புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


samedi 30 juillet 2011

கற்பிணிப் பெண்கள் நோன்பு பிடிப்பது பற்றிய விளக்கம்

கேள்வி : கற்பிணிப் பெண்கள் நோன்பு பிடிப்பது பற்றி சரியான விளக்கம் தருக.
- Haatim deen (srilanka)

பதில் கற்பிணிப் பெண்கள் ரமழான் காலத்தில் நோன்பு பிடிக்காமல் இருப்பதற்கு அல்லாஹ் சழுகை அளித்துள்ளான்.

கற்பிணியாக இருக்கும் பெண்கள் நோன்பு நோற்கும் போது அவர்களுக்கு உடலியல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாலும், குழந்தைக்குறிய ஊட்டச் சத்துக்கள் குறைபாடடைவதற்கும் காரணமாக அமையும் என்பதினால் கற்பிணிப் பெண்கள் ரமழான் காலத்தில் நோன்பை விடுவதற்கு அல்லாஹ் அனுமதி கொடுத்துள்ளான்.
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள்.அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)நூல்: நஸயீ 2276
ஒருவருக்கு ஒரு செயலில் இருந்து, விதிவிலக்குக் கொடுக்கப்பட்டு சழுகையாக அது ஆக்கப்பட்டால் அந்த சழுகையைத் தான் அவர் பயண்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதிலும் கற்பிணிகளில் சிலர் நோன்பு காலத்தில் நோன்பு நோற்பதற்கு ஆசைப்பட்டு அல்லது மற்ற காலங்களில் அதனை மீட்டிக் கொள்ள விரும்பாமல் ரமழானிலேயே நோன்பு பிடிக்கிறார்கள் இது அவர்களை அவர்களே கஷ்டப்படுத்துவதற்கு சமனானதாகும்.

இப்படி செய்வதை பெண்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் குழந்தையைப் பெற்றெடுத்த பின் அவர்கள் அந்த நோன்பை கழாச் செய்து கொள்ள முடியும்.

கற்பிணிகள் நோன்பை கழாச் செய்ய தேவையில்லையா?

(இலங்கையில்) சிலர் கற்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் நோன்பை கழாச் செய்யத் தேவையில்லை என்று வாதிட்டு வருகிறார்கள்.

இவர்களின் இந்த வாதம் தவறானதாகும்.

கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் நோற்றாக வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸைச் சிந்தித்தால் விளங்கிக் கொள்ளலாம்.
'பயணிகள் பாதியாகத் தொழுவதற்கு அல்லாஹ் சலுகையளித்துள்ளான். பயணிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பில் சலுகையளித்துள்ளான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி)நூல்கள்: அபூதாவூத் 2056, இப்னுமாஜா 1657
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பில் வழங்கப்பட்டுள்ள சலுகையானது பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையைப் போன்றது தான் என்று இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.

பயணிகளுக்கு நோன்பே கடமையில்லை என்று யாரும் கூற மாட்டார்கள். ஏனெனில் பயணிகளும், நோயாளிகளும் நோன்பை வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

கர்ப்பிணிகளையும், பாலூட்டும் தாய்மார்களையும் பயணிகளுடன் இணைத்து இந்த ஹதீஸில் கூறப்பட்டிருப்பதால் அவர்களும் நோன்பை வேறு நாட்களில் நோற்றாக வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
எவ்வளவு நாட்களுக்குள் கழாச் செய்ய வேண்டும்.

இதற்கு மார்க்கத்தில் எந்தக் காலக் கெடுவும் விதிக்கப்படவில்லை. வேறு நாட்களில் நோற்று விட வேண்டும் என்று மட்டுமே திருக்குர்ஆன் கூறுகிறது.
ரமளான் மாதத்தில் சில நோன்புகள் தவறி விடும். அதை ஷஅபான் மாதத்தில் தான் என்னால் நோற்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளே இதற்குக் காரணம் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.நூல்: புகாரி 1950
ஷஅபான் மாதம் என்பது ரமளானுக்கு முந்தைய மாதமாகும். ஒரு ரமளானில் விடுபட்ட நோன்பை மறு ரமளானுக்கு முந்தைய மாதம் வரை தாமதப்படுத்தி ஆயிஷா (ரலி) களாச் செய்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இது நடந்துள்ளதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

விடுபட்ட நோன்பைக் களாச் செய்வதற்கு குறிப்பிட்ட காலக் கெடு எதுவும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

ஆயினும் மரணத்தை எதிர் நோக்கியவனாக மனிதன் இருக்கிறான். எந்த நேரத்திலும் மரணம் அவனை அடைந்து விடலாம். நோன்பை விட்டவர்களாக நாம் மரணித்தால் என்னவாகும் என்பதற்கு அஞ்சி, எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றி விடுவது சிறந்ததாகும்.

அல்லாஹ்வே அறிந்தவன்.

பதில் : ரஸ்மின் MISc




மத வன்முறை தடுப்பு சட்டத்திற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

மத வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உள்ள ”மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு” சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கின்றது.

கலவரத்தை தடுக்க மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை ஒரு மாநில முதல்வர் எதிர்ப்பது விசித்திரமாக உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் சொல்லும் காரணங்கள் ஏற்கதக்க வகையில் இல்லை.

இந்த சட்டம் ஏதோ அவசரகோலத்தில் உறுவாக்கப்பட்ட சட்டம் அல்ல, இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடந்த கலவரங்களில் சிறுபாண்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், குற்றவாளிகள் சரியான முறையில் தண்டிக்க படவில்லை, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படவில்லை என அரசால் நியமிக்கப்பட்ட பல கமிஷன்கள் கூறியுள்ளன.

கலவரங்களை விசாரிக்க நீதிபதிகளின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் உறுவக்காப்பட்டது தான் இந்த ‘மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்டம்”.

மேலும் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் அளித்த தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலும், கடந்த தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையிலும், பல்வேறு சட்ட வல்லுனர்களின் ஆலோசனைபடி தான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என தமிழக முதல்வர் கூறியிருப்பது ஏற்கதக்க வகையில் இல்லை.

மனித உயிர்களைவிட மாநில உரிமை பெரிதல்ல என்பதை முதல்வர் உணர்ந்துகொள்ள வேண்டும், எனவே தமிழக முதல்வர் இந்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கேட்டுகொள்கின்றது,

இந்தியாவில் கலவரங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளை தண்டிக்கவும், கலவரத்தில் பாதிக்கபட்டோருக்கு நிவாரணம் வழங்கவும், சட்டம் இயற்றிய மத்திய அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பாராட்டுகின்றது

இப்படிக்கு

P. ஜெய்னுல் ஆபிதீன்
மாநில தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

- TNTJ.NET

லாண்ட்ரியில் துவைத்த துணியை உடுத்தி தொழலாமா?

கேள்வி : assalamu allikkum i am working in abudhabi.my all cloths washing in laundry . in all labours cloths put it in same mechine ithan mulam washing mechinel wasing saitha dress ghalai namazuukku use pannum poldu ennudiia prayer (namaz) kuduma kudatha villakkam tharavum.

ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்வியின் தமிழாக்கம்நான் அபுதாபியில் வேலை பார்த்து வருகிறேன். என்னுடைய துணிகளை லாண்டரி(துணி சலவை கடை)யில் கொடுத்து தான் சுத்தம் செய்யப்படுகிறது. வேலை பார்பவர்களின் அனைத்து துணிகளும் அதே machine மூலம்தான் துவைக்கப் படுகிறது. இதன் மூலம் துவைத்த துணியை நான் உடுத்திக் கொண்டு தொழுதால் என் தொழுகை கூடுமா?விளக்கம் தரவும்.
- Abdul razak sharfudeen sharfudeen UAE

பதில்அன்பின் சகோதரருக்கு ! நீங்கள் தாராளமாக அந்த இயந்திரத்தில் போட்டு துவைத்துக் கொள்ளலாம். ஏன் என்றால் washing machine என்பது ஆடைகளை இலேசாகவும், தூய்மையாகவும் துவைத்துக் கொள்வதற்காக பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த இயந்திரமாகும்.

அதில் துவைத்த ஆடைகளை அணிந்து தொழுவதற்கு இஸ்லாம் எந்நேரத்திலும் தடை விதிக்கவில்லை.
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல் குர்ஆன் 7 - 31)
இருப்பதில் சிறந்த, தூய்மையான ஆடையை அணிந்து தொழ வேண்டும் என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.

மற்றவர்களின் ஆடையுடன் உங்கள் ஆடை சேர்த்து துவைக்கப்பட்டாலும் அனைத்து ஆடையும் சுத்தம் செய்யவதற்காகவே போடப்படுகிறது. அனைவரின் ஆடையும் சுத்தமாக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் உங்கள் ஆடையில் நீங்கள் தொழுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

பதில் : ரஸ்மின் MISc

ஓடிப்போகும் பெண்களை அடித்து திருத்த நினைப்பது சரியா?

(குறிப்பாக மாற்று மதத்தவருடன்)ஓடிப்போகும் பெண்கள் அல்லது தவறான நடத்தை உடைய இஸ்லாமிய பெயர் தாங்கி பெண்கள் பிடிபடும்போது அவர்களை அடித்து திருத்த நினைப்பது சரியா? இதற்க்கு என்னதான் தீர்வு?

- Mohamed Rafeek ( India )

பதில் :முதலில் உங்கள் கெள்வி பற்றிய சில முக்கிய தகவல்களை இங்கு தருகிறோம். அதாவது, இன்றைய கால கட்டத்தில் ஓடிப்போகும் பெண்கள் பலரை நாம் காண முடிகிறது. 

இப்படி அவர்கள் ஓடிப்போவதற்கு அவர்கள் மாத்திரம் காரணம் அல்ல.

ஒரு ஆணும், பெண்ணும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னணியாக அவர்களுடைய வளர்புடன் தொடர்புடையவர்கள் தான் பொருப்பாக இருக்கிறார்கள்.

அதாவது பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் விட்ட குறைதான் ஓடிப்போகும் அளவுக்கு அவர்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது.

எனது பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியும்.
என் பேச்சை அவள் தட்டவே மாட்டாள்,
நான் கிழித்த கோட்டை தான்ட மாட்டாள்.

இப்படியெல்லாம் பேசும் பெற்றோர் ஒரு விஷயத்தை மட்டும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். “உங்கள் பிள்ளைகளும் பெண்கள் தான்” என்பதை.

பெண்களை பொருத்தவரை அவர்கள் ஒரு கொடியைப் போன்றவர்கள் எங்காவது படர்ந்து கொள்ள ஒரு இடம் கிடைக்கிறதா என்று எண்ணுபவர்கள். ஒரு இடம் கிடைத்தால் அதுவே அவர்களுக்கு ஆறுதலான விஷயமாக மாறிவிடும்.

அதன் பின் தாய் சொன்னாலும் விளங்காது, தந்தை சொன்னாலும் விளங்காது.
அது மட்டுமன்றி இது போன்ற தகாத ஆண், பெண் உறவு முறைகள் உருவாகுவதற்கு காரணமாக பல செயல்பாட்டை குறிப்பிடலாம். செல்போன் பாவனை, ஆண், பெண் கலப்புப் பள்ளிகள், தகாத உறவு முறைகள் என்று பலதையும் நாம் குறிப்பிடலாம்.

பிள்ளைக்கு எவ்வளவுதான் தேவை இருந்தாலும் செல்போனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

பெண்கள் கல்லூரிகளில் மட்டும் சேர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

உங்கள் உண்மையான உறவினர்கள் யார் என்பதை சரியாக அடையாளம் கண்டு அவர்களுடன் மாத்திரம் இஸ்லாம் அனுமதித்த விதத்தில் உறவாட அனுமதியுங்கள். இப்படி நடந்தால் மாத்திரமே இந்த தீய செயலை நாம் தடுக்க முடியும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். (அல் குர்ஆன் 66 - 6)
நம்மையும், நமது குடும்பத்தினரையும் நரகத்தை விட்டும் நாம் பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறான்.

நமது பிள்ளைகள் மாற்று மதத்தவருடனோ அல்லது நமது முஸ்லீம் ஆண்களுனோ யாருடனும் ஓடிப்போகாமல் நாம் நம் பிள்ளைகளை சரியான முறையில் வளர்க்க வேண்டும். 

ஒரு பிள்ளை தவறு செய்தால் அந்தப் பிள்ளையை திருத்துவதற்குறிய அனைத்து அதிகாரமும் பெற்றோருக்கு உள்ளது. அவர்களை கண்டித்துத் திருத்துவதில் எந்தத் தவறும் இல்லை. 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக் குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். புகாரி (2554)
மறுமை நாளில் பெற்றோரின் பொருப்புக்ள பற்றி விசாரிக்கப்படும் போது தன் பிள்ளைகள் பற்றிய விசாரனையும் முக்கியமானதாகும்.அப்படி இருக்கும் போது நாம் நமது பிள்ளைகளை திருத்துவதில் எந்த்த் தவறும் இல்லை.

பதில்  : ரஸ்மின் MISc

vendredi 29 juillet 2011

தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் பேர்நெல் இஸ்லாத்தை தழுவினார் !

வேன் பேர்நெல்(நடுவில்)





தென் ஆப்ரிக்காவில் உள்ள போர்ட் எலிசபத்த்தில் பிறந்த 22 வயது, தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் பேர்நெல்(Wayne Dillon Parnell) 28/7/2011 வியாழக்கிழமை அன்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.இவர் தென் ஆப்ரிக்கா சர்வேதச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்(Left-arm medium-fast) என்பது குறிப்பிடத்தக்கது.

பேர்நெல் கிறிஸ்துவ மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தை தழுவி இருக்கிறார்.இவருடைய பெயரை வலீத் ,பொருள் புதிதாக பிறந்த மகன் என்று தனது பெயரை மாற்றிக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

"வெய்ன் இரண்டு மாதங்களுக்கு முன்பே இஸ்லாத்தை பின்பற்ற முடிவு செய்துவிட்டார்," என்று தென் ஆப்ரிக்கா அணி மேலாளர் டாக்டர் முகம்மது மொசாஜி தெரிவித்துள்ளார்.

ஹாஷிம் ஆம்லா , இம்ரான் தாகிர் போன்ற சக வீரர்களின் வற்புறுத்தலினால்தான் பேர்நெல் இஸ்லாத்தை தழுவினார் என்ற வதந்தியை மொசாஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இது அவருடைய சொந்த முடிவு எனவும் மொசாஜி கூறினார்.
மொசாஜியின் மறுப்பை ஆதரிக்கும் வகையில் தென் ஆப்ரிக்காவின் மற்ற அணி வீரர்களும் ஹாஷிம் ஆம்லா , இம்ரான் தாகிர் , பேர்நெலை எந்த விதத்திலும் கட்டாயம் படுத்தவில்லை.ஆம்லாவின் ஒழுக்கம் ,சுற்றுப்பயணத்தின் போதும் தினசரி தொழுகை,மதுபான கொண்டாட்டங்களில் பங்கேற்காதது ,தென் ஆப்பிரிக்க அணியின் விளம்பரதாரரான பீர் கம்பெனியை விளம்பரப்படுத்த மறுத்தது போன்ற இவரின் செயல் அனைவரையும் ஈர்க்கத்தான் செய்தது.

பேர்நெல்லுடைய சக விளையாட்டு வீரர்கள் ,கடந்த IPL(Indian premier League) போட்டியில் "பேர்நெல் மது அருந்தாததை வைத்தே அவர் தன் மதத்தை மாற்றுவதில் எவ்வளவு மும்முரமாக இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டோம்" என்று தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம் :

ஒரு முஸ்லிமின் ஒழுக்கத்தை பார்த்தே மாற்று மதத்தினர் இஸ்லாத்தை நேசிக்க ஆரம்பிக்கின்றனர்.நாமும் இஸ்லாத்தின் ஒழுங்குகளை பேணி நமக்கு நன்மை தேடிக் கொள்வதோடு பல மாற்று மத சகோதரர்கள் நேர்வழி பெற உதவுவோம்.


நன்றி : sport24.co.za

mercredi 27 juillet 2011

விவாகரத்தான தாய்,தந்தை இருவருக்கும் பணிவிடை செய்ய வேண்டுமா?

FRTJ இணையதளத்தில் வாசகர் ஒருவரால் கேட்கப் பட்ட கேள்வி : விவாகரத்து செய்து கொண்ட என் தாய் தந்தை இருவருக்கும் நான் பணிவிடை செய்யவேண்டுமா?
- கேள்வி : ABDUL GHANI(UAE)

பதில் : இந்தக் கேள்விக்குறிய பதிலைத் தெரிந்து கொள்வதற்கு முன்பதாக குடும்ப வாழ்க்கை பற்றிய ஒரு அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது குடும்ப வாழ்க்கையில் நாம் இருக்கும் போது கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டாலும், மனைவிக்கு கணவனைப் பிடிக்காவிட்டாலும் ஒருவரை விட்டு மற்றவர் பிரிந்து கொள்வதற்கு இஸ்லாம் தாராள அனுமதி வழங்கியுள்ளது.

திருமண வாழ்க்கை என்பது ஒரு ஒப்பந்தம் தான். பிடிக்காதவர்களுடனும் கடைசி வரை வாழவேண்டும் என்று எக்காலத்திலும் இஸ்லாம் கட்டளையிட்டதில்லை.

அந்த அடிப்படையில் உங்கள் தாய், தந்தை இருவரும் பிரிந்துள்ளார்கள்.

இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம். விவாகரத்து செய்து கொண்ட தாய் தந்தை இருவருக்கும் பணிவிடை செய்ய வேண்டுமா? என்பதுதான் உங்கள் கேள்வியாக இருக்கிறது.

கண்டிப்பாக அவ்விருவருக்கும் நீங்கள் பணிவிடை செய்யத்தான் வேண்டும். ஏன் என்றால் விவாக ரத்து என்பது திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்வதுதானே தவிர குழந்தை இல்லை என்று சொல்லிக் கொள்வது அல்ல.

விவாகரத்து செய்து கொண்டதால் உங்கள் தாயும், தந்தையும் கணவன் மனைவி இல்லை என்ற நிலையை அடைவார்களே தவிர நீங்கள் அவர்களுக்கு பிள்ளை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.

ஆதலால் அவர்கள் இருவருக்கும் நீங்கள் கண்டிப்பாக பணிவிடை செய்துதான் ஆகவேண்டும். பெற்றோருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருமறைக் குர்ஆனில் பல வசனங்களை நாம் பார்க்க முடியும்.
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பல வீனத்துக்கு மேல் பல வீனப்பட்டவளாகச் சுமந்தாள்.அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். ஏனக்கும் உனது பெற்றோர்களுக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.(திருக்குர்ஆன் 31:14) 
என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோர்க்கு உபகாரம் செய்யுங்கள்! என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான்.(திருக்குர்ஆன் 17:23) 
உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ அல்லது இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்தால் அவ்விருவரையும் நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரிடமும் மறியாதையான சொல்லையே கூறுங்கள் (திருக்குர்ஆன் 17:23)
தாய் இணை கற்பித்தாலும் அவளுக்கும் நாம் பணிவிடை செய்தாக வேண்டும்.
என்னுடன் என் தாயார் அல்லாஹ்வின் தூதர் காலத்தில் வந்து இருந்தார்கள்.அப்போது அவர்கள் இணைவைப்பாளர்களாக இருந்தார்கள்.நான் நபி(ஸல்)அவர்களிடம் என் தாயார் என்னிடம் அசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவை பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளடுமா? என்று மார்க்கத் தீர்ப்பு கேட்டேன்."ஆம் நீ உன்தாயிடம் உறவைப்பேணி நல்ல முறையில் நடந்து கொள்" என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர்(ரலி), ஆதாரம்: புகாரி 2620)
மேற்கண்ட செய்திகள் அனைத்தும் பெற்றோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நாம் பணிவிடை செய்தாக வேண்டும் என்பதை தெளிவாக நமக்கு விளக்குகிறது.

பதில் : RASMIN MISc (SLTJ)

இளம்பெண்களே ! வாழ்க்கையில் தடம் புரளாதீர்கள்!

செல்ஃபோன் இன்றைய இளம்பெண்கள் தீய இச்சையால் உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இருக்கிறது.

விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது, முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பலியாகிவிட்டார்கள்.

இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.

ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும்? என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க / தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூஷன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர், ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.

இதன் காரணமாக சில மஹரம் இல்லாத ஆண்கள், மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள், மாற்றுமத இளைஞர்கள். காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் தீய இச்சையால் உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது, முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பலியாகிவிட்டார்கள்.

இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.

கீழுள்ள திருக்குர்ஆனின் போதனையை செவிமடுங்கள்;
மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: "தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்; தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்; மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம். அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)
- அனுப்பியவர் : அப்துல் ரஷீது 

dimanche 24 juillet 2011

பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் ஹஜ்ஜை பற்றிய கண்காட்சி(இன்ஷா அல்லாஹ்)

கெய்ரோ : பிரிட்டிஷ் அருங்காட்சியகம் அடுத்த ஆண்டு உலகின் பெரிய அளவில் இஸ்லாமிய கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜை பற்றி கண்காட்சி ஒன்றை நடத்த இருக்கிறது.இஸ்லாமிய ஆன்மீகத்தை பற்றி உலக மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப் பட இருக்கிறது.

"பிரிட்டிஷ் அருங்காட்சியத்தின் இந்த முயற்சி உலக மக்களிடம் இஸ்லாத்தை பற்றியும் ,ஹஜ்ஜின் வரலாறு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றியும் ஆழமாக புரிந்துக் கொள்ள வழி வகுக்கும்" என்பதாக பிரிட்டிஷ் அருங்காட்சியத்தின் இயக்குனர் Neil MacGregor ஒரு ஊடக வெளியீட்டில் தெரிவித்தார்.

இஸ்லாத்தின் கடமைகளை வெளிப்படுத்தும் விதமாக பிரிட்டிஷ் அருங்காட்சியகம் நடத்தும் முதல் பெரிய கண்காட்சியாக இது அமையும். மேலும் ஜனவரி 26 முதல் ஏப்ரல் 15, 2012 வரை இந்த கண்காட்சி செயல்படும். இந்த கண்காட்சியில் புனித நிலங்ககளை பற்றிய தொல்பொருள் சுவடிகள், ஜவுளிகள் வரலாற்று புகைப்படங்கள் மற்றும் சமகால கலை போன்றவை காட்சிக்கு வைக்கப்படும்.

கண்காட்சி மூன்று முக்கிய விஷயங்களுக்கு முக்கித்துவம் அளிக்கும் : ஹஜ் பயணம் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய வழிகள் , ஹஜ் செய்யும் முறை மற்றும் அதன் தொடர்புடைய சடங்குகள், மக்காவை பற்றிய வரலாறு மற்றும் முக்கியத்துவம்.

இந்த கண்காட்சி முஸ்லிம் அல்லாத பார்வையாளர்களுக்கு இஸ்லாத்தை பற்றியும் ஹஜ்ஜை பற்றியும் நல்ல புரிந்துணர்வு ஏற்படுத்தும் என்று அருங்காட்சியகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

"முஸ்லிம் அல்லாதவர்கள் பார்க்க முடியாத இஸ்லாத்தின் ஹஜ் மற்றும் அதன் நம்பிக்கையை அவர்கள் ஆராயவும் இது ஒரு உலகளாவிய இஸ்லாமிய உணர்வு உருவாக்கும் அத்தகைய ஒரு முக்கியத்துவத்தை இது பெரும்" என்பதாக MacGregor தெரிவித்தார்.

பெரிய நிதி சேவை வழங்குநர் மற்றும் கலாச்சார நிறுவனம் சேர்ந்து நடத்தும் இந்த கண்காட்சி சகிப்புத்தன்மை, ஒற்றுமை மற்றும் பிறர் கொள்கைகளை புரிந்து ஊக்குவிக்கும் நோக்கம் போன்றவற்றை ஊக்குவிக்கும் என்று ஹுசைன் நம்புகிறார்.மேலும் அவர் கூறியதாவது இந்த கண்காட்சி மற்ற மக்களின் உணர்வுகள்,கலை மற்றும் பாரம்பரியத்தை புரிந்து கொள்வது சர்வதேச வணிகம் செய்வதற்கு அவசியமானதாகும்.

மொழிபெயர்ப்பு : முஹமது ரஃபீக்(Webmaster)
நன்றி : www.onislam.net

samedi 23 juillet 2011

முஸ்லிம் பெண்களுக்கு ஒரு படிப்பினை!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ஜாபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு இக்பால் (4), இர்பான் (3), பாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன் என்ற ஒன்றரை மாத கைக்குழந்தையும் உள்ளனர்.

மணிப்பால் சரலெபெட்டு சிவபாடி ஸ்ரீ உமாமகேஸ்வரி கோவில் அருகே குடும்பத்துடன் வசித்துவரும் புஷ்ராவை, பஜ்ரங் தள் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த குண்டர்கள் மனோகர் என்பவனது தலைமையில் புஷ்ராவின் கணவன் ஜாபர் முன்னிலையில் அவரது வீட்டுக்குள் புகுந்து வலுக்கட்டாயமாக அருகிலுள்ள கோவிலுக்கு இழ்த்துச்சென்று இந்து மதத்திற்கு மாறும்படி மிரட்டியுள்ளனர்.

புஷ்ரா இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, தான் இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேற விரும்பவில்லை என்று உறுதியாகச் சொன்னபோது குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். கோவில் பூசாரியிடம் புஷ்ரா இந்துவாக விரும்பவில்லை என்றும் இஸ்லாம் மதத்திலேயே தொடரவிரும்புவதாகச் சொல்லி மன்றாடிய பிறகும் பூசாரி வலுக்கட்டாயமாக மதமாற்றும் (பிரவர்த்தன்) நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

மங்களூர் காவல்துறை ஆணையர் அலோக் மோகனிடம் நேற்று அளித்த புகாரில் தன்மீதான கட்டாய மதமாற்ற முயற்சிகளையும், தனது உயிருக்கு ஆபத்திருப்பதையும் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில் தனது கணவன் ஜாபர் முன்பாகவே பஜ்ரங்தள் தலைவன் மனோகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்,குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதையும் கண்ணீருடன் தெரிவித்தார்.

கோவிலில் நடந்த கட்டாய மதமாற்ற நிகழ்ச்சியில் தனது எதிர்ப்பை தெரிவித்தபோது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்பதால் அமைதியாக இருந்துள்ளார்.இதைக்காரணமாக வைத்து புஷ்ரா இந்துவாக மதம் மாறிவிட்டதாக வதந்தி பரவியதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவரது கணவன் ஜாபர், திருமணத்திற்கு முன்பு பிரசாந்த் செட்டி என்ற பெயருடன் இந்துவாக இருந்துள்ளார். புஷ்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டபிறகு அடுத்தடுத்து குழந்தைகளைக் கொடுத்துவிட்டு, தற்போது பஜ்ரங்தள் குண்டர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளான். அவரது வீட்டிற்கு பஜ்ரங்தள் குண்டர்களையும் அழைத்து வந்ததோடு, அவன் முன்னிலையிலேயே புஷ்ராவை அவர்கள் பாலியல் நீதியில் துன்புறுத்தியதையும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளான்.

தற்போது அவனிடமிருந்து தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு விகாகரத்து கோரியுள்ளார். இனிமேல் அந்த கொடிய மிருகத்துடன் வாழ்வதற்கு தனக்கு விருப்பமில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்தார்.மேலும்,இதை போலீசில் தெரிவித்தால் குடும்பத்துடன் கொன்றுவிடப்போவதாக பஜ்ரங்தள் குண்டர்கள் மிரட்டி வருகின்றனர்.
புஷ்ராவின் புகாரை ஏற்றுக்கொண்ட மங்களூர் காவல்துறை ஆணையர்,இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

நன்றி : இந்நேரம்.காம்

பெல்ஜியத்திலும் பெண்கள் முகத்திரைக்கு தடை!!!

ஃபிரான்ஸ் நாட்டை தொடர்ந்து பெல்ஜியத்திலும் இஸ்லாமிய பெண்கள் முகத்திரைக்கு எதிரான சட்டம் நேற்று 22/7/2011 முதல் அமலுக்கு வந்துள்ளது. பெல்ஜியம் நாட்டில் 10 மில்லியன் மக்களில் 450,000 அளவுக்கு முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிந்து பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என்பதாக சட்டம் நிறைவேற்றியுள்ளது பெல்ஜியம் அரசு.ஃபிரான்ஸ் அரசு கூறியது போல் தங்கள் நாட்டில் முகத்தை மறைத்து தங்களுடைய அடையாளத்தை மறைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பெல்ஜியம் அரசு தரப்பும் தெரிவித்துள்ளது.எந்த பெண்ணாவது சட்டத்தை பின்பற்ற தவறினால், அவர் 137,50 யூரோக்கள் ($ 195) மற்றும் ஏழு நாட்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும் நாட்டின் பாதுகாப்பு என்ற அடிப்படையில்தான் இந்த சட்டத்தை இயற்றியதாகவும் அந்த அரசு தெரிவிக்கிறது.

இந்த சட்டம் பெல்ஜியத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.இந்த சட்டம் முஸ்லிம்களின் கண்ணியத்தை கெடுக்கும் வகையில் உள்ளதாக முஸ்லிம்கள் கருதுகின்றனர்.இந்த சட்டத்திற்கு எதிராக இரண்டு பெண்கள் பெல்ஜியம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.அவர்கள் தெரிவிப்பதாவது "நாங்கள் இந்த சமுதாயத்திலிருந்து தனிமை படுத்தப் பட்டது போல் உணருகிறோம்!முகத்திரை அணிவது எங்கள் உரிமை! இந்த சட்டம் நாட்டில் மத சுதந்திரம், தனிப்பட்ட உரிமை, கருத்து சுதந்திரம் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே சமத்துவம் போன்றவற்றிற்கு எதிராக இருக்கிறது" என்பதாக அவர்கள் கூறினார்கள்.

குறிப்பு : பிரான்ஸ் நாட்டை போல் முகத்திரை அணிவதற்கு மட்டும்தான் பெல்ஜியத்திலும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது தலையையும் உடலையும் மறைப்பதற்கு அல்ல.

நன்றி : Onislam.net

vendredi 15 juillet 2011

ஹிஜாபை பேணுவதில் அலட்சியம்

ஹிஜாப் அணிவதின் முக்கியத்துவத்தைப் பற்றியும் இஸ்லாம் பெண்களின் உடலை மறைப்பதில் எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறது என்பதையும் பலர் எழுத்து வடிவிலும் உரை மூலமாகவும் நல்உபதேசம் செய்தும் பல இஸ்லாமிய பெயர் தாங்கி முஸ்லிம் பெண்கள் திருந்துவதாக தெரியவில்லை.இந்த கட்டுரையின் பின்னணி மூன்று முக்கிய நோக்கங்களாகும்.

1)அல்லாஹ்வுக்கு பயந்து ஹிஜாப் சட்டத்தை பேணாமல் உலகுக்காக ஹிஜாப் அணிதல்.
2)உறவினர்களிடம் ஹிஜாப் சட்டத்தை பேணுவதில்லை.
3)ஹிஜாப் சட்டத்தை பேனாதவர்களிடம் அறிவுரை செய்தல்.

1)அல்லாஹ்வுக்கு பயந்து ஹிஜாப் சட்டத்தை பேணாமல் உலகுக்காக ஹிஜாப் அணிதல்.

தங்களுடைய சொந்த கிராமத்தில் இருக்கும்போது தங்களுடைய உடலை முழுமையாக மறைத்து இருக்கும் பெண்கள் நகரதிர்க்கோ அல்லது வேறு நாட்டிற்கோ செல்லும்போது ஹிஜாப் சட்டத்தை பேனாதவர்கலாக இருப்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.சவூதி அரேபியா போன்ற நாடுகளில் ஹிஜாப் சட்டத்தை பேணியவர்கள் மற்ற நாடுகளுக்கு போகும்போது அந்த நாட்டு கலாசாரத்தில் மூழ்கி இஸ்லாம் வலியுறுத்தும் ஹிஜாப் சட்டத்தை மதிக்காததையும் பார்க்கிறோம்.வீட்டில் பெற்றோர்கள் முன் இருக்கும்வரை ஹிஜாப் சட்டத்தை பேணும் பெண்கள் வெளியே கல்லூரிக்கோ அல்லது நண்பர்களுடன் வெளியே செல்லும்போது ஹிஜாபை தூக்கி எறிந்துவிடும் இளம் தலைமுறையினரையும் நாம் பார்க்காமல் இல்லை.சில பெண்கள் ஹிஜாப் என்ற பெயரில் தங்களின் உடலை முழுமையாக மறைக்காத ஆடைகளையும் அணிகிறார்கள்.இந்த சிலரின் நடவடிக்கைகளுக்கு என்ன காரணம்?ஊருக்கும் உலகுக்கும் பயந்து தான் இவர்கள் தங்கள் ஹிஜாப் சட்டத்தை பெனுகிறார்களே தவிர இறையச்சம் என்பது சிறிதும் மனதில் இல்லை.

mercredi 13 juillet 2011

நபிமார்கள் வரலாறு 8 (ஆதம் நபி வரலாறு 4)

முதல் மனிதர் ஆதாமா? ஏவாளா? என்பதைப் பற்றிய செய்திகளை இது வரை நாம் பார்த்தோம். இந்தத் தொடரில் ஆதம் நபியவர்களின் உருவாக்கத்தைப் பற்றிப் பார்ப்போம்.

ஆதம் நபியின் உருவாக்கமும், மலக்குகளின் ஆட்சேபனையும்.

இந்த உலகத்தைப் படைத்த இறைவன், அதில் வாழ்வதற்கு ஏற்ற சமுதாயமாக மனிதனைப் படைக்க எண்ணி தனது எண்ணத்தை மலக்குகளிடத்தில் சொல்லிக் காட்டினான். அந் நேரத்தில் அந்த மலக்குகள் இறைவனின் எண்ணத்தை ஆட்சேபித்து கருத்துத் தெரிவித்தார்கள்.இதனை திருமறைக் குர்ஆன் இவ்வாறு சொல்லிக் காட்டுகிறது.

பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன். என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது, அங்கே குழப்பம் விளைவித்து, இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னை புகழ்ந்து போற்றுகிறோமே, குறைகள் அற்றவன் என்று உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே என்று கேட்டனர். நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று இறைவன் கூறினான். (அல் குர்ஆன் 2:30)

lundi 11 juillet 2011

தீயவர்களையும் கடவுள் மண்ணிக்கக் கூடாதா?

தீயவர்களையும் கடவுள் மண்ணிக்கக் கூடாதா?
  • தீயவர்களையும் கடவுள் மண்ணிக்கக் கூடாதா?
  • பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்


    இறைவனுக்கு நன்றி செலுத்துதல்

    ஒரு தாய் எவ்வாறு தன பிள்ளைகள் ஆசைப்படுவதை எல்லாம் வாங்கித் தந்து மகிழ்ச்சியுறச் செய்வாளோ அதை விட பன்மடங்கு இறைவன் தன்னுடைய அடியார்கள் வாய்விட்டு கேட்பதையும் மனதிற்குள் இரகசியமாக ஆசைப்படுவதையும் சளைக்காமல் கருணையுடன் செய்து தருகிறான். நமக்கு ஒரு காரியம் ஆகவேண்டும் என்றாலோ அல்லது ஒரு துன்பம் நீங்கவேண்டும் என்றாலோ ஓயாமல் பிரார்த்தனை செய்யும் நாம் அக்காரியம் நிறைவேறிய உடன்,அல்லது அத்துன்பம் நீங்கிய உடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்ததையே மறந்து நமது திறமையால்தான் கிடைத்ததுபோல் நடந்து கொள்கிறோம். இதைப்பற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதை பார்ப்போம்,

    மனிதனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமானால் நம்மை அழைக்கிறான். பின்னர் நாம் அவனுக்கு நமது அருட்கொடையை வழங்கினால் 'எனது அறிவால் இது எனக்குத் தரப்பட்டது' எனக் கூறுகிறான். அவ்வாறல்ல! அது ஒரு சோதனை! எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.(அல்குர்ஆன் 39.49)

    முன்னுரை : தாவா பணி

    முன்னுரை - தாவா பணி
    வீடியோவை பார்க்க புகைப்படத்தை
    சொடுக்கவும் 

    • ஃபிரான்ஸ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 2
    • முன்னுரை தலைப்பு : தாவா பணி
    • உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

    mercredi 6 juillet 2011

    ஷபே பராஅத் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா?

    சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்.

    இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள்.

    மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல் பாத்திஹா அமோகமாக ஆரம்பிக்கப்பட்டு விடும். ஹஜரத்தைக் கூட்டிச் செல்வதற்காக குழந்தைகளின் வரிசை ஒரு பக்கம். சில வீட்டினர் தங்கள் ரொட்டிகளை பள்ளிவாசலுக்கே அனுப்பி வைப்பார்கள். வழமைக்கு மாற்றமாக பள்ளிவாசலில் இறைச்சிக் குழம்பு வாடை மூக்கைத் துளைக்கும்.

    தொழுகை முடிந்ததும் ஹஜரத் அவர்கள் வெளி வராண்டாவில் (வராண்டா இல்லாத ஊர்களில் உள் பள்ளியிலும்) யாசீன் ஓதுவார். எத்தனை தடவை தெரியுமா? மூன்று தடவை ஓத வேண்டுமாம். எதற்காக?
    • முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும்
    • இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், நீண்ட ஆயுளுக்காகவும்
    • மூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும்.

    lundi 4 juillet 2011

    நபிமார்கள் வரலாறு 7 (ஆதம் நபி வரலாறு 3)

    நாத்தீகத்தின் முரண்பாடும் ஆத்தீகத்தின் நீரூபனமும்

    உலகின் முதல் மனிதர் யார் என்பதை சொல்வதற்கு முன் மனிதன் படைக்கப் பட்டானா பரிணாமம் பெற்றானா என்ற கேள்விக்குறிய பதிலை பார்த்தோம்.

    இப்போது முதல் மனிதன் ஆதாமா? ஏவாளா என்ற சர்ச்சைக்கு தீர்வு காண முயல்வோம்.

    நாத்தீகத்திற்கு வக்காலத்து வாங்கும் சில எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் ஆத்தீகத்தை எதிர்பார்ப்பதற்கான மிக முக்கிய வாதங்களில் ஒன்றாக முதல் மனிதர் ஆதாம் அல்ல முதல் மனிதர் ஏவால்தான் என்று சொல்கிறார்கள் அப்படி சொல்வதற்குறிய காரணத்தையும் வாதத்தினையும் ஒன்றன் பின் ஒன்றாக ஆராய்வோம்.

    நாத்தீகத்தின் வாதம் :

    சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண்ணின் காலடித்தடத்தை இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

    அந்தக் காலடித்தடங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இவள் ஒரு பெண் இவள்தான் உலகின் முதல் மனிதர் என்று கூறுகிறார்கள்.

    ஆத்தீகத்தின் பதில் :