கடந்த 9/03/2011 அன்று பிரான்ஸ் மண்டல நிர்வாக தேர்வு பொதுக்குழு TNTJ தலைமை நிர்வாகிகள் முன்னிலையில் (ஆன்லைன் மூலம்) இறைவன் அருளால் சிறப்பாக நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிர்வாக அமைப்பு குறித்தும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்கி உரையாற்றினார்கள்.
பின்னர் ஃபிராண்ஸ் மண்டல நிர்வாகிகள் தேர்வு பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் முன்னிலையில் (ஆன்லைன் மூலம்) நடைபெற்று ஃபிராண்ஸ் மண்டல நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். துணைப் பொதுச் செயலாளர் சையது இப்ராஹீம் உடனிருந்தார்கள்.
ஃபிரான்சில் உள்ள தவ்ஹீத் சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும்
வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.





