புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


dimanche 23 juin 2013

“இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்”


இன்ஷா அல்லாஹ் வரும் 30/06/2013 அன்று ஞாயற்றுக் கிழமை FRTJ (பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத்) சார்பில் ONLINE VIDEO CONFERENCE மூலம் “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும். நமது மார்க்க சந்தேகங்களுக்கு பதில் அளிப்பவர் சகோதரர் அப்துன் நாசர்  அவர்கள் . அதுசமயம் ஆண்கள், பெண்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்..
  • நாள்: 30/06/2013
  • நேரம்: பிற்ப்பகல் 3 .00 மணி
நிகழ்ச்சி நடைபெறும் இடம் :

Tel : 06 62 26 72 73
       06 77 77 49 28
Accés : Gare de Sarcelles
Bus 31,  Arrêt : “JacquesDecour” (saufQuartier la muette)
(Près de Cora)

mercredi 12 juin 2013

பொதுக்குழுFRTJ பிரான்ஸ் மண்டல

ஏக இறைவனின் திருப்பெயரால்...,


அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்)
  FRTJ பிரான்ஸ் மண்டலதவ்ஹீத் ஜமாஅத்தின்  சார்பாக 09-06-2013 அன்று மாலை 4 மணி அளவில்  பொதுக்குழு கூட்டமும்,  மற்றும் FRTJ யின் புதிய நிர்வாகிகள்  தேர்ந்தெடுப்பும் நடைபெற்றது.    

 நிகழ்ச்சிக்கு தலையேற்று சகோதரர் அப்துல் ஹக்கீம் அவர்கள்  பேசினார்கள். அன்றைய  நிகழ்ச்சியின்  ஆரம்பமாக சகோதரர்  M . I . சுலைமான் அவர்கள் (TNTJ மாநில பொருளாளர் ) தலைமையிலிருந்து  " நிர்வாகிகளின் பொறுப்புகள் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.

 அதனைத் தொடர்ந்து சகோதரர்   யூசுப் அவர்கள் (TNTJ மாநில துணை செயலாளர்)   தேவையான ஆலோசனைகளை வழங்கினார். பிறகு FRTJ நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையிலும் FRTJ யின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு அறிவிக்கப் பட்டனர்.
 
 இறுதியில் சகோதரர்  P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் எழுதிய "இஸ்லாமிய கொள்கை விளக்கம்" என்ற நூல் பிரெஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்தது வெளியீடு செய்யப்பட்டது.
 நிகழ்ச்சியின் இறுதியாக   சகோதரர் முகம்மது  ருக்னுதீன்   நன்றி உரை  வழங்கினார்கள் .

  FRTJ யின் புதிய நிர்வாகிகள்  விவரங்கள் பின்வருமாறு :
     மண்டல  
தலைவர்                        : முகம்மது  ருக்னுதீன்   0033662267273
                           துணை தலைவர்       :  அமீன் ஆசிக்   0033673635269



    மண்டல   செயலாளர்                   :  சம்சுதீன்  003366563023
                            துணை செயலாளர் : ஹசன் அப்துல் ரசாக் 0677774928
                           
பொருளாளர்               : அப்துல் ஹக்கீம்  0033650856575