புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

mardi 1 novembre 2011

ஆண்கள் நின்று சிறு நீர் கழிக்கலாமா?

கேள்வி : Assalamalaikum
'நபி(ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் பேகுதி இடத்தில் நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரக் கூறினார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்" என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார் bukhari:224 appadi endral aangal nindru siruneer kalikkalama.

zzz zzz - India

பதில் : நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இதுதான்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்.
அறிவிப்பாளர்: ஹுதைஃபா (ரலி), நூல்: புகாரி 224
மேற்கண்ட ஹதீஸ் குப்பைகள் போடப்படும் குப்பை மேடொன்றில் நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள் என்று கூறுகிறது. சிறுநீர் கழிக்கும் போது அசுத்தம் படுமென்றிருந்தால் அந்த இடத்தில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்களாம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமானதாகும். உற்கார்ந்து கொண்டு சிறுநீர் கழிப்பதன் நோக்கமே அசுத்தம் நம்மீது படக்கூடாது என்பதுதான் அப்படியிருக்கும் போது உற்கார்ந்து சிறுநீர் கழித்தால் அசுத்தம் படுமென்றிருந்தால் அப்போது அண்களாக இருந்தாலும் பொண்களான இருந்தாலும் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதில் எந்தத் தவறும் இல்லை.

இக்கட்டான நிலைமைகளுக்குத் தான் இஸ்லாம் இந்தத் தீர்பை சொல்கிறது. மற்ற நேரங்களில் கண்டிப்பாக அமர்ந்து சிறுநீர் கழிப்பதுதான் நபி வழியாகும். இதனை கீழ் காணும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை நம்பி விடாதே! பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதிலிருந்து அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை.
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத் 24604