புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

dimanche 30 janvier 2011

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு நடைமுறையை கண்காணிக்க குழு முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவு-தினத்தந்தி



சென்னை, ஜன.30-


முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டு நடைமுறையை கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இஸ்லாமிய சமுதாயத்தினரின் முன்னேற்றம் கருதி அவர்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி முதல்-அமைச்சர் கருணாநிதி 15.9.2007 அன்று ஆணையிட்டு, நடைமுறைப்படுத்தி வரும் இடஒதுக்கீட்டின்படி, இஸ்லாமிய சமுதாயத்தினர் தமிழக அரசின் கல்வி நிறுவனங்களிலும், வேலைவாய்ப்புகளிலும் உரிய இடங்களைப் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.

இந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து, ஆய்வு செய்வதற்காகவும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதற்காகவும், தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தலைவராக கொண்டு ஒரு குழு அமைக்கப்படுகிறது.

கருணாநிதி உத்தரவு

பிற்படுத்தப்பட்டோர்-மிகப் பிற்படுத்தப்பட்டோர்-சீர்மரபினர்-சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளரை செயல் உறுப்பினராகவும், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலாளர், ஆசிரியர் தேர்வாணையக் குழுத் தலைவர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், சிறுபான்மையினர் நல ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குழு ஒன்றை அமைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.