்தார் மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. கலீல் ரசூல். முந்தைய பைலாவில் இருந்ததைப் போல, உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் இந்த ஜமாஅத்தின் உறுப்பினர்கள் போட்டியிடலாம் என்று இருந்த விதியை முழுமையாக மாற்றி, இனி டி.என்.டி.ஜே உறுப்பினர்களும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என திருத்தி அது உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

அதுபோல மாநில நிர்வாகத்தில் யாரும் இருமுறைக்கு மேல் பொறுப்பு வகிக்கக்கூடாது என்ற பழைய விதியை மாற்றி, இந்த ஜமாஅத் நிர்வாகத்தில் அனுபவஸ்தர்கள் நீடிக்க வேண்டும் என்ற நோக்கில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளைத் தவிர மற்ற பொறுப்புகளில் இனி மூன்று முறை நீடிக்கலாம் என்ற விதிக்கு ஒப்புதல் கேட்கப்பட்டது. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று நிர்வாகிகளும் இரண்டு தடவைக்கு மேல் தொடர்ந்து அப்பதவிக்கு வரக்கூடாது என்பது உறுதி செய்யப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி அல்லாஹ் அக்பர் என முழக்கமிட்டனர்.

ஆனால் சில நிர்வாகிகள் எழுந்து தலைவர் பொதுச் செயலாளர் பொருளாளர் ஆகியோரும் மூன்று முறை பதவி வகிக்கும் வகையில் திருத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து பீஜே அவர்கள் விளக்கம் அளித்த பின்னர் உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்..

தவறு செய்து நீக்கப்படும் உறுப்பினர் வழி தவறுவதைத் தடுக்க இனி தவறு செய்யும் உறுப்பினர்களுக்கு இரண்டு முறை கடும் எச்சரிக்கைகள் தரப்படும். மேலும் அவர்கள் நிர்வாக பொறுப்புக்கு வரக் கூடாது, நிர்வாகியை தேர்வு செய்யும் வாக்குரிமை இல்லாத உறுப்பினராகத் தான் இருப்பார்கள்.

மூன்றாவது முறை அதே தவறைச் செய்தால் அவர் இந்த ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஒரு வருடத்திற்கு நீக்கப்படுவார். ஒரு வருடம் கழித்து அந்தக் கிளை தரும் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே அவர் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்ற புதிய விதி கொண்டு வரப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இரண்டாவது அமர்வு:

உணவு இடைவேளைக்குப் பிறகு இரண்டாவது அமர்வு துவங்கியது. மாவட்ட நிர்வாகிகளும் கிளை நிர்வாகிகளும் எவ்வாறு நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதையும் அடுத்தடுத்து செய்ய வேண்டிய செயல் திட்டங்களையும் மாநிலத்தலைவர் சகோ.பீஜே தெளிவாக விளக்கினார். கடந்து வந்த பாதை முதல் காவல் துறையை அணுகும் முறை வரை மிகத் தெளிவாகவும் சுவாரஸ்யமாகவும் விளக்கினார்.

பிப்ரவரி 14 இடஒதுக்கீடு போராட்டம்:

முஸ்லிம்களுக்கு மத்தியிலும் இதர மாநிலங்களிலும் பத்து சதவிகித இட ஒதுக்கீட்டை சட்டமாக்க வலியுறுத்தியும் , தமிழகம் மற்றும் புதுவையிலும் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தியும்., வரக்கூடிய பிப்ரவரி 14 ஆம் தேதி அனைத்து மாவட்டத்திலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. கழிசடைகள் தினமான இந்த பிப்ரவரி 14 ஐ இனி இடஒதுக்கீட்டு தினமாக அறிவிக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

கைவிடப்பட்டது போராட்டமே! மசூதி அல்ல:

பாபர் மசூதியை நாம் கைவிட்டு விட்டதாக பலரும் கருதுகிறார்கள். ஆனால் கைவிடப்பட்டுள்ளது டிசம்பர் 6 போராட்டம் மட்டுமே! கடமைக்கு இதை நடத்துவதால் மட்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பெற்றுவிடமுடியாது. அதேபோல என்னத் தீர்ப்பு வந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொண்டு அமைதி காத்து கொண்டிருக்க மாட்டோம். தவறான தீர்ப்பு வந்தால் நம் முழு பலத்தையும் திரட்டி எதிராகக் களமிறங்குவோம். ஏற்கனவே துளியும் பயமின்றிதான் நாம் நீதிமன்றத்தையே கண்டித்துக் களமிறங்கினோம். இறைவனைத் தவிர யாருக்கும் அஞ்சும் குணம் நமக்குக் கிடையாது என்றும் பாபர் மசூதி நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் சில கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்ற பின்னர் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

சுறுசுறுப்பாக்கிய அல்தாபியின் உரை:

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாபி “மறுமை வெற்றி” என்ற தலைப்பில் உரையாற்றினார். மற்ற இயக்கங்களில் இருப்பதற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்பதற்கும் உள்ள வேறுபாடுகளைத் தெளிவாக எடுத்துரைத்தார். மற்ற இயக்கங்களில் இருந்தால் நிச்சயமாக இம்மையிலேயே லாபம் உண்டு என்பதையும், இந்த இயக்கத்தில் இருந்தால் மறுமை வெற்றிக்கு மட்டுமே லாபம் உள்ளது என்பதையும், மறுமை வெற்றியே மகத்தான வெற்றி என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.

தீர்மானமும் நிகழ்ச்சி நிறைவும்:

இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாநிலச் செயலாளர் சகோ. யூசுப் வாசித்தார். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என்று கூறிய ஜெயலலிதா, அதற்கான எவ்வித முயற்சியையும் எடுக்காததை இந்தப் பொதுக்குழுவில் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோல பாண்டிச்சேரியில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு ஏமாற்றத்தைக் கண்டித்தும், மத்தியில் முஸ்லிம்களுக்கு உடனடியாக 10 % இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தரவேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவின் முடிவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்படி துவா ஓதி சபை முடிக்கப்பட்டது. ஆர்வத்தோடு பங்கேற்ற அனைத்து நிர்வாகிகளும் தங்களின் இயக்கத்தின் ஒரு முக்கிய கடமையை ஆற்றிய மகிழ்ச்சியில் கலைந்து சென்றனர். பொதுக்குழுவை இவ்வளவு சிறப்பாக நடத்தித் தந்த வல்ல ரஹ்மானுக்கே எல்லா புகழும்!

பொதுக்குழு துளிகள்…

*ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் அங்கே கொடிகள் கட்டப்பட்ட வேன்கள் தயார் நிலையில் நின்றன. வெளியே வந்த சகோதரர்கள் அந்த வேன்களில் ஏறிச் சென்றனர். வெளியூர் மக்கள் தங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் ஒரு தனி மண்டபம் பிடிக்கப்பட்டிருந்தது. அங்கே சென்று குளியல் கடமைகளை நிறைவு செய்து கொண்டார்கள் சகோதரர்கள்.

*பொதுக்குழு நடந்த அனைத்துச் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. ஏதோ மாநாடு போல நெல்லை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

*பொதுக்குழு காலை 10.30 க்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் காலை 9 மணி முதலே நிர்வாகிகள் மண்டபத்தின் உள்ளே வரத் துவங்கினார்கள்.வாக்காளர் பட்டியலைப் போல மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளின் பெயர்களின் பட்டியல் மாவட்ட வாரியாக கவுண்டர்கள் பிரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டன. பொதுக்குழுவில் கலந்து கொள்ள அனைத்து மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தன. நிர்வாகிகள் அனைவரிடமும் உறுப்பினர் அட்டை இருக்கிறதா என பரிசோதிக்கப்பட்டது. அட்டை இல்லாதவர்கள் உடனடியாக அங்கேயே விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து உறுப்பினர் அட்டைக்கு விண்ணப்பித்தனர்.

*பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ரியாத் மண்டல டி.என்.டி.ஜே. சார்பாக இலவசமாக தினசரி காலண்டர் ஒன்று வழங்கப்பட்டது.

*மண்டபம் நிரம்பி வழிந்ததால் வாசலில் போடப்பட்டிருந்த ஷாமியானா பந்தலில் அதிகமான மக்கள் அமர்ந்து கொண்டார்கள். அதுமட்டுமின்றி மண்டபத்தில் இரு புறங்கள் மற்றும் மாடி, பால்கனி ஆகிய பகுதிகளில் நாற்காலிகள் போடப்பட்டும் அது பற்றாக்குறையாகவே இருந்தது.

*மண்டபத்தைச் சுற்றி பெரிய பெரிய எல்.சி.டி திரைகள் வைக்கப்பட்டிருந்தன. மண்டபத்திற்குள் செல்ல முடியாத மக்கள் இந்த டிவி வழியாக நிகழ்ச்சிகளைப் பார்த்தனர்.

*பொதுக்குழு நடைபெற்ற மண்டபத்திற்குள் அசைவ சாப்பாட்டுக்கு அனுமதி இல்லை என்பதால், மண்டபத்தை ஒட்டிய பொருட்காட்சித் திடலில் தனியாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வந்திருந்த அனைவருக்கும் சுவையான உணவு வழங்கப்பட்டது.

*உணவு இடைவேளையின் போது மண்டபத்திலும், பொருட்காட்சித் திடலிலும் சகோதரர்கள் தொழுகை மேற்கொண்ட நிகழ்வு அங்கிருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

*காலையிலும் முதல்அமர்வு முடிந்து மாலையிலும் சரியான நேரத்திற்கு கதவுகள் மூடப்பட்டன. தாமதமாக வந்த சகோதரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பத்திரிகையாளர்., எல்லாருமே நிர்வாகிகள் என்கிறீர்கள், இப்படி செய்தால் அவர்கள் வருத்தப்பட மாட்டார்களா எனக் கேட்டார். ஆனால் இதைத் தான் எங்கள் மக்களும் விரும்புகின்றார்கள். தவறு என்றால் அதை ஒப்புக் கொள்வதற்கு எங்கள் மக்கள் தயங்க மாட்டார்கள், அதற்கு அபராதமும் கட்டுவார்கள் என்று நாம் சொன்னதும் ஆச்சரியமடைந்த அவர், பள்ளிக்கூடத்தில் தான் அபராதமெல்லாம் போடுவார்கள், ஆனால் நீங்கள் உங்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கே அபராதம் போடுகிறீர்கள், தாமதமாக வந்தால் கதவைச் சாத்துகிறீர்கள், இப்படியும் ஒரு கட்டுக் கோப்பான இயக்கமா? என ஆச்சரியப்பட்டார்.

*உணர்வு, ஏகத்துவம், தீன்குலப் பெண்மணி ஆகிய இதழ்களின் ஒரு வருட சந்தாக்கள் சிறப்பு சலுகையாக 600 ரூபாயில் இருந்த 400 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது. திரளான மக்கள் தங்களை இதில் சந்தாதாரர்களாக இணைத்துக் கொண்டனர்.

*அமர்வதற்கு இடம் கிடைக்காமல் இறுதி வரை சிலர் நின்றபடியே பொதுக்குழுவை கண்டு மகிழ்ந்தனர். பொதுக்குழு நிகழ்வுகளை அன்றைய மாலைப் பத்திரிகைகள் மற்றும் மறுநாள் காலைப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தது குறிப்பிடத்தக்கது.

*நிகழ்ச்சி முடிந்து மண்டப உரிமையாளரிடம் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கணக்கு முடிக்கச் சென்ற போது., என் மண்டபத்தில் இப்படி ஒரு கட்டுக்கோப்பான கூட்டத்தை நான் கண்டதில்லை. 3000க்கும் அதிகமான மக்கள் குழுமிய இக்கூட்டத்தில் ஒருவர் கூட புகை பிடிக்கவில்லை. பான்பராக் போடவில்லை. பீடி, சிகரெட் துண்டுகள், பீர் பாட்டில்கள் தான் அனைத்து நிகழ்ச்சிகளின் முடிவில் நிறைந்திருக்கும். ஆனால் இது போல் எதுவும் இல்லாமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் அசைவ உணவுக்கு அனுமதி அளிக்க முடியாமல் போனதற்கு வருத்தமும் தெரிவித்துக் கொண்டார்.

*பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட சகோதரர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். நெல்லை மாவட்டத் தலைவர் யூசுப் அலி தலைமையில் சகோதரர்கள் களமிறக்கப்பட்டு தேனீக்களைப் போல மிகக்கடுமையாக ஓய்வின்றி பணியாற்றினார்கள். கலந்து கொண்ட மக்களுக்கு தங்களின் கனிவான பணிகளைத் தொய்வின்றி செய்தனர். இந்தப் பணிகளைச் செய்த நெல்லை மாவட்டத்தின் அனைத்து சகோதரர்களின் சேவையும் கடின உழைப்பும் பாராட்டுக்குரியதாகும்.

*குறிப்பாக மேலப்பாளையத்தில் இருந்து வாலன்டியர்களாக வந்த சகோதரர்கள் காலை முதல் இரவு வரை உணவு கூட உட்கொள்ளாமல் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்துவிட்டு கொஞ்சமும் களைப்பில்லாமல் களப்பணியாற்றியது நிர்வாகிகளுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிக்காக தங்களின் உழைப்பையும் பொருளாதாரத்தையும் தந்த அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக!

பரபரப்பாக்கிய புள்ளிப் பட்டியல்

பொதுக்குழு கூடிய காலை முதல் மக்கள் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்தது தரவரிசைப் புள்ளிகள் பட்டியலைத்தான். தாவா பணிகளில் எந்த மாவட்டம் எந்தக் கிளை முதல் இடம் பிடிக்கும் என்ற ஆவலில் அனைவரும் இருக்க, அதற்கான முடிவுகளை மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சையது இப்ராஹீம் அறிவித்தார். அதன்படி மாவட்ட அளவில் பணிகளை அதிகம் செய்து மதுரை மாவட்டம் முதலிடத்தை பிடித்தது. அதேபோல இரண்டாவது இடத்தை திருவள்ளூர் மாவட்டமும், மூன்றாவது இடத்தை தென்சென்னை மாவட்டமும் பிடித்தன. அதேபோல அதிகப் பணிகளைச் செய்த கிளைகளில் முதல் இடத்தை மதுரை கரீம்ஷா பள்ளி கிளையும், இரண்டாவது இடத்தை திருவள்ளூர் மதுரவாயல் கிளையும், மூன்றாவது இடத்தை தஞ்சை தெற்கு தஞ்சை நகர் கிளையும் கைப்பற்றின.

அதே போல வெளிநாடு மற்றும் மண்டலங்களுக்கான தாவா பணிகள் தரவரிசைப் பட்டியலும் அறிவிக்கப்பட்டது. மண்டலங்களில் முதல் இடத்தை ரியாத் மண்டலமும், இரண்டாவது இடத்தை குவைத் மண்டலமும், மூன்றாவது இடத்தை பஹ்ரைன் மண்டலமும் பெற்றன. அதேபோல வெளிநாட்டு மண்டலக் கிளைகளில் முதல் இடத்தை ரியாத் மண்டலத்தைச் சேர்ந்த கதீம் செனைய்யா கிளையும், இரண்டாவது இடத்தை ஜித்தா மண்டலத்தைச் சேர்ந்த தபூக் கிளையும், மூன்றாவது இடத்தை ரியாத் மண்டலத்தைச் சேர்ந்த ஷிஃபா கிளையும் பெற்றன.
இரத்ததான விருதுகள் : இந்த வருடத்திற்கான இரத்த தான விருதுகள் மாவட்ட மற்றும் கிளை வாரியாக வழங்கப்பட்டன. அதன்படி 2011 ஆம் ஆண்டில் அதிகமான இரத்த தான முகாம்களை நடத்தி அதிக அளவில் இரத்த தானம் வழங்கிய மாவட்டங்களில் திருவள்ளூர் முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை தென்சென்னையும், மூன்றாவது இடத்தை வடசென்னையும் பிடித்தன. அதேபோல கிளைகளில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆவடி முதல் இடத்தையும்,பாடி கிளை இரண்டாவது இடத்தையும், தென்சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணாம்பேட்டை மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

வெளிநாடு மண்டலங்களில் ரியாத் முதலிடத்தையும், தம்மாம் இரண்டாவது இடத்தையும், குவைத் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

அதுபோல அவசர இரத்த தானத்தில் மதுரை முதல் இடத்தையும், திருச்சி இரண்டாவது இடத்தையும்,நெல்லை மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

தரவரிசையில் இடம்பெற்ற அனைத்து மண்டலங்கள், மாவட்டங்கள் மற்றும் கிளைகளுக்கு பாராட்டுப் பத்திரங்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன.

மாநிலப் பொதுக்குழு தீர்மானங்கள்

2011 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று நெல்லை பார்வதி சேஷ மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது., ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக ஜெயலலிதா அறிவித்தார். அவரது வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

2. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுவரும் 3.5% இட ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தக் கோரியும், புதுச்சேரியில் இட ஒதுக்கீட்டில் தொடர்ந்து இழைக்கப்படும் துரோகத்தைக் கண்டித்தும், மத்தியில் முஸ்லிம்களுக்கு10% இட ஒதுக்கீடு தர வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுவையின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிப்ரவரி 14 (செவ்வாய்க்கிழமை) அன்று உரிமை மீட்புப் போராட்டம் நடத்துவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது

3. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை இதுவரை காங்கிரஸ் அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றிவருகிறது. சச்சார் கமிஷனும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனும் இஸ்லாமிய சமுதாய மக்களின் நிலையை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்த பின்பும் அவற்றின் பரிந்துரைகளை மத்திய காங்கிரஸ் அரசு நிறைவேற்றாமல் காலம் கடத்தி வருகிறது. முஸ்லிம்களின் இந்த நியாயமான உரிமையைக் காங்கிரஸ் அரசு உடனடியாக வழங்கத் தவறினால் காங்கிரஸிற்கு எதிராக ஒரு மாபெரும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என்பதை இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

4. பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் ஆகியும் அப்பள்ளியை இடித்த குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது இந்திய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை துரிதப்படுத்தவும் நியாயமான தீர்ப்பு வழங்கவும் இப்பொதுக்குழு நீதித் துறையைக் கேட்டுக் கொள்கிறது.

5. இந்திய தேர்தல் முறையை விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் மாற்ற அரசியல் சாசன திருத்தம் செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் இந்திய மக்களையும் இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

6. கிறிஸ்தவ சமுதாயத்தின் சொத்துகளை அரசு தலையீடு இல்லாமல் கிறிஸ்தவ சமுதாயமே நிர்வகித்து வருகிறது. ஆனால் முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசின் வக்ஃபு வாரியம் நிர்வகிக்கிறது. இது அரசியல்வாதிகளுக்கும் சுரண்டல் பேர்வழிகளுக்கும் கொள்ளை அடிக்க வாய்ப்பாக இருந்து வருகிறது. எனவே முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசு தலையீடு இல்லாமல் முஸ்லிம் சமுதாயமே நிர்வகிக்கும் வகையில் வக்ஃப் வாரியத்தை முற்றாகக் கலைத்து விட வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

7. குஜராத்தில் மூவாயிரத்திற்
கும் அதிகமான முஸ்லிம்களை கொன்றொழித்த பயங்கரவாதி நரபலி மோடியின் உண்ணாவிரத நாடகத்தை வாழ்த்தி தனது பிரதிநிதிகளை அனுப்பிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

8. முஸ்லிம்களின் விரோதியான அத்வானியின் ரதயாத்திரைக்கு ஆதரவளித்தும் வாழ்த்தியும் முஸ்லிம்களின்உணர்வோடு விளையாடும் ஜெயலலிதாவின் இப்போக்கு தொடருமானால் முஸ்லிம் சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாக்குகளையும் இழக்க நேரிடும் என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

9. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு எனத் தொடர்ந்து விலைவாசிகள் அதிமுக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏழை எளிய நடுத்தர மக்களை மிகவும் சிரமத்திற்குள்ளாக்கி அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இப்பொதுக்குழு அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும் என தமிழக அரசைக் கோருகின்றது.

10. தமிழகத்திற்கும் கேரளத்திற்
கும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, தமிழகத்திற்கும் ஆந்திரத்திற்கும் இடையே பாலாறு அணைப் பிரச்சினை, தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரிப் பிரச்சினை என இன மொழி அடிப்படையிலான பிரிவினைவாதங்கள் இந்திய தேசத்தின் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் அச்சுறுத்தும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. அனைவரும் ஓரிறையின் அடிமைகள் என்பதையும் ஒருதாய் மக்கள் என்பதையும் உணர்ந்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மனிதாபிமானத்தோடும் நியாயத்தோடும் இப்பிரச்சினை
களைத் தீர்க்க முன்வரவேண்டும் என்றும் அதற்கேற்ற நடவடிக்கைகளை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இப்பிரச்சினைகளில் மத்திய மாநில அரசுகள் தீர்க்க உதவும் வகையில் அனைத்து மாநில பொது மக்களும் கட்சிகளும் வன்முறையைத் தூண்டிவிடுவதைக் கைவிட வேண்டும் என்று அனைத்து மாநில மக்களையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

11. அரசியல் ஆதாயத்திற்காக
வும் சுய விளம்பரத்திற்காகவும் இன மொழி பிரிவினைகளைத் தூண்டி மக்களை பிளவு படுத்த முயற்சிக்கும் நச்சு சக்திகளை இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் புரிந்து கொண்டு அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

12. கூடங்குளம் அணுமின் நிலைய விஷயத்தில் இன மொழி அடிப்படையிலும் மத அடிப்படையிலும் மக்களைப் பிரிக்க முயலும் பிரிவினைவாதிகள், அந்நிய சக்திகளின் அடிவருடிகள், ஆகியோரின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து, அப்பகுதிவாழ் மக்களின் நியாயமான அச்சத்தை போக்கி, தேவையான பாதுகாப்பு வசதிகளை உறுதிப்படுத்தி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

13. தமிழகத்தில் குற்ற செயல்கள் அதிகரிக்கவும் பலரது குடும்ப வாழ்க்கை சீரழியவும் காரணமாக இருக்கும் அரசு மதுக்கடைகள் போதாதென்று சொகுசு மதுக்கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது. இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூடவேண்டும் என்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

14. முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களும் அரசு விடுமுறையாக இருந்தும் சில கல்வி நிறுவனங்கள் அன்றைய தினம் தேர்வுகளை நடத்துகின்றன. சட்டத்திற்கு புறம்பாகச் செயல்படும் இந்நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேணடும் என்றும் அவற்றின் அங்கீகாரங்கள் ரத்து செய்யப்படவேணடும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

15. முஸ்லிம் அல்லாதார் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அந்நிறுவனங்களின் மதம் சார்ந்த வழிபாட்டு பாடல்களை பாடவும் அவற்றில் பங்கேற்கவும் முஸ்லிம் சிறார்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்கும் மாணவ மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அத்தகைய கல்வி நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது

16. ரமலான் மாதத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு சிறப்பு விலையில் அரசு வழங்கும் பச்சரிசி விநியோக முறையை இலகுவாக்கும்படி இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. அரிசி வழங்கலில் தேவையற்ற கெடுபிடிகள் செய்து முஸ்லிம்களை அலைக்கழிக்கும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு கோருகிறது.

17. வியாபார நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படும் மின்கட்டணம் போன்றே பள்ளிவாசல்களுக்கும் மின்கட்டணம்வசூலிக்கப்படுகிறது. அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் முற்றிலுமாக இலவச மின்சாரம் வழங்கும்படியும் இயலாவிட்டால் வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட் கட்டணத்தை வசூலிக்குமாறு தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

18. காழ்ப்புணர்வு காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு சில ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மறுக்கிறார்கள். மனிதாபிமானமற்ற இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

19. சில்லறை வணிகத்தில் 51 சதவிகிதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதியளிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக் குழு எச்சரிக்கை செய்கிறது. உள்நாட்டு மக்களின் பொருளாதாரத்தைச் சீரழித்து அந்நிய சக்திகளிடம் நாட்டையே அடகுவைக்க வேண்டிய நிலையைத்தான் 51 சதவிகித அந்நிய முதலீட்டிற்கு அனுமதியளிக்கும் இந்த முடிவு ஏற்படுத்தும். எனவே இந்தியாவை அந்நிய சக்திகளிடம் அடிமையாக்கும் மத்திய அரசின் இந்த முடிவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது

lundi 12 décembre 2011

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?

கேள்வி : குர்ஆனைத் தொட்டு முத்தமிடலாமா?

syed yusuf - dubai

பதில் : திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள்.

குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது. இதே நேரத்தில் நபியவர்களுக்கு குர்ஆன் எழுத்து வடிவில் இறக்கியருளப்படவில்லை. மாறாக ஓசை வடிவில்தான் இறக்கப்பட்டது.

குர்ஆனை ஓசை வடிவில் கொண்டு வருவதற்கு எழுத்து உதவியாக இருக்கின்ற காரணத்தால் நமது வசதிக்காக அதை எழுத்து வடிவில் ஆக்கிக் கொண்டோம். இவ்வாறு எழுதப்பட்ட காகிதங்களுக்கு எந்தப் புனிதமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதால் அவர்கள் குர்ஆனைப் பார்த்து ஓதி இருக்க முடியாது, அதனால் அவர்கள் குர்ஆன் எழுதப்பட்ட ஏடுகளை முத்தமிட்டிருக்கவும் முடியாது.

ஆனாலும் அவர்கள் காலத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களும் குர்ஆனை எழுதி வைத்துக் கொண்டவர்களும் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லச் சொல்ல எழுதியவர்களும் இருந்தனர். குர்ஆன் எழுதப்பட்ட ஏட்டை முத்தமிடுமாறு இவர்களில் யாருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக்கட்டளையும் பிறப்பிக்கவில்லை. அல்லது தமது முன்னிலையில் மற்றவர்கள் முத்தமிட்டு அவர்கள் அங்கீகரிக்கவும் இல்லை.

குர்ஆனை மதிக்கும் வழிமுறைகளில் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடாததால் குர்ஆனை முத்தமிடுவது அதிகப் பிரசங்கித்தனமாகும். நபிக்குத் தெரியாதது எனக்குத் தெரிந்து விட்டது என்று காட்டி நபியை அவமதிப்பதாகும்.

குர்ஆன் இடும் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவதும், அது தடை செய்த காரியங்களை விட்டு விலகுவதும் தான் நாம் குர்ஆனுக்குக் கொடுக்கும் மரியாதையாகும். இவ்வாறு செய்தாலே நாம் குர்ஆனுடைய புனிதத்தைக் காத்தவர்களாக முடியும். எனவே குர்ஆன் பிரதிகளை முத்தமிடுவது கூடாது. அதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.


பதில் : ரஸ்மின் MISc

samedi 10 décembre 2011

கருஞ்சீரகம் பற்றிய ஹதீஸ் ஸஹீஹானதா?

கேள்வி : அஸ்ஸலாமு அலைக்கும் .கருன்ஜீரகத்தில் மரணத்தை தவிர மற்ற எல்லா நோய்க்கும் மருந்து இருப்பதாக நபி( ஸல்) அவர்கள் சொன்னதாக உள்ள ஹதீஸ் சஹிஹான ஹதிசா ஆதாரத்துடன் விளக்கவும்.

farjana farvine - paris

பதில் : கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் மருத்துவம் இருக்கிறது என்ற கருத்தில் ஸஹீஹான ஹதீஸ்கள் நிறையவே இருக்கின்றன.புகாரி, முஸ்லிம் போன்ற பல கிரந்தங்களில் இந்தத் தகவல்கள் பதியப்பட்டுள்ளன.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ مَنْصُورٍ عَنْ خَالِدِ بْنِ سَعْدٍ قَالَ خَرَجْنَا وَمَعَنَا غَالِبُ بْنُ أَبْجَرَ فَمَرِضَ فِي الطَّرِيقِ فَقَدِمْنَا الْمَدِينَةَ وَهُوَ مَرِيضٌ فَعَادَهُ ابْنُ أَبِي عَتِيقٍ فَقَالَ لَنَا عَلَيْكُمْ بِهَذِهِ الْحُبَيْبَةِ السَّوْدَاءِ فَخُذُوا مِنْهَا خَمْسًا أَوْ سَبْعًا فَاسْحَقُوهَا ثُمَّ اقْطُرُوهَا فِي أَنْفِهِ بِقَطَرَاتِ زَيْتٍ فِي هَذَا الْجَانِبِ وَفِي هَذَا الْجَانِبِ فَإِنَّ عَائِشَةَ حَدَّثَتْنِي أَنَّهَا سَمِعَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ هَذِهِ الْحَبَّةَ السَّوْدَاءَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا مِنْ السَّامِ قُلْتُ وَمَا السَّامُ قَالَ الْمَوْتُ (خ:5687)

காலித் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எங்களுடன் ஃகாலிப் பின் அப்ஜர் (ரலி) அவர்கள் இருக்க நாங்கள் (பயணம்) புறப் பட்டோம். வழியில் ஃகாலிப் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப் (ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக் (ரலி) அவர்கள் உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.

அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதி-ருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவருடைய மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், "நபி (ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; "சாமை'த் தவிர என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன்'' எனத் தெரிவித்தார்கள். நான், "சாம் என்றால் என்ன?'' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் "மரணம்'' என்று பதிலளித்தார்கள். (புகாரி – 5687)
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُمَا أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي الْحَبَّةِ السَّوْدَاءِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا السَّامَ قَالَ ابْنُ شِهَابٍ وَالسَّامُ الْمَوْتُ وَالْحَبَّةُ السَّوْدَاءُ الشُّونِيزُ (خ :5688)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "கருஞ்சீரக விதையில் "சாமை'த் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது'' என்று கூறினார்கள். (புகாரி – 5688)
"சாம்' என்றால் "மரணம்' என்று பொருள். "அல்ஹப்பத்துஸ் ஸவ்தா' என்றால், (பாரசீகத்தில்) "ஷூனீஸ்' (கருஞ்சீரகம்) என்று பொருள்.

கருஞ்சீரகத்தை மருத்துவப் பொருளாக நாம் தாராளமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால் இன்று நமக்கு மத்தியில் சிலர் மிஸ்வாக் என்ற பெயரில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு அலைவதைப் போல் கருஞ்சீரகத்தையும் பாக்கட்டுக்குள் வைத்துக் கொண்டு அலைவதைப் பார்க்கக் கிடைக்கிறது. இப்படி பாக்கட்டுக்குள் வைத்துக் கொண்டு அலையும் படியோ அல்லது ஒவ்வொரு தொழுகையின் பின்னும் அதை உண்ணும் படியோ அல்லாஹ்வோ அவனுடைய தூதரோ எந்த இடத்திலும் வழிகாட்டவில்லை.

பதில் : ரஸ்மின் MISc

vendredi 9 décembre 2011

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை

மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.
(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!
(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

அராஜகம் செய்யாதீர்கள்!

அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள்.
(ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

பணியாளர்களைப் பேணுவீர்!

மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!
(தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

அநீதம் அழிப்பீர்!

அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

முறைதவறி நடக்காதீர்!

அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது.
(இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789) [1]

உரிமைகளை மீறாதீர்!

மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

பெண்களை மதிப்பீர்!

கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

இரண்டைப் பின்பற்றுவீர்!

மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

எச்சரிக்கையாக இருப்பீர்!

மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!
(பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும்.
(ஸஹீஹ்ல் புகாரி 4402)

சொர்க்கம் செல்ல வழி!

மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!.
(ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!

ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார்.
(ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)
மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. ( ளிலாலுஸ் ஜன்னா 1061)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!

இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ""நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ""இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் 2334)

இறுதி இறை வசனம்.

இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:

""இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.) (அல்குர்அன் 5:3)
ஸஹீஹ்ல புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)

lundi 5 décembre 2011

கணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்

கேள்வி : kanavugalum adan palangalum pattri koora mudiyuma please...
தமிழாக்கம் : தயவுசெய்து கணவுகளும் அதன் பலன்களும் பற்றி கூற முடியுமா?

- fathima muzniya(usa)

பதில்கனவுகளின் பலன்கள் பற்றி பல செய்திகள் திருமறைக் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சிலதை இங்கு தருகிறோம்.

கனவுகளின் பலன்கள் விஷயத்தில் இன்று நமது சமுதாயத்தில் பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். கனவுகளின் பலன்களை படித்த அறிஞர்கள் அறிவார்கள். பாமரர்கள் அறியமாட்டார்கள் என்றெல்லாம் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றித் திரியும் போலிகள் நமது சமுதாயத்தில் நிறையவே இருக்கிறார்கள்.

ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்த வரையில் நமக்குத் தோன்றும் கனவுகளுக்கு விளக்கத்தை நாமே தீர்மானித்துக் கொள்ள முடியும் எந்த போலிகளிடமும் ஏமாற வேண்டிய அவசியம் இல்லை.

நல்ல கனவுகள் என்பவை அல்லாஹ்வின் புறத்தால் நமக்கு தரப்படுபவையாகும். அல்லாஹ் தரும் கனவுகளுக்கு வேறு ஒருவர் விளக்கம் சொல்ல வேண்டிய தேவையே இருக்காது அல்லாஹ்வே அதனை விளக்கமாகத் தான் தருவான்.

நாம் கனவு கண்டால், நாம் காணும் கனவில் என்ன தகவல் வருகிறதோ அதுதான் அந்தக் கனவுக்கு விளக்கமாக இருக்கும்.
'அனைத்தையும் அறிந்தவனை (அல்லாஹ்வை) போல் வேறு எவரும் உமக்கு விளக்க முடியாது' என்று அல்லாஹ் கூறுகிறான். (திருக்குர்ஆன் 35:14)
அனைத்து விஷயத்தையும் விளக்கமாக சொல்லும் இறைவன் கனவையும் விளக்கமாகத் தான் தருவான் என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் நாம் விளங்க முடியும்.

குர்ஆனிலும், நபி மொழிகளிலும் இடம் பெற்ற சில கனவுகள் பற்றிய செய்திகளை இங்கு தருகிறோம்.

தான் ஹஜ் செய்வதாக நபியவர்கள் கண்ட கனவு.

சொந்த ஊரிலிருந்து விரட்டப்பட்ட நபியவர்கள். மீண்டும் தமது ஊரான மக்காவுக்குப் போய் ஹஜ் செய்வதைப் போன்று கனவு கண்டார்கள் அதனை அல்லாஹ் நிறைவேற்றி வைத்தான்.

{لَقَدْ صَدَقَ اللَّهُ رَسُولَهُ الرُّؤْيَا بِالْحَقِّ لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ إِنْ شَاءَ اللَّهُ آمِنِينَ مُحَلِّقِينَ رُءُوسَكُمْ وَمُقَصِّرِينَ لَا تَخَافُونَ فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوا فَجَعَلَ مِنْ دُونِ ذَلِكَ فَتْحًا قَرِيبًا} [الفتح: 27
அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாதும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான். (அல்குர்ஆன் 48:27)

யூசுப் நபியின் கனவு

நபி யுசுப் அவர்கள் சிறு பிள்ளையாக இருக்கும் போது கண்ட கனவைப் பற்றி இறைவன் திருமறைக் குர்ஆனிலே குறிப்பிடுகிறான்.

{إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ } [يوسف: 4
'என் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் (கனவில்) கண்டேன். அவை எனக்குப் பணியக் கண்டேன்' என்று யூஸுஃப் தமது தந்தையிடம் கூறியதை நினைவூட்டுவீராக! (அல்குர்ஆன் 12:4)

நபி யுசுப் அவர்கள் பார்த்ததாகச் சொன்ன மேற்கண்ட கனவின் விளக்கம் என்ன என்பதை இதே அத்தியாயத்தின் 100-வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
{وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوا لَهُ سُجَّدًا وَقَالَ يَا أَبَتِ هَذَا تَأْوِيلُ رُؤْيَايَ مِنْ قَبْلُ قَدْ جَعَلَهَا رَبِّي حَقًّا وَقَدْ أَحْسَنَ بِي إِذْ أَخْرَجَنِي مِنَ السِّجْنِ وَجَاءَ بِكُمْ مِنَ الْبَدْوِ مِنْ بَعْدِ أَنْ نَزَغَ الشَّيْطَانُ بَيْنِي وَبَيْنَ إِخْوَتِي إِنَّ رَبِّي لَطِيفٌ لِمَا يَشَاءُ إِنَّهُ هُوَ الْعَلِيمُ الْحَكِيمُ } [يوسف: 100
தமது பெற்றோரைச் சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தார். அவர்கள் அனைவரும் அவருக்குப் பணிந்தனர். 'என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவுக்கு விளக்கம் இதுவே. அதை என் இறைவன் உண்மையாக்கி விட்டான். சிறையிலிருந்து வெளிவரச் செய்த போது, அவன் எனக்குப் பேருதவி செய்தான். எனக்கும் என் சகோதரர்களுக்கும் இடையே ஷைத்தான் பிரிவினை ஏற்படுத்திய பின் உங்களைக் கிராமத்திலிருந்து கொண்டு வந்து சேர்த்து விட்டான். என் இறைவனோ நாடியதை நுணுக்கமாகச் செய்பவன்; அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:100)
யூசுப் நபியவர்கள் பிற்காலத்தில் நாட்டின் ஜனாதிபதியாக ஆகி அவர்களின் ஆட்சியின் கீழ் அவர்களின் தாய் தந்தையர் வாழும் நிலை ஏற்படும் என்பதையும் அவரது அண்ணன்மார்களும் அவருக்குக் கீழே இருக்கும் நிலை ஏற்படும் என்பதையும் சூரியன், சந்திரன், பதினொரு நட்சத்திரங்கள் அவருக்குப் பணிவதாகக் காட்டுவதன் மூலம் இறைவன் அறிவித்தான்.

யுசுப் நபியவர்கள் கண்ட கனவு அப்படியே நிறைவேறியது.

மன்னரின் கனவு

யூசுப் நபி காலத்தில் எகிப்தை ஆண்ட மன்னர் கண்ட கனவும் அந்தக் கனவுக்கு யூசுப் நபி அளித்த விளக்கமும் 12வது அத்தியாயம் 43 முதல் 49 வரை கூறப்பட்டுள்ளது.
'கொழுத்த ஏழு மாடுகளை, மெலிந்த ஏழு மாடுகள் தின்பதாகவும், பசுமையான ஏழு கதிர்களையும், காய்ந்த வேறு கதிர்களையும் நான் (கனவில்) கண்டேன். பிரமுகர்களே! நீங்கள் கனவுக்கு விளக்கம் கூறுவோராக இருந்தால் எனது கனவுக்கு விளக்கம் தாருங்கள்!' என்று மன்னர் கூறினார்.
'இவை அர்த்தமற்ற கனவு. அர்த்தமற்ற கனவின் விளக்கத்தை நாங்கள் அறிந்திருக்கவில்லை' என்று அவர்கள் கூறினர்.
'நான் உங்களுக்கு அதற்கான விளக்கம் தருகிறேன். என்னை அனுப்புங்கள்!' என்று அவ்விருவரில் விடுதலையானவர் நீண்ட காலத்திற்குப் பின் நினைவு வந்தவராக கூறினார்.
யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு மெலிந்த மாடுகள், ஏழு கொழுத்த மாடுகளைத் தின்றதற்கும், ஏழு பசுமையான கதிர்கள் மற்றும் காய்ந்த கதிர்களுக்கும் எங்களுக்கு விளக்கம் தருவீராக! மக்களிடம் (இத்தகவலுடன்) நான் திரும்பிச் செல்ல வேண்டும். அவர்கள் விளங்கிக் கொள்வார்கள் (என்றார்.)
தொடர்ந்து ஏழு ஆண்டுகள் விவசாயம் செய்வீர்கள். அறுவடை செய்தவற்றில் உண்பதற்காக குறைவான அளவைத் தவிர மற்றவற்றைக் கதிர்களுடன் விட்டு வையுங்கள்!
இதன் பிறகு பஞ்சமான ஏழு (ஆண்டுகள்) வரும். அவற்றுக்காக நீங்கள் முன்னர் இருப்பு வைத்தவற்றில் சிலதைத் தவிர மற்றவற்றை அவை சாப்பிட்டு விடும்.
'இதன் பிறகு மக்களுக்கு மழை பொழியும் ஆண்டு வரும். அந்த ஆண்டில் பழ ரசங்களைப் பிழிவார்கள்' (என்றார்)
(அல்குர்ஆன் 12:43-49)
மெலிந்த ஏழு மாடுகள் = வரட்சியான ஏழு ஆண்டுகள்
கொளுத்த ஏழு மாடுகள் = செழிப்பான ஏழு ஆண்டுகள்
மெலிந்த மாடு கொளுத்த மாட்டைச் சாப்பிடுதல் = வரண்ட ஆண்டுகள் செழிப்பான ஆண்டுகளின் சேமிப்பைச் சாப்பிடுதல்

இரண்டு கைதிகளின் கனவு

யூசுப் நபியுடன் வேறு இரண்டு கைதிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த இரு கைதிகளும் வெவ்வேறு கனவுகளைக் கண்டு அதற்கான விளக்கத்தை யூசுப் நபியிடம் கேட்டனர்.
{وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا وَقَالَ الْآخَرُ إِنِّي أَرَانِي أَحْمِلُ فَوْقَ رَأْسِي خُبْزًا تَأْكُلُ الطَّيْرُ مِنْهُ نَبِّئْنَا بِتَأْوِيلِهِ إِنَّا نَرَاكَ مِنَ الْمُحْسِنِينَ } [يوسف: 36
அவருடன் இரு இளைஞர்கள் சிறைக்குச் சென்றனர். 'நான் மது ரசம் பிழிவதைப் போல் கனவு கண்டேன்' என்று ஒருவர் கூறினார். 'நான் என் தலையில் ரொட்டியைச் சுமந்திருக்க, அதைப் பறவை சாப்பிடக் (கனவு) கண்டேன்' என்று இன்னொருவர் கூறினார். 'இதன் விளக்கத்தை எங்களுக்குக் கூறுவீராக! உம்மை நன்மை செய்வோரில் ஒருவராக நாங்கள் காண்கிறோம்' (என்றனர்).
(அல்குர்ஆன் 12:36)
இதற்கு யூசுப் நபி அளித்த விளக்கமும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
'என் சிறைத் தோழர்களே! உங்களில் ஒருவர் தனது எஜமானனுக்குப் மதுவைப் புகட்டுவார். மற்றவர் சிலுவையில் அறையப்படுவார். அவரது தலையைப் பறவைகள் சாப்பிடும். எது குறித்து விளக்கம் கேட்கிறீர்களோ அந்த விஷயம் முடிவு செய்யப்பட்டு விட்டது' (என்றார்.)
(அல்குர்ஆன் 12:41)
தனது தலையின் மேல் ரொட்டியைச் சுமந்து செல்லும் போது அவற்றைப் பறவைகள் உண்பது போல் கனவு கண்டவர் மரண தண்டனை அடைவார் என்று யூசுப் நபி விளக்கினார்கள். அவரது உணவு முடிந்து விட்டது என்பதை பறவைகள் சாப்பிட்டதன் மூலம் அல்லாஹ் காட்டினான். அதன் பலனும் அவ்வறே அமைந்தது.

பழரசம் பிழிவது போல கனவு கண்டவருக்கு அவர் கனவு கண்டது போல் எஜமானருக்கு பழரசம் பிழிந்து புகட்டும் வேலை கிடைக்கும் என்றார்கள்.

இந்த இருவரும் எதைக் கனவில் கண்டார்களோ அதற்கேற்ப பலனும் அமைந்தது.

யூசுப் நபியிடம் இரு கைதிகள் விளக்கம் கேட்டது போல் நாமும் மற்றவர்களிடம் விளக்கம் கேட்கலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது. இறைத்தூதர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து செய்திகள் கிடைப்பதால் அவர்களால் மிகத் தெளிவான பலனைக் கூற முடியும்.

இறைத்தூதராக இல்லாத ஒருவரிடம் பலன் கேட்க எந்தச் சான்றும் இல்லை.

லைலதுல் கத்ர் இரவு பற்றிய கனவு

லைலதுல் கத்ர் இரவில் மழை பெய்வது போலவும், அதனால் தரை சேறும் சகதியுமாகி அதில் ஸஜ்தாச் செய்வது போலவும் நபிகள் நாயகம் (ஸல்) கனவு கண்டார்கள். அவர்கள் கனவு கண்டவாறு மறுநாள் இரவு மழை பெய்து, களி மண்ணில் அவர்கள் ஸஜ்தாச் செய்தனர். எதைக் கண்டார்களோ அது போலவே அதன் பலனும் அமைந்தது.

புகாரி 813, 2016, 2018, 2027, 2036, 2040 ஆகிய ஹதீஸ்களில் இதைக் காணலாம்.

பல்வேறு அளவுகளில் சட்டையைக் காணுதல்
மனிதர்கள் பலவித அளவுகளில் சட்டை அணிந்தவர்களாக நபிகள் நாயகம் கனவு கண்டார்கள். சிலரது சட்டை மார்பு வரையும், சிலரது சட்டை அதை விடக் குறைவாகவும் இருந்தது. உமர் அவர்களின் சட்டை தரையில் இழுபடும் அளவுக்கு இருந்தது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இதன் விளக்கம் என்ன என்று உமர் (ரலி) கேட்ட போது 'மார்க்கம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கம் தந்தார்கள். (புகாரி 23, 3691, 7008, 7009)
அதிகமான மார்க்கப் பற்று உள்ளவர் பெரிய ஆடை அணிந்தது போன்றும், மார்க்கப்பற்று குறைவாக உள்ளவர் அதற்கேற்ப சிறிய அளவில் சட்டை அணிந்தது போன்றும் கனவு கண்டு நபிகள் நாயகம் விளக்கமும் தந்துள்ளார்கள்.

எதிரிகளின் தோல்வியைக் கனவில் காணுதல்

பத்ருக் களத்தில் முஸ்லிம்கள் குறைந்த எண்ணிக்கையிலும் எதிரிகள் அதிக எண்ணிக்கையிலும் இருந்தனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கனவில் எதிரிகள் குறைவாகவும் முஸ்லிம்கள் அதிகமாகவும் இருப்பது போல் இறைவன் காட்டினான். முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதை இதன் மூலம் இறைவன் முன்னறிவிப்புச் செய்தான்.

(முஹம்மதே!) உமது கனவில் அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்!. அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் முரண்பட்டிருப்பீர்கள். எனினும் அல்லாஹ் காப்பாற்றினான். உள்ளங்களில் உள்ளவற்றை அவன் அறிந்தவன்.
(அல்குர்ஆன் 8:43)

ஈஸா நபியைக் கனவில் காணுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கனவில் கஃபாவைத் தவாப் செய்வது போல கண்டார்கள். அதே கனவில் ஈஸா நபியையும், தஜ்ஜாலையும் கண்டார்கள். அவ்விருவரின் அங்க அடையாளங்களை நமக்கும் விவரித்தார்கள்.
இது புகாரி 3441, 3440, 5902, 6999, 7026, 7128 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஜ்ஜாலையும், ஈஸா நபியையும் எந்த வடிவத்தில் கனவில் கண்டார்களோ அதுவே அவர்களின் வடிவமாக இருந்தது.

ஹிஜ்ரத் பற்றிய கனவு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும் போது வேறு ஒரு ஊருக்கு இடம் பெயர்வது போல் கண்டார்கள். பேரீச்சை மரம் நிறைந்த அந்த ஊர் யமாமா என்ற ஊராக இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளங்கிக் கொண்டார்கள். ஆனால் அது மதீனாவாக அமைந்து விட்டது.
இது புகாரியில் 3622, 7035 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

கப்பல் படை

தமது சமுதாயத்தில் கடற்படை அமைவது போலவும் அந்தப் படையில் உம்மு ஹராம் என்ற பெண்மணி இடம் பெறுவது போலவும் நபிகள் நாயகம் (ஸல்) கனவு கண்டார்கள். தாம் கண்டவாறு நிறைவேறும் என்று விளக்கினார்கள்.
(புகாரி 2789, 2800, 2878, 2895, 2924, 6282, 7002)

பாலருந்துவது போல கனவு காணுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பால் அருந்துவது போலவும் மீதியை உமர் (ரலி) அவர்களிடம் கொடுத்தது போலவும் கனவில் கண்டார்கள். கல்வியே பால் வடிவில் காட்டப்பட்டதாகவும் அவர்கள் விளக்கம் தந்தார்கள்.
(புகாரி 82, 3681, 7006, 7007, 7027, 7032)

பொய் நபிகளைக் கனவில் காணுதல்
இரு கைகளிலும் தங்கக் காப்புகள் அணிவிக்கப்பட்டது போல் என் கனவில் கண்டேன். அது எனக்குச் சுமையாக இருந்தது. அதை ஊதுமாறு அல்லாஹ் எனக்கு அறிவித்தான். நான் ஊதியதும் இரு காப்புகளும் பஞ்சாய்ப் பறந்தன. சன்ஆ, எமன் ஆகிய பதிகளில் தம்மை நபியென வாதிட்ட இரு பொய்யர்களுக்கு ஏற்படும் தோல்வியை அல்லாஹ் இவ்வாறு காட்டுவதாக விளங்கிக் கொண்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
(புகாரி 3621, 4375, 7034, 7037)
உடைந்த வாளைக் காணுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாள் உடைந்தது போலவும் பின்னர் உடைந்த வாள் சரியாகி விட்டது போலவும் கனவு கண்டார்கள். அது உஹதுக் களத்தில் முன்னர் ஏற்பட்ட தோல்வியையும் பின்னர் வெற்றி கிடைத்ததையும் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) விளக்கினார்கள்.
(புகாரி 3622, 4081, 7041)
உமரின் மாளிகையைக் காணுதல்
மறுமையில் உமர் (ரலி) அவர்களுக்குக் கிடைக்கும் மாளிகையை நபிகள் நாயகம் கனவில் கண்டு அதை உமர் (ரலி) யிடம் கூறினார்கள்.
(புகாரி 3242, 3680, 5227, 7023, 7025)
புகாரி 3679-ல் உமர், பிலால், ருமையா ஆகியோரின் மாளிகைகளைக் கனவில் கண்டதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

தலைவிரி கோலத்தில் பெண்ணைக் காணுதல்
மதீனாவில் கொள்ளை நோய் ஏற்பட்ட போது கனவில் ஒரு பெண் தலைவிரி கோலமாக ஜுஹ்ஃபா என்ற இடத்துக்குச் செல்வது போல் கனவு கண்டார்கள். அந்த நோய் மதீனாவை விட்டு ஜுஹ்பா என்ற பகுதிக்குச் சென்றதாக விளக்கினார்கள்.
(புகாரி 7038, 7039, 7040)
திருமணத்திற்கு முன்பே மனைவியைக் காணுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்திற்கு முன்பே கனவில் ஆயிஷா (ரலி) யைக் கண்டு அல்லாஹ் நாடினால் இது நடக்கும் என்றார்கள். அவ்வாறே நடந்தது.
(புகாரி 3895, 5078, 5125, 7011, 7012)
இப்படி ஏராளமான கனவுகள் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளன. வாளியில் தண்ணீர் இறைப்பது போன்ற கனவு புகாரி 3664, 7021, 7022, 7475 ஆகிய ஹதீஸ்களில் காணலாம். தேனையும் நெய்யையும் கனவில் கண்டதாக புகாரி 7046வது ஹதீஸில் காணலாம். பசுமையான பேரீச்சம் பழத்தைக் கனவில் கண்டது முஸ்லிம் 4215வது ஹதீஸில் காணலாம். இவை அனைத்தையும் நாம் ஆய்வு செய்தால் நாம் எதைக் கனவில் காணுகிறோமோ அது அப்படியே நிறைவேறலாம். அல்லது நாம் கண்டதற்கு நெருக்கமானதாக அதன் விளக்கம் அமையலாம் என்பதை அறியலாம்.

மேலும் நபிகள் நாயகம் கண்ட அதே கனவை நாமும் கண்டால் அதே பலன் என்று முடிவு செய்யக் கூடாது. கனவு காண்பவரின் காலம், அவர் சந்தித்த பிரச்சினை போன்றவற்றுக்கேற்ப அதன் பலன் இருக்கலாம்.

தலைவிரி கோலமாக ஒரு பெண்ணைப் பார்த்து கொள்ளை நோய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளங்கினார்கள். கொள்ளை நோய் இல்லாத போது அது போல கனவு கண்டால் அதே விளக்கத்தைக் கொடுக்க முடியாது.
காணுகின்ற மனிதர் சிந்தித்துப் பார்த்தால் இது எதைக் குறிக்கிறது என்று தீர்மானிக்க முடியும்.

எதையுமே தீர்மானிக்க முடியாவிட்டால் பேசாமல் அதை அலட்சியப்படுத்தி விடலாம். அதில் ஏதேனும் செய்தி இருந்தால் நமக்குத் தெளிவாகப் புரியும் வகையில் அதை வேறு கனவின் மூலம் அல்லாஹ் காட்டுவான்.

கனவில் காண்பதை நாம் விளங்கும் போது கனவில் கண்டது அப்படியே வரிக்கு வரி நடக்கும் என்று கருதக் கூடாது. நாம் புரிந்து கொண்டது நடக்காமல் அதற்கு நெருக்கமானதும் நடக்கலாம்.

யூசுப் நபியவர்கள் பதினொரு நட்சத்திரங்கள் தமக்குப் பணிந்ததாகக் கனவு கண்டார்கள். அதற்கு ஏற்ப 11 சகோதரர்களும் அவரைப் பணிந்தார்கள். கனவில் சூரியனும், சந்திரனும் தமக்குப் பணிந்ததாகக் கண்டார்கள். இது அப்படியே நிறைவேறுவது என்றால் யூசுப் நபியின் தாயும், தந்தையும் யூசுப் நபிக்குப் பணிய வேண்டும். ஆனால் தாயையும் தந்தையையும் சிம்மாசனத்தில் அமரச் செய்து அனைவரும் அவ்விருவருக்கும் பணிந்தார்கள் என்று தான் 12:100 வசனம் கூறுகிறது. கனவில் காட்டப்பட்டது ஒரு அளவுக்குத் தான் நடந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஊருக்கு ஹிஜ்ரத் செய்வது போல் கண்டார்கள். அந்த ஊர் யமாமா' என்று நபிகள் நாயகம் (ஸல்) நினைத்தார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் ஹிஜ்ரத் செய்தது மதீனாவாக இருந்தது. இதிலிருந்து கனவில் காட்டப்படும் செய்தி நூற்றுக்கு நூறு என்ற அடிப்படையில் இருக்காது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

பதில் : ரஸ்மின் MISc