புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

dimanche 14 juillet 2013

தவறான அறிவிப்பு


இந்த வருடம் பிரான்சில்  ரமலான் பிறையை வழக்கத்திற்கு மாறாக இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்து விட்ட காரணத்தினால் பெரும் குழப்பம்  நிலவியது. இதற்க்கு காரணம் (CFCM) என்ற அமைப்பின் மார்க்கத்திற்கு முரணான வகையில் எடுத்த முடிவே காரணம்.ஏனென்றால் ஆங்கிலேய காலண்டர்
 (சூரிய அடிப்படை) அடிப்படையில் பிறையை கண்களால் காணாமல் முன்பே அறிவித்து விட்டார்கள்.

ஆனால் இறுதியில் பிறை தென்படாததால் இவர்கள் அறிவிப்பின் படி நோன்பு வைத்தவர்கள் சிலர் அதை தொடர்வதா அல்லது விட்டுவிடுவதா என்று குழம்பி விட்டனர். ஆனால் நமது நிர்வாகிகள்  
உடனே அனைவருக்கும் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி விட்டார்கள். நமது மார்க்கத்தில் ரமலானை முடிவு செய்வது பற்றி நபி(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்து விட்டார்கள்.ஆகையால் பிறையை கண்கள் பார்த்தே  முடிவுசெய்ய வேண்டும்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 
பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!

அறிவிப்பவா; : அபூஹுரைரா (ரலி)      நூல் : புகாரி (1019)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 
மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். பிறையை நீங்கள் கண்டால் நோன்பு வையுங்கள். அதைப் பார்த்தே நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் குறுக்கிட்டால் எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : நஸாயீ (2109)