புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


lundi 31 janvier 2011

இம்மை,மறுமையில் வெற்றி பெற..(பெற்றோரை பேணுதல்)


Name(பெயர்)  : அதீன் Paris
Title(தலைப்பு)  : இம்மை,மறுமையில் வெற்றி பெற..

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)


என் அன்பிற்க்கினிய சகோதர, சகோதரிகளே..



"இஸ்லாம்" இறைவனின் மார்க்கம் "திருக்குர்ஆன்" இறைவனின் வேதம் தான் என்பதற்க்கும் திருமறை முழுவதும் நற் சான்றுகள் நிரம்பி உள்ளன. "அல்லாஹ்"வின் இறுதி தூதர் முஹம்மது"நபி(ஸல்..) அவர்கள் வாழ்ந்து காட்டிய உலக வாழ்க்கையின் வரலாற்று தொகுப்புகள்(ஹதீஸ்), மற்றும் திருக்குர்ஆன் முழுவதும், இவர் இறை துாதர் தான் என்று நற் சாட்சியம் பகர்கின்றன. இவ்விரண்டும் தான் நம் வாழ்க்கை நன் நெறியாகும். நாம் வாழும் சமூகத்தில் நம் கண் முன் நிகழும் உண்மை நிகழ்வுகள் பல... அதில் பெற்ற தாய், தந்தையரை பேணுபவரின் வாழ்க்கை தரத்தை சற்று கூர்ந்து கவனித்தால் பல பேர் மேம்பட்டவராகவே! இருப்பதை காண்கிறோம். இது "அல்லாஹ்" நமக்கு அளிக்கும் மறைவான அருள் ஆகும். இறைவனின் கூற்றையும், நபிகள் நாயகம்(ஸல்..) அவர்களின் சொல், செயல்,அங்கீகாரம், இவை அ னைத்தையும் கற்று, சற்று சிந்தித்து, செயல்பட்டால் நீங்களும் இம்மை, மறுமை இவ் விரண்டிலும் மேம்பட்டவரே!



சில எடுத்துக்காட்டுகள் இதோ!...


மையவாடிக்கு(கப்ருஸ்தான்) சென்றால் ஓதும் துஆ


Name(பெயர்)  : insaaf mohammed
Title(தலைப்பு)  : மையவாடிக்கு(கப்ருஸ்தான்) சென்றால் ஓதும் துஆ

மையவாடிக்கு(கப்ருஸ்தான்) சென்றால் ஓதும் துஆ 


ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் பொது மையவாடிக்கு சென்று 'அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஹ்மிநீன் . வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் 

லாஹிகூன் '(அடக்க தளங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே ! உங்கள் மீது இறை சாந்தி பொழியட்டும் .இறைவன் நாடினால் நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள் தாம்) என்று கூறினார்கள் . 

நூல் :ஸஹிஹ் முஸ்லிம் 419, அறிவிப்பாளர் : அபூஹுரைரா 

முஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி


Name(பெயர்)  : insaaf mohammed
Title(தலைப்பு)  : முஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி

"முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்'' என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை முதன்மைச் செயலர் அலாவுதீன் மகள் முஸ்பிரா மைமூனுக்கும், அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்மை மற்றும் இலக்கிய அணியைச் சேர்ந்த -ஹிதாயதுல்லா மகன் ரஷீத் அரபாத்துக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது.

இத்திருமண விழாவில் கலந்துகொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது:




"முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற ஹிதாயதுல்லாவின் கோரிக்கைகளை நான் வெளிப்படையாகச் சொல்வதற்கு முன் எனக்கென்று ஒரு அரசு இருக்கிறது. அந்த அரசில் சில அமைச்சர்கள் இருக்கிறோம். எல்லாரும் கலந்து பேசி அதற்கு பின் தான் இதை வெளியிட முடியும். அதுவரை பொறுமையாக இருங்கள்" என்று கூறினார்.

"ஹிதாயதுல்லாவின் பேச்சைக் கேட்ட போது, என்னை அழைத்தது மணவிழாவிற்கா அல்லது மாநாட்டிற்கா என புரியவில்லை. அவரது கோரிக்கைகள் கைகழுவப்படாமல் நிச்சயம் பரிசீலிக்கப்படும். அதற்கான மகிழ்ச்சியை அவர்கள் தெரிவிக்கும் நாள் விரைவிலே வரும்" என்று குறிப்பிட்ட முதல்வர் மேலும் பேசுகையில்,

நாளிதழ் செய்தி

திரு குர்ஆனுடன் மோதும் மவ்லிது வரிகள்


தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான் மவ்லிதின் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் பலவருடங்களாக கூறிவருகிறோம். நம் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறுபவர்கள் நாம் தவறான அர்த்தம் அதற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தினர். எனவே சுப்ஹான மவ்லிதின் சரியான பொருளை அவர்களைச் சார்ந்த- மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் தேங்கை சர்புத்தீன் என்ற மவ்லவி எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து மொழிபெயர்ப்பை எடுத்து எழுதியுள்ளோம். அதோடு அந்த மவ்லித் வாரிகளுக்கு எதிர் கருத்து கூறும் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் நாம் எடுத்தொழுதியுள்ளோம். அதில் நம் கருத்துக்களை சேர்க்கவில்லை. மவ்லித் ஓதினால் நன்மையுண்டு என்று எண்ணுபவர்கள் அதன் உண்மை நிலை இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

1)மவ்லித் வரிகள்

اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ        اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ

பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !
கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !

اَنْتَ غَفَّارُ الْخَطَايَا           وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ

இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,
அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ

كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ    وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ

என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!
சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!
குர்ஆன் வரிகள்
அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)
எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!” (அல்குர்ஆன் 3:193)

புனித ஹஜ் பயணத்திற்கு மானியம் கொடுப்பது சட்ட விரோதம் அல்ல – சுப்ரிம் கேர்ட் அதிரடி தீர்ப்பு


புதுடில்லி :”ஹஜ் புனித யாத்திரைக்காக முஸ்லிம்களுக்கு அரசு சார்பில் மானியம் அளிப்பது சட்ட விரோதமாகாது. மற்ற மதத்தினருக்கும் இதேபோல் அரசு சார்பில் சலுகை அளிக்கப்படுவதும் சட்ட விரோதம் இல்லை’ என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

Hajjபா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., பிரபுல் கொராடியா என்பவர், ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு அரசு சார்பில் மானியம் அளிக்கப்படுவதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். “மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, அரசின் வரிப் பணம் பயன்படுத்தப்படுவது, அரசியல் சட்டப் பிரிவு 27ல் உள்ள விதிமுறைகளை மீறும் செயல்’ என, மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு, நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
இறுதியில், இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:புனித யாத்திரை செல்பவர்களுக்காக, சிறிய தொகையிலான அரசுப் பணம் பயன்படுத்தப்படுவது, சட்ட விரோதமாகாது. எங்களை பொறுத்தவரை, வருமான வரி மூலம் வசூலிக்கப்பட்ட ஒட்டு மொத்த தொகையில் கணிசமான பகுதியையோ, சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி உள்ளிட்ட மற்ற வரிகள் மூலம் வசூலிக்கப்படும் ஒட்டு மொத்த தொகையில், கணிசமான பகுதியையோ, மத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக செலவிட்டால் தான், அரசியல் சட்டப் பிரிவு 27ல் உள்ள விதிமுறைகளை மீறியதாகக் கருத முடியும்.ஒட்டு மொத்த வருமான வரி வசூலில், 25 சதவீதத்தை குறிப்பிட்ட மதத்தினரை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தினால், விதிமுறைகளை மீறியதாகக் கூறலாம்.
ஆனால், சிறிய அளவிலான தொகையை இதற்காக செலவிடுவதை சட்ட விரோதமாகக் கருத முடியாது.பாகிஸ்தானில் உள்ள கோவில்கள் மற்றும் குருத்வாராக்களுக்கு செல்வதற்காக, இந்து மற்றும் சீக்கிய மதத்தினருக்கும், சில மாநில அரசுகள் சார்பில் வசதிகள் செய்து தரப்படுகின்றன. இவையெல்லாம், அரசின் ஒட்டு மொத்த வரி வசூல் தொகையை ஒப்பிடும் போது, மிகவும் சிறிய தொகையே.இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதிகள், பிரபுல் கொராடியா தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
தினமலர் -28-1-11


நன்றி : TNTJ.NET

11 வது பொதுக்குழு: பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்திகள்


தினமலர்:
கோரிக்கை ஏற்காவிட்டால் தி.மு.க.,வுக்கு ஆதரவு இல்லை
சேலம்: “தமிழகத்தில், 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையை தி.மு.க. ஏற்காவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு கிடையாது’ என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின், 11வது மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. பொதுக்குழுவில், அமைப்பின் மாநில தலைவராக ஜெயிலூல்ஆபிதீன், பொது செயலாளர் ரகமத்துல்லா, பொருளாளராக அன்வர்பாய், துணைத் தலைவராக அப்துல் ரகீம், துணை பொதுச் செயலாளராக சையத் இப்ராஹீம் மற்றும் 7 செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.பொதுக்குழு முடிந்தவுடன், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில தலைவர் ஜெயிலூல் ஆபிதின் கூறியதாவது:தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள, 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளது.
இந்த பிரச்னைகளை களைய கண்காணிப்பு குழுஅமைப்பதாக, அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதோடு, இட ஒதுக்கீட்டை 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தி, தனி ஒதுக்கீடாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக, வாக்குறுதி கொடுக்கும் கட்சிக்கு வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம்.கடந்த எம்.பி. தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றிக்கு நாங்களும் காரணம். அதனால், வரும் தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்குத்தான் ஆதரவு தெரிவிப்போம். கோரிக்கையை ஏற்காவிட்டால், தி.மு.க.,வுக்கு கண்டிப்பாக ஆதரவு அளிக்க மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினதந்தி
தினகரன்
காலைக்கதிர்
வீடியோ
கலைஞர் டிவி வீடியோ



தமிழன் டிவி வீடியோ



நன்றி : TNTJ.NET

dimanche 30 janvier 2011

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு நடைமுறையை கண்காணிக்க குழு முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவு-தினத்தந்தி



சென்னை, ஜன.30-


முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டு நடைமுறையை கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இஸ்லாமிய சமுதாயத்தினரின் முன்னேற்றம் கருதி அவர்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி முதல்-அமைச்சர் கருணாநிதி 15.9.2007 அன்று ஆணையிட்டு, நடைமுறைப்படுத்தி வரும் இடஒதுக்கீட்டின்படி, இஸ்லாமிய சமுதாயத்தினர் தமிழக அரசின் கல்வி நிறுவனங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் உரிய இடங்களைப் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.

இந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து, ஆய்வு செய்வதற்காகவும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதற்காகவும், தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தலைவராக கொண்டு ஒரு குழு அமைக்கப்படுகிறது.

கருணாநிதி உத்தரவு

பிற்படுத்தப்பட்டோர்-மிகப் பிற்படுத்தப்பட்டோர்-சீர்மரபினர்-சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளரை செயல் உறுப்பினராகவும், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுத் தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், சிறுபான்மையினர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஒன்றை அமைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


சேலத்தில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு ! தீர்மானங்கள், புதிய நிர்வாகிகள்

TNTJ ஜன 27: image 1 0f 4 thumb TNTJ ஜன 27: image 1 0f 4 thumb TNTJ ஜன 27: image 1 0f 4 thumb TNTJ ஜன 27: image 1 0f 4 thumb

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் இன்று (30-1-11) காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழுத் தலைவர் சம்சுல் லுஹா அவர்கள் தலைமையில்சேலத்தில் பரபரப்புடன் துவங்கியது.
இதில் வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு என்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றது.
முதலாவதாக மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
புதிய மாநில நிர்வாகிகள்
தலைவர் பி.ஜே
து. தலைவர் அப்துர் ரஹீம்
பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ்
து. பொதுச் செயலாளர் சைய்யத் இப்ராஹீம்
பொருளாளர் அன்வர் பாஷா
மாநிலச் செயலாளர்கள்
அப்துல் ஹமீது
சாதிக்
அப்துல் ஜப்பார்
யூசுப் (திருவள்ளூர்)
அஷ்ரஃப்தீன் பிர்தௌசி
மாலிக் (ராம்நாடு)
சாதிக் ( கோபிசெட்டிபாளையம்)

சேலத்தில் துவங்கிய மாநிலப் பொதுக்குழு !


TNTJ ஜன 27: image 1 0f 4 thumb TNTJ ஜன 27: image 1 0f 4 thumb

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் இன்று (30-1-11) காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழுத் தலைவர் சம்சுல் லுஹா அவர்கள் தலைமையில்சேலத்தில் பரபரப்புடன் துவங்கியது.
இதில் வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு என்ற முக்கிய அம்சங்கள் இடம் பெருகின்றது.
முதலாவதாக மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
முழு செய்தி மற்றும் கூடுதல் புகைப்படங்கள் பொதுக்குழு முடிந்தவுடன் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்!




நன்றி : TNTJ.NET

samedi 29 janvier 2011

மதுரை போராட்ட பத்திரிக்கை செய்திகள் – தமிழ் , ஆங்கிலம்

மதுரை போராட்ட பத்திரிக்கை செய்திகள் – தமிழ் , ஆங்கிலம்
(பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)




















நன்றி : TNTJ.NET

ஜனவரி 27 போராட்டம் – தினமலர் வீடியோ (போராட்டத்திற்கு பிறகு)



நன்றி : TNTJ.NET

முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை கண்காணிக்க தனி குழு – முதல்வர் உத்தரவு – தினமலர் செய்தி


சென்னை : முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் 3.5 சதவீத இடஒதுக்கீடு அவர்களுக்கு சரியாக போய் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க, தலைமைச் செயலாளர் மாலதி தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29-1-11 -தினமலர்
பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளர் அவர்களைச் செயல் உறுப்பினராகவும், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுத் தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், சிறுபான்மையினர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
தவ்ஹீத் ஜமாஅத் வைத்த கோரிக்கை
உரை
அரசு வேலைவாய்புகளில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் துரோகம்: கண்கானிக்க குழு அமைக்க வேண்டும்!


அரசு வேலைவாய்புகளில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் துரோகம்: கண்கானிக்க குழு அமைக்க வேண்டும்! - pj உரை


முதல்வர் கடிதம்
இட ஒதுக்கீட்டை கண்கானிக்க குழு அமைக்க முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டிய அவசர தந்தி வாசகம்! மற்றும் முகவரி

To
Honorable Chief Minister,
Chief Minister’s Cell, Secretariat
Chennai – 600009
Honorable Chief Minister
As brought to your attention, Muslims Reservation Still continues to face hurdles from Government Officials on implementation of 3.5%.
You have appointed High Level Observation Committee for Arundadiyar to ensure Implementation of Reservation.
We Muslims Demand similar High Level Observation Committee to supervise Implementation of Muslims Reservation.
பின் வரும் தமிழக முதல்வர் மற்றும் உயர் அதிகாரிகளின் முகவரிகளுக்கும் அனுப்பவும்
அண்ணா அறிவாலயம்
No 268/269, Anna Salai, Teynampet, Chennai – 600018
முதல்வர் வீடு
New No.15, Old No.18,
4th Street, Gopalapuram,
Chennai 600086
துணை முதல்வர்
Deputy Chief Minister,
Secretariat , Chennai – 600009
Chief Secretary
Chief Secretary, Secretariat, Chennai – 600009
Home Secretary
Home Secretary, Secretariat, Chennai – 600009
இது பற்றி மேலதிக விபரத்திற்கு மேல் உள்ள வீடியோவை பார்க்கவும்
நன்றி : TNTJ.NET