புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


mardi 31 mai 2011

நபிமார்கள் வரலாறு 3 (நபிமார்கள் உணவு உட்கொண்டனர்)

நபிமார்கள் மனிதர்கள் தாம் என்பதற்கான ஆதாரங்களை நாம் பார்த்து வருகிறோம் அந்தத் தொடரில் நபிமார்களின் மனித குணங்கள் தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து பார்ப்போம்.

நபிமார்கள் உணவு உட்கொண்டனர்.

எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவன் தனது உணவுத் தேவையை முழுபைப் படுத்துவது கட்டாயமாக இருக்கிறது. உணவு இல்லையேல் உயிர் வாழ முடியாது என்பதுதான் உண்மையும் கூட.நபிமார்களாக இருந்தாலும் அவர்களும் உணவு உட்கொண்டால் தான் உயிருடன் இருக்க முடியும்.

இன்றைக்கு நமக்கு மத்தியில் அவ்லியாக்கள், சாமியார்கள், தெய்வ சக்தி படைத்தவர்கள் என்றெல்லாம் உளரக் கூடியவர்கள் கூட சாப்பாட்டு விஷயத்தில் மாத்திரம் வாய் மூடி அமைதியாக இருந்து விடுவதைப் பார்க்கிறோம் ஏன் எனில் எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் மக்களை ஏமாற்றுவதற்கு வேண்டுமானால் தங்களை கடவுளின் சக்தி படைத்தவர்களாக சித்தரிக்க முடியுமே ஒழிய நிஜ வாழ்க்கையில் நிரூபிக்க முடியாது என்பதற்கு உணவு இன்றி வாழ முடியாது என்ற நிலையே போதுமான சான்றாகும்.

samedi 28 mai 2011

இஸ்லாமியப் பார்வையில் தற்கொலை


இஸ்லாமியப் பார்வையில் தற்கொலை
வீடியோவை பார்க்க
புகைப்படத்தை சொடுக்கவும்.
ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து மாய்த்துக்கொள்வது தற்கொலை எனப்படும். உலகத்தில் சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும், புகழோடும் வாழும் மனிதர்கள் அல்லது துன்பமும் இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என புரிந்து கொண்டு நடப்பவர்கள் யாரும் தற்கொலை செய்வதில்லை..

யார் ஒருவன் துன்பத்தின் உச்சத்தில் இனி வாழ்வதற்கு வழியே இல்லை என நினைக்கிறானோ அவனே இவ்வழியை தேடிக் கொள்கிறான். எனவே இவ்வழி சரிதானா? இதற்க்கு இஸ்லலாத்தில் என்ன தீர்வு? என்பதைப் பற்றியும் இது போல் எண்ணங்கள் வந்தால் அதைக் களைய வேண்டிய வழிகள் என்னென்ன என்பதையும் காண்போம்.

தற்கொலை செய்யத் தூண்டும் காரணிகள்

ஒரு மனிதன் தற்கொலை செய்வதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் உந்துதலாகக் கருதப்படுகின்றன.

நோய், நொடி, முதுமை, குடும்பத்தாரின் அலட்சியம், தனிமைப்படுதல்,  பயம்,குழப்பம், பாதுகாப்பற்ற சூழல்,  மனஅழுத்தம், , மனக்கவலை, குற்றவுணர்வு,  இயலாமை,  வெட்கம், கடுமையான உடல்வலி, பொருளாதாரச் சிக்கல்கள், நம்பிக்கையிழத்தல் ஆழ்ந்த துக்கம், வரதட்சனை கொடுமை, காதல்தோல்வி, கள்ளக்காதல், கடன்தொல்லை, பயம்,  உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள் பசி, பட்டினி, பஞ்சம்,  , கடவுளுக்கு பலி கொடுப்பது, விவாகரத்து, பிரிவுகள் மற்றும் உறவு முறிதல் இன்னும் பல...

lundi 23 mai 2011

நபிமார்கள் வரலாறு 2 (நபிமார்களின் நியமனமும் & மனிதத்தன்மையும்)


நபித்துவம் இறைவனின் நியமனம்

நபித்துவம் என்பது இறைவனின் பாக்கியமாகும்.மற்ற மதங்களின் கருத்துக்களைப் போல் இஸ்லாமிய மார்கத்தில் யாரும் பக்தியால் நபியாக மாற முடியாது.

முனிவர்களைப் போல் காடுகளிலும் மலைகளிலும் தங்கியிருப்பதால் ஒன்றும் அவர்கள் இறைவனின் நபியாக அங்கீகரிக்கப் படமாட்டார்கள்.அது போல் வயதின் அடிப்படையில் கல்வியின் அடிப்படையில் குடும்ப பாரம்பரியத்தின் அடிப்படையில் என்று எந்த அடிப்படையும் இதற்கு இல்லை.நபித்துவத்திற்கு இருக்கும் ஒரே அந்தஸ்து இறைவன் யாருக்கு விரும்புவானோ அவர்களுக்கு அந்தத் தகுதியை அந்தஸ்தை வழங்குவதுதான்.அந்த அந்தஸ்தைப் பெருபவர் சிறுவராகவும் இருக்களாம் பெரியவராகவும் இருக்களாம் வயோதிகராககவும் இருக்களாம்.இறைவனின் நாட்டம் தான் முக்கியம்.

இதை இறைவன் தனது திருமறையில் தெளிவாக அறிவித்துத் தருகிறான்.

நபியாவதற்கு வயது வரம்பு இல்லை

யஹ்யா ஈஸா (அலை)ஆகியவர்களை அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போதே நபியாக நியமிக்கிறான்.

யஹ்யாவே! இவ்வேதத்தைப் பலமாகப் பிடித்துக் கொள்வீராக! (என்று கூறினோம்) சிறுவராக இருக்கும் போதே அவருக்கு அதிகாரத்தை அளித்தோம்(19:12)

வேதம் வழங்கப்படுவதும் ஒருவர் நபியாக ஆக்கப்படுவதும் நாற்பது வயதில் தான் என்று கூறி நாற்பதில் ஒரு தனி முக்கியத்துவம் இருப்பது போல் சிலர் சித்தரிக்கின்றனர்.

samedi 21 mai 2011

இஸ்லாமும் இன்றைய கல்லூரிகளும்


பள்ளி படிப்பை முடித்துவிட்டு மேலதிகமாக விரும்பிய துறையில் படிக்கும் இடமே கல்லூரியாகும்.இன்றைய காலத்தில் கல்லூரி வாழ்கையை அனைவரும் அனுபவிக்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.கல்லூரி என்பது சிந்தனைக்கு மட்டும் சுதந்திரம் தராமல் செயல்களுக்கும் சுதந்திரம் அளிக்கக் கூடிய இடமாக இருக்கிறது.கல்லூரி வாழ்க்கையில் மாணவர்களுக்கு அதிக சுதந்திரம் இருப்பதாலும் உணர்ச்சிகள் நிறைந்த வயதில் அவர்கள் இருப்பதாலும் , அதிக தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை நாம் நடைமுறையில் பார்த்து வருகிறோம்.இப்படிப்பட்ட கல்லூரி வாழ்க்கையில் ஏற்படும் அவலங்களை பற்றியும்,எப்படிப்பட்ட கல்லூரியில் தங்களுடைய பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்பதை பற்றியும் கல்லூரி வாழ்கையை மாணவர்கள் எப்படி அமைத்துக் கொண்டால் மறுமையிலும் இம்மையிலும் வெற்றி பெற முடியும் என்பது பற்றியும் இந்த கட்டுரை அமைந்திருக்கிறது.

கல்லூரிகளை தேர்ந்தடுப்பது

கல்லூரியில் சேருவதற்கு முன் எந்த துறை எடுத்தால் அதிக வேலைவாய்ப்பு இருக்கும் என்பது பற்றியும் அங்குள்ள வசதிகள் பற்றியும் அதிக கவலைப்படும் பெற்றோர்கள் , தங்களுடைய பிள்ளைகளின் மார்க்க அறிவை பற்றி கண்டு கொள்வதே இல்லை.நாம் மேல் கூறிய காரணங்களை பார்க்க வேண்டாம் என்று கூறவில்லை அதோடு சேர்த்து மார்க்க செயல்பாடுகள் உள்ள கல்லூரிகளை பார்த்து தேர்ந்தெடுப்பது சிறந்தது.அதிக பணத்தை கொடுத்து பெரிய கல்லூரியில் சேர்த்து விட்டு தன்னுடைய பிள்ளைக்கு நாம் நல்ல எதிர்காலத்தை அமைத்துவிட்டோம் என்று தப்பு கணக்கு போடுகின்றனர்.எத்தனையோ மாணவர்கள் கல்லூரியில் போதை பழக்கத்திற்கும், மது பழக்கத்திற்கும் ஆளாகியதால் மருத்துவமனையில் புலம்பும் பெற்றோர்களை நாம் பார்க்காமல் இல்லை.இதுமட்டுமல்லாமல் கல்லூரியில் காதல் வாயப்பட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு தன்னுடைய பெற்றோர்கள் தன்னை வளர்த்திருப்பார்கள் என்பதை கூட மறந்து ஓடிப் பொய் திருமணம் செய்துக் கொள்ளும் காட்சி அரங்கேறுகிறது.முக்கியமாக ஆண் பெண் சேர்ந்து படிக்கும் கல்லூரிகளை தவிர்ப்பது சிறந்தது.இதன் மூலம் பல தீய காரியங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.தம்முடைய மானத்தையும் உரிமையையும் இழந்துதான் படிக்க வேண்டும் என்றால் படிப்பை விட மானம் சிறந்தது என்று முடிவெடுக்க வேண்டும்.ஆகவே கல்லூரியின் தரத்தை மட்டும் பார்க்காமல் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை எடையிட்டு மார்க்கத் தொடர்போடு இருக்கும் வகையிலான கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும். 

vendredi 20 mai 2011

இறைவனிடம் கையேந்துங்கள்


வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

நம்மைப் படைத்த ஓர் இறைவனை மட்டும் தான் வணங்க வேண்டும் எனும் போது, அவனிடம் தான் நமது தேவைகளைக் கேட்க வேண்டும். ஏனெனில், பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். எனவே பிரார்த்தனை என்ற இந்த வணக்கத்தை, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் செய்து விடக் கூடாது.

இயல்பாகவே மனிதன் தேவையுள்ளவனாகப் படைக்கப்பட்டிருக்கிறான். எந்தத் தேவையுமற்ற இறைவனிடம் நமது தேவைகளை முறையிடுவது தான் பிரார்த்தனை என்ற அடிப்படையைக் கூட அதிகமான மக்கள் விளங்காமல் உள்ளனர்.

தாங்களாகவே செய்து கொண்ட கற்சிலைகளிடமும், இறந்து விட்ட பெரியார்களின் சமாதிகளிலும் போய் பிரார்த்திக்கின்றனர். இதற்குக் காரணம், இறைவனின் பண்புகளைப் பற்றியும், அவனது வல்லமை பற்றியும் அறியாமல் இருப்பது தான்.

எனவே இறைவனின் பண்புகளை எடுத்துக் காட்டி, அவனிடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும் என்பதை விளக்குவதுடன், இறைவனிடம் நமது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் அதற்கான நிபந்தனைகள் என்ன? அதற்கு இடைத்தரகர்கள் தேவையா? என்பன போன்ற அம்சங்களையும்  கீழ்க்காணும் தலைப்புக்களில் விளக்கியுள்ளோம்.

mardi 17 mai 2011

நபிமார்கள் வரலாறு 1(குர்ஆன் ஹதீஸிலிருந்து மாத்திரம்)


அன்பின் இணையத்தள வாசகர்களே!

நபிமார்கள் வரலாறு என்ற இந்தத் தொடரின் மூலம் நாம் ஆதம் நபி முதல் நமது ஆருயிர் நபி(ஸல்)அவர்கள் வரை அனைவரைப் பற்றிய வரலாற்றையும் திருக்குர்ஆன் ஆதாரப் பூர்வமான நபிமொழி அடிப்படையில் ஆராய இருக்கிறோம்.

இது தவிர்ந்த எந்தக் கட்டுக் கதையும் இதில் இடம் பெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நபிமார்கள் வரலாறு என்று நாம் எழுதும் இந்தத் தொடருக்கு ஆதாரமாக திருமறையையும் நபி மொழியையும் மாத்திரம் நாம் எடுத்துக் கொண்டதற்காண காரணம்.வரலாறுகளைப் பொருத்தவரை அதிலும் குறிப்பாக நபிமார்கள் வரலாறுகளைப் பொருத்தவரை பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முற்பட்ட வரலாறுகளும் உண்டு சில ஆண்டுகளுக்குற்பட்ட வரலாறுகளும் உண்டு.

இவையணைத்தையும் சரியான முறையில் அறிந்து கொள்ள நமக்கு எந்த ஆவணங்களும் கைவசம் இல்லை.

அது போல் பலங்கால கல்வெட்டுகளோ அல்லது வேறு எந்த ஆதாரமோ நம்மிடம் இல்லை அப்படியென்றால் இந்த வரலாறுகளை நாம் எப்படி அறிந்து கொள்வது?

அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபியவர்களும் கூறிய கருத்துக்களை மாத்திரம் வைத்துத் தான் நாம் நபிமார்களுடைய வரலாறுகளை ஆராய முடியும்.

இந்த இரண்டு வழிமுறை தவிர்ந்த எந்த வழி முறையை நாம் கையாண்டாலும் அதில் பெரும்பாலும் பொய்யும் இட்டுக் கட்டும் தான் கலந்திருக்கும் ஆதலால் இந்தத் தொடர் திருமறைக் குர்ஆணையும் ஸஹீஹான நபி மொழிகளையும் மாத்திரம் வைத்தே தொகுக்கப் படுகிறது.

lundi 16 mai 2011

அல்கஹோல் உள்ள ஸ்ப்ரே பயன்படுத்தலாமா?

அல்கஹோல் உள்ள ஸ்ப்ரே பயன்படுத்தலாமா?


  • அல்கஹோல் உள்ள ஸ்ப்ரே பயன்படுத்தலாமா?
  • ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2
  • பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்

மார்க்கத்திற்கு முரணான காரிங்களை செய்பவர்கள் TNTJ உறுப்பினராக இருக்கலாமா?

மார்க்கத்திற்கு முரணான காரிங்களை செய்பவர்கள் TNTJ உறுப்பினராக இருக்கலாமா?


  • தஃவா என்பது மார்க்கதிற்கு முரணான காரிங்களை செய்பவர்களிடம் தான் செய்ய வேண்டும். அப்படி எனில் மார்க்கத்திற்கு முரணான காரிங்களை செய்பவர்களை tntj வில் ஏன் உறுப்பினராக சேர்ப்பதில்லை?
  • ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2
  • பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்

மாற்றுமத்தினரின் திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?

மாற்றுமத்தினரின் திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?


  • நான் இஸ்லாத்தை விளங்கி இஸ்லாத்தில் இணைந்து கொண்டேன் ஆனால் எனது மகன் இஸ்லாத்திற்கு வரவில்லை. அவரது திருணத்தில் நான் கலந்து கொள்ளலாமா?
  • ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2
  • பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்

dimanche 15 mai 2011

முஸ்லிம்கள் இந்த உலகின் வளர்ச்சிக்கு எந்த விதப் பங்கும் ஆற்றாதது ஏன்?


நவீன கண்டுபிடிப்புகளுக்கு முழுவதும் காரணமாக இருந்தவர்கள் மேலைநாட்டவர் என்ற கூற்று முற்றிலும் தவறானதாகும். மேலைநாட்டவர்கள் விஞ்ஞான ஆய்வு செய்திட மதத்தின் பெயரால் தடுக்கப்பட்ட காலத்திலேயே முஸ்லிம்கள் மிகப்பெரும் கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கினார்கள்.

இன்றைய கண்டுபிடிப்புகளுக்குப் பெரும்பாலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்களே முஸ்லிம்கள் தாம். வியக்கத்தக்க சாதனைகள் படைத்த முஸ்லிம் விஞ்ஞானிகளில் சிலர்...

(மேற்கத்திய உலகில் இவர்கள் அறியப்படும் பெயர்கள் அடைப்புக்குறிக்குள்
கொடுக்கப்பட்டுள்ளது)
பெயர் காலக்கட்டம் துறை (கி.பி.)

அல்குவாரிஸ்மி 780-850 கணிதம்-வானவியல் (அல்காரிஸ்ம்)
அல் ராஜி 844-946 மருத்துவம் (ரேஜஸ்)
அல் ஹைதம் 965-1039 கணிதம்-ஒளியியல்(அல்ஹேஜன்)
அல்பிரூணி 973-1048 கணிதம்-தத்துவம்-வரலாறு
இப்னு சீனா 980-1037 மருத்துவம் (அவிசென்னா)
அல் இத்ரீஸி 1100 புவியியல் (டிரேஸஸ்)
இப்னு ருஸ்து 1126-1198 மருத்துவம்-தத்துவம் (அவிர்ரோஸ்)
ஜாபிர் இப்னு 803 பௌதீகம் ஹையான் (ஜிபர்)
அல் தபரி 838 மருத்துவம்
அல் பத்தானி 858 தாவரவியல் (அல்பதக்னியஸ்)
அல் மசூதி 957 புவியியல்
அல் ஜஹ்ராவி 936 அறுவை சிகிச்சை (அல்புகேஸிஸ்)
இப்னு ஹல்தூண் 1332 வரலாறு
இப்னு ஜுஹ்ர் அறுவை சிகிச்சை (அவன்ஜோர்)

மலக்குமார்களுக்கு மறைவான ஞானம் உண்டா?

மலக்குமார்களுக்கு மறைவான ஞானம் உண்டா?


  • மலக்குமார்களுக்கு மறைவான ஞானம் உண்டா?
  • ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2
  • பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்

டி.வி பார்த்தல் ஒழு நீங்குமா?

டி.வி பார்த்தல் ஒழு நீங்குமா?


  • டி.வி பார்த்தல் ஒழு நீங்குமா?
  • ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2
  • பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்

samedi 14 mai 2011

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?


(இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? என்ற கேள்வியைப் பல்வேறு சகோதரர்கள்,ஏகத்துவம் கேள்வி பதில் பகுதிக்கு அனுப்புகின்றனர். அந்தச் சகோதரர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலும் இதுதொடர்பாக மாற்றுக் கருத்துள்ளவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையிலும் onlinepj.com இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.)

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல் என்பது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்திராத, சந்திக்க முடியாத பிரச்சனையாகும். ஏனெனில் இணை கற்பித்துக் கொண்டிருந்தவர்கள் தான் அதிலிருந்து விடுபட்டு முஸ்லிம்களானார்கள். இதனால் முஸ்லிம் சமுதாயத்துக்குள் இணை வைப்போர் என்று ஒரு சாரார் இருக்கவில்லை. இணை வைக்கும் செயலும் இருக்கவில்லை. அதாவது இணை வைக்காமல் இருந்தால் தான் முஸ்லிம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்து நிலைமை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் சில கிராமவாசிகள் நம்ப வேண்டியவைகளை நம்பாமல் முஸ்லிம்கள் பட்டியலில் இருந்தாலும் அவர்கள் தொழுகைக்குத் தலைமை தாங்கும் பிரச்சனை எழவில்லை. எனவே நபிகள் நாயகம் காலத்தில் இந்தக் கேள்வியே எழவில்லை.

ஆனால் இஸ்லாத்தை விளங்கிப் பின்பற்றாமல் பரம்பரை அடிப்படையில் முஸ்லிம்கள் உருவான பிறகு அடிப்படைக் கொள்கை தெரியாத ஒரு சமுதாயம் பிற்காலத்தில் முஸ்லிம்களுக்குள் கலந்தது. அவர்களிடம் இணை வைப்பும் நுழைந்தது.

எனவே இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்றோ, பின்பற்றக் கூடாது என்றோ நேரடியாக ஆதாரம் இருக்க முடியாது.

2011 தமிழக தேர்தல் முடிவு – வீடியோ


2011 தமிழக தேர்தல் முடிவு – வீடியோ

நன்றி : TNTJ.NET

தொழுகையில் நாமாக துஆ கேட்கலாமா?

தொழுகையில் நாமாக துஆ கேட்கலாமா?
வீடியோவை பார்க்க புகைப்படத்தை
சொடுக்கவும் 

  • ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2
  • தொழுகையில் நாமாக துஆ கேட்கலாமா?
  • பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்

vendredi 13 mai 2011

காது மூக்கு குத்துவது தடையா?

முன்னுரை - தாவா பணி
வீடியோவை பார்க்க புகைப்படத்தை
சொடுக்கவும் 

  • ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2
  • காது மூக்கு குத்துவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளதா?
  • பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்

lundi 9 mai 2011

ஃபிரான்சில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் II - புகைப்படங்கள்


FRTJ IOIM: image 1 0f 4 thumb FRTJ IOIM: image 1 0f 4 thumb FRTJ IOIM: image 1 0f 4 thumb FRTJ IOIM: image 1 0f 4 thumb FRTJ IOIM: image 1 0f 4 thumb FRTJ IOIM: image 1 0f 4 thumb FRTJ IOIM: image 1 0f 4 thumb FRTJ IOIM: image 1 0f 4 thumb

ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் II


மே 8 ஞாயிறு அன்று அல்லாஹ்வின் அருளால் ஃபிரான்சில் இரேண்டாவது முறையாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் சகோதரர் அமீன் அவர்கள் வீட்டில் நல்ல முறையில் நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் ஹகீம் அவர்கள் மிக சிறப்பாக தலைமை தாங்கினார் என்பதும் ஒருங்கிணைப்புத் தலைவராக FRTJ தலைவரான அதீன் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஃபிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் செயலாளர் முஹமது இன்சாஃப் "ஆர்வமூட்டும் வகையில் அழைப்புப் பணி" எனும் தலைப்பில் முன்னுரை ஆற்றினார்.அதன் பிறகு அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் ஆன்லைன் மூலமாக "தாவா பணி" என்ற தலைப்பில் மிக அழகாக முன்னுரை வழங்கினார்.

அதன் பின் ஆன்லைன் மூலமாக கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பமானது.அதில் மார்க்கம் மற்றும் சமுதாய சம்பந்தமான கேள்விகளுக்கு சிறந்த முறையில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதிலளித்தார்கள்.இந்த நிகழ்ச்சி ஆன்லைன்பிஜே இணையத்தளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.மேலும் france ல் freebox என்னும் local tv யில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது .அந்த நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்காக FRTJ.NET இணையத்தளத்தில் இன்ஷா அல்லாஹ் அந்த வீடியோக்களை வெளியிடுவோம்.

உஸாமாவின் மரணமும்,மஹ்தி (அலை) யின் வருகையும்

உஸாமாவின் மரணமும்,மஹ்தி (அலை) யின் வருகையும் பகுதி 1



பிரான்ஸ் கிளையில் நடைபெற்ற ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரான்ஸ் கிளை ஏற்பாடு செய்த ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி கடந்த 08.05.11 ஞாயிறன்று அன்று ஃபிரான்சில் நடைபெற்றது.

இதில் தாயகத்திலிருந்து மாநிலத்தலைவர் பீஜே அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் பல சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இடையே மொரிசியை சேர்ந்த ஒரு சகோதரி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். திருக்குர்ஆனை படித்து தான் இஸ்லாத்தை தான் ஏற்றுக் கொண்டதாக அந்த சகோதரி கூறியது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்.!

இந்த நிகழ்ச்சி நமது இணையளத்தில் நேரடி ஒளிரப்பு செய்யப்பட்டது.


நன்றி : TNTJ.NET

அயோத்தி பிரச்னை: உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை


புதுதில்லி, மே 9- அயோத்தி பிரச்னையில் சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரிப்பதற்கான அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேலும், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு "புதிரானது" என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

"இடத்தை பிரிக்குமாறு மனுதாரர்கள் யாருமே கோரவில்லை. இந்நிலையில், எவரும் கோராத வகையில் புதிய தீர்வினை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியது ஆச்சரியமாகவும் உள்ளது." என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அயோத்தியில் ராம ஜென்ம பூமி அமைந்துள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, நிர்மோகி அகாரா, அகில பாரத இந்து மகா சபா, ஜமாத் உல் அமாஹி ஹிந்த், சன்னி சென்ட்ரல் வஃக் போர்டு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை, நீதிபதிகள் அப்தாப் ஆலம், ஆர்.எம். லோதா ஆகியோர் அடங்கிய குழு முன்னிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. இதில், சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரிப்பதற்கான உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றி : தினமணி

பாபர் மஸ்ஜித் வழக்கு : என்னது மூனா பிரிக்கனுமா?????? அலஹாபாத்தின் டூபாகூர் தீர்ப்பிற்கு இடைக்கால தடை – சுப்ரிம் கோர்ட் அதிரடி


பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று திங்கள் கிழமை காலை விசாரனைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த சுப்ரிம் கோர்ட்டி நீதிபதிகள் ”முதல் கட்டமாக அலஹாபாத் நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பிற்கு இடைக்கால தடை” விதித்துள்ளனர்.

மேலும் அலஹாபத் உயர் நீதிமன்றத்தின் திர்ப்பு முற்றிலும் வழக்கத்திற்கு மாறானதாகவும் அதாவது வழக்கமாக தீர்ப்பளிக்கும் நீதிக்கு எதிரானதாகவும் மிகவும் ஆச்சிரிமானதாகவும் (Strange and surprising) உள்ளது என கடுமையாக விமர்ச்சித்துள்ளனர்.

இவ்வாறு பிரித்து தீர்ப்ளித்துள்ளது, இதே போன்று பல தொடர்ச்சியான வழக்குகள் வர வாய்ப்பாக அமைந்து விட்டது எனவும் சுப்ரிம் கோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதாவது இந்த தீர்ப்பை பார்த்த பிறகு

இந்த இடத்த தொண்டி பாருங்க அதுல என்னோட முப்பாட்டனோட முப்பாட்டன் உடைய கை தடி கிடக்கும் அதுனால இது என்னாடோ இடம்,

இந்த இடத்துல தான் நான் பிறந்தேன் அதுனால இது என்னோட இடம் ,

ஒரு சாமி பேர சொல்லி எங்க சாமி மைனரு அவருக்கு பதிலான நான் வழக்கு போட்றேன் அந்த சாமி இங்க தான் தூங்கினாரு அதுனால இந்த எடம் என்னோடதுன்னு

ஆளுக்குள் ஆள் வழக்கு பொட்ருவாங்களே ! இப்படி வழக்கு போட்டா அப்புறம் கோர்ட் என்ன கதியாவது ன்னு சுப்ரிம் கோர்ட் சொல்லுது…

நன்றி : TNTJ.NET

vendredi 6 mai 2011

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்


மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நடக்க முடியாததை ஒருவன் எதிர்பார்க்கும் போது 'பகல் கனவு காணாதே' என்று கூறுவதும், சட்சிகள் இல்லாமல் நடைபெற்ற காரியத்தை பேசும் போது 'ஊமை கண்ட கனவு போல்' என்று உவமை கூறப்படுவதும் கனவுகளின் பாதிப்பை உணர்த்தப் போதுமானதாகும்.

கனவு காணாதவன் மனிதனாக இருக்க முடியாது என்ற அளவுக்கு அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு அம்சமாக மாறிவிட்ட கனவு பற்றி இஸ்லாம் கூறுவதை விளக்குவதே இந்நூலின் நோக்கமாகும்.

கனவு பற்றி ஒருவன் எத்தகைய நம்பிக்கை வைத்திருக்கிறான் என்பதன் அடிப்படையில் அவனது வாழ்க்கையிலும் மாறுதல் ஏற்படுவதால் இதுபற்றி விளக்கும் அவசியம் ஏற்படுகின்றது.
  • கனவு கண்டு விட்டு தன் மனைவியை சந்தேகித்தவர்கள்
  • அவளை விவாக விலக்கு செய்தவர்கள்
  • குழந்தைகளை நரபலியிட்டவர்கள்
  • கனவில் கண்டது போலவே தங்கள் பொருட்களைச் செலவிட்டவர்கள்
  • பணக்காரனாக ஆவது போல் கண்டு அதை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் எனப் பட்டியல் நீள்கிறது.
  • உயிரினுமினிய ஈமானையும் பறிகொடுக்க
  • கனவுகளை காரணம் காட்டுவோர் ஏராளம்!

எனவே கனவுகள் பற்றி முழுமையாக முஸ்லிம்கள் விளங்க வேண்டும் .இஸ்லாத்திற்கு எதிரான பல கொள்கைகளை இஸ்லாம் என்று தமிழக முஸ்லிம்களின் பலர் எண்ணுகின்றனர். இவ்வாறு அவர்கள் எண்ணுவதற்கு கனவுகள் பற்றிய அறியாமை முக்கிய காரணமாகத் திகழ்கின்றது. அவர்களில் பலர் ஏமாற்றப்படுவதற்கும் கனவுகள் பற்றிய அவர்களின் அறியாமையே காரணமாக அமைந்துள்ளது.

தர்ஹாக்களுக்குச் சென்று வழிபாடு செய்வதற்கும், அங்கே காணிக்கைகள் செலுத்துவதற்கும் பெரும்பாலும் கனவு தான் காரணமாக உள்ளது. 'இந்த மகான் எனது கனவில் தோன்றி இந்த தர்ஹாவுக்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்' என்பது தான் இவர்கள் எடுத்துக் காட்டும் ஒரே ஆதாரமாகத் திகழ்கிறது.

jeudi 5 mai 2011

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா? – நோட்டிஸ்!


Download PDF     Read PDF


நோட்டீஸ் வெளியீடு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

யார் இவர் ? – நோட்டிஸ்


Download PDF     Read PDF


நோட்டீஸ் வெளியீடு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

mercredi 4 mai 2011

பிரான்ஸில் ஏகத்துவ எழுச்சி – அல்ஹம்துலில்லாஹ்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரான்ஸில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கிளை துவங்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே!

பிரான்ஸ் நாட்டில் பல்வேறு விதமான வகைகளில் நமது ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்கள் அழைப்புப் பணி செய்து வருகின்றனர். நமது ஊரில் நடைமுறையில் உள்ள லோக்கல் சேனல்களைப் போல பிரான்சில் நடைமுறையில் உள்ள ஒரு லோக்கல் சேனல் வழியாக சகோதரர் பீஜே அவர்களது உரைகளை ஒளிபரப்ப அதைப் பார்த்த ஒரு கிறிஸ்தவ சகோதரி நமது தலைமையகத்திற்கு பிரான்ஸிலிருந்து ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அவர் தனது கடிதத்தில், நான் உங்களது உரைகளைக் கேட்டதிலிருந்து உண்மையான இறைவனைப் பற்றி அறிந்து கொண்டேன் எனவும், உங்கள் பேச்சுக்கள் வாயிலாக இறைவன் எனக்கு நல்ல மனத் தெளிவை ஏற்படுத்தித் தந்தான் எனவும் குறிப்பிடிருந்தார்.

மேலும், தான் பாண்டிச்சேரி வந்திருந்த போது அங்கு அலைந்து திரிந்து ஒரு குர்ஆன் தமிழாக்கத்தை வாங்கினேன்; ஆனால் அதிலுள்ளவை எனக்குப் புரியவில்லை என்றும், தங்களுடைய விளக்கங்கள் எனக்கு மிக இலகுவாக எளிமையாகப் புரிகின்றது என்றும், எனக்கு இறைவனைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள நீங்கள் உதவ வேண்டும் என்று நமது மாநிலத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கையும் வைத்திருந்தார்.

அவரது கடிதத்தை நமது பிரான்ஸ் நிர்வாகிகளுக்கு அனுப்பி அந்தப் பெண்மணியை நமது நிர்வாகிகள் தொடர்பு கொண்டு நேரில் சந்தித்தனர்.

mardi 3 mai 2011

விவாதத்திலிருந்து கிறிஸ்தவர்கள் தப்பி ஓட்டம்

ஜெர்ரி தாமஸ் என்பவர் பல இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களை விவாதத்திற்கு அழைத்ததாகவும், யாரும் தன்னோடு விவாதம் செய்ய முன்வரவில்லை என்றும், குறிப்பாக ஜாகிர் நாயக் அவர்களை தான் விவாதம் செய்ய அழைத்து அவர் தன்னோடு விவாதம் செய்யாமல் ஓட்டமெடுத்து விட்டார் என்றும் அதற்கான ஆதாரங்களோடு தான் ஜாகிர் நாயக்கிற்கு விவாத அழைப்பு விடுத்து அவர் விவாதத்திற்கு வராமல் பின்வாங்கி ஓடிய செய்தியையும் கடித ஆதாரங்களுடன் தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த இடத்தில் ஜெர்ரி தாமஸ் என்ற இவர் விவாதம் செய்கின்றேன் என்ற பெயரில் கூத்தடிக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். அதாவது, ஜெர்ரி தாமஸ் என்பவரது பாஷையில் விவாதம் செய்வதென்பது என்னவென்றால், ஒரு தலைப்பை எடுத்துக் கொள்ள வேண்டுமாம்; அந்த குறிப்பிட்ட தலைப்பில் இவர் ஒரு மணி நேரம் உரையாற்றுவாராம்; நாம் ஒரு மணி நேரம் உரையாற்ற வேண்டுமாம்! இந்த இரண்டு மணி நேரத்தோடு விவாதம் முடிவடைந்து விடுமாம். என்னே அற்புதமான விவாத வழிமுறை(?). இந்த பாணியில் விவாதம் செய்ய இவர் அழைத்த விவாத அழைப்பையும் கூட ஜாகிர் நாயக் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நமக்கு இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஏனெனில் குர் ஆன ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களால் மட்டுமே இவர்களுடன் விவாதம் செய்ய முடியும். கொள்கை சரி இல்லாமல் எவ்வளவு திறமை உள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் விவாதம் செய்ய மறுத்து ஓட்டம் பிடிக்கத் தான் செய்வார்கள்.

ஜெர்ரி தாமஸ் என்பவர் முஸ்லிம் இமாம்கள் அறிஞர்கள் என்ற பெயர் பெற்றவர்கள் உளறியவைகளை திரட்டி வைத்துக் கொண்டு அது தான் இஸ்லாத்தின் கருத்து என்று சித்தரிப்பது தான் இவரது வழி முறை. ஜாகிர் நாயக்கோ இன்னும் பலரோ இமாம்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை சொல்வதால் இமாம்களின் சில உளறல்களை ஜெர்ரி தாமஸ் போன்றவர்கள் எடுத்து வைக்கும் போது அவர்கள் வாயடைக்கும் நிலை ஏற்படும்.

ஃபிரான்ஸில் ஏகத்துவ எழுச்சி! உணர்வு இதழில் வெளியான செய்தி

70 வயதாகி விண்ணப்பித்தால் ஹஜ் பயணம் உறுதி – ஹஜ் கமிட்டி!

இஸ்லாம் நிறுவியுள்ள 5 தூண்களில் இறுதியானதும், மிக முக்கியமானதுமான ஹஜ் பயணம் செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பது அரிதான விசயமாகத் தான் இருக்கிறது.

ஹஜ் செய்வதற்கு பொருளாதார வசதிகள் இருந்தும் சரியான பொருப்பாளர்கள் இல்லாத காரணத்தினாலும் வயதாகியவர்கள் யாரை துணைக்கு அழைத்துச் செல்வது எந்த நோக்கிலுமே பலரது ஹஜ் பயணங்கள் தள்ளிப்போகின்றன அல்லது ரத்தாகி விடுகின்றன.

இந்த நிலையில் ஹஜ் என்பது மகிழ்ச்சிகரமான விசயமாக இருந்தாலும், பயணம் செய்வதை அதுவும் இந்த முதிய வயதில் பயணம் செய்வதை சுமையாகக் கருதிய 70 வயதிற்கும் மேற்ப்பட்ட ஹஜ் பயணிகளுக்கு ஒரு அறிய செய்தியை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதை மையமாக வைத்து தமிழக அரசு இன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.

70 வயதுக்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள், இந்த ஆண்டு முதல் அவருடன் சக பயணி ஒருவரையும் அழைத்துச் செல்லவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என்றும் , அதன்படி இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, 70 வயது பூர்த்தியாகிய ஒருவர் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் போது, அவரோடு ஒரு சக பயணியுடன் விண்ணப்பித்தால், இந்த ஆண்டு அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் அளிக்கப்படும். ஹஜ் பயணத்துக்காக ஏற்கனவே விண்ணப்பங்களை அளித்துள்ள 70 வயதுக்கும் மேற்பட்ட பயணிகள், அவர் தன்னுடன் பயணியாக யாரை அழைத்துச் செல்ல முடிவெடுத்துள்ளார் என்பதை தெரிவித்தால் மட்டுமே அப்பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் வழங்க இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி 70 வயது பூர்த்தியானவர்கள், இதுவரை விண்ணப்பிக்காமல் இருந்து தற்போது விண்ணப்பிக்க விரும்பினால் , தங்களது விண்ணப்பத்துடன்,அவர் அழைத்துச் செல்ல விரும்பும் சக பயணியின் விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். உறுதி செய்யப்பட்ட இருக்கைகள், பன்னாட்டு கடவுச்சீட்டு ( International Passport) வைத்துள்ள 70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணி மற்றும் மற்றும் அவருக்கு உதவியாகச் செல்லும் பயணி ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்படும்.

ஒருவேளை ஹஜ் பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்தால், எக்காரணத்தை கொண்டும் சக பயணிகள் மட்டும் தனியாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஜ் பயணிகள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இந்த மாதம் 30 ஆம் தேதி கடைசி நாள்.

இதற்கான விண்ணப்பங்கள் www.hajcommittee.com என்ற முகவரியில் கிடைக்கின்றன.இது குறித்த பத்திர்க்கை செய்தி தினமணி

பெண்கள் யாரை துணைக்கு அழைத்துக் செல்லலாம் என்பது குறித்து அறிய இங்கு சொடுக்கவும்

lundi 2 mai 2011

கடவுளின் பெயரால் தன்னையே துன்புறுத்துதல்

மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மனிதர்கள் பல வகைகளிலும் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்கின்றனர்.பக்தியின் பெயரால் மக்கள் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்வதை மதவாதிகள் ஊக்குவிக்கின்றனர். 'மனிதனைத் துன்பத்தில் ஆழ்த்தும் நடவடிக்கைகள் எப்படி அர்த்தமுள்ளவையாக இருக்கும்?' என்று சிந்தனையாளர்கள் நினைக்கின்றனர்.நெருப்பை வளர்த்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அதில் நடந்து செல்லுதல் நாக்கிலும், கன்னங்களிலும் சிறு ஈட்டியைக் குத்திக் கொள்ளுதல் சாட்டையால் தம்மைத் தாமே அடித்துக் காயப்படுத்திக் கொள்ளுதல் குளிரிலும், வெயிலிலும் செருப்பு கூட அணியாமல் கால் நடையாக வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லுதல் வெடவெடக்கும் குளிரில், குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஈரத்துணியுடன் கோவிலைச் சுற்றி வருதல் கரடு முரடான தரைகளில் ஆண்களும், பெண்களும் உருளுதல் தமது தலையில் தேங்காய் உடைத்து காயப்படுத்திக் கொள்ளுதல் படுத்திருக்கும் பெண்கள் மீது பூசாரி நடந்து செல்லுதல் சிறுவர்களை மண்ணுக்குள் உயிருடன் புதைத்து விட்டு வெளியே எடுத்தல் இயற்கையான உணர்வுகளுக்கு எதிராகத் துறவறம் பூணுதல் ஆடைகளையும் துறந்து விட்டு நிர்வாணமாக அலைதல் இன்னும் இது போன்ற நடவடிக்கைகளின் காரணமாகவே மதங்கள் அர்த்தமற்றவை' என்று சிந்தனையாளர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

கருணையே வடிவான கடவுள் மனிதனைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்பவனா?

'மற்றவர்களால் தனக்குத் துன்பங்கள் ஏற்படக் கூடாது என்று கவனமாகச் செயல்படும் மனிதன் தனக்குத் தானே தீங்குகளைமனமுவந்து வரவழைத்துக் கொள்கின்றானே? இந்த அளவுக்கு மனிதனின் சிந்தனயை மதங்கள் மழுங்கடித்து விட்டனவே?' என்று சிந்தனையாளர்களுக்கு ஏற்படும் கோபத்தின் விளைவு தான் மதங்கள் அர்த்தமற்றவை' என்ற விமர்சனம்.இஸ்லாம் மார்க்கம் இது போன்ற எந்த நடவடிக்கைகளையும் ஆதரிக்கவில்லை. ஆதரிக்காதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாகவும் இஸ்லாம் எதிர்க்கின்றது.