புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

mercredi 27 juillet 2011

விவாகரத்தான தாய்,தந்தை இருவருக்கும் பணிவிடை செய்ய வேண்டுமா?

FRTJ இணையதளத்தில் வாசகர் ஒருவரால் கேட்கப் பட்ட கேள்வி : விவாகரத்து செய்து கொண்ட என் தாய் தந்தை இருவருக்கும் நான் பணிவிடை செய்யவேண்டுமா?
- கேள்வி : ABDUL GHANI(UAE)

பதில் : இந்தக் கேள்விக்குறிய பதிலைத் தெரிந்து கொள்வதற்கு முன்பதாக குடும்ப வாழ்க்கை பற்றிய ஒரு அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது குடும்ப வாழ்க்கையில் நாம் இருக்கும் போது கணவனுக்கு மனைவியைப் பிடிக்காவிட்டாலும், மனைவிக்கு கணவனைப் பிடிக்காவிட்டாலும் ஒருவரை விட்டு மற்றவர் பிரிந்து கொள்வதற்கு இஸ்லாம் தாராள அனுமதி வழங்கியுள்ளது.

திருமண வாழ்க்கை என்பது ஒரு ஒப்பந்தம் தான். பிடிக்காதவர்களுடனும் கடைசி வரை வாழவேண்டும் என்று எக்காலத்திலும் இஸ்லாம் கட்டளையிட்டதில்லை.

அந்த அடிப்படையில் உங்கள் தாய், தந்தை இருவரும் பிரிந்துள்ளார்கள்.

இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம். விவாகரத்து செய்து கொண்ட தாய் தந்தை இருவருக்கும் பணிவிடை செய்ய வேண்டுமா? என்பதுதான் உங்கள் கேள்வியாக இருக்கிறது.

கண்டிப்பாக அவ்விருவருக்கும் நீங்கள் பணிவிடை செய்யத்தான் வேண்டும். ஏன் என்றால் விவாக ரத்து என்பது திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்வதுதானே தவிர குழந்தை இல்லை என்று சொல்லிக் கொள்வது அல்ல.

விவாகரத்து செய்து கொண்டதால் உங்கள் தாயும், தந்தையும் கணவன் மனைவி இல்லை என்ற நிலையை அடைவார்களே தவிர நீங்கள் அவர்களுக்கு பிள்ளை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.

ஆதலால் அவர்கள் இருவருக்கும் நீங்கள் கண்டிப்பாக பணிவிடை செய்துதான் ஆகவேண்டும். பெற்றோருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருமறைக் குர்ஆனில் பல வசனங்களை நாம் பார்க்க முடியும்.
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பல வீனத்துக்கு மேல் பல வீனப்பட்டவளாகச் சுமந்தாள்.அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். ஏனக்கும் உனது பெற்றோர்களுக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.(திருக்குர்ஆன் 31:14) 
என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோர்க்கு உபகாரம் செய்யுங்கள்! என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான்.(திருக்குர்ஆன் 17:23) 
உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ அல்லது இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்தால் அவ்விருவரையும் நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரிடமும் மறியாதையான சொல்லையே கூறுங்கள் (திருக்குர்ஆன் 17:23)
தாய் இணை கற்பித்தாலும் அவளுக்கும் நாம் பணிவிடை செய்தாக வேண்டும்.
என்னுடன் என் தாயார் அல்லாஹ்வின் தூதர் காலத்தில் வந்து இருந்தார்கள்.அப்போது அவர்கள் இணைவைப்பாளர்களாக இருந்தார்கள்.நான் நபி(ஸல்)அவர்களிடம் என் தாயார் என்னிடம் அசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவை பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளடுமா? என்று மார்க்கத் தீர்ப்பு கேட்டேன்."ஆம் நீ உன்தாயிடம் உறவைப்பேணி நல்ல முறையில் நடந்து கொள்" என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர்(ரலி), ஆதாரம்: புகாரி 2620)
மேற்கண்ட செய்திகள் அனைத்தும் பெற்றோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நாம் பணிவிடை செய்தாக வேண்டும் என்பதை தெளிவாக நமக்கு விளக்குகிறது.

பதில் : RASMIN MISc (SLTJ)