புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

vendredi 5 août 2011

வீட்டில் தொழுகும் பெண்களுக்கு ஜும்மா 4 ரக்அத்களா அல்லது 2 ரக்அத்களா?

கேள்வி : Assalamalaikum . veetil thaniyaga jumma thozhugum pengal farl 4 rakat thola venduma illa 2 rakath thola venduma. ugent pls

தமிழாக்கம் : அஸ்ஸலாமு அலைக்கும்.வீட்டில் தனியாக ஜும்மா தொழுகும் பெண்கள் பர்ள் 4 ரக்அத் தொழ வேண்டுமா அல்லது 4 ரக்அத் தொழ வேண்டுமா?
- Zakia,India

பதில் : ஜும்மா தொழுகை என்பது ஆண்கள் கட்டாயம் தொழ வேண்டிய ஒரு தொழுகையாகும். 
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.(அல் குர்ஆன் 62:9)
பெண்களுக்கு ஜும்மா தொழுகை கட்டாயம் இல்லை. 
'அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி), நூல்: அபூதாவூத் 901
இதே நேரம் யாராவது விரும்பினால் ஆண்களைப் போல் பள்ளிக்கு சென்று தொழுகையில் கலந்து கொள்ளவும் முடியும். என்று இஸ்லாம் அனுமதிக்கிறது.

வீட்டில் தொழும் பெண்களாக இருந்தால் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்கு மார்க்கத்தில் எந்த வழிகாட்டலும் இல்லை. 

வீட்டில் தொழுபவர்கள் 4 ரக்அத்கள் லுஹர் தொழுகைதான் தொழவேண்டும்.
யார் ஜும்மாவிற்கு செல்லவில்லையோ அவர்களுக்கு லுஹர்தான் கடமை என்பதால் லுஹர் தொழுகை 4 ரக்அத்கள் தொழ வேண்டும்.

அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

பதில் : ரஸ்மின் MISc