புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

lundi 9 mai 2011

ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் II


மே 8 ஞாயிறு அன்று அல்லாஹ்வின் அருளால் ஃபிரான்சில் இரேண்டாவது முறையாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் சகோதரர் அமீன் அவர்கள் வீட்டில் நல்ல முறையில் நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் ஹகீம் அவர்கள் மிக சிறப்பாக தலைமை தாங்கினார் என்பதும் ஒருங்கிணைப்புத் தலைவராக FRTJ தலைவரான அதீன் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியின் ஆரம்பமாக ஃபிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் செயலாளர் முஹமது இன்சாஃப் "ஆர்வமூட்டும் வகையில் அழைப்புப் பணி" எனும் தலைப்பில் முன்னுரை ஆற்றினார்.அதன் பிறகு அனைவரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் ஆன்லைன் மூலமாக "தாவா பணி" என்ற தலைப்பில் மிக அழகாக முன்னுரை வழங்கினார்.

அதன் பின் ஆன்லைன் மூலமாக கேள்வி பதில் நிகழ்ச்சி ஆரம்பமானது.அதில் மார்க்கம் மற்றும் சமுதாய சம்பந்தமான கேள்விகளுக்கு சிறந்த முறையில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதிலளித்தார்கள்.இந்த நிகழ்ச்சி ஆன்லைன்பிஜே இணையத்தளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.மேலும் france ல் freebox என்னும் local tv யில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது .அந்த நிகழ்ச்சியை பார்க்காதவர்களுக்காக FRTJ.NET இணையத்தளத்தில் இன்ஷா அல்லாஹ் அந்த வீடியோக்களை வெளியிடுவோம்.


நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம் ஒரு பெண்மணி இஸ்லாத்தை தழுவியதுதான்.கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு நடுவே சபின் என்ற பெண்மணி ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.இவர் மரீசியஸ் நாட்டில் பிறந்து ஃபிரான்சில் வாழ்ந்து வருகிறார்.இவர் தன்னுடைய 13  வயதிலேயே ஹிந்து மதத்தில் ஈடுபாடு இழந்து இஸ்லாத்தின் மேல் சிறிது சிறிதாக பற்று கொண்டு பல பேரிடம் இஸ்லாத்தை பற்றி கேட்டும் தனது சக ஊழியர் மற்றும் நமது FRTJ பொருளாளரான ஃபஜ்ருள் ஹக் அவர்களிடம் திருக்குர்ஆன் மொழியாக்கம் கேட்டுள்ளார்.இவருக்கு அரபு -பிரெஞ்சு மொழி திருக்குர்ஆனை பரிசளித்து ஆர்வமூட்டி தாவா பணியும் ஃபஜ்ருள் ஹக் அவர்கள் செய்துள்ளார்கள்.பின்னர் அவர் இஸ்லாத்தை ஏற்பதாக முடிவு செய்தவுடன்,இந்த எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் அவர் இஸ்லாத்தை ஏற்றால் சிறப்பாக இருக்கும் என்று கருதிய FRTJ நிர்வாகிகள் அவரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.கேள்வி பதில் நிகழ்ச்சியின் நடுவில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மொழிய அதை தொடர்ந்து "அஷ்ஹது அன்லா இலாஹா இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மாதர் ரசூலுல்லாஹ்" என்று மொழிந்து FRTJ நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை தழுவினார்.அல்ஹம்துலில்லாஹ்!

இதன் பின் சில கேள்விகளுக்கு பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.நிகழ்ச்சியில் முடிவாக FRTJ துணை செயலாளர் ருக்னுதீன் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் விரைவில் FRTJ.NET  இணையத்தளத்தில் எதிர்பாருங்கள் இன்ஷா அல்லாஹ்.