புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

mardi 1 novembre 2011

இமாம் பாத்திஹா சூராவிற்கிடையில் நேரம் தரலாமா?

கேள்வி : imaam soorathul paatiha ooti matraya soora todankkvatatkitail sirya naaram taruvathu nabi valiya?
MTM farhan - srilanka

பதில்இமாமுடன் தொழும் தொழுகைகளில் இமாம் சூரா பாத்திஹா ஓதியதின் பின்னர் துணை சூரா ஓதுவதற்கு முன்பு பின்பற்றித் தொழுபவர்கள் ஓதுவதற்கு நேரம் விடுவேண்டும் என்று ஸஹீஹான எந்த ஹதீஸ்களும் இல்லை.
குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்! (அல்குர்ஆன்7:204)
நாங்கள் தொழுகையில், இன்னார் மீது ஸலாம், இன்னார் மீது ஸலாம் என்று கூறிக் கொண்டிருந்தோம். அப்போது தான் 'குர்ஆன் ஓதப்படும் போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!' என்ற7:204 குர்ஆன் வசனம் வந்தது.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: தப்ஸீர் தப்ரீ, பாகம்: 9, பக்கம்: 162
'இமாம் ஓதும் போது நீங்கள் மவுனமாக இருங்கள்!' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 612
மேற்கண்ட ஹதீஸ்களில் இருந்து இமாம் கிராஅத் ஓதும் தொழுகைகளில் நாம் எதையும் ஓதாமல் அமைதியாக இமாம் ஓதுவதை செவிமடுக்க வேண்டும். இமாம் அமைதியாக இருக்கும் ரக்அத்துக்களில் சூரா பாத்திஹாவையும் விரும்பினால் துணை சூராவையும் ஓதிக்கொள்வதற்கு நபி வழியில் ஆதாரம் உள்ளது.