புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

jeudi 14 juin 2012

ஆன்லைன் பயான் நிகழ்ச்சி


ஆன்லைன் பயான் நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பிரான்ஸ் மண்டலம் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்(FRTJ)சார்பாக கடந்த ஞாயிற்றுகிழமை (10-06-2012) அன்று முதல் முறையாக வீடியோ புரஜெக்டர் மூலம் ஆன்லைன் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக FRTJ துணைத் தலைவர் அப்துல் ஹக்கீம் அவர்கள் தலைமையுரை ஆற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். முன்னதாக 'ஏகத்துவ புரட்சி' என்ற தலைப்பில் frtj செயலாளர் இன்சாப் அவர்கள் சிற்றுரை நிகழ்த்தினார்கள்.இதில் மாநில துணைப்பொதுச் செயலாளர் சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் “மார்க்கத்திற்க்கு முரணான சடங்குகளும் வரம்பு மீறிய செலவுகளும்.” என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் உரையாற்றினார்கள். சமுதாயத்தில் நிலவும் ஆடம்பர திருமணம்,கத்னா விழா, பிறந்தநாள் விழா போன்ற மார்க்கத்திற்கு புறம்பான விழாக்களை  எவ்வாறு
புறக்கணிக்க வேண்டும் என்று சிறப்பான முறையில் விவரித்தார்கள்.

இந்த உரை பிரான்சில் வாழும் மக்களுக்கு மிகுந்த விழிப்புணர்வாக அமைந்திருந்தது.இந்த பயனுள்ள நிகழ்ச்சி உலகம் முழுவதும் உள்ள நம் கொள்கைச் சகோதரர்கள் பார்க்கும் வண்ணம் ஆன்லைன்பிஜே இணையதளத்தில் நேரடி ஒளிரப்பு செய்யப்பட்டது.நிகழ்ச்சியின் இறுதியாக FRTJ துணைச்செயலாளர் ருக்னுதீன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.பிறகு துவாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.
அல்ஹம்துலில்லாஹ்!