புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


jeudi 31 mars 2011

ஏப்ரல் ஃபுல்: ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!


ஏப்ரல் 1 என்றாலே ஏமாற்றுதல் என்று பொருள் மாறும் அளவிற்கு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி மாறிவிட்டது.
அன்று உலகம் முழுவதும் ஒருவர் மற்றவரிடம் நம்பவைத்து பொய் சொல்லி, நம்பிய  பிறகு ஏமாற்றி, அவரை பார்த்து மற்றவர்கள் ஏளனமாகச் சிரித்து மகிழ்வதை  வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி  இழிவுபடுத்துவதில் அளாதி இன்பம் அடைக்கின்றனர்.
April Fool’s Day அல்லது All Fool’s Day என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஏப்ரல் ஃபுல் க்கு பல வரலாறுகள் சொல்லப்படுகின்றது
முஸ்லிம்களில் சிலரும் அன்ற தினத்தில் நண்பர்களை ஏமாற்றி ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி மகிழ்கின்றனர்.
எனவே நாம், நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.


ஹோலி கலாச்சாரம்

பொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத் தெளித்து அசிங்கப் படுத்துகின்றார்கள். இதை ஏப்ரல் ஃபூலின் ஓர் அடையாளமாக நினைத்து செய்கின்றனர். மையைத் தெளிக்கும் இந்த நடைமுறையானது ஹோலி பண்டிகையின் போது நிறங்களை பரஸ்பரம் வீசிக் கொள்ளும் இந்துக்களின் ஒரு பிரிவினருடைய கலாச்சாரத்துடன் ஒத்துப் போகின்றது. எனவே மாற்று மதக் கலாச்சாரம் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் இதைக் கைவிட வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே! (நூல்: அபூதாவூத் 3512)

பொய்க் கலாச்சாரம்


இதைத் தவிர மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்குவதற்காக பொய் பேசுகின்றார்கள். இது பெருங்குற்றம் ஆகும். பொய் சொல்லி தீமை செய்து கொண்டிருப்பதன் காரணமாக அல்லாஹ்வின் அருளும் அன்பும் இழந்து அவனது கோபத்திற்கு ஆளாகி விடுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டு விடுவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 6094


ஆக இந்தப் பொய்யர்கள் அதிகமான தீமைகளைச் செய்து நரகத்தை அடைகின்றனர். எனவே நாம் பொய் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

TNTJ வின் மாநிலப் பொதுக்குழுவும் முரசோலி செய்தியும் கலைஞரின் பதிலும்!



mercredi 30 mars 2011

புதுவை தேர்தல் நிலைபாடு




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலப் பொதுக்குழு கூட்டம் காரைக்காலில் இன்று (30-3-11) காலை நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜே பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புதுவை மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு புதுவையில் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது உள்ள முக்கிய விசயங்கள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.



புதுவை தேர்தல் நிலைபாடு – புதுவை பொதுக்குழுவிற்கு பின் செய்தியாளர்களுக்கு மாநிலத் தலைவர் அளித்த பேட்டி!

mardi 29 mars 2011

இஸ்லாத்தின் முகமன் ஸலாம்


சந்திக்கும் வேளையில்

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பல்வேறு சொற்கள் மூலம் முகம கூறுகின்றனர். சந்திக்கப்படுபவர் முக்கியமான நபர் என்றால் அவரது காலில் விழுதும், கூனிக் குறுகுவதும் சிலருக்கு வழக்கமாக உள்ளது. ஆனால் இஸ்லாம் கற்றுத் தரும் முகமன் மனிதனின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படாதவகையிலும், சம நிலையில் அன்பு செலுத்துவதற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளது.

·         இஸ்லாத்தின் முகமன் ஸலாம்
·         ஸலாம் கூறுவதால் கிடைக்கும் பயன்கள்
·         பல வகைச் சொற்கள்
·         ஸலாம்
·         ஸலாமுன் அலை(க்)க
·         அஸ்ஸலாமு அலை(க்)க
·         ஒருவருக்கு ஒருமை, பலருக்கு பன்மை
·         ஸலாமுக்குப் பதிலுரைத்தல்
·         சிறந்த முறையில் மறுமொழி கூற வேண்டும்
·         ஸலாம் சொல்லி அனுப்புதல்
·         ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?
·         ஸலாமின் ஒழுங்குகள்
·         மலஜலம் கழிக்கும் போது ஸலாம் கூறக் கூடாது
·         ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் ஸலாம் கூறலாம்.

சென்னை பாரிமுனையில் பள்ளிவாசலை இடித்து அபகரிக்க முயற்சி – களமிறங்கி மீட்டெடுத்த தவ்ஹீத் ஜமாஅத்!



சென்னை பாரிமுனையில் பிராட்வே சாலையில் இமேஜ் ஆப்டிக்கல் என்ற கண்ணாடி ஷோரூம் அமைந்துள்ளது. அந்தப்பகுயில் வந்து செல்லும் மக்கள் தொழுவதற்கு இடம் தேடி மிகவும் சிரமப்படும் அப்பகுதி மக்களின் அவலத்தைக்கண்ட‌ அந்த கட்டிடத்தின் உரிமையாளர் உமர் அப்துல்லாஹ், அந்த கட்டிடத்தின் முதல் தளத்தின் ஒரு பகுதியை தொழுகை நடத்துவதற்கு பள்ளி அமைத்துக்கொள்ளலாம் என தானமாக வழங்கியிருக்கிறார். மட்டுமின்றி இனி அந்த இடத்திற்கு தானோ தன் வாரிசுகளோ உரிமை கொண்டாட மாட்டார்கள் எனவும் வாக்குறுதி அளித்திருக்கிறார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் அந்த இடம் அங்கு வந்துசெல்லும் மக்கள் தொழுவதற்கு நல்ல முறையில் பயன்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் கேராளாவில் இயங்கி வரும் “மர்கஸூஸ் தக்காபஸூஸ் சுன்யா” என்ற எத்தீம் கானா அமைப்பு நிர்வாகிகள் உமர் அப்துல்லாஹ் அவர்களைத் தொடர்பு கொண்டு எங்களுக்கு ஒரு இடம் தாருங்கள். அங்கே நாங்கள் கடை கட்டி வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தை எங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம் என இவர்கள் கேட்க, அவர்களுக்காக அந்த கட்டிடத்தின் 3 மற்றும் 4வது தளங்களை முழுமையாக விட்டுக்கொடுத்து விட்டு டெல்லிக்கு சென்று அங்கேயே தங்கி விட்டார் உமர் அப்துல்லாஹ்.
இந்த நிலையில் கேரள அமைப்பினரால் அந்தக் கட்டிடத்திற்கு அல்-அல்ஹாஜ்.மன்சூர் என்பவர் நிர்வாகியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். அந்த கேரள அமைப்பினர் தொழுகை நடந்து வரும் இரண்டாவது தளத்தையும் அபகரிக்க நினைத்து மன்சூர் மூலமாக அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

dimanche 27 mars 2011

வட்டி வாங்கியவருடன் உறவு அல்லது நட்பு வைத்துக் கொள்ளலாமா ? அவர்களுக்காக துஆ செய்யலாமா ?





வட்டி வாங்கியவருடன் உறவு அல்லது நட்பு வைத்துக் கொள்ளலாமா ? அவர்களுக்காக துஆ செய்யலாமா ? - #கேள்வி 12

பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்

திமுகவை ஆதரிக்க என்ன காரணம் ?


அதிமுக ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என திருச்சியில் ஜெயலலிதா அவர்கள் திருச்சி மேற்கு வேட்பாளர் மரியம் பிச்சையை ஆதரித்து பிரச்சாரம் செய்த செய்தி வெளியாகியுள்ளது . ஆனால் இந்தச் செய்தி வந்த பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பொதுக்குழுவில் திமுகவிற்கு ஆதரவு என்ற நிலையை எடுத்துள்ளது. இந்த இரண்டு விசயங்களையும் நோக்கும் பொதுமக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். அதாவது ஜெயலலிதா அவர்கள் தான் இடஒதுக்கீட்டை அறிவித்து விட்டார்களே! பின்பு ஏன் இவர்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவரது மத்தியிலுமே எழும். எழவேண்டும்.
இறைவனின் மாபெரும் கிருபை:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை எந்த வியசத்தையும் தன்னிச்சையாக எடுக்கக்கூடிய தனிநபர் முடிவுக்கு வேலையே இல்லை என்பதை அனைத்து மக்களும் நன்கறிவார்கள். எங்களுக்கு 2 சீட்டு கிடைத்தால் போதும், நாங்கள் எப்படியாவது எம்எல்ஏ அல்லது எம்பியாக ஆகிவிட மாட்டோமா? அல்லது எனக்கு ஒரு வாரிய பதவியும், அவருக்கு ஒரு காரிய பதவியும் கிடைத்தால் போதுமே! காலத்துக்கும் கொண்டை விளக்கு வைத்த வண்டியிலே ஒய்யார பவனி வரலாமே என தவமாய்த் தவமிருந்து அரசியல் கட்சித் தலைவர்களிடம் அப்பாயின்மென்ட் வாங்கி சமுதாய மக்களை அடகு வைத்து அதன் மூலம் தங்கள் சுய லாபங்களைத் தீர்த்துக் கொள்ளும் சமுதாய அமைப்புகள் உள்ளன.
இவர்களுக்கு மத்தியில், எங்கள் சமுதாயத்திற்கு மட்டும் நன்மை என்ற ரீதியில் வந்தால் மட்டும் தான் ஆதரவு, மற்றபடி தலைவர்களின் தனிப்பட்ட வேறு எந்த கோரிக்கைகளுக்குமோ அல்லது அமைப்பின் தலைவர்களை தனியாகச் சந்தித்து டேபிளுக்கு கீழே அழுத்தும் வேலைகளுக்கோ துளியளவும் இடமில்லாத காரணத்தால் தான் இறைவனின் மாபெரும் கிருபையினால் இன்றைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு தன்னிகரற்ற இடத்தைப்பெற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது.
கொள்கை ரீதியாக மடித்துக்கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கும் யாராக இருந்தாலும் ஏதாவது சமுதாய‌ கோரிக்கை சார்பாக தவ்ஹீத் ஜமாஅத் அழைத்தால், இவர்களை நம்பி போகலாம், இவர்கள் யாருடனும் விலை போக மாட்டார்கள் என்ற ரீதியில் தவ்ஹீத் ஜமாஅத் மீது முழு நம்பிக்கை வைத்து அலைகடலென திரண்டு வருவது என்பது ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் கிடைத்த பாக்கியம் எனலாம். சமுதாயப் பணிகளை சளைக்காமலும் சுய நலமில்லாமலும் செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வரப்போகும் தேர்தலையும் சமுதாயத்தின் நன்மையை முன்வைத்து எதிர்கொள்ளத் தீர்மானித்தது.

இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக உறுதி அளித்ததால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தி.மு.க.வுக்கு ஆதரவு என கருணாநிதியை சந்தித்து தெரிவித்தனர்

சென்னை, மார்ச்.27-

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக உறுதியளித்துள்ளதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

தி.மு.க.வுக்கு ஆதரவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ஜெய்னுலாபுதீன், பொதுச் செயலாளர் ரஹமதுல்லா, செயலாளர் சாதிக் உள்பட நிர்வாகிகள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.

பின்னர் வெளியில் வந்த ஜெய்னுலாபுதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கல்வி, வேலைவாய்ப்பில் அடித்தட்டு முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால் தனி இடஒதுக்கீடு தேவை என்ற அடிப்படையில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆட்சியில் பெற்றோம்.

இடஒதுக்கீட்டை அதிகரிக்க

இது போதுமானதாக இல்லை என்று கருதியதால் இந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டை யார் அதிகரித்து தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறுகிறார்களோ அவர்களை ஆதரிப்பது என்ற நிலையில் இருந்தோம்.

அ.தி.மு.க. தலைமை எங்களை 5 முறை தொடர்பு கொண்டு இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவோம் என்றனர். எங்கள் அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

தி.மு.க. அறிவிப்பு

ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்த இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக அறிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க. கூறாமல் சென்றுவிட்டது. தேர்தல் அறிக்கையில் கூறாமல் பிரசாரங்களில் கூறுவதை நாங்கள் உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது.

அதன் அடிப்படையில், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கோரிக்கை அடிப்படையில் தி.மு.க.வை ஆதரிப்பது என்று எங்கள் மாநில பொதுக்குழுவில் முடிவெடுத்திருந்தோம். அந்த முடிவினை முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து தெரிவித்தோம். பொதுக்குழுவில் எடுத்த முடிவுப்படி முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு தரவேண்டும் என்றும் நாங்கள் அவரிடம் கூறியிருக்கிறோம்.

இவ்வாறு ஜெய்னுலாபுதீன் கூறினார்.

samedi 26 mars 2011

TNTJ வின் தேர்தல் நிலைபாடு விளக்கம் – 2011 (வீடியோ)



நன்றி : TNTJ.NET

சென்னையில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு – TNTJ வின் தேர்தல் நிலைபாடு


வரும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை ( 26.03.11 ) சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா தலைமையில் நடைபெற்றது.
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக தேர்தல் அறிக்கையில் அதிமுக வாக்களித்தால் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னர் அதிமுக சார்பில் அதன் மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொன்னையன், அன்வர் ராஜா, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய முக்கிய தலைவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு மூன்று தடவை நேரில் வந்து ஆதரவு கேட்டனர். தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க உறுதியளிப்போம் என்று சொன்னால் தவிர நாங்கள் ஆதரிக்க முடியாது என்று நாம் திட்டவட்டமாகச் சொன்னோம். இதன் பின்னர் பல தடவை பேச்சு வார்த்தை நடத்திய பின் தேர்தல் அறிக்கையில் சொல்வதாகவும் அதற்கான வாசகங்கள் எப்படி அமைய வேண்டும் என்று நம்மிடம் கேட்ட போது அந்த வாசகத்தை நாம் எழுதிக் கொடுத்தோம். கட்டாயம் தேர்தல் அறிக்கையில் சொல்வோம் என்று அவர்கள் உறுதி மொழி அளித்தாலும் தேர்தல் அறிக்கையைப் பார்க்காமல் நாங்கள் முடிவு சொல்ல முடியாது என்று கூறினோம்.

vendredi 25 mars 2011

வட்டியும் நமது நிலையும்

வட்டி என்றால் என்ன ?

வட்டி என்பது நம்முடைய பணம் ஒருவரிடம் எவ்வளவு காலம் இருக்கிறதோ அதற்க்கு ஏற்ப ஆதாயம் தேடுவது. வேறு வார்த்தையில் வட்டியை விளக்குவதாக இருந்தால் நாம் ஒருவருக்கு கொடுக்கும் கடனை திருப்பி வாங்கும்போது அவர் எத்தனை காலம் நம் பணத்தை அவர் வைத்திருக்கிறார் என்பததை கணக்கிட்டு அதற்க்கு தனியாக வசூளிப்பதே வட்டியாகும்.நம்முடைய பணம் ஒரு குறிப்பிட்ட காலம் ஒருவரிடம் இருக்கிறது என்பதற்காக அவரிடமிருந்து ஒரு தொகையை தனியாக வசூலிப்பது நிச்சயமாக அநியாயமாகும்.ஒருவனுடைய ஏழ்மையையும் பணத்தாசையையும், கஷ்டமான நேரத்தை பயன்படுத்தி அவனுக்கு ஒரு தொகையை கொடுத்து அவன் எவ்வளவு காலம் கடன் பட்டு இருக்கிறானோ அந்த காலத்திற்கு ஏற்ப ஒரு தனி தொகையை வசூலிப்பதில் எந்த ஒரு ஞாயமும் இல்லை. இந்த அடிப்படையில் இஸ்லாம் வட்டியை முழுமையாக தடுக்கிறது.ஆனால் இன்றைய சூழ்நிலையில், அண்டா குண்டாவில் ஆரம்பித்து நகை, வாகனம்,வீடு கடைசியில் நாட்டையே அடகு வைத்து விடுகிற அளவிற்கு வட்டி எங்கும் பெருகி இருக்கிறது.

வட்டிக்கும் வியாபாரத்திற்கும் உள்ள வேறுபாடு

பலர் வட்டிக்கும் வியாபாரத்திற்கும்  உள்ள வித்தியாசத்தை அறியாமல் இருக்கிறார்கள்.வியாபாரம் என்பது உற்பத்தியில் ஆரம்பித்து உபயோகிப்பாளர் கையில் கிடைக்கும் வரை நடைபெரும் பரிமாற்றமே ஆகும்.வியாபாரத்திற்கும் வட்டிக்கும் இரண்டு பெரிய வித்தியாசம் உள்ளது .வியாபாரத்தில் லாபமும் ஏற்படும் நஷ்டமும் ஏற்படும் ஆனால் வட்டியில்  நஷ்டம் ஏற்படவே செய்யாது.வியாபாரத்தில் ஏற்படும் உறவு ஒரு பொருளோ பணமோ அந்த பரிமாற்றத்துடன் முடிந்து விடும் ஆனால் வட்டி என்பது ஒருவர் தான் பட்ட கடனை திருப்பித் தரும் காலம் வரை தொடரும்.

2:275   الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ فَمَن جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ  ۖ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ  ۖ هُمْ فِيهَا خَالِدُونَ
யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.(அல்குர்ஆன் 2:275)

இஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா ! அல்ஹம்துலில்லாஹ்


நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகையும்,பாடகருமான "பூஜா லாமா" ஐந்து மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார் அல்ஹம்துலில்லாஹ்.இவருடைய வயது 28 என்பதும் இவர் புத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது துபாய் கத்தார் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது காத்மாண்டு என்ற இடத்தில இஸ்லாத்தை தழுவினார். 

பேட்டி ஒன்றில், இஸ்லாத்தை தழுவிய பிறகு பூஜா லாமா என்ற தனது பெயரை "ஆம்னா ஃபாரூகி" என்று மாற்றிக் கொண்டதாக கூறினார்.மேலும்"இஸ்லாம் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் மனித நேயத்தின் அடிப்படையில் தீர்வு அளிக்கிறது.இஸ்லாத்தின் அழகு தனக்கு நேர் வழி காண்பித்தது இல்லையெனில் நான் இருளிலேயே இருந்திருப்பேன்.இஸ்லாம் அமைதியான மதம் என்பதை நான் உலகுக்கு கூற விரும்புகிறேன்." என்பதாக கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் "நான் காரிருளில் வாழ்ந்து வந்தேன் ,தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றேன்.இஸ்லாம் என் வாழ்வில் ஒளி ஏற்றியது நான் இப்பொழுது ஆபாசம்,மது ,புகை அகத்தமான உணவுகள் உண்பது அனைத்தையும் விட்டு விட்டேன்.இஸ்லாத்தை பற்றி உலகம் கூறும் அனைத்தும் அவதூறு என்பதை உணர்ந்து கொண்டேன்" என்றார் அவர்.

பூஜா லாமா என்ற தனது பழைய பெயரை கொண்டு தன் பழைய வாழ்கையை நினைவு படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.இஸ்லாத்தை ஏற்ற பின் தனது நடிக்கும் தொழிலையும்,குடி,புகை போன்ற தீய பழக்கங்களை விட்டு விட்டார் ஆனால் இவர் ஆபாசமாக நடித்த படங்களைக்காட்டி இந்த பெண்ணின் மனதை நோகடித்துக் கொண்டிருக்கும் அவலமும் ஒரு புறம நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.அந்த பெண்ணிற்கு நேர் வழி காட்டிய அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும்.


mercredi 23 mars 2011

மரங்கொத்தியின் வடிவமைப்பு

மரங்தொத்தி பறவை தனது அலகை கொண்டு மரத்தில் துளையிட்டு அதில் அதன் கூட்டை கட்டுகிறது என்பது எமக்கு நன்கு தெரியும். இது அனைவருக்கும் நன்கு தெரிந்த உண்மையாகும். ஆனால் மரங்கொத்தி தனது தலையை கொண்டு தொடாந்து மரத்தை துளையிட்ட போதிலும் அதற்கு மூளையில் எவ்வித இரத்த கசிவு பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதை ஆராய மறந்து விடுகிறோம். மரங்கொத்தியின் செயல் முறைக்கும் மனிதன் அவனது தலையை கொண்டு சுவற்றில் ஆணி அறைவதற்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் கிடையாது. மனிதன் அவ்வாறு செய்ய முற்பட்டால் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு மூளை அதிர்ச்சி ஏற்படும். இருப்பினும் ஒரு மரங்கொத்தியால் 2-3 வினாடிகளில் ஒரு கடினமான மரத்தை 38-43 முறை துளையிட முடியும். ஆதன் மூலம் அதற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

எவ்வித பாதிப்பும் ஏற்படாதற்கு காரணம் மரங்கொத்தியின் தலை அத்தகைய செயலுக்கென்றே படைக்கப்பட்டுள்ளதாகும். மரத்தை கொத்தும் போது மரங்கொத்தியின் மண்டை ஓட்டில் ஏற்படும் சக்தியை தடுக்கக்கூடிய அமைப்பு காணப்படுகிறது. அதன் முன்னெற்றி மற்றும் சில மண்டை ஓட்டு தசைகளும் அதன் அலகோடு இணைக்கப்பட்டுள்ளதுடன் தாடை இணைப்பும் மிக நன்றாக செயல்பட கூடியவை. அதன் காரணமாக அது துளையிடும் போது ஏற்படும் சக்தியை குறைக்க உதவுகிறது.

மரங்கொத்தியின் வடிவமைப்பும் திட்டமிடலும் இத்துடன் முடிவடைவதில்லை. அவை பைன் மரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் துளையிடுவதற்கு முன்னால் மரத்தின் வயதை ஆராய்கின்றன. அவை 100 வயதை தாண்டிய பைன் மரங்களையே தேர்ந்தெடுக்கின்றன. ஏனெனில் 100 வயதை தாண்டிய மரங்களில் நோய் ஏற்பட்டு அதன் கடினமான மேல் பட்டை மிருதுவாகிறது. இந்த உண்மையை விஞ்ஞானம் சமீபத்தில் தான் கண்டுபிடித்தது. இந்த உண்மையை உங்கள் வாழ்நாளிலேயே முதல் முறையாக தற்போது தான் படித்து தெரிந்துகொள்கீறீர்கள் ஆனால் மரங்கொத்திகளுக்கு பல நூற்றாண்டுகளாக இந்த உண்மை தெரியும்.

மரங்கொத்தி பறவை பைன் மரங்களை தெரிவு செய்வதற்கு இது ஒன்று மட்டும் காரணமல்ல. மரங்கொத்திகள் அதன் கூட்டை சுற்றி துளையிடுகிறது. இந்த செயல் பல காலமாக புதிராக இருந்தது. இந்த துளைகள் அவற்றை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல காலமாக பைன் மரத்திலிருந்து வடியும் ஒருவகை கடினமான திரவம் இந்த துளைகளில் தேங்கி காணப்படுகிறது. மரங்கொத்தி பறவையின் கூட்டின் வெளிப்பகுதி கடினமான திரவத்தினால் நிரம்பி இருப்பதால் அவைகள் அவற்றின் பெரும் எதிரியான பாம்பிலிருந்து பாதுகாப்பு பெறுகின்றன.

அதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் மரத்தில் காணப்படும் எறுப்பு கூட்டினுள் செல்லும் அளவிற்கு அதன் நாக்கு சிறிதாக காணப்படுகின்றன. அதன் நாக்கில் ஒட்டுந்தன்மையாக காணப்படுவதால் அங்கு வாழும் எறும்புகளை இலகுவாக பெற்று கொள்கின்றன. அதன் நாக்கின் அமைப்பு எறும்பின் உடலில் காணப்படும் அசிட் பாதிப்பிலிருந்து அவற்றை காப்பாற்றுகிறது என்ற உண்மை அதன் படைப்பில் காணப்படும் முழுமையை தெளிவாகிறது.

மரங்கொத்தி பறவையின் தனித்துவமான பண்புகளை ஆராய்ந்தோம். அவற்றின் தனித்துவமான அமைப்புகள் ஆராயும் போது அவை தனித்துவமாக படைக்கப்பட்டவை என்பது நிரூபணமாகிறது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில் மரங்கொத்தி பறவைகள் தற்செயலாக பரிணாமம் அடைந்தது என்று கூறுவதாயின் அவற்றின் இத்தகைய விசித்தரமான பண்புகளை பெற்று கொள்ள முன்பே அந்த இனம் அழிந்து போயிருக்கும். இருப்பினும் அவற்றின் வாழ்வோடு ஏற்ற வகையில் அவைகளை அல்லாஹ் படைத்திருப்பதால் அவைகள் அதன் வாழ்வை அனைத்து அத்தியவசிய பண்புகளோடும் ஆரம்பித்திருக்கின்றன.

தவ்ஹீத் சகோதரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ABCD (SDPI PFI etc..) ரவுடி கும்பல்

ஜிஹாத் எனும் பெயரால் இளைஞர்களை வழிகெடுத்து வரும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியாவின் போக்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் குமரி மாவட்ட நிர்வாகிகள் நோட்டீஸ் விநியோகம் செய்து வந்தனர்.


அந்த நோட்டீஸில் உள்ள உண்மைச் செய்திகள் மக்களுக்கு சென்று விட்டால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா, எஸ்.டி.பி.ஐ என பலர் பெயர்களில் உலா வரும் இவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடுமென்பதால் வெலவெலத்துப் போன அவர்கள் டி.என்.டி.ஜே நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்டு நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.


நோட்டீஸ் விநியோகிக்க சென்றவர்கள் இரண்டே இரண்டு பேர் தான். இரண்டு பேர் மட்டும் தான் நோட்டீஸ் கொடுப்பதை அறிந்து கொண்ட இந்த ரவுடிகள் கூட்டமாக சேர்ந்து இருவரை கோழைத்தனமாக தாக்கி உள்ளனர்.


விமர்சனத்தை விமர்சனத்தால் எதிர்கொள்ள தயங்கும் இந்த கோழைகள், அந்த இரண்டு நிர்வாகிக்ளையும் அடித்து உதைத்த பின்னர் இறந்து விட்டதாக நினைத்தார்களோ அல்லது இறந்துவிட்டால் பிரச்சனையாகிவிடும் என நினைத்தார்களோ அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர்.

அவசரப் பொதுக்குழு அறிவிப்பு – இன்ஷா அல்லாஹ் சென்னையில் மார்ச் 26 ல் !

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது, முஸ்லிம் சமுதாயத்துக்கு நன்மை அளிக்கும் என்பதைப் பற்றி சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஆய்வு செய்யப்பட்டது.

தேர்தல் அறிக்கைகளை கட்சிகள் வெளியிடாததாலும் கூட்டணிகள் முடிவாகாததாலும் அப்போது முடிவு எடுக்கும் சூழ்நிலை ஏற்படவில்லை.

இதன் பின்னர் நடத்தப்பட்ட மாநில செயற்குழுவின் போதும் அரசியல் நிலமை தெளிவாகாமல் இருந்தது. ஆனால் தற்போது கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டு விட்டன. வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டு விட்டன.

மேலும் தேர்தல் அறிக்கையும் பெரும்பாலும் வெளியிடப்பட்டு விட்டன. தேர்தல் குறித்து முடிவு செய்ய ஏற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் வருகின்ற 26-3-11 சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை இம்பீரியல் ஹால் – எழும்பூர்- இல் மாநில அவசரப் பொதுக்குழு கூடுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது இதையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


மாநிலப் பொதுச் சேயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

நன்றி  : TNTJ.NET

mardi 22 mars 2011

சவுதி அரேபியாவில் அரசியல் கட்சி உதயம் – அரசாட்சிக்கு வேட்டு வைக்கும் புதிய முயற்சியா?

மத்திய கிழக்கின் மையமாகவும், முஸ்லீம்களின் முக்கிய கேந்திர நிலையமாகவும் செயல்படும் ஒரு நாடாக சவுதி அரேபிய ராச்சியம் செயல்படுகிறது.

முஸ்லீம்களின் முக்கிய வணக்கத் தளங்களான மக்கா, மதினா போன்ற சிறப்பு மிக நகரங்களை உள்ளடக்கிய நாடாக இருக்கும் சவுதி பல காலமாக மன்னர்களினால் ஆட்சி செய்யப்படுகிறது.

சவுதியின் தற்போதைய மன்னர் அப்துல்லாஹ்வின் பாட்டனான அப்துல்லாஹ் பின் சுஊத் அவா்களின் பெயரின் அமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த சவுதி அரேபியா.

தவ்ஹீதுக்கு ஓரளவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளில் ஒன்றாக திகழும் சவுதி அரேபியாவில் தற்போது பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

lundi 21 mars 2011

ஃபிரான்ஸில் TNTJ கிளை உதயம்!! TNTJ.NET இல் வெளியான செய்தி


கடந்த 9/03/2011 அன்று  பிரான்ஸ் மண்டல நிர்வாக தேர்வு பொதுக்குழு TNTJ தலைமை நிர்வாகிகள் முன்னிலையில் (ஆன்லைன் மூலம்) இறைவன் அருளால் சிறப்பாக நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  மாநிலத் தலைவர் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிர்வாக அமைப்பு குறித்தும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்கி உரையாற்றினார்கள்.
பின்னர் ஃபிராண்ஸ் மண்டல நிர்வாகிகள் தேர்வு பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் முன்னிலையில் (ஆன்லைன் மூலம்) நடைபெற்று ஃபிராண்ஸ் மண்டல நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  துணைப் பொதுச் செயலாளர் சையது இப்ராஹீம் உடனிருந்தார்கள்.
ஃபிரான்சில் உள்ள தவ்ஹீத் சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

பதவிக்காக இணைவைக்கவும் தயார் !!


மார்ச் 19-2011 : பாளையங்கோட்டை பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். தமிழ்நாட்டில் முதலாவதாக பிரசாரத்தை தொடங்கிய வேட்பாளர் இவராகத்தான் இருக்கும் போலிருக்கிறது.

அதுமட்டுமல்ல, இவர் தனது பிரசாரத்தை தொடங்கிய இடம் வண்ணார்பேட்டை சாலைத் தெருவில் உள்ள வெற்றி வேலடி விநாயகர் கோயில். அங்கு சிறப்பு பூஜையை முடித்துக் கொண்டு, விநாயகரை வணங்கி கன்னத்தில் போட்டுக் கொண்டு, தேங்காய் விடலையும் போட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார்.

என்ன இப்படி? என கட்சிக்காரர்களிடம் கேட்டால், மைதீன்கான் இதே தொகுதியில் 2001, 2006 தேர்தல்களில் போட்டி போட்டபோதும் இதே கோயிலில் வணங்கிவிட்டுதான் பிரசாரத்தை தொடங்கினார். இரு தேர்தல்களிலும் அவருக்கு அமோக வெற்றி. அதுமட்டுமல்ல, கடந்த தேர்தல் வெற்றி அவரை அமைச்சராகவும் ஆக்கியது. அந்த "சென்டிமெண்ட்'தான் மைதீன்கானை இந்தத் தேர்தலிலும் இங்கே அழைத்து வந்துள்ளது என்றனர்.

அதுமட்டுமல்ல, மைதீன்கான் அங்கு ஒரு தேர்தல் அலுவலகத்தையும் திறந்துவைத்தார். இதுதான் வாய்ப்பு என நினைத்த அப்பகுதி பெண் ஒருவர் வேகமாக வந்து மைதீன்கானுக்கு ஆரத்தி எடுத்து ரூ. 50-ம் பெற்றுச் சென்றார்.


நன்றி : தினமலர்


"எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே” எனக் கூறுவான்.அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்!பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்!பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.) அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான்."(அல் குர்ஆன் 69:28-33)

dimanche 20 mars 2011

பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் தேர்வு

19/03/2011 அன்று அனைத்து பிரான்ஸ் மண்டல நிர்வாக தேர்வு பொதுக்குழு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) தலைமை நிர்வாகிகள் முன்னிலையில்  நடந்து முடிந்தது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்(TNTJ) தலைவர் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிர்வாக அமைப்பு குறித்தும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.எண்ணிக்கை முக்கியமில்லை என்றும் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் இருந்தால் இந்த கொள்கை பிடிப்புள்ள சிறிய கூட்டம் இன்ஷா அல்லாஹ் இறைவனின் உதவியால் பின்பு பெரும்கூட்டமாக மாறும் என்றும் குறிப்பிட்டார்.மேலும் பல நிர்வாக ஆலோசனைகளும் கூறி இணையம் மூலம் நேரடியாக உரையாற்றினார்கள்.

நிகழ்வுகள்

1) TNTJ தலைமை நிர்வாகிகள்(பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் சையது இப்ராஹீம் ) முன்னிலையில் நமது FRTJ நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.தேர்வான நிர்வாகிகளின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

2) நிர்வாக சம்பந்தமான சந்தேகங்களுக்கும் ,உறுப்பினர்கள் சம்பந்தமாகவும் பல ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

3) நேரடி இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ,மாற்று மதத்தினருக்கான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப் பட்டது.

4) WWW.FRTJ.NET இணையதளத்திற்கு அனுமதி பெறப்பட்டது.

5) நேரடி நிர்வாகிகள் தேர்வு நல்லவிதமாக முடிந்ததுடன் நிர்வாகிகள் மற்றும் கருத்து கேட்பு நிகழ்சிகள் மற்றும் ஆலோசனைகள் கூட்டம் நடந்தது இதில் நிர்வாகம்,தாவா மற்றும் சமுதாயப் பணிகள்,செயல்பாடுகள் ,மற்றும் WWW.FRTJ.NET இணையத்தளம் போன்ற பல விஷயங்கள் விவாதித்து அனைத்திற்க்கும் தீர்வு காணப்பட்டது.

மேலும் பல நல்ல அம்சங்களை முன் வைத்து நடந்த இந்த செயற்குழு  அமர்வு, இறை மார்க்கத்தை அதன் தூய வடிவில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் பணியில் தம்மால் இயன்ற ஒத்துழைப்புகளையும், உதவிகளையும் அனைவரும் நல்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டு கூட்டம் நிறைவுற்றது.

பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் விபரம்:

மண்டலத் தலைவர் : காதர் முஹைய்யதீன்(அதீன்)

மண்டல துணை தலைவர் : அப்துல் ஹக்கீம்
மண்டல செயலாளர் : முஹம்மது இன்சாப்
துணைச்செயலாளர் : முஹம்மது ருக்னுதீன்
மண்டல பொருளாளர் : ஃபஸ்ருல் ஹக்


தொடர்புக்கு :

தலைவர் 

காதர் முஹைய்யதீன்(அதீன்)
தொலைபேசி :0033651152157
மின் அஞ்சல் : adeen@frtj.net

செயலாளர்
                           
முஹம்மது இன்சாப்
தொலைபேசி : 0033678596284
மின் அஞ்சல் : insaaf@frtj.net

மஸ்ஜித் அல் ஹராம் 2020 (இன்ஷா அல்லாஹ்)

samedi 19 mars 2011

அமீர் தவறு செய்தால் அவரை பின்பற்றலாமா ?

அமீர் தவறு செய்தால் அவரை பின்பற்றலாமா ?
வீடியோவை பார்க்க புகைப்படத்தை
சொடுக்கவும் 

  • விண் டி.வி (ஷேர்) விவகாரத்தின் விமர்சனத்திற்கு விளக்கம் தரவும்.
  • நாம் தேர்ந்தெடுத்த அமீர் தவறு செய்தால் அவரை பின்பற்றலாமா ?
  • பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்

mercredi 16 mars 2011

எழுந்து நின்று மரியாதை செய்தல்


வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.


மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இஸ்லாத்தில் இதற்கு அனுமதி இல்லை.


எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் கட்டளை பிறப்பித்தார்கள்.

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் 'அமருங்கள்' என்றனர். 'தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள்.


நூல்கள்: திர்மிதீ 2769 அபூதாவூத் 4552


மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றிருந்து நாம் அறிகிறோம்.