புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


Affichage des articles dont le libellé est சுத்தம். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est சுத்தம். Afficher tous les articles

mardi 1 novembre 2011

ஆண்கள் நின்று சிறு நீர் கழிக்கலாமா?

கேள்வி : Assalamalaikum
'நபி(ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் பேகுதி இடத்தில் நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரக் கூறினார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்" என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார் bukhari:224 appadi endral aangal nindru siruneer kalikkalama.

zzz zzz - India

பதில் : நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இதுதான்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்.
அறிவிப்பாளர்: ஹுதைஃபா (ரலி), நூல்: புகாரி 224
மேற்கண்ட ஹதீஸ் குப்பைகள் போடப்படும் குப்பை மேடொன்றில் நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள் என்று கூறுகிறது. சிறுநீர் கழிக்கும் போது அசுத்தம் படுமென்றிருந்தால் அந்த இடத்தில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்களாம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமானதாகும். உற்கார்ந்து கொண்டு சிறுநீர் கழிப்பதன் நோக்கமே அசுத்தம் நம்மீது படக்கூடாது என்பதுதான் அப்படியிருக்கும் போது உற்கார்ந்து சிறுநீர் கழித்தால் அசுத்தம் படுமென்றிருந்தால் அப்போது அண்களாக இருந்தாலும் பொண்களான இருந்தாலும் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதில் எந்தத் தவறும் இல்லை.

இக்கட்டான நிலைமைகளுக்குத் தான் இஸ்லாம் இந்தத் தீர்பை சொல்கிறது. மற்ற நேரங்களில் கண்டிப்பாக அமர்ந்து சிறுநீர் கழிப்பதுதான் நபி வழியாகும். இதனை கீழ் காணும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை நம்பி விடாதே! பிரித்துக் காட்டக் கூடிய குர்ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதிலிருந்து அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை.
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மத் 24604

samedi 30 juillet 2011

லாண்ட்ரியில் துவைத்த துணியை உடுத்தி தொழலாமா?

கேள்வி : assalamu allikkum i am working in abudhabi.my all cloths washing in laundry . in all labours cloths put it in same mechine ithan mulam washing mechinel wasing saitha dress ghalai namazuukku use pannum poldu ennudiia prayer (namaz) kuduma kudatha villakkam tharavum.

ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்வியின் தமிழாக்கம் : நான் அபுதாபியில் வேலை பார்த்து வருகிறேன். என்னுடைய துணிகளை லாண்டரி(துணி சலவை கடை)யில் கொடுத்து தான் சுத்தம் செய்யப்படுகிறது. வேலை பார்பவர்களின் அனைத்து துணிகளும் அதே machine மூலம்தான் துவைக்கப் படுகிறது. இதன் மூலம் துவைத்த துணியை நான் உடுத்திக் கொண்டு தொழுதால் என் தொழுகை கூடுமா?விளக்கம் தரவும்.
- Abdul razak sharfudeen sharfudeen UAE

பதில் : அன்பின் சகோதரருக்கு ! நீங்கள் தாராளமாக அந்த இயந்திரத்தில் போட்டு துவைத்துக் கொள்ளலாம். ஏன் என்றால் washing machine என்பது ஆடைகளை இலேசாகவும், தூய்மையாகவும் துவைத்துக் கொள்வதற்காக பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த இயந்திரமாகும்.

அதில் துவைத்த ஆடைகளை அணிந்து தொழுவதற்கு இஸ்லாம் எந்நேரத்திலும் தடை விதிக்கவில்லை.
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். (அல் குர்ஆன் 7 - 31)
இருப்பதில் சிறந்த, தூய்மையான ஆடையை அணிந்து தொழ வேண்டும் என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.

மற்றவர்களின் ஆடையுடன் உங்கள் ஆடை சேர்த்து துவைக்கப்பட்டாலும் அனைத்து ஆடையும் சுத்தம் செய்யவதற்காகவே போடப்படுகிறது. அனைவரின் ஆடையும் சுத்தமாக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் உங்கள் ஆடையில் நீங்கள் தொழுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.

பதில் : ரஸ்மின் MISc