புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

mercredi 26 février 2014

சூனியம் என்றால் என்ன?

சூனியம் என்றால் தந்திர வித்தை (magic ) என்று பொருளாகும். சூனியம் என்ற ஏமாற்று வித்தையால் சீப்பு,முடி இன்ன பிற  
பொருட்களை  வைத்து தூரத்தில் இருந்து கொண்டு ஒருவருக்கு தீமை  செய்யலாம் என்பது அறிவுக்கு பொருத்தமில்லாத ஒன்றாகும். மேலும் இவ்வாறு நம்புவது,எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஆற்றல் மற்றவருக்கும் உள்ளது என்றாகிவிடும், 
வானங்கள், பூமி, மற்றும் அவற்றில் உள்ளவைகளின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். திருக்குர்ஆன் 5:120

இறைதூதர் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப் பட்டதா?

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப் பட்டதாக  (புஹாரி 3268) வரும் செய்தியை  ஆதாரமாகக் கொண்டு  இந்த வாதத்தை நிறுவுகின்றனர்.
ஒவ்வொரு தூதரும் இறைவனின் அத்தாட்சிகளையும் அற்புதத்தையும் கொண்டு வரும்போதெல்லாம் அதை தெளிவான சூனியம் என்றே இறை நிராகரிப்பாளர்கள் கூறிவந்தனர்.
இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, சூனியக்காரர் என்றோ கூறாமல் இருந்ததில்லை. (திருக்குர்ஆன் 51:52)

உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை. எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும் போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் இழப்பை அடைவார்கள்.(திருக்குர்ஆன்40:78)

இறைத் தூதர்களுக்கே இறைவனின் உதவியில்லாமல் எந்தவொரு அற்புதத்தையும் செய்ய இயலாது எனும்போது யூதர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எவ்வாறு சூனியம் செய்திருக்க முடியும்.

நபிகள் நாயகத்துக்கு சூனியம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு யூதனொருவன் சூனியம் செய்ததாகவும் 113, 114 ஆகிய இரண்டு அத்தியாயங்களும் அருளப்பட்டு அதன் மூலம் சூனியம் விலகியதாகவும் பரவலாக முஸ்- ம்களால் நம்பப்படுகிறது.இது பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டது. தாம் செய்யாததைச் செய்ததாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு அதன் விளைவு இருந்தது. ஒரு நாள் அவர்கள் (இறைவனிடம்) பிரார்த்தனை செய்தனர். மீண்டும் பிரார்த்தனை செய்தனர். பின்னர் என்னிடம் ""நான் விளக்கம் கேட்ட விஷயத்தில் இறைவன் விளக்கம் தந்து விட்டான். என்னிடம் இருவர் வந்து ஒருவர் தலைமாட்டிலும், மற்றொருவர் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். இவருக்கு என்ன நேர்ந்துள்ளது என ஒருவர் கேட்டார். சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று மற்றவர் கூறினார். சூனியம் வைத்தவன் யார் என ஒருவர் கேட்க, லபீத் பின் அஃஸம் என மற்றவர் விடையளித்தார். எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என ஒருவர் கேட்க சீப்பு, உதிர்ந்த தலைமுடி, பேரீச்சை மரத்தின் பாளை ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளது என்று மற்றவர் கூறினார். எந்த இடத்தில் என்று ஒருவர் கேட்க தர்வான் எனும் கிணற்றுக்குள் என்று மற்றவர் கூறினார்'' என்று கூறினார்கள். பின்னர் அங்கே புறப்பட்டுச் சென்று பின்னர் திரும்பி வந்தனர். அங்குள்ள பேரீச்சை மரங்களின் மேற்பகுதி ஷைத்தானின் தலையைப் போல் இருப்பதாகவும் கூறினார்கள். அதை வெளியேற்றி விட்டீர்களா என்று நான் கேட்டேன். ""இல்லை; அல்லாஹ் எனக்கு நிவாரணம் தந்து விட்டான். மக்கள் மத்தியில் தீமைகள் பரவுவதை நான் அஞ்சுகிறேன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். பின்னர் கிணறு மூடப்பட்டது என்று ஆயிஷா (ர- ) அறிவிக்கிறார்கள்.
இது புகாரி 3268#வது ஹதீஸôகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சிறு மாற்றங்களுடன் புகாரியின் வேறு சில எண்களைக் கொண்ட ஹதீஸ்களிலும் இடம் பெற்றுள்ளது.
(பார்க்க புகாரி 5763, 5765, 5766, 6063, 6391)
தமது மனைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளாமலே உறவு கொண்டதாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது என்றும்
இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்ததாக அஹ்மத் 23211 வது ஹதீஸ் கூறுகிற
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் இந்த ஹதீஸ்கள் யாவும் ஏற்கத்தக்க அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படுபவை. ஆயினும் இவ்வாறு நடந்திருக்க முடியாது என்று கருதும் அளவுக்கு வேறு பல சான்றுகளும் கிடைக்கின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைத்தூதர் எனக் கூறிய போது அதை ஏற்க மறுத்தவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறியே நிராகரித்தனர். இந்தக் குற்றச்சாட்டை திருக்குர்ஆன் மறுக்கிறது.
அநியாயக்காரர்கள் தாம் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறுகின்றனர் என்று 17:47, 25:8 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
ஏதோ ஒரு கிணற்றில் ஏதோ ஒரு பொருளை மறைத்து வைத்தது அல்லாஹ்வின் தூதரின் மனநிலையை மாற்றியது என்றால் இது மிகப் பெரிய அற்புதமே. இத்தகைய அற்புதம் நடந்திருந்தால் இதையே காரணமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மக்கள் நிராகரித்திருப்பார்கள்.
குர்ஆனுடன் எந்த வகையிலும் இணைக்க முடியாத நிலையில் உள்ளன. ஏற்கத்தக்கவை என முடிவு செய்யப்பட்ட ஹதீஸ்களில் இத்தகைய ஹதீஸ்கள் சுமார் 50க்கும் குறைவாக உள்ளன.
இவற்றை அப்படியே ஏற்பதால் குர்ஆனின் பல வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காக இத்தகைய ஹதீஸ்களை நாம் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும். திருக்குர்ஆன் மறுக்கப்பட்டாலும் இத்தகைய ஹதீஸ்களை அப்படியே ஏற்பேன் என்று கூற முடியாது.
உதாரணத்திற்காக ஒரு ஹதீûஸ நாம் சுட்டிக் காட்டலாம்.
2634  حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ كَانَ فِيمَا أُنْزِلَ مِنْ الْقُرْآنِ عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ ثُمَّ نُسِخْنَ بِخَمْسٍ مَعْلُومَاتٍ فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُنَّ فِيمَا يُقْرَأُ مِنْ الْقُرْآنِ رواه مسلم
2635 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ عَنْ عَمْرَةَ أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ تَقُولُ وَهِيَ تَذْكُرُ الَّذِي يُحَرِّمُ مِنْ الرَّضَاعَةِ قَالَتْ عَمْرَةُ فَقَالَتْ عَائِشَةُ نَزَلَ فِي الْقُرْآنِ عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ ثُمَّ نَزَلَ أَيْضًا خَمْسٌ مَعْلُومَاتٌ و حَدَّثَنَاه مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ قَالَ أَخْبَرَتْنِي عَمْرَةُ أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ تَقُولُ بِمِثْلِهِ رواه  مسلم
ஒரு குழந்தை அன்னியப் பெண்ணிடம் பால் அருந்தினால் பத்து தடவை அருந்தினால் தான் தாய் என்ற உறவு ஏற்படும் என்று குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் ஐந்து தடவை என்று மாற்றப்பட்டது. அது குர்ஆனில் ஓதப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) மரணித்தார்கள் என்று ஆயிஷா (ர -) அறிவிக்கிறார்கள்.
(முஸ் -ம் 2634, 2635)
நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை மேற்கண்ட வசனம் குர்ஆனில் இருந்தது உண்மை என்றால் அது இன்றளவும் இருக்க வேண்டும். ஆனால் ஆயிஷா (ர-) கூறும் அந்த வசனம் குர்ஆனில் இல்லை.
மேற்கண்ட ஹதீûஸ ஏற்றுக் கொண்டால் நபிகள் நாயகத்துக்குப் பின் குர்ஆனில் சில வசனங்கள் நீக்கப்பட்டன என்ற கருத்து வரும். இறைவனோ குர்ஆனை நாம் பாதுகாப்போம் என்கிறான். இதற்கு மாற்றமாக இருப்பதால் இந்த ஹதீûஸ நாம் ஏற்காது விட்டு விட வேண்டும். இதை ஏற்று குர்ஆனை நிராகரிக்கும் நிலைக்கு வந்து விடக் கூடாது.

113, 114 ஆகிய இரு அத்தியாயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தை அகற்றுவதற்காக அருளப்பட்டதா?

113, 114 ஆகிய இரு அத்தியாயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தை அகற்றுவதற்காக அருளப்பட்டது என்று பல விரிவுரை நூல்களில் எழுதப்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக ஏற்கத்தக்க எந்த ஹதீûஸயும் அவர்கள் எடுத்துக் காட்டவில்லை. இவ்விரு அத்தியாயங்களும் மக்காவில் அருளப்பட்டதா? மதீனாவில் அருளப்பட்டதா? என்பதிலேயே கருத்து வேறுபாடு உள்ளது என்பது தான் உண்மையாகும்.
எனவே இவ்விரு அத்தியாயங்களுக்கும், சூனியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

முடிச்சுக்களில் ஊதும் பெண்கள்

முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுவதாகக் கூறப்படுவதைத் தான் சிலர் சான்றாகக் காட்டுகின்றனர். இது சூனியம் செய்யும் பெண்களையே குறிக்கிறது என்று இவர்கள் கூறுகின்றனர்.
இவர்களின் வாதப்படி நபிகள் நாயகத்துக்கு லபீத் என்ற ஆண் தான் சூனியம் வைத்தான். எனவே சூனியம் செய்யும் பெண்களுக்கு இங்கே எந்த வேலையும் இல்லை.
இவர்கள் வாதப்படி இந்த அத்தியாயத்தில் சூனியம் வைக்கும் பெண்களிடமிருந்து தான் நாம் பாதுகாப்புத் தேடுகிறோம். ஆண்கள் சூனியம் செய்தால் அதி -ருந்து எந்தப் பாதுகாப்பும் இல்லை என்ற கருத்து வரும்.
முடிச்சுக்களில் ஊதும் பெண்கள் என்பதற்கு சூனியக்காரிகள் என்று அல்லாஹ்வின் தூதர் விளக்கம் கூறவில்லை.
ஹதீஸ்களின் துணையுடன் இதை விளங்கினால் ஷைத்தானைத் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் என்பதை அறியலாம்
1142 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلَاثَ عُقَدٍ يَضْرِبُ كُلَّ عُقْدَةٍ عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ فَإِنْ اسْتَيْقَظَ فَذَكَرَ اللَّهَ انْحَلَّتْ عُقْدَةٌ فَإِنْ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَةٌ فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقْدَةٌ فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ وَإِلَّا أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلَانَ رواه البخاري
மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது. தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளூச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2269, 1142)

முடிச்சு என்றவுடன் நூ -ல் போடப்படும் முடிச்சு என்று சிலர் நினைத்து விடுகின்றனர். மூஸô நபியவர்கள் தமது நாவில் உள்ள முடிச்சை நீக்குமாறு அல்லாஹ்விடம் கேட்ட போது (20:27) முடிச்சு என்று தான் கூறினார்கள். நாக்கில் முடிச்சு போடப்பட்டுள்ளது என இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.
மேலும் ஊதுதல் என்ற சொல்லும் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது.

651 حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ عَاصِمٍ الْعَنَزِيِّ عَنْ ابْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةً قَالَ عَمْرٌو لَا أَدْرِي أَيَّ صَلَاةٍ هِيَ فَقَالَ اللَّهُ أَكْبَرُ كَبِيرًا اللَّهُ أَكْبَرُ كَبِيرًا اللَّهُ أَكْبَرُ كَبِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا ثَلَاثًا أَعُوذُ بِاللَّهِ مِنْ الشَّيْطَانِ مِنْ نَفْخِهِ وَنَفْثِهِ وَهَمْزِهِ رواه ابوداود
ஷைத்தானின் ஊதுதலை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். (அபூதாவூத் 651)
தீய சக்திகளைக் குறிக்கும் போது பெண்பாலாகக் குறிக்கும் வழக்கம் அரபு மொழியில் உள்ளது. இதன் காரணமாகவே பெண்பாலாக இங்கே குறிப்பிடப்படுகிறது. எனவே இவ்விரு அத்தியாயங்களுக்கும் சூனியத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

மேலும் மனிதர்களிடமிருந்து உம்மைக் காப்பாற்றுவேன் (பார்க்க திருக்குர்ஆன் 5:67)
وَاللَّهُ يَعْصِمُكَ مِنْ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ(67)5
என்றும் நபிகள் நாயகத்திற்கு அல்லாஹ் உத்திரவாதம் தருகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மையாக இருந்தால் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டவர்களை அவர்களின் எதிரிகள் தன்னுணர்வு அற்றுப் போகும் அளவுக்கு ஆக்கி விட்டார்கள் எனும் போது நபிகள் நாயகத்தின் ஆன்மீக பலத்தை விட எதிரிகளின் ஆன்மீக பலம் அதிகம் என்ற எண்ணம் ஏற்பட்டு இஸ்லாத்தின் வளர்ச்சியும் தடைப்பட்டிருக்கும். ஆனால் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக அறிவிப்பாளர்களைப் பொருத்த வரை ஆதாரப்பூர்வமான செய்திகள் இருந்தாலும் அதை விட ஆதாரப்பூர்வமான திருக்குர்ஆனின் போதனைகளுக்கு முரணாக இருப்பதால் திருக்குர்ஆனுக்கே முத- டம் கொடுக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்து அவர்களை யாரும் முடக்கவில்லை என்பது தான் சரியான கருத்தாகும்.

.