புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


mardi 27 août 2013

ஆலோசனை கூட்டம்


FRTJ  யின் இரண்டாவது நிர்வாகம் தேர்ந்து தெடுக்கப்பட்டபின் 
நடைபெற்ற முதலாவது  ஆலோசனை கூட்டம் கடந்த
சனிக்கிழமை 24-08-2013 அன்று மதியம் 15h00 மணிக்கு பிரான்ஸ் மண்டல  பொருளாளர் சகோதரர்  அப்துல் ஹக்கீம்  அவர்களுடைய வீட்டில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சியின் ஆரம்பமாக பிரான்ஸ் மண்டல தலைவர்  சகோதரர் ருக்னுதீன்  "ரமலான் தரும் படிப்பினை"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பிறகு பிறை மற்றும் பெருநாள் தொழுகை பற்றிய கருத்துகள் நம் கொள்கை சகோதரர்களிடம் ஆலோசிக்கப்பட்டது.

 1. FRTJ  உறுப்பினர் சேர்க்கைக்கும் மற்றும்  அடையாள அட்டை பெறுவதற்கு நிகழ்ச்சிக்கு வரும் சகோதரர்கள் 2 போட்டோ எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது . சில சகோதரர்கள் எடுத்து வராததால் விரைவில் அவர்களிடம் இருந்து போட்டோவை பெற்று அவர்களுக்கு அடையாள அட்டை  பெற்று தரப்படும்.

2.FRTJ அணைத்து பகுதிகளுக்கும் அறிமுகம் செய்யும் வகையில் 

பிரான்சின் பல பகுதிகளுக்கு

சென்று தாவா செய்யவும் மற்றும் கிளைகளை உருவாக்கவும் நமது frtj  நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் ஆர்வம் தெரிவித்துள்ளனர், இன்ஷா அல்லாஹ் அதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும்.

 3.எதிர் வரும் காலங்களில் நடைப்பெற இருக்கும் பெருநாள் தொழுகைகளை நபி வழியில் நடத்துவதற்கு நமது FRTJ  நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் ஆர்வம் தெரிவித்துள்ளனர், இன்ஷா அல்லாஹ் அதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும்.

4.பிரான்சில் முதல் முறையாக மாற்று மத சகோதரர்களுக்காக " இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் " நிகழ்ச்சி நடத்துவதற்கும்  ஆலோசிக்கப்பட்டது அதற்கான ஏற்பாடுகள்    செய்யப்படும.இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் பங்குபெறும்  மாற்று மத  சகோதரர்களுக்கு  குரான் தர்ஜுமா மற்றும் ஏகத்துவ புத்தகங்கள் வழங்கப்படும்.


 6.புதிய தலைமை கட்டிட நிதிக்கு ஆகும் செலவு நமது frtj  நிர்வாகிகளும்  மற்றும் நமது உறுப்பினர்களும் அவர்களுடைய பங்களிப்பை செய்ய இருக்கின்றார்கள்  அத்தொகையை இன்ஷா அல்லாஹ் விரைவில் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும்.

 ஆலோசனை கூட்டதை சிறப்பாக நடத்தி வைத்த எல்லா வல்லஅல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் அல்லாஹ் அக்பர்.

 இறுதியாக FRTJ யின் செயலாளர்  சம்சுதீன்
அவர்கள்  நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இவன்
சம்சுதீன்
FRTJ செயலாளர்
26-08-2013.



dimanche 18 août 2013

துவா -Dua Android லில் பார்க்கலாம்.

துஆக்கள், அவ்ராதுகள், திக்ருகள் என்ற தலைப்புக்களில் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ள போதும் அவை பெரும்பாலும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் அமையவில்லை. சில நூல்கள் கற்பனையாக உருவாக்கப்பட்ட துஆக்களாக உள்ளன. எனவே இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஆதாரப்பூர்வமான துஆக்களின் தொகுப்புக்களை வழங்குவதில் மன நிறைவு கொள்கிறோம்.
To Download Click Here

samedi 10 août 2013

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?


ஆறு நோன்பு ஆதாரமற்றதா? 



  حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ أَخُو يَحْيَى بْنِ سَعِيدٍ أَخْبَرَنَا عُمَرُ بْنُ ثَابِتٍ أَخْبَرَنَا أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بِمِثْلِهِ و حَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ ثَابِتٍ قَالَ سَمِعْتُ أَبَا أَيُّوبَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ 


யார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரலி) நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், பைஹகீயின் சுனன் ஸகீர், தப்ரானியின் முஃஜம் ஸகீர், தாரிமி இன்னும் பல நூல்களிலும் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 இந்த ஹதீஸின் அடிப்படையில் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கும் வழக்கம் முஸ்லிம்களிடம் நிலை பெற்றுள்ளது. குறிப்பாக தவ்ஹீத் பிரச்சாரம் தமிழகத்தில் தீவிரமடைந்த பின்னர் ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. ஆயினும் ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்று சில அறிஞர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதால் இந்த ஹதீஸ் பற்றியும் நாம் மறு ஆய்வு செய்யும் அவசியம் ஏற்பட்டது.

 மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள். அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) வழியாக உமர் பின் ஸாபித் பின் ஹாரிஸ் என்பவர் அறிவிக்கிறார். உமர் பின் ஸாபித் பின் ஹாரிஸ் என்பவர் கூறியதாக ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் என்பார் அறிவிக்கின்றார். ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் என்ற இந்த அறிவிப்பாளர் காரணமாகவே மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்று மாற்றுக் கருத்துடையோர் விமர்சனம் செய்கின்றனர்.   இவர் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல், இப்னு மயீன் ஆகியோர் கூறுகிறார்கள். இவர் பலமானவர் அல்ல என்று நஸயீ கூறுகிறார். இவரது நினைவாற்றல் குறித்து அறிஞர்கள் குறை கூறியுள்ளதாக திர்மிதீ கூறுகிறார். இவரை ஆதாரமாக எடுப்பது கூடாது என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார். இப்னு அதீ, அஜலீ, இப்னு ஸஅத் ஆகியோர் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். 

பொதுவாக ஒரு அறிவிப்பாளர் பற்றி முரண்பட்ட இரண்டு அபிப்பிராயங்கள் கூறப்பட்டால் குறை பற்றிய விமர்சனமே முன்னுரிமை அளிக்கப்படும். இந்த அடிப்படையில் மேற்கண்ட ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றிருந்தாலும் இது பலவீனமான அறிவிப்பு என்பதில் ஐயமில்லை. ஆயினும் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பது பற்றிய நம்பகமான வேறு அறிவிப்புகளும் உள்ளன. அவற்றையும் கவனத்தில் கொண்டால் ஆறு நோன்பு நோற்பதற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட ஹதீஸ் அபூதாவூதின் மற்றொரு அறிவிப்பில், வேறொரு அறிவிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

 حَدَّثَنَا النُّفَيْلِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ وَسَعْدِ بْنِ سَعِيدٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي أَيُّوبَ صَاحِبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ بِسِتٍّ مِنْ شَوَّالٍ فَكَأَنَّمَا صَامَ الدَّهْرَ 

அபூதாவூத் 2078, நஸயீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூற்களில் இடம் பெற்று இந்த அறிவிப்பில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார். அபூஅய்யூப் அல்அன்ஸாரி கூறியதாக உமர் பின் ஸாபித் அறிவிக்கிறார். உமர் பின் ஸாபித் கூறியதாக ஸஅத் பின் ஸயீத் என்பாரும், ஸஃப்வான் பின் ஸுலைம் என்பவரும் அறிவிக்கிறார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

அதாவது உமர் பின் ஸாபித் என்பாரிடமிருந்து மேற்கண்ட ஹதீஸை ஸஅத் பின் ஸயீத் மட்டும் செவியுறவில்லை. அவருடன் ஸஃப்வான் என்பாரும் செவியுற்று அறிவிக்கிறார். ஸஅத் என்பாரின் நினைவாற்றல் குறைவு என்றாலும், அவருடன் இணைந்து ஸஃப்வான் அறிவிப்பதால் இந்தக் குறை நீங்கி விடுகின்றது.   ஸஃப்வான் பின் ஸுலைம் என்பார் நம்பகமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மதீனீ, முஹம்மத் பின் ஸஅத், அஜலீ, அபூஹாத்தம் ராஸீ, நஸயீ மற்றும் பலர் கூறியுள்ளனர். உமர் பின் ஸாபிதும், அவரிடமிருந்து அறிவிக்கும் ஸஃப்வான் ஆகிய இருவரும் நம்பகமானவர்கள் என்றாலும் ஸஃப்வானிடமிருந்து நூலாசிரியர் அபூதாவூத் வரையுள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் தாமா? என்ற சந்தேகம் இந்த இடத்தில் தோன்றலாம்.

ஸஃப்வான் கூறியதாக அறிவிப்பவர் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் ஆவார். இவர் நம்பகமானவர்; ஆதாரமாகக் கொள்ளத் தக்கவர் என்று இப்னு மயீன் கூறுகிறார். இவரிடம் குறை இல்லை என்று நஸயீ கூறுகிறார். மாலிக் இமாம், அஜலீ ஆகியோரும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். இவர் நம்பகமானவர்; சில நேரம் தவறு செய்து விடுவார் என்று இப்னு ஹிப்பான், இப்னு ஸஅத் ஆகியோர் கூறுகிறார்கள். (நம்பகமான பெரும்பாலான அறிவிப்பாளர் பற்றி, சில நேரம் தவறு செய்து விடுவார் என்று கூறப்படுவதுண்டு) அப்துல் அஸீஸிடமிருந்து இதை அறிவிப்பவர் நுபைலீ என்பார். இவரது இயற்பெயர் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அலீ. இவர் நம்பகமானவர் என்று நஸயீ கூறுகிறார். இவரை விட நினைவாற்றல் மிக்கவரை நான் கண்டதில்லை என்று அபூதாவூத் கூறுகிறார். இவர் நம்பகமான உறுதியான அறிவிப்பாளர் என்று அபூஹாத்தம் ராஸீ கூறுகிறார். தாரகுத்னீ, இப்னு ஹிப்பான், இப்னு கானிவு ஆகியோர் இவரை நம்பகமானவர் எனக் கூறியுள்ளனர். இவரிடமிருந்து அபூதாவூத் இமாம் கேட்டு, தமது நூலில் இதைப் பதிவு செய்துள்ளனர். எனவே முஸ்லிம் நூலில் உள்ள அறிவிப்பில் குறை இருந்தாலும் அபூதாவூதில் இடம் பெற்ற அறிவிப்பு ஆதாரமாகக் கொள்ளத்தக்க தகுதியில் அமைந்துள்ளது. மேலும் ஷவ்வால் ஆறு நோன்பு பற்றி ஆதாரப்பூர்வமான வேறு செய்திகளும் உள்ளன.

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ الْحَارِثِ الذِّمَارِيُّ عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ عَنْ ثَوْبَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صِيَامُ شَهْرٍ بِعَشَرَةِ أَشْهُرٍ وَسِتَّةِ أَيَّامٍ بَعْدَهُنَّ بِشَهْرَيْنِ فَذَلِكَ تَمَامُ سَنَةٍ يَعْنِي شَهْرَ رَمَضَانَ وَسِتَّةَ أَيَّامٍ بَعْدَهُ 

ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது; அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃப்வான் (ரலி) நூல்: தாரிமி 1690 ஸஃப்வான் வழியாக இதை அம்ர் பின் மிர்ஸத் என்பார் அறிவிக்கிறார். இவர் நம்பகமான அறிவிப்பாளர். அம்ர் பின் மிர்ஸத் வழியாக இதை யஹ்யா பின் ஹாரிஸ் என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர். யஹ்யா பின் ஹாரிஸ் வழியாக யஹ்யா பின் ஹம்ஸா என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர். யஹ்யா பின் ஹம்ஸா வழியாக யஹ்யா பின் ஹஸ்ஸான் என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர். இதே ஹதீஸ் இப்னுமாஜா 1705, அஹ்மத் 21378 ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெருநாள் முடிந்து மறு நாளே நோன்பை ஆரம்பித்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இதை நோற்க வேண்டுமா? அல்லது இம்மாதத்தில் ஏதேனும் ஆறு நாட்களில் விட்டு விட்டு நோற்கலாமா? என்ற கேள்விக்கு இந்த அறிவிப்பில் விடை உள்ளது. அதாவது எல்லா நன்மைகளும் ஒன்றுக்குப் பத்து என்ற அளவில் கணக்கிடப்படுகின்றன. ரமளானில் நோற்ற 30 நோன்புகளும் பத்து மாதத்திற்குச் சமமாகி விடுகின்றது. ஆறு நோன்பு அறுபது நோன்புக்குச் சமமாகி விடுகின்றது. இதனால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். ஒன்றுக்குப் பத்து என்ற நன்மையை அடைவது தான் இதன் நோக்கம் எனும் போது ஷவ்வாலில் எந்த ஆறு நாட்களில் நோற்றாலும் இந்த நன்மை கிடைத்து விடும். மேலும் பெரு நாளைக்கு மறு நாள் முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் பிடிக்க வேண்டும் எனும் போது இந்த நாட்களில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் அந்த நன்மையை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பி. ஜைனுல் ஆபிதீன்
Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/aayvukal/aru_nonbu_atharamatratha/
Copyright © www.onlinepj.com

mercredi 7 août 2013

பெருநாள் தொழுகை

 
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: புகாரீ 956, முஸ்லிம் 1612

பெருநாள் தொழுகையில் பெண்கள்
பெருநாள் தொழுகையில் பெண்கள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் திடலுக்கு வர வேண்டும். அவர்கள் தொழுகையைத் தவிர மற்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

இரு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கின்ற கன்னிப் பெண்களையும் (தொழும் திடலுக்கு) அனுப்புமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகின்ற இடத்திற்குச் சென்று அவர்களுடைய துஆவில் கலந்து கொள்ளுமாறும், தொழுமிடத்தை விட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்குமாறும் நாங்கள் கட்டளையிடப்பட்டோம். பெண்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது?” என்றார். அதற்கு, “அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 351, முஸ்லிம் 1616

ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புதல்
பெருநாள் தொழுகைக்காகத் திடலுக்குச் செல்லும் போது ஒரு வழியில் சென்று வேறு வழியாகத் திரும்புவது நபி வழியாகும்.
பெருநாள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரீ 986

தொழுகைக்கு முன் சாப்பிடுதல்
நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரீ 953

நோன்புப் பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: இப்னுகுஸைமா 1426

முன் பின் சுன்னத்துகள் இல்லை
இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது. 
நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைக்கு முன்னரும், பின்னரும் எந்தத் தொழுகையையும் தொழுததில்லை.
நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று (திடலுக்குச்) சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும், பின்னும் எதையும் தொழவில்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரீ 1431, முஸ்லிம் 1616

பாங்கு இகாமத் இல்லை
இரு பெருநாள் தொழுகைக்கும் பாங்கு, இகாமத் கிடையாது.
இரு பெருநாள் தொழுகையை பாங்கும் இகாமத்தும் இல்லாமல் ஒரு தடவை அல்ல; இரு தடவை அல்ல; பல தடவை நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுள்ளேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி), நூல்: முஸ்லிம் 1610

மிம்பர் இல்லை

வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் இமாம் மிம்பரில் நின்று உரை நிகழ்த்துவது போல் பெருநாள் தொழுகைக்கு மிம்பரில் நின்று உரையாற்றக் கூடாது. தரையில் நின்று தான் உரை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தான் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
 
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான் பெருநாள் அன்று மிம்பரில் ஏறி பயன் செய்தபோது.
“மர்வானே! நீர் சுன்னத்திற்கு மாற்றம் செய்து விட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரைக் கொண்டு வந்துள்ளீர். இதற்கு முன்னர் இவ்வாறு கொண்டு வரப்படவில்லை…” என்று இடம் பெற்றுள்ளது.

ஆதாரம் : அபூதாவூத் 963, இப்னுமாஜா 1265, அஹ்மத் 10651

நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று ஒரேயொரு உரையை நிகழ்த்தினார்கள் என்பதற்கே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவதற்கோ, குத்பாக்களுக்கு இடையில் அமர்வதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
 
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (திடலுக்குச் செல்வதற்காக) வெளியேறினார்கள். மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்து ஸலாம் கூறினார்கள். தரையில் நின்று மக்களை நோக்கி (உரை நிகழ்த்தி)னார்கள். மக்கள் அமர்ந்திருந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1278
 
தக்பீரும் பிரார்த்தனையும்

இரு பெருநாள்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும். மேலும் திடலில் இருக்கும் போது, தமது தேவைகளை வல்ல இறைவனிடம் முறையிட்டுக் கேட்க வேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது.

பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் எனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள்: புகாரீ 971, முஸ்லிம் 1615

அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்) அவர்கள் தனியான எந்தத் தக்பீரையும் கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை. மேலும் பெருநாளில் கடமையான தொழுகைகளுக்கு முன்னால் அல்லது பின்னால் சிறப்பு தக்பீர் சொல்ல வேண்டும் என்பதற்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை. மேலும் பெருநாளில் தக்பீர்களைச் சப்தமிட்டு கூறக் கூடாது.
 
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!
(அல்குர்ஆன் 7:205)
தமிழ்குரான் 
TNTJ

நாளை பிரான்சில் ரமலான் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது.

நாளை பிரான்சில் ரமலான் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது.
பிரான்ஸ்  தௌஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

பிறை தென்பட்டால் தயவுசெய்து தெரிவிக்கவும்.

பிறை தென்பட்டால் தயவுசெய்து தெரிவிக்கவும்.




அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 
மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். பிறையை நீங்கள் கண்டால் நோன்பு வையுங்கள். அதைப் பார்த்தே நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் குறுக்கிட்டால் எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : நஸாயீ (2109)


பிறையை கண்களால் கண்டு நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என்பது நபி வழிமுறையாகும். கண்களால் காணாது கணித்தல் அடிப்படையில் நோன்பை ஆரம்பிப்பதும், உலகத்தின் எத்திசையில் கண்டாலும் நோன்பு பிடிக்க வேண்டும் என்று கூறுவதும் புது வழியாகும் என்பதை மேற்குறித்த ஹதீஸ்கள் எமக்கு உணர்த்துகின்றன.

இதற்கமைய, இன்ஷா அல்லாஹ் பிரான்ஸில் எந்தப் பகுதியிலாவது பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட தொலை பேசி இலக்கங்களுக்கு தெரியப்படுத்துமாறு பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் உங்களை கேட்டுக்கொள்கிறது.

• முகம்மது ருக்னுதீன் 0033662267273
• அமீன் ஆசிக்         0033673635269
• சம்சுதீன்             0033666563023
• ஹசன் அப்துல் ரசாக் 0677774928
• அப்துல் ஹக்கீம்     0033650856575

அமீன் ஆசிக் 

lundi 5 août 2013

பெருநாள் தொழுகை எத்தனை தக்பீர்?

பெருநாள் தொழுகையில் 3+3 கூடுதல் தக்பீர்களுக்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை என்பதை தெரிந்த சிலர் 7+5 தக்பீர்கள் தொடர்பான செய்திகளும் ஆதாரப்பூர்வமானது இல்லை என்று விமர்சனம் செய்யத் துவங்கியுள்ளனர். இவர்களின் விமர்சனம் சரியானதா? அவர்களின் வாதம் என்ன? அதற்குரிய பதில் என்ன என்பதை இத்தொடரில் விரிவாக அலசுவோம்.

பெருநாள் தொழுகைளில் முதல் ரக்அத்தில் கூடுதலாக ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் கூடுதலாக ஐந்து தக்பீர்களும் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என்ற செய்தி, அன்னை ஆயிஷா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), இப்னு உமர் (ரலி), இப்னு அப் பாஸ் (ரலி), ஸஅத் பின் ஆயித் (ரலி), ஜாபிர் (ரலி), அம்ர் பின் அவ்ஃப் பின் ஸைத் (ரலி) ஆகியோர் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நபித்தோழர் வழியாக அறிவிக்கப்பட்ட செய்தியின் தரத்தையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

இப்னு உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பு :
பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத் தில் ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி
நூல் : தாரகுத்னீ, பாகம் : 2, பக்கம் 48
அறிவிப்பாளர் வரிசை :

1-இப்னும் உமர் (ரலி)

2-நாபிஃவு

3-யஹ்யா பின் ஸயீத்

4-பரஜ் பின் பளாலா

5-ஸஅத் பின் அப்துல் ஹமீத்

6-அஹ்மத் பின் அலீ

7-உஸ்மான் பின் அஹ்மத்

இந்த அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் பரஜ் பின் பளாலா என்பவர் பலவீனமானவராவார். இவரை யஹ்யா பின் மயீன், அபூஹாத்திம், இமாம் புகாரி, முஸ்லிம், அலீ பின் அல்மதீனீ ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு :
நபி (ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகையிலும் பனி ரென்டு தக்பீர்கள் கூறுவார்கள். முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறுவர்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : தப்ரானீ-கபீர், பாகம் : 10, பக்கம் : 294
அறிவிப்பாளர் வரிசை :

1-இப்னு அப்பாஸ் (ரலி)

2-ஸயீத் பின் அல்முஸய்யப்

3-ஸுஹ்ரீ

4-சுலைமான் பின் அர்கம்

5-அம்ர் பின் ஹுமைத்

6-முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான்

7-முஹம்மத் பின் அப்துல்லாஹ்.

இச்செய்தியில் இடம்பெறும் சுலைமான் பின் அர்கம் என்பவர் பலவீனமானவராவார். இவரை இமாம் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத், யஹ்யா பின் மயீன், அம்ர் பின் அல்பல்லாஸ் ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பு :
இரண்டு பெருநாள் தொழுகையில் ஏழு, ஐந்து தக்பீர்கள் சொல்வது நபிவழியில் உள்ளது.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : பைஹகீ, பாகம் :3, பக்கம் : 292)
அறிவிப்பாளர் வரிசை :

1-ஜாபிர் (ரலி)

2-ஷஅபீ

3-தாவூத் பின் அபீ ஹின்த்

4-அலீ பின் ஆஸிம்

5-அலீ பின் அப்பாஸ்

6-அலீ பின் அப்துல்லாஹ் பின் பள்ல்

7-அஹ்மத் பின் முஹ்ம்மத்

8-அஹ்மத் பின் இப்ராஹீம்.

இச்செய்தியில் இடம்பெறும் அலீ பின் ஆஸிம் என்பவர் பலவீனமானவராவார். இவரை இமாம் புகாரி, யஹ்யா பின் மயீன், அலீ பின் அல்மதீனீ, யஸீத் பின் ஹாரூன் ஆகியோர் குறை கூறியுள்ளனர்.

ஸஅத் பின் ஆயித் (ரலி) அவர்களின் அறிவிப்பு :
நபி (ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் கிராஅத்திற்கு முன்னால் ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் கிராஅத்திற்கு முன்னால் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள்.

அறிவிப்பவர் : ஸஅத் பின் ஆயித் (ரலி)
நூல்கள் : இப்னுமாஜா (1267), தாரக்குத்னீ, பாகம் : பக்கம், ஹாகிம் 6595, பைஹகீ 5776.
அறிவிப்பாளர் வரிசை :

1-ஸஅத் பின் ஆயித் (ரலி)

2-அம்மார் பின் ஸஅத்

3-ஸஅத் பின் அம்மார்

4-அப்துர்ரஹ்மான் பின் ஸஅத்

5-ஹிஷாம் பின் அம்மார்.

இச்செய்தியில் இடம்பெறும் இரண்டாவது மூன்றாவது அறிவிப்பாளர்கள் யாரென அறியப்படாதவர்கள். இவர்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யபடவில்லை. மேலும் இதன் நான்காவது அறிவிப்பாளர் அப்துர்ரஹ்மான் பின் ஸஅத் என்பவரை யஹ்யா பின் மயீன், இமாம் புகாரி, அபூ அஹ்மத் அல்ஹாகிம் ஆகியோர் குறைகூறியுள்ளனர்.

அம்ர் பின் அவ்ஃப் பின் ஸைத் (ரலி) அவர்களின் அறிவிப்பு :
நபி (ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் கிராஅத்திற்கு முன்னால் ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் கிராஅத்திற்கு முன்னால் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள்.

அறிவிப்பவர் : அம்ர் பின் அவ்ஃப் பின் ஸைத் (ரலி)
நூல் : திர்மிதீ (492). முஸ்னத் அல்பஸ்ஸார் (2871)
அறிவிப்பாளர் வரிசை :

1-அம்ர் பின் அவ்ஃப் பின் ஸைத் (ரலி)

2-அப்துல்லாஹ் பின் அம்ர்

3-கஸீர் பின் அப்துல்லாஹ்

4-அப்துல்லாஹ் பின் நாஃபிவு

5-முஸ்லிம் பின் அம்ர்.

இச்செய்தியில் இடம்பெறும் இரண்டாவது அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. இவர் யாரென அறியப்படாதவர். மேலும் மூன்றாவது அறிவிப்பாளர் கஸீர் பின் அப்துல்லாஹ் என்பவர் ஹதீஸ் கலை அறிஞர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டவர். இவரை இமாம் ஷாஃபீ, அஹமத் பின் ஹன்பல், யஹ்யா பின் மயீன்,அபூஸுர்ஆ, அபூஹாத்திம், அபூதாவூத் ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர்.

ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பு :
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : அபூதாவூத் (970)
அறிவிப்பாளர் வரிசை :

1-ஆயிஷா (ரலி)

2-உர்வா

3-இப்னு ஷிஹாப்

4-உகைல்

5-இப்னு லஹீஆ

6-குதைபா.

மற்றொரு அறிவிப்பாளர் வரிசை :

1-ஆயிஷா(ரலி)

2-உர்வா

3-இப்னு ஷிஹாப்

4-காலித் பின் யஸீத்

5-இப்னு லஹீஆ

6-இப்னு வஹப்

7-இப்னு ஸர்ஹ்.

இந்த வரிசையின் படி இப்னு மாஜாவிலும் இடம் பெற்றுள்ளது.

மேற்கண்ட பலவீனமான ஹதீஸ்களை நாம் ஆதாரமாகக் கொள்ளவில்லை. பின் வரும் ஹதீஸை நாம் ஆதாரமாகக் கொண்டுள்ளோம். இது குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும் அவை ஏற்புடையதல்ல. அது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அறிவிப்பு :
பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்கள், மற் றொரு ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். அதற்கு பிறகு கிராஅத் ஓத வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
நூல் : அபூதாவூத் (971)
அறிவிப்பாளர் வரிசை :

1-அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

2-ஷுஐப்

3-அம்ர் பின் ஷுஐப்

4அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தாயிஃபீ

5-முஃதமிர்

6-முஸத்தத்.

7-அன்னை ஆயிஷா (ரலி)

இச்செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தாயிஃபீ என்பவரை சிலர் விமர்சனம் செய்துள்ளனர். அவற்றின் விபரங்களைப் பார்ப்போம்.

இவருடைய முழுப் பெயர் : அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் யஃலா பின் கஅப் அத்தாயிஃபீ என்பதாகும்.

இவரை நம்பகமானவர் பட்டியலில் இப்னு ஹிப்பான் குறிப்பிட்டுள்ளார்கள். இப்னு மயீன் இவரை நல்லவர் என்றும் இன்னொரு இடத்தில் பலவீனமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். நஸயீ மற்றும் அவரல்லாதவர்கள் அந்தளவுக்கு (அதாவது மிக உயர்ந்த தரத்திலுள்ள அளவிற்கு) வலிமையானவர் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறே அபூஹாத்திம் அவர்களும் கூறியுள்ளார்கள். அம்ர் பின் ஷுஐப் அவர்கள் வழியாக வருபவை உறுதியானவையாகும். இவருடைய ஹதீஸ்கள் பதிவு செய்து கொள்ளப்படும் என்று இப்னு அதீ குறிப்பிட்டுள்ளதாக தஹபீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 2, பக்கம் : 452

இப்னு மயீன் இவரை நல்லவர் என்று கூறியுள்ளார் என்று இப்னு கைஸமா குறிப்பிட்டுள்ளார். இவர் அந்தளவிற்கு (உயர்தரமுள்ள நம்பக மானவர் அளவுக்கு) வலிமை வாய்ந்தவர் இல்லை. இவருடைய ஹதீஸ்கள் பதிவு செய்யப்படும் என்று நஸயீ குறிப்பிட்டுள்ளார்கள்.

இப்னு மயீன் அவர்கள் இவரை ஒரு இடத்தில் பலவீனமானவர் என்றும் இன்னொரு இடத்தில் நல்லவர் என்றும் குறிப்பிட்டுள்ளார் என்று உஸ்மான் பின் ஸயீத் குறிப்பிட்டுள்ளார். பரவாயில்லாதவர் (லா பஃஸ பிஹி) என்று இப்னு மயீன் குறிப்பிட்டதாக இப்னு மர்யம் கூறியுள்ளார்.

இமாம் புகாரி அவர்கள், இவர் விஷயத்தில் ஆட்சேபனை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இப்னு கல்ஃபூன் அவர்கள் இப்னுல் மதீனீ அவரை நம்பகமானவர் என்று குறிப்பிட்டதாகக் கூறியுள்ளார். இவர் அம்ர் பின்ஷுஐப் அவர்கள் வழியாக பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அது நம்பகமானதே!

ஹதீஸ்கள் பதிவு செய்து கொள்ளத் தகுதியானவரில் இவரும் ஒருவராவார் என்று இப்னு அதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய (நல்லவர்) என்று தாரகுத்னீ குறிப்பிட்டுள்ளார்கள். நம்பகமானவர் என்று இஜ்லீ குறிப்பிட்டுள்ளார்கள்.

(தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 5, பக்கம் : 261)

அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தாயிஃபீ என்பவரை விமர்சனம் செய்பவர்களில் ஒருவர் இப்னுமயீன் ஆவார்கள்.

இப்னு மயீன் அவர்களிடம் செவியுற்றவர்களில் ஒருவரான உஸ்மான் பின் ஸயீத் என்பவர் ஒரு முறை இவரை பலவீனமானவர் என்றும் ஒரு தடவை நல்லவர் என்றும் அவர்கள் குறிப்பிட்டதாகக் கூறியுள்ளார்.

இப்னு மயீன் அவர்களிடம் முரண்பட்ட இரண்டு செய்திகளை ஒருவரே அறிவிப்பதால் அந்த உஸ்மான் பின் ஸயீத் முரண்பட்டு அறிவித்த இரண்டையும் நாம் விட்டு விடலாம். இப்னு மயீன் என்ன கூறினார் என்று மற்றவர்கள் அறிவித்துள்ளவற்றை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம்.

இப்னு அபீ ஹைஸமா என்பவர் இப்னு மயீன் அவர்களிடமிருந்து இவரை நல்லவர் என்று கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதைப் போன்று இப்னு மர்யம் என்பவர் இப்னு மயீன் அவர்களிடமிருந்து இவரை லா பஃஸ பிஹி (பரவாயில்லாதவர்) என்று குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இப்னு மயீன் அவர்கள் அவர்கள் லா பஃஸ பிஹி (பரவாயில்லாதவர்) என்று சொன்னால் அவர் நம்கமானவர் என்பது பொருள். இதை இப்னு மயீன் அவர்களே கூறியுள்ளார்கள்.

(நூல் : தத்ரீபுர் ராவீ பாகம் : 1, பக்கம் : 344)

எனவே அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தாயிஃபீ என்பவர் இப்னு மயீன் கருத்துப்படி நம்பகமானவர் என்று கூறலாம்.

இமாம் நஸயீ அவர்கள் இவரைப் பொதுவாக குறை சொல்லாமல் அந்தளவிற்கு (உயர் தரமுள்ள நம்பகமானவர் அளவுக்கு) வலிமை வாய்ந்தவர் இல்லை என்று கூறியிருப்பதால் அவரை முதல் தரமான நம்பகமானவர் பட்டியலில் சேர்க்க முடியாதே தவிர பலவீனமானவர் என்று கூற முடியாது என்றே முடிவு செய்ய வேண்டும்.

இமாம் புகாரி அவர்கள் இவர் விஷயத்தில் ஆட்சேபனை உள்ளது என்று கூறியிருப்பதாக ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் கூறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இமாம் புகாரி அவர்களின் அறிவிப்பாளர் விமர்சன நூல்களான அத்தாரிகுல் கபீர், தாரீகுஸ் ஸகீர், லுஅஃபாவுஸ் ஸகீர் போன்று நூல்களில் இவ்வாறு கூறவில்லை. தனது அத்தாரீகுல் கபீர் என்ற நூலில் இவரைப் பற்றி பதிவு செய்த இமாம் புகாரி எந்த விமர்சனத்தையும் செய்யவில்லை.

ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் இமாம் புகாரி இவ்வாறு விமர்சனம் செய்துள்ளதாகப் பதிவு செய்த செய்தியை ஆய்வு செய்த இமாம் தஹபீ அவர்கள் இதற்கு பின்வருமாறு விளக்கம் கூறியுள்ளார்கள் :

இமாம் புகாரி அவர்கள் இவரை (அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தாயிஃபீ என்பவரை) பற்றி அத்தாரிகுல் கபீர் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். ஆனால் அவரைப் பற்றி எக்கருத்தையும் கூறவில்லை. மேலும் அவர்களுடைய அத்தாரிகுல் ஸகீர், அல்லுஅஃபாவு ஸகீர் ஆகிய நூல்களில் நான் இக்கருத்தைப் பார்க்கவில்லை. ஆனால் அல்லுஅஃபாவுஸ் ஸகீர் என்ற நூலில் அப்துல்லாஹ் பின் யஃலா பின் முர்ரா அல்கூஃபீ என்பவரைப் பற்றித் தான் இவர் விஷயத்தில் ஆட்சேபனை உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

(நூல்: மன் துகுல்லிம ஃபீஹி வஹு முவஸ்ஸகுன், பாகம் : 1, பக்கம்: 45)

நாம் தேடிய வரையிலும் இமாம் புகாரி சொன்னதாக வேறு எங்கும் காண முடியவில்லை. இமாம் புகாரி அவர்களின் அத்தாரிகுல் கபீர் என்ற நூலில் அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹ்மான் பின் உஸைத் என்பவரைப் பற்றி இவர் விஷயத்தில் ஆட்சேபனை உள்ளது என்று கூறியுள்ளார்கள். இவரைப் பார்த்துத் தான் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தவறுதலாக அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் யஃலா அவர்களைப் பற்றியதாக எண்ணி இவ்வாறு குறிப்பிட்டிருக்க வேண்டும்.

மேலும் இவரை இமாம் புகாரி அவர்கள் நம்பகமானவராகவே எண்ணியுள்ளார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

(பெருநாள் தொழுகையில் 7+5 கூடுதல் தக்பீர்கள் தொடர்பாக) அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான், அம்ர் பின் ஷுஐப், தன் தந்தை, பாட்டனார் வழியாக அறிவிக்கும் ஹதீஸைப் பற்றி இமாம் புகாரியிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் இந்த செய்தியும் ஆதாரப்பூர்வமானதே! என்று கூறினார்கள் என்று இமாம் திர்மிதீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

(நூல் : இலலுல் கபீர், பாகம் :1, பக்கம் :190)

இமாம் திர்மிதீ அவர்கள் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தா யிஃபீ என்ற அறிவிப்பாளரைக் குறிப்பிட்டு இமாம் புகாரி இடம் கேட்ட போது இந்தச் செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று புஹாரி இமாம் கூறியதிலிருந்து இமாம் புகாரியின் கருத்துப்படி இவர் நம்பகமானவரே என்பதை அறியலாம்.

மேலும் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் பெருநாள் தொழுகையில் 7+5 கூடுதல் தக்பீர்கள் தொடர்பாக அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் அம்ர் பின் ஷுஐப் அவர்கள் வழியாக அறிவிக்கும் செய்தியை தனது புலுகுல் மராம் என்ற நூலில் பதிவு செய்த இப்னு ஹஜர் அவர்கள், இந்தச் செய்தியை புகாரி அவர்கள் ஆதாரப்பூர்வமானது என்று கூறியதாக திர்மிதீ அவர்கள் சொன்னதையும் எடுத்துரைத்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தாயிஃபீ என்பவரை இப்னுல் மதீனி, இப்னு மயீன், இஜ்லீ, புகாரி, இப்னு ஹிப்பான், இப்னு அதீ, தாரகுத்னீ, நஸயீ ஆகியோர் இவருடைய ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளலாம் என்றே கூறியுள்ளார்கள். மேலும் இமாம் முஸ்லிம் அவர்களும் தமது ஸஹீஹ் முஸ்லிம் என்ற நூலிலும் (4540) இவருடைய ஹதீஸ்களை பதிவு செய்திருப்பதும் இவர் பலமானவர் என்பதை உறுதி செய்கிறது.

அபூஹாத்திம் அவர்கள் மட்டுமே இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். ஆனால் அதற்குரிய காரணத்தைக் கூறவில்லை. எனவே அதிகமானவர்கள் நம்பகமானவர்கள் என்று கூறும் கூற்றையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதே செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அம்ர் பின் ஷுஐபைப் பற்றி சிலர் விமர்சனம் செய்துள்ளனர். அந்த விமர்சனத்தைப் பற்றி முழு விபரத்தைக் காண்போம்.

அம்ர் பின் ஷுஐப் என்பவரின் செய்திகளை ஏற்றுக் கொள்ளலாம் என்று சிலரும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சிலரும் கூறுகின்றனர். அவர்களில் ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறுபவர்களின் விபரங்களை முதலில் காண்போம்.

நான் அம்ர் பின் ஷுஐப் அவர்களைப் பற்றி யஹ்யா பின் மயீன் அவர்களிடம் கேட்டேன். அவருடைய விஷயத்தில் என்ன? என்று கேட்டுவிட்டு கோபப்பட்டார்கள். அவர் விஷயத்தில் நான் என்ன சொல்வது? இவரிடமிருந்து ஹதீஸ்களை இமாம்கள் அறிவித்துள்ளார்களே (அதற்கு மேல் என்ன?) என்று குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம் : அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம் : 6, பக்கம் : 238, தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 8, பக்கம் :43, மீஸானுல் இஃதிதால், பாகம் : 3, பக்கம் :263)

யஹ்யா பின் மயீன் அவர்கள் அம்ர் பின் ஷுஐப் அவர்களை நம்பகமானவர் என்று குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம் : அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம் : 6, பக்கம் : 238, அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம் : 5 பக்கம் : 114, தாரிக் அஸ்மாவுஸ் ஸிகாத், பாகம் :1, பக்கம் :151)

அம்ர் பின் ஷுஐப் அவர்களின் ஹதீஸ்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று யாஹ்யா பின் மயீன் குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம் : அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம் : 6, பக்கம் : 238, மீஸானுல் இஃதிதால், பாகம் :3 பக்கம் :263)

அம்ர் பின் ஷுஐப் தன் தந்தை, பாட்டனார் வழியாக அறிவிப்பது சரியானதா? அல்லது பஹ்ஸ் பின் ஹகீம் அவர்கள் தன் தந்தை, பாட்டனார் வழியாக அறிவிப்பதைச் சிறந்ததாக கருதுகிறீர்களா? என்று என் தந்தை (அபூஹாத்திடம்) கேட்டேன். அதற்கு அம்ர் பின் ஷுஐப், தன் தந்தை, பாட்டனார் வழியாக வரும் அறிவிப்பே என்னிடம் சிறந்தது என்று கூறினார்கள்.

(ஆதாரம் : அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம் : 6)

அம்ர் பின் ஷுஐப் அவர்களின் அறிவிப்பைப் பற்றி அபூஸுர்ஆ அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் : அய்யூப் ஸக்தியானீ, அபூஹாஸிம், ஸுஹ்ரீ, அல்ஹகம் பின் உத்பா போன்ற நம்பகமானவர்கள் இவரிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.

(ஆதாரம் : அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம் : 6)

அமர் பின் ஷுஐப் தன் தந்தை, தம் பாட்டனார் வழியாக அறிவிப்பவை அய்யூப், நாஃபி, இப்னு உமர் (ரலி) வழியாக அறிவிப்பதைப் போன்று (சரியானதாகும்) என்று இஸ்ஹாக் பின் ராஹவைஹி குறிப்பிடுகிறார்.

(ஆதாரம் : அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம் : 5 பக்கம் : 114, தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 8, பக்கம் : 43)

அம்ர் பின் ஷுஐப் அவர்களைப் போன்று குறைஷிகளில் முழுமைப் பெற்றவர்களை நான் பார்த்ததில்லை என்று அவ்ஸாயீ கூறுகிறார்.

(ஆதாரம் : அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம் : 5 பக்கம் :114, மீஸானுல் இஃதிதால், பாகம் : 3 பக்கம் : 263, தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 8, பக்கம் : 43)

அம்ர் பின் ஷுஐப், தனது காலத்தில் இருந்த அறிஞர்களில் ஒருவர்.

(ஆதாரம் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 3 பக்கம் : 263)

அம்ர் பின் ஷுஐப் அவர்களை இப்னு மயீன், இப்னு ராஹவைஹி, ஆகியோர் நம்பகமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

(ஆதாரம் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 3 பக்கம் : 263)

அஹ்மத் பின் ஹன்பல், அலீ பின் மதீனீ, இஸ்ஹாக் பின் ராஹ வைஹி, அபூ உபைத் ஆகியோரும் நம்முடைய பெரும்பாலான சகாக்களும் அம்ர் பின் ஷுஐப், தன் தந்தை, பாட்டனார் வழியாக அறிவித்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டுள்ளார்கள். முஸ்லிம்களில் யாரும் இவரை விட்டுவிடவில்லை.

(ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 8, பக்கம் : 43)

இஜ்லீ, நஸயீ ஆகியோர் அம்ர் பின் ஷுஐபை நம்பகமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 8, பக்கம் : 43)

அம்ர் பின் ஷுஐப் அவர்கள் நம்பகமானவர் என்றும் கவனிக்கப்படக் கூடிய (முக்கிய) நபர்களான அய்யூப், ஸுஹ்ரி, ஹகம் போன்ற அறிவிப்பாளர்கள் இவரிடமிருந்து அறிவித்துள்ளார்கள் என்று அபூ ஜஅஃபர் அஹ்மத் பின் ஸயீத் அத்தாரிமி குறிப்பிட்டுள்ளர்கள்.

(ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 8, பக்கம் : 43)

இவரிடமிருந்து நம்பகமானவர்கள் அறிவித்தால் அது ஆதாரத்திற்கு ஏற்ற நம்பகமானதாகும் என்று யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள் கூறியதாக ஸதகா பின் அல்பழ்ல் கூறினார்கள்.

(ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 8, பக்கம் : 43)

இவ்வாறு பல அறிஞர்கள் அம்ர் பின் ஷுஐப் என்ற அறிவிப்பாளரை நம்பகமானவர் என்று கூறியிருந்தாலும் சிலர் இவரை விமர்சனம் செய்துள்ளனர். அவற்றைப் பார்ப்போம்.

நான் அம்ர் பின் ஷுஐப் அவர்களிடம் சென்றால் மக்கள் (ஏதும் நினைத்து விடுவார்கள் என்ற) வெட்கத்தால் என் தலையைத் தாழ்த்திக் கொள்வேன்.

(ஆதாரம் : அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம் : 5, பக்கம் : 114)

ஹதீஸ் கலை அறிஞர்கள் நாடினால் அம்ர் பின் ஷுஐப். தம் தந்தை, பாட்டனார் வழியாக அறிவித்தவையை ஆதாரமாகக் கொள்வார்கள். நாடினால் விட்டு விடுவார்கள் என்று அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம் : அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம் : 5, பக்கம் :114)

இரண்டு பேரீச்சம் பழம் அல்லது இரண்டு நாணயங்கள் அளவுக்குக் கூட அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்களின் ஏடு என்னிடம் மகிழ்ச்சி அளிக்காது என்று முகீரா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம் : அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம் : 5, பக்கம் : 114, மீஸானுல் இஃதிதால், பாகம் : 3, பக்கம் : 263)

இந்த இந்த ஹதீஸ்களைத் தவிர அம்ர் பின் ஷுஐபின் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானது இல்லை என்று அபூ அப்துர்ரஹ்மான் அல்அத்ரமீ கூறுகிறார்கள்.

(ஆதாரம் : அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம் : 5, பக்கம் : 114)

அம்ர் பின் ஷுஐப் வழியாக அறிஞர்களும் நம்பகமானவர்களும் பலவீனமானவர்களின் ஒரு கூட்டத்தினரும் அறிவித்துள்ளனர். என்றாலும் அம்ர், அவர் தம் தந்தை, பாட்டனார் வழியாக அறிவித்தவைகளை அறிஞர்கள் தவிர்ந்துள்ளார்கள். அவர் விஷயத்தில் (இரு கருத்துக்களுக்கு) இடம்பாடு இருப்பத்தினால். எனவே அவருடைய செய்திகளை ஆதாரப்பூர்மான தமது நூல்களில் இடம் பெறச் செய்யவில்லை. ஏனெனில் (இவர் அறிவிக்கும் செய்திகள் நேரடியாகக் கேட்டவை இல்லை) ஏட்டிலிருந்து அறிவித்தவையாகும் என்பதால்.

(ஆதாரம் : அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம் : 5, பக்கம் : 114)

யஹ்யா பின் அல்கத்தான் அவர்கள் இவருடைய ஹதீஸ்களை விட்டு விட்டார் (நிராகரித்துள்ளார்).

(ஆதாரம் : அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம் : 5, பக்கம் : 114,

மீஸானுல் இஃதிதால், பாகம் : 3, பக்கம் : 263)

அம்ர் பின் ஷுஐப் என்பவர் அந்தளவுக்கு (உயர் தரமான அறிவிப்பாளர் அளவுக்கு) வலிமை வாய்ந்தவர் இல்லை என்று யஹ்யா பின் மயீன் குறிப்பிட்டார்கள் என்ற அஹ்மத் பின் ஸுஹைர் கூறினார்கள்.

(ஆதாரம் : அல்மஜ்ரூஹீன், பாகம் : 2, பக்கம் : 71)

அம்ர் பின் ஷுஐப், தம் தந்தை, பாட்டனார் வழியாக அறிவித்தவை ஆதாரத்திற்கு ஏற்றதா? என்று அபூதாவூத் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள்: இல்லை, ஆதாரத்திற்கு ஏற்றதில் பாதியளவு கூட கிடையாது என்று பதிலளித்தார்கள்.

(ஆதாரம் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 3, பக்கம் : 263)

அம்ர் பின் ஷுஐப் என்பவர் நம்மிடம் பலவீனமானவராவார் என்ற யஹ்யா அல் கத்தான் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

(ஆதாரம் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 3, பக்கம் : 263, தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 8, பக்கம் : 43)

அம்ர் பின் ஷுஐப் இடம் அதிகமான மறுக்கப்பட வேண்டிய செய்திகள் இருக்கின்றன. நாம் அவர்களின் அறிவிப்பைப் பதிவு செய்வதெல்லாம் படிப்பினை பெறுவதற்குத் தான். ஆதாரத்திற்கு ஏற்பதாக இருந்தால் கூடாது என்று அஹ்மத் பின் ஹன்பல் கூறியதாக அப்துல் மலிக் அல் மைமூன் கூறுகிறார்.

(ஆதாரம் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 3, பக்கம் : 263)

இவருடைய ஹதீஸில் கோளாறு உள்ளது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கருதுகிறார்கள் என இப்னு உயையனா கூறுகிறார்.

(ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 8, பக்கம் : 43)

அம்ர் பின் ஷுஐப் என்பவர் தம் தந்தை வழியில்லாமல் தாவூஸ், இப்னுல் முஸய்யப் வழியாகவும் நம்கமானவர்கள் வழியாகவும் அறிவித்தால் அதை ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்வது கூடும். அவர் தம் தந்தை, பாட்டானார் வழியாக அறிவித்தால் அதில் மறுக்கப்பட வேண்டிய அதிகமான செய்திகள் இடம் பெறுகின்றன. என்னிடத்தில் இதை ஆதாரமாகக் கொள்வது மதிப்பற்றது.

(ஆதாரம் : மஜ்ரூஹீன், பாகம் : 2, பக்கம் : 71)

அம்ர் பின் ஷுஐப் தம் தந்தை, பாட்டனார் வழியாக அறிவித்தவை (அவருடைய) ஏட்டிலிருந்து அறிவித்தவையாகும். அம்ர் பின் ஷுஐப் அவர் என் பாட்டனாரிடமிருந்து என் தந்தை கூறினார் என்று கூறுவார். இங்கிருந்து தான் பலவீனம் வருகிறது. மேலும் அம்ர் பின் ஷுஐப் என்பவர் ஸயீத் பின் முஸய்யப், அல்லது சுலைமான் பின் யஸார், அல்லது உர்வா வழியாக அறிவித்தால் அது நம்பகமானதாகும் என்றும் கூறினார்.

(ஆதாரம் : தாரீக் இப்னுமயீன் ரிவாயத் தவ்ரீ, பாகம் : 4, பக்கம் : 462)

ஹதீஸ் கலை அறிஞர்கள் அம்ர் பின் ஷுஐப், தம் தந்தை, பாட்டனார் வழியாக அறிவித்த செய்திகளை நாடும் போது ஆதாரமாகக் கொள்கிறார்கள். நாடும் போது விட்டு விடுகிறார்கள் என்று அஹமத் பின் ஹன்பல் அவர்கள் கூறினார்கள். (இவ்வாறு கூறுவதற்குக் காரணம்: அவர் விஷயத்தில் தடுமாற்றம் இருப்பதினால்)

ஆதாரம் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 3, பக்கம் : 263)

அம்ர் பின் ஷுஐப் அவர்கள் தம் தந்தை அவருடைய பாட்டனார் வழியாக அறிவிக்கும் செய்திகளைப் பற்றி பலர் விமர்சனம் செய்துள்ளதைப் பார்த்தோம். இதில் இப்னு மயீன், யஹ்யா பின் அல்கத்தான், அஹ்மத் பின் ஹன்பல் ஆகியோரின் கருத்து முரண்பட்டதாக இரு விதமான கருத்துக்கள் வந்துள்ளன. எனவே அதை நாம் எடுக்காமல் விட்டுவிடலாம்.

மீதமுள்ள விமர்சனங்களை நாம் பார்த்தால் சிலர் எந்தக் காரணமும் இல்லாமல் பலவீனமானவர்கள் என்று கூறியுள்ளார்கள். சிலர் காரணத்துடன் பலவீனத்தைக் குறிப்பிட்டுள்ளனர். எனவே காரணத்துடன் கூறியவர்களின் விமர்சனமே நாம் விவாதிக்க வேண்டியதாகும். காரணத்துடன் கூறிய அவர்களின் விமர்சனங்களைப் பின்வரும் நான்கு விஷயங்களில் உள்ளடக்கியுள்ளது.

1. அம்ர் அவர்களின் தந்தை ஷுஐப் அவர்கள், அவரின் பாட்டனார் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் எதையும் கேட்டதில்லை. எனவே இது தொடர்பு அறுந்த (முர்ஸல் வகை) செய்தியாகும்.

அதாவது ஷுஐப் அவர்களுக்கு மூன்று பாட்டனார்கள் இருந்துள்ளனர். 1. முஹம்மத் 2. அப்துல்லாஹ் (ரலி) 3. அம்ர் பின் அல்ஆஸ் (ரலி).

முதல் பாட்டனார் முஹம்மத் என்பவர் தாபியீ ஆவார், இரண்டாவது பாட்டனார் அப்துல்லாஹ் பின் அமர் (ரலி), மற்றும் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) ஆகியோர் நபித்தோழர்கள் ஆவார்கள்.

ஷுஐப் அவர்களின் தம் பாட்டனார் அவர்களிடமிருந்து அறிவிக்கிறார் என்று ஹதீஸில் வருவதால் அவருடைய மூன்று பாட்டனாரில் முதல் பாட்டனார் முஹம்தை (தாபியீ) என்று சில அறிஞர்கள் எடுத்துக் கொள்வதால் இந்த செய்தி முர்ஸல் (நபித்தோழர் விடுபட்ட தொடர்பு துண்டிக்கப்பட்ட) வகையைச் சார்ந்தது என்று கூறுகிறார்கள்.

பதில் : ஷுஐப் அவர்களின் அநாதையாக அவர்களின் பாட்டனார் அப்துல் லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் வளர்ந்து வந்தார்கள்.

(ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 9, பக்கம் : 201)

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 63 வரை வாழ்ந்துள் ளார்கள். ஹிஜ்ரி 63, 65, 68, 72, 73, 77, 78 என்றும் கூறப்படுகிறது.

(தஹ்தீபுல் கமால், பாகம் : 15, பக்கம் : 362)

இவர்களிடம் இருந்த ஷுஐப் அவர்கள் அலீ (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்தில் அல்லது அதற்கு முன்னர் பிறந்துள்ளார்கள்.

(ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம் : 9, பக்கம் : 201)

அலீ (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்தது ஹிஜ்ரீ 35 ஆம் ஆண்டு.

(பத்ஹுல் பாரீ, பாகம் : 7, பக்கம் : 72)

ஷுஐப் அவர்கள், அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக்கு வந்த போது பிறந்திருந்தால் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுடன் சுமார் 28 வருடங்கள் சேர்ந்திருந்துள்ளார்கள். 15 வருடம் சிறு வயது பருவம் என்று சொன்னாலும் மீதமுள்ள 13 வருடங்கள் ஏராளமான ஹதீஸ்களைக் கேட்டிருக்கலாம். அவர்களின் ஏடுகளையும் அவர்கள் காலத்தில் படித்திருக்கலாம் இதற்கு ஏரளாமான வாய்ப்புகள் இருந்துள்ளன.

எனவே ஷுஐப் அவர்கள் தம் பாட்டனார் என்று கூறியிருப்பது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களே என்று சொல்லலாம். வேறு சில நூல்களில் இந்த விவரம் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஸுனன் தாரகுத்னீ (4052), பைஹகீ (11851), ஹாகிம் (2186) தாரிகுஸ் ஸகீர் (2374) ஆகிய நூல்களில் ஷுஐப் அவர்களின் பாட்டனார் என்ற இடத்தில் தெளிவாக அப்துல்லாஹ் பின் அமர் (ரலி) அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆய்வு செய்த தஹபீ அவர்கள் மொத்தம் பத்து ஹதீஸ்களில் (அவர் பாட்டனார் என்ற இடத்தில்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) என்று இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். மேலும் ஷுஐப் அவர்கள் தம் பாட்டனாருடன் இணைந்திருக்கிறார் என்பதையும் அவரிடம் அவர் செவியுற்று இருக்கிகிறார் என்பதையும் நான் அறிகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஸியரு அஃலாமுன் நுபலா, பாகம்: 9, பக்கம் : 201)

ஷுஐப் என்பவர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)யிடம் செவியுற்றுள்ளாரா? என்று இமாம் புகாரியிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்று கூறினார்கள்.

(ஸுனன் தாரகுத்னீ 3001)

எனவே ஷுஐபுடைய பாட்டனார் என்பது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) தான் என்பதும் அவரிடம் அவர்கள் செவியுற்றுள்ளார்கள் என்பதும் தெளிவாகிறது.

2. அம்ர் பின் ஷுஐப் தம் தந்தை, அவருடைய பாட்டனார் வழியாக அறிவிப்பதில் தான் மறுக்கப்பட வேண்டிய செய்திகள் இடம் பெற்றுள்ளன என்று சில அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

பதில் : இந்த விமர்சனத்திற்கு ஹதீஸ் கலை அறிஞர்களில் ஒருவரான அபூஸுர்ஆ அவர்கள் பின்வருமாறு பதிலளித்துள்ளார்கள்.

அமர் பின் ஷுஐபுடைய ஹதீஸ்களை மறுப்பதெல்லாம், அவர் தம் தந்தை, அவருடைய பாட்டனார் மூலம் அதிகமான செய்திகளை அறிவிப்பதால் தான், மேலும் அவர் நேரடியாகக் கேட்டவைகள் குறைவானதாகும். அவரிடமிருந்த ஏட்டிலிருந்து தான் அதிகமானவற்றை அறிவித்துள்ளார் என்று கூறுகின்றனர். ஆனால் அல் முஸன்னா பின் ஸபாஹ், இப்னு லஹீஆ மற்றும் பலவீனமானவர்கள், இவரிடமிருந்து அறிவிப்பதில்ப் தான் மறுக்கப்பட வேண்டிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

(தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 8, பக்கம் : 43)

மறுக்கப்பட வேண்டிய செய்திகள் பலவீனமான அறிவிப்பாளர்கள் தான் அம்ர் பின் ஷுஐப் அவர்கள் மூலம் அறிவித்துள்ளார்களே தவிர அம்ர் பின் ஷுஐப், தம் தந்தை, அவருடைய பாட்டனார் மூலம் இடம் பெறவில்லை. எனவே இந்த விமர்சனமும் சரியில்லை.

3. அம்ர் பின் ஷுஐப் தம் தந்தை அவர் பாட்டனார் வழியாக அறிவிப்பது சரியில்லை என்பதினால் தான் இந்த வகையில் இடம் பெறும் செய்திகளைத் தமது ஆதாரப்பூர்மான தொகுப்புகளில் இமாம்கள் இடம் பெறச் செய்யவில்லை என்று இமாம் இப்னு அதீ அவர்கள் கூறியுள்ளார்.

இந்த வாதமும் சரியில்லை ஆதாரப்பூர்வமான தொகுப்புகள் என்று சொல்லப்படும் புகாரி, முஸ்லிம் போன்ற நூல்களில் இடம்பெறாத எத்தனையோ ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் வேறு நூல்களில் இடம்பெற்றுள்ளன. எனவே ஆதாரப்பூர்வமான நபிமொழி தொகுப்புகள் என்று சொல்லப் படும் நூல்களில் இருந்தால் மட்டும் தான் அந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது என்று அறிஞர்களும் கூறவில்லை. மேலும் இமாம் இப்னு ஹுஸைமா அவர்கள் தமது ஸஹீஹ் (ஸஹீஹ் இப்னு ஹுஸைமா என்று கூறப்படும்) நூலில் அம்ர் பின் ஷுஐப். தம் தந்தை, அவருடைய பாட்டனார் வழியாக அறிவித்த செய்திகளைப் பல இடங்களில் பதிவு செய்துள்ளார்கள். மேலும் இமாம் புகாரி அல்கிராஅத்து கல்ஃபல் இமாம் (இமாமுக்குப் பின்னால் ஓதுதல்) என்ற நூலில் இவரின் செய்தியை ஆதராமாகப் பதிவு செய்துள்ளார்கள்.

அம்ர் பின் ஷுஐப் அவர்களின் செய்திகள், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், தாரிமி ஆகிய நூல்களில் மட்டும் சுமார் 499 இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

4. ஷுஐப் அவர்கள் தம் பாட்டனார் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை. அவர் அறிவிப்பதெல்லாம் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களின் ஏட்டிலிருந்து தான் எனவே இவரின் செய்திகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

பதில் : முதலாவது விமர்சனத்திலேயே ஷுஐப் அவர்கள் தம் பாட்டனார் அப்துல்லாஹ் பின் அமர் (ரலி) அவர்களிடம் செவியுற்றுள்ளார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளோம். எனவே செவியுறவில்லை என்ற விமர்சனம் சரியில்லை. மேலும் அவரிடமிருந்த ஏட்டிலிருந்து தான் அவர் அறிவிக்கிறார் என்ற விமர்சனத்திற்குரிய பதிலைப் பார்ப்போம்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபிமொழிகளை எழுதிக் கொண்டவரில் மிக முக்கியமானவர்.

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான நபிமொழிகளை அறிவிக்கவில்லை. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் இருந்த (அதிகமான) நபிமொழிகளைத் தவிர. ஏனெனில், அவர்கள் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துக் கொள்வேனே தவிர) எழுதி வைத்துக் கொண்டதில்லை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),நூல் :புகாரி 113

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் ஹதீஸ்களை எழுதி வைத்திருந்தார்கள் என்பதற்கு இது தெளிவான சான்றாகும்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சுமார் 28 வருடங்கள் ஷுஐப் அவர்கள் இருந்துள்ளதால் அவர்களின் ஏட்டிலிருந்தும் அறிவிக்கலாம். தவறேதும் இல்லை.

ஏட்டிலிருந்து அறிவிப்பது சரியல்ல என்று சிலர் விமர்சனம் செய்துள்ளார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபிமொழிகளை ஏட்டில் எழுதி வைத்திருந்தார்கள் என்பது நிரூபணமானால் அவர்களின் ஏட்டிலிருந்து நபி மொழிகளை ஒருவர் அறிவிப்பது செவியேற்று அறிவிப்பதை விட வலிமை வாய்ந்தது தான். ஏனெனில் நினைவில் வைப்பதை விட எழுத்தில் உள்ளதில் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

எனவே ஷுஐப் அவர்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களின் ஏட்டிலிருந்து அறிவித்தார்கள் என்று சொன்னால் அந்தச் செய்தி வலிமை பெறுமே தவிர பலவீனமடையாது.

எனவே ஷுஐப் அவர்கள் தம் பாட்டனார் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் நேரடியாக நபிமொழிகளைச் செவியுற்றுள்ளார் என்பதற்குச் சான்றுகள் இருப்பதாலும் அவர்கள் ஏட்டிலிருந்து அறிவித்தாலும் அது வலிமையானது தான் என்பதாலும் பெருநாள் தொழுகைளின் கூடுதல் தக்பீர் தொடர்பாக வந்துள்ள 7+5 தக்பீர்கள் தொடர்பான நபிமொழி ஆதாரப்பூர்வமானதே!


ஆன்லைன்பி.ஜே.காம்