புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


dimanche 23 novembre 2014

ஹஜ் செய்பவருக்கான தகவல்கள்

அல்லாஹ்வின் திருப்பெயரால்,,
                                                   ஹஜ் செய்பவருக்கான தகவல்கள்
ஹஜ்ஜூக்கான முன் தயாரிப்புகள்


இஹ்ராம் உடை
இஹ்ராம் ஆடை என்பது இரண்டு தைக்கப் படாத துணிகளில் ஒன்றை மேலங்கியாக வும்   மற்றொன்றை இடுப்பிலும் அணிவதாகும் .தற்போது இஹ்ராம் துணியிலேயே பெல்ட் வைத்து pin பண்ணி பட்டன் வைத்துள்ளார்கள்.
(இது பிரான்சில் metro couronnes என்னுமிடத்தில் 25-30 euro விலைகளில் கிடைக்கிறது.)
இடுப்பை சுற்றி தைக்கப் படாத பெல்ட் அணிந்து கொள்ளலாம்.
செருப்பும் தைக்கப் படாமல் இருக்க வேண்டும்.
மருந்து மாத்திரைகள் எடுத்துகொள்ள வேண்டும்.
ஹரமிர்க்குள் காலணிகள் கொண்டு செல்ல முதுகில் மாட்டிக் கொள்ள கூடிய bag எடுத்துக் கொள்ள வேண்டும்.
குரான் மற்றும் துஆ கையேடுகள் அவசியமாக எடுத்துக் கொள்ள  வேண்டும்.
செல்போன் எடுத்துக் கொள்ள வேண்டும்.  
ஒரு சிறிய  kit bag இல் பல் துலக்கும் brush,பேஸ்ட் சோப்,கத்தரிகோல் எடுத்துக் கொள்ளலாம்.



நபிவழி ஹஜ் செய்யும் முறைகள் புத்தகம் படித்தும்  மற்றும் விளக்க வீடியோபார்த்தும்  மற்றும் ஹஜ் சென்றவர்களிடம் விளக்கமாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
முக்கியமாக இரண்டு மாதங்கள் முன்கூட்டி நடைபயிற்சி செய்தல் பயனுள்ளதாக இருக்கும்.


“ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும்.அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டா வாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்! “(2:197)


நிய்யத்
வீட்டிலிருந்து கிளம்பும் போது நன்றாக குளித்து விட்டு நறுமணம் பூசிவிட்டு இஹ்ராம் உடை அணிந்து நறுமணம் பூசிவிட்டு கிளம்ப வேண்டும்.
கையில் இஹ்ராம் துணிகள்,செருப்பு, பெல்ட் போன்றவைகளை கைப் பெட்டியில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Transit அதாவது Egypt போன்ற ஒரு நாட்டில் இறங்கி செல்பவர்கள் அங்கு சென்றும் குளித்துவிட்டு இஹ்ராம் அணிந்து கொள்ளலாம்.
விமானத்தில் ஏறியவுடன் பிரயாண துஆ வை ஓதிக் கொள்ள வேண்டும்.


உம்ரா செய்முறை


வெளிநாட்டிலிருந்து செல்பவர்கள் பெரும்பாலும் "தமத்துவ்" என்ற முறையில் ஹஜ் செய்பவர்களாக உள்ளார்கள்.அவரவர் நாட்டிற்கு  நிர்ணயிக்கப் பட்ட எல்லை வந்தவுடன் நிய்யத் வைத்துக் கொள்ள வேண்டும்.விமானத்தில் செல்லும் போது எல்லை வரும்போது அறிவிப்பு செய்வார்கள் அப்போது "லெப்பைக்க உம்ரதன்" என்று நிய்யத் வைத்துக் கொள்ள வேண்டும்.




அதிலிருந்து
لَبَّيْكَ اَللهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لآ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لآ شَرِيْكَ لَكَ


"லெப்பைக் கல்லாஹும்ம லெப்பைக்,லெப்பைக்க லாஷரீக்க லக்க லப்பைக்,இன்னல் ஹம்த வ நிஃமத்த லக்கவல் முல்க் லாஷரீக்க லக்!
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1549, 5915


என்ற தல்பியாவை தொடர்ந்து ஓதிக் கொண்டே இருக்க வேண்டும்.


மஸ்ஜிதுல்ஹரமில் பிரவேசிக்கும் முன் பள்ளிவாசல்களில் நுழையும்போது ஓதும் துஆ வை ஓதிக் கொள்ள வேண்டும்.
பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க
பொருள்: இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.  ஆதாரம்: முஸ்லிம் 1165


நுழையும் போது “பாபு பனீ ஷைபா” பாபுஸ்ஸலாம் என்ற நுழைவாயில் வழியாக
பிரவேசிப்பது நபிவழியாகும்.
ஹரமில் பிரவேசித்த உடன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.


தவாஃப் அல்குதூம்
ஹரமிர்க்குள் வருகை தந்த பிறகு காபாவை வலம் வரும்வருதலை  ‘தவாஃப் அல்குதூம்’ என்றழைக்கப் படுகிறது.
ஒருவர் மக்காவிற்கு  எப்போது வருகை தருகிறாரோ அப்போது இந்த  ‘தவாஃப் அல்குதூம்’ மை
செய்ய வேண்டும்.
கஃபா ஆலயத்தை ஏழு முறை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள்  ‘தவாஃப் அல்குதூம்’ செய்யும் போது மட்டும் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நன்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல் புஹாரி 1644, 1617


தவாஃப் செய்யும்போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது தோல் புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக யஃலா பின் முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்கள் :திர்மிதி 787 அபூதாவூத் 1607


ஹஜ்ருல் அஸ்வத்

ஹஜ்ருல் அஸ்வத் கல் பதிக்கப் பட்ட மூலையிலிருந்து தவாஃபை துவக்க வேண்டும்.
அடையாளத்திற்காக ஹஜ்ருல் அஸ்வத் எதிரில் உயரமான இடத்தில பச்சை விளக்கு வைத்திருப்பார்கள்.
முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் மற்ற நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்ய வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத்திலிருந்து ஹஜ்ருல் அஸ்வத் வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: 2213, 2214.


ஹஜ்ருல் அஸ்வத் கல்லை மிகுந்த கூட்ட நெரிசலில் தொடுவதற்காக வயதானவர்கள்,சிறியவர்கள்,
பெண்கள் போன்றவர்களை இடித்துக் கொண்டும், முண்டியடித்துக் கொண்டும் செல்வது கூடாது.
இயன்றால் முத்தமிடலாம் அல்லது தொட்டு முத்தமிடலாம் அல்லது கையை உயர்த்தி தொடுவது போல சைகை செய்ய வேண்டும்.தக்பீரும் கூற வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள்.(ஹஜ்ருல் அஸ்வத் அமைந்த)
மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்( ரலி) நூல் புஹாரி 1612,1613,1632,5293
மற்ற ஆதாரங்கள்: புஹாரி 1611, 1606, 1608
ருக்னுல் யமானி


ருக்னுல் யமானி என்ற கஃபா வின் மற்றொரு மூலையை இயன்றால் தொட்டு முத்தமிடுவது நபிவழியாகும்.
நபி (ஸல்) அவர்கள் நான்கு மூலைகளில் ‘யமானி’ எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத்  தொட்டு நான் பார்த்ததில்லை.

அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) நூல் : புஹாரி 166 , 1609


தவாஃப் செய்யும் போது ருக்னுல் யமானி மூலை  வரும்போது


رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّار
“ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்”
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.


அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப் (ரலி),நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616


மேற்கண்ட துஆ வை ருக்னுல் யமானி மூலையிலிருந்து ஹஜ்ருல் அஸ்வத் கல்லின் மூலை
வரும் வரை ஒத வேண்டும்.அதன் பிறகு நீங்கள் குர்ஆனிலிருந்தோ  அல்லது நபி (ஸல்) அவர்கள்
கற்றுக் கொடுத்தோ துஆக்கலையோ அல்லது உங்களுக்காக பாவ மன்னிப்பு துஆ அல்லது
தேவைகள் இம்மை மறுமை வெற்றிக்காக எந்த துஆக்களையும் ஓதலாம்.


மகாமு  இப்ராஹிம்


கஃபா வை தவாஃப் செய்த பிறகு மகாமு இப்ராஹிமில் இரண்டு ரகஅத்கள் தொழ வேண்டும்.
அந்த தொழுகையில்  ‘குல்ஹுவல்லாஹு அஹத்’ சூராவையும் ‘குல்யா அய்யுஹல் காபிரூன்’
சூராவையும் ஓதிக் கொள்ள வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் தவாஃபை முடித்து விட்டு ‘மகாமு  இப்ராஹிம்’ என்ற இடத்தை அடைந்த போது
“மகாமு இப்ராஹிமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.” என்ற 2:125 வசனத்தை ஓதினார்கள்.இரண்டு ரகஅத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் ‘குல்யா அய்யுஹல் காபிரூன்’
சூராவையும் ‘குல்ஹுவல்லாஹு அஹத்’ சூராவையும் ஓதினார்கள்.பின்னர் திரும்பவும் ஹஜ்ருல் அஸ்வத்துக்கு சென்று அதைத் தொட்டு முத்தமிட்டார்கள்.பிறகு சஃபாவுக்குச் சென்றார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் முஸ்லிம் 2137


இந்த இரண்டு ரகஅத்கள் ‘மகாமு  இப்ராஹிம்’ அருகில் தவாஃப் செய்பவர்களுக்கு இடைஞ்சல்
கொடுக்கும் முகமாக இருக்கக் கூடாது.
ஸஃபா மர்வா வில் ஸஃயி செய்வது (ஓடுவது)

நபி (ஸல்) அவர்கள் ஸஃபா வை அடைந்ததும் “ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்.”

என தொடங்கும் குர் வசனத்தை ஓதிக் கொள்ள வேண்டும்,






2:158
ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை.  நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன்;  அறிந்தவன். (அல்குர்ஆன் 2:158)


முஸ்லிம் 2137


மேலும் ஸஃபா விலிருந்து கிப்லாவை முன்னோக்கி


“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, வஹஸமல் அஹ்ஸாப வஹ்தா”
என்று மூன்று முறை கூறினார்கள்.பிறகு  துஆ செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல் முஸ்லிம் 2137


ஸஃபாவிலிருந்து மர்வா சென்றடைந்ததும் ஒரு சுற்று நிறைவடையும் மர்வாவிலிருந்து ஸஃபா
வந்தடைந்ததும் இரண்டு நிறைவடையும் இந்த அடிப்படையில் ஏழு சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.


“நபி (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயி செய்தார்கள்.ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.”
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல் முஸ்லிம் 2137
ஸஃபாவில் சிறிது தூரம் நடந்ததும் பச்சை விளக்கு அடையாளம் வைத்திருப்பார்கள் அங்கிருந்து அந்த பச்சை விளக்கு முடியும்வரை ஓட்டமாக செல்ல வேண்டும்.


ஸஃபாவில் துஆ திக்ருகள் செய்தது போலவே மர்வா வந்ததும் செய்ய வேண்டும்.


முதல் சுற்று ஸஃபாவில் தொடங்கி ஏழாவது சுற்று மர்வாவில் நிறைவு செய்ய வேண்டும்.
ஏழு சுற்று நிறைவடைந்ததும் முடியை இறக்க வேண்டும்.விரும்பியவர் முடியை முழுமையாக இறக்க வேண்டும் விரும்பியவர் சிறிது கத்தரித்தும் கொள்ளலாம்.
பிறகு இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடலாம். சாதாரண உடையில் 8ம் நாள் ஹஜ்


8 ம்  நாள் மினாவுக்கு செல்லுதல் (தர்வியா)


மக்காவில் உள்ளவர்கள் தங்கியுள்ள இடத்திலேயே குளித்து நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராம் அணிந்து கொள்ளலாம். ஒரு சிலர் வசதிக்காக ஏழாம் நாள் இரவே மினாவிற்கு சென்று விடுவார்கள்.

8 ம் நாள் லுஹர் தொழுகைக்கு முன் மினாவிற்கு சென்றுவிட வேண்டும்.அங்கு லுஹரையும் அஸரையும் இரண்டிரண்டு ரக்அத் களாக தொழ வேண்டும்.
அதன் பிறகு மக்ரிப் மற்றும் இஷா தொழுகை களை அதனதன் நேரங்களில் தொழ வேண்டும்.
மக்ரிபை மூன்றாகவும் இஷாவை இரண்டு ரக்அத் களாக தொழ வேண்டும்.8 ம் நாள் இரவு மினாவிலேயே தங்க வேண்டும்.



9 ம் நாள் அராபா (அராபா நாள்)


ஹஜ் கிரியைகளில் இந்த நாள் மிக முக்கியமான நாளாக உள்ளது.
ஒன்பதாம் நாள் காலை சுப்ஹு  தொழுகையை மினாவிலேயே தொழுதுவிட்டு சூரியன் உதயமாகும் வரை தாமதித்து விட்டு  அங்கிருந்து அரபாவிர்ற்கு கிளம்ப வேண்டும்.
வழியில் தல்பியாவும் தக்பீரும் சொல்லிக் கொண்டே சொல்ல வேண்டும்.
இந்த அராபா நாளில் சிறிது நேரேமேனும் அரபா மைதானத்தில் தங்கிவிட்டால் ஹஜ்ஜை
அடைந்துகொள்வார்  என்பது நபிமொழியாகும்.
அங்கு (நமீரா)இமாம் குத்பா உரை நிகழ்த்துவார் அதை செவிமடுக்க வேண்டும். அதன் பிறகு லுஹர் தொழுகைக்கு பாங்கு சொல்லி இகாமத் சொல்லி இரண்டு ராகஅத் தொழ  வேண்டும் .
பிறகு இகாமத் கூறி அஸர் தொழுகையை ஜம்வு செய்து தொழ வேண்டும்.
அரபா நாளில் சிறிது நேரத்தை கூட வீணாக செலவழிக்க கூடாது.அங்கு கேட்கப் படும் துஆக்களை நிறைவேற்றுவதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான்.பின் வரும் நபிமொழியும்
அதன் முக்கியத் துவதை பறை சாற்றுகிறது. ஆகவே மறக்காமல் துஆ கையேடுகளை கொண்டு செல்ல வேண்டும்.மேலும் இம்மை மறுமை வெற்றிக்காகவும்,பாவமன்னிப்பு ,மற்றும் தேவைகளை கிப்லாவை முன்னோக்கி கேட்கலாம்.ஜபலுர் ரஹ்மத் மலை அடிவாரத்தில் துஆ செய்வது நபிவழி.


"ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான். பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (நூல்கள்: நஸயீ2966, 2994 திர்மிதீ 814)
நான் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள். (நூல்: நஸயீ2961)


அரஃபா தினத்தைக் காட்டிலும் வேறெந்த நாளிலும் அல்லாஹ் அடியார்களை மிக அதிகமாக நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை. அல்லாஹ் இந்நாளில் மலக்குகளிடம் மிக நெருக்கமாக வந்து, "இவர்கள் எதை விரும்புகிறார்கள்?'' என்று கேட்கின்றான். (நூல்: முஸ்லிம் 2402)


அரபாவில் சூரியன் அஸ்தமிக்கும் வரை தங்கிவிட்டு பிறகு முஸ்தலிபா விற்கு அமைதியாக செல்ல வேண்டும்.


முஜ்தலிபாவிற்கு செல்லுதல்  


அரபாவிலிருந்து சூரியன் மறைந்தபிறகு முஜ்தலிபாவிற்கு வந்துவிடவேண்டும். வந்தவுடன் ஒரு பாங்கும் இரு இகாமத்தும் கூறி மக்ரிபையும் இஷாவையும் தொழவேண்டும்.பிறகு அங்கு படுத்து உறங்கிவிட்டு மறுநாள் பஜ்ரு நேரம் வந்தவுடன் பாங்கு சொல்லி சுப்ஹு தொழவேண்டும்.அதன் பிறகு “மஷ்அருள் ஹராம்” என்ற இடம் வந்ததும் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தும் துஆவும் செய்து விட்டு சூரியன் உதயமாவதற்கு முன் அங்கிருந்து புறப்பட்டு  மீண்டும் மினாவிற்கு செல்ல வேண்டும்.


பெண்கள் வயதானவர்கள் பஜ்ரு வரை தாமதிக்காமல் இரவே சென்று விட அனுமதி உள்ளது.ஆனால்
அவர்களுடன் அனைவரும் சென்று விட்டனர்.இரவே செல்ல பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் தான் அனுமதி உள்ளது ஆனால் group ஐ வழிநடத்தும் guide கல் முஜ்தலிபாவில் ஹாஜிகளை
தங்கவைக்காமல் அவர்களின் வசதிக்காக மினாவிற்கே அழைத்து சென்று விடுகிறார்கள்.முஜ்தலிபாவில் தங்க வசதி இருக்காது ஏனென்றால் மலை அடிவாரத்தில்
அமைந்துள்ளது போகும்போது ஆளுக்கொரு பாயும் சிறிய போர்வையும் கொண்டு செல்வது நல்லது.
மக்காவில் குறைந்த விலையில் பிளாஸ்டிக் பாய் கிடைக்கிறது.ஜம்ராவில் கல்லெறிய முஜ்தலிபாவில்
மலை அடிவாரத்தில் கற்களை பொருக்கி கொள்ளலாம்.தண்ணீர் குடிக்கும் சிறிய காலிபாட்டில் களில் கற்களை நிரப்பிக் கொள்ளலாம்.மொத்தம் 50 க்கும் மேற்பட்ட கற்களை பொறுக்கிக் கொள்ளலாம்.


10 ம் நாள் ஜம்ராவில் கல்லெறிதல்


துல் ஹஜ் பத்தாம் நாள் மினாவிலிருந்து சூரியன் உதயமான பிறகு ஜம்ராவில் கல்லெறிய  செல்ல வேண்டும். வழியில் தல்பியாவும் தக்பீரும் சொல்லிக் கொண்டு செல்ல வேண்டும்.பெண்கள் மற்றும்
முதியவர்கள் முந்தைய நாள் இரவோ அல்லது 10 ம் நாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்போ
செல்ல அனுமதி உள்ளது.அதன் பிறகு


1 ஜம்ரதுல் அகபா எனப்படும் பெரிய ஜம்ராவில் தொடர்ந்து ஏழு கற்களை எறிய வேண்டும்.ஒவ்வொரு கல்லை எறியும் போதும் “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் கூற வேண்டும்.
2 பின்னர் குர்பானி கொடுக்க வேண்டும்.
3 அதன் பின்னர் தலை முடியை குறைக்கவோ அல்லது முழுவதுமாக மழிக்கவோ வேண்டும்.
4 பிறகு ஹஜ்ஜுடைய தவாபான “தவாபுல் இபாதா” வை செய்ய வேண்டும்.அதாவது ஏழு முறை
சுற்ற வேண்டும்.மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக் அத் தொழுதுவிட்டு பிறகு சபா மர்வாபில் சயீ செய்ய வேண்டும்.
5 பின்னர் இஹ்ராமிலிருந்து விலக்கப் பட்டவை அனைத்தும் ஹலால் ஆகிவிடும்.
6 அடுத்தடுத்த நாட்களில் கல்லெறிய மினாவிற்கு சென்று தங்கிவிட வேண்டும்.


11ம் 12 ம் மற்றும் 13 ம் நாட்கள். (அய்யாமுத் தஷ்ரீக்)


11 ம் நாள் அன்று சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் கல்லெறிய ஜம்ராவிற்கு செல்ல வேண்டும்.
முதலில் சிறிய ஜம்ரவான “ஜம்ரதுல் ஊலா” என்ற இடத்தில ஏழு சிறிய கற்களை எறிந்துவிட்டு பிறகு
கிப்லாவை முன்நோக்கி துஆ செய்யவேண்டும்.பிறகு நடு ஜம்ராவான “ஜம்ரதுல் உஸ்தா” என்னுமிடத்தில் ஏழு சிறிய கற்களை எறிந்துவிட்டு பிறகு கிப்லாவை முன்நோக்கி துஆ செய்யவேண்டும்.பிறகு நடு ஜம்ராவான “ஜம்ரதுல்அகபா ” என்னுமிடத்தில் ஏழு சிறிய கற்களை எறிந்துவிட்டு துஆ செய்யாமல் திரும்பிவிட வேண்டும் இவ்வாறு நபி(ஸல்) செய்துள்ளார்கள்.
11ம் 12 ம் நாட்கள் கல்லெறிந்து விட்டு விரும்பியர் மக்கா சென்று விடலாம்.விரும்பியவர்கள் 13 ம் மினாவில் தங்கி கல்லெறிந்து விட்டு திரும்பலாம்.


தவாஃபுல் விதாஃ


மினாவில் கல்லெறிந்து முடிந்தவுடன் ஹஜ்ஜின் எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன.என்றாலும்
இறுதியாக விடை பெரும் தவாபான “தவாஃபுல் விதாஃ” பயண தவாபை (மாதவிடாய் பெண்கள் தவிர) நிறைவேற்ற வேண்டும்.


மக்கள் பல திசைகளிலும் புறப்பட்டு செல்லலானார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் “கடைசி கிரியையை அல்லாஹ்வின் ஆலயத்தில் (தவாப்ஃ) செய்து விட்டு புறப்படுங்கள்” என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)  நூல்: முஸ்லிம் 2350, 2351
  ஹஜ்ஜில் தடுக்கப் பட்டவைகள்

“ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும்.அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன் மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டா வாதம் புரிவதோ கூடாது.(2:197)






lundi 3 novembre 2014

ஹலால் டெஸ்ட் (சோதனை கருவி)

ஹலால் டெஸ்ட் (சோதனை கருவி)


முஸ்லிம்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் புதிய கருவி ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் சில உணவுப் பொருட்களில் பன்றியின் இறைச்சியோ அல்லது அதன் கொழுப்போ கலந்திருக்கும் அந்த உணவுப் பொருட்களின் உரையில் 

E 471 போன்ற E code முறையில் எழுதப் பட்டிருக்கும்.E471(lecithin de  soja) சோயாவில் இருந்து எடுக்கப் பட்ட கொழுப்பு என்றால் ஹலால்,அப்படி எழுதாமல் விட்டுருந்தால்
 அதில் எதாவது ஒரு விலங்கின் கொழுப்பு கலந்திருக்க வாய்ப்புள்ளது. ஆகையால் Ecode 
இருந்தாலே அதை  நம்மில் பெரும்பாலனோர் தவிர்த்து வருகின்றோம். இனி இந்த பிரச்சனையிலிருந்து விடுபட இறைவன் அருள் புரிந்து இருக்கின்றான்.

" HERTA HALAL" என்ற நிறுவனத்தின் இறைச்சிகளில் பன்றி இறைச்சி கலந்திருப்பது நினைவிருக்கலாம்.2011 வருடத்தில் அந்த 
நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் தடை செய்யப் பட்டது. 

இந்த "ஹலால் டெஸ்ட்" கருவியை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Abderrahmane Chaoui மற்றும் Vital Julien என்ற இரு இளைஞர்கள் Capital Biotech என்ற நிறுவனம் மூலம் உற்பத்தி செய்து வெளியிட்டுள்ளார்கள்.ஒரு கருவியின் ஆரம்ப விலை 6,99€ அல்லது 25 அடங்கியது  125€ என்ற அளவில் நிர்ணயம் செய்துள்ளார்கள்.

இந்த கருவி ஒரு குப்பி வடிவில் உள்ளது அதில் சிறிதளவு கொதி நீரை விட்டு அதில் சோதனை செய்ய வேண்டிய இறைச்சியின் சிறிய துண்டுப் பகுதியை உள்ளே வைக்க வேண்டும் பிறகு சிறிது நேர இடைவெளியில் அதனுடன் கொடுக்கப் பட்ட ஒரு சிறிய ஸ்ட்ரிப் பை அந்த குடுவை 
உள்ளே வைத்திருக்க வேண்டும் அந்த ஸ்ட்ரிப் பின் முதல் கோடு தோன்றும் அதன்பிறகு இரண்டாவது கோடும் தோன்றினால் அதில் பன்றி இறைச்சி கலந்துள்ளது என்பதை கண்டுகொள்ளலாம்.

மேலும் இந்த கருவியை வைத்து உணவிலோ அல்லது குளிர் பானத்திலோ "அல்கஹால்" கலந்துள்ளத்தையும் கண்டுபிடிக்க இயலும் என்பது 
மேலும் சந்தோசமான செய்தியாகும்.

விரைவில் ஆடு, மாடு போன்ற விலங்கில் இறைச்சி ஹலால் முறைப்படி அறுக்கப் பட்டதா என்பதையும் இனம் காணக் கூடிய ஒரு கருவியையும் 
கண்டுபிடிக்க போவதாக அறிவித்துள்ளனர்.ஒரு விலங்கின் இறைச்சியில் ஹலால் முறைப்படி அறுக்கப் பட்டு இரத்தம் வெளியேறி உள்ளதா 
அல்லது வெளியேறாமல் இறைச்சியில் தங்கியுள்ளதா என்ற அடிப்படையை வைத்து இனம் காணக் கூடியாத இருக்கும் என தெரிகிறது.

முஹம்மது இன்சாப்
FRTJ துணைத் தலைவர்
பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத்

ஆதாரம்: (thanks)
http://fr.metrotime.be/2014/10/20/must-read/halal-test-un-test-pour-detecter-les-traces-de-porc-dans-votre-repas/
http://tempsreel.nouvelobs.com/societe/20141014.OBS2062/des-tests-halal-pour-les-consommateurs-musulmans.html
http://www.20minutes.fr/societe/1464435-20141020-tests-halal-detecter-presence-porc-alcool-assiettes