புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


Affichage des articles dont le libellé est இஸ்லாத்தை தழுவுதல். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est இஸ்லாத்தை தழுவுதல். Afficher tous les articles

jeudi 22 septembre 2011

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். பெருமளவில் இஸ்லாமை தழுவும் பிரிட்டன் மக்கள்.


இது, கடந்த சில நாட்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.   

ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.
கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது.

----------------------
"பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றது. 

இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமை தழுவுகின்றார்கள். 

பழைய மதிப்பீடுகள், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை சுமார் 14,000 திலிருந்து 25,000 வரை இருக்கலாமென சொல்லுகின்றன.  

ஆனால், Faith Matters அமைப்பின் புதிய ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை இருக்கலாமென தெரிவிக்கின்றது. (அது மட்டுமல்லாமல்) ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 பிரிட்டன் மக்கள் இஸ்லாமை தழுவதாகவும் தெரிய வருகின்றது.  
ஸ்காட்டிஷ் 2001 மக்கள் தொகை கணக்குப்படி, 2001 ஆம் ஆண்டு வாக்கில், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை 60,699 என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு வரை புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை. 

ஒவ்வொரு வருடமும் எத்தனை மக்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அறிய விரும்பிய ஆய்வாளர்கள், லண்டனில் உள்ள பள்ளிவாசல்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.  

அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், கடந்த பனிரெண்டு மாதங்களில் பிரிட்டனின் தலைநகரில் மட்டும் சுமார் 1,400 பேர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இந்த தொகையை நாடு முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5,200 பேர் ஒவ்வொரு வருடமும் தங்களை இஸ்லாமிற்குள் ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர். இதனை ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிட்டோமானால், அங்கே சுமார் 4000 மக்கள் ஒவ்வொரு வருடமும் இஸ்லாத்தை தழுவுகின்றனர். 

இஸ்லாமை தழுவியவர்களின் நம்பத்தகுந்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள Faith Matters அமைப்பின் இயக்குனர் பியாஸ் முகல், "மக்கள் தொகை கணக்கெடுப்பு, உள்ளூர் வல்லுனர்களின் தகவல்கள், மசூதிகளில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரட்டப்பட்ட சிறந்த அறிவார்ந்த யூகம் இந்த அறிக்கை"என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், " எப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்றவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருப்பதை மிகச் சிலரே சந்தேகம் கொள்வார்கள்".

ஏன் அதிக அளவில் மக்கள் இஸ்லாமை தழுவுகின்றனர் என்று கேட்டதற்கு அவர்,"பொதுவாழ்வில் இஸ்லாமின் முக்கியத்துவத்திற்கும், அதிகரித்து வரும் தழுவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன். இஸ்லாம் எதைப்பற்றியது என்பதை அறிய ஆர்வம் காட்டுகினறனர் மக்கள். அவர்கள் அப்படி செய்யும் போது பல்வேறு திசைகளில் சென்று விடுகின்றனர். பலரும் தங்களுடைய சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் சிலரோ, எது குறித்து அவர்கள் ஆராய ஆரம்பித்தனரோ அதில் தாங்கள் கண்டுபிடித்தவற்றை விரும்ப ஆரம்பித்து அதையே தழுவி விடுகின்றனர்"

இது குறித்து கருத்து தெரிவிக்கும் Muslims4uk தளத்தின் நிறுவனர் இனாயத் பங்லவாலா, "இந்த முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என்றால், 600 பிரிட்டன் மக்களில் ஒருவர் இஸ்லாத்தை தழுவுபவராக இருக்கின்றார். இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். நிறைய இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக பல்கலைகழக மாணவர் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்களை களைய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிடுகின்றார். 
இஸ்லாமை தழுவுவதென்பது எளிதான ஒன்று. டெக்னிகலாக, முஸ்லிமாவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் ஷஹாதா கூறுவது மட்டும்தான். அதாவது, "இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர்" என்று மனப்பூர்வமாக சொல்லுவது மட்டும் முஸ்லிமாவதற்கு போதுமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் சொல்லுவதையே விரும்புகின்றனர்."
----------------------------

நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமை தழுவிய சில சகோதர/சகோதரிகளின் (கதிஜா ரீபக், ஸ்டுவர்ட் மீ, பால் மார்டின், தாவுத் மீலே, டெனீஸ் ஹோர்ஸ்லி, ஹானா தஜிமா) கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றது தி இண்டிபெண்டன்ட்.

அழைப்பு பணியில் தீவிரமாக செயல்படும் அப்துர் ரஹீம் கிரீன், யூசுப் சேம்பர்ஸ், ஹம்சா அன்ட்ரியஸ் மற்றும் ஆடம் தீன் போன்றவர்களின் நாடான பிரிட்டன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை தன்னகத்தே கொண்ட நாடு. தி இண்டிபெண்டன்ட் கூறியிருக்கும் இந்த தகவல்களுக்கு பின்னால், இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களை களைய பாடுபடும் அந்த இயக்கங்களுக்கு நிச்சயம் பங்கிருக்கவேண்டும்.

குறிப்பாக ஒரு அமைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,
  • Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள். 
  • Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும் இதர உதவிகளை செய்யும் பிரிவு. 
  • One Reason  - முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லாம் குறித்த தகவல்களை தயாரிக்கும் பிரிவு. 
  • The Big Debates - முஸ்லிமல்லாத மக்களிடம் ஆரோக்கியமான முறையில் உரையாடுவதே இந்த பிரிவின் குறிக்கோள். இதுவரை பல விவாதங்களை சந்தித்துள்ளது இந்த பிரிவு. இதில் பிரபல நாத்திகர்களும் அடக்கம். 

மேலே காணும் பிரிவுகளை உற்று நோக்கினால் IERAவின் செயல் திட்டம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
அழைப்பு பணியில் IERA போன்ற அமைப்புகள் எந்த அளவு தீவிரமாக செயல்படுகின்றனவோ அது போலவே பிரிட்டனின் இஸ்லாமிய இளைஞர் அமைப்புகளும் செயல்படுகின்றன. 

இஸ்லாமிற்கு எதிரான பிரச்சாரங்கள் சிலரால் வரலாறு முழுக்க தீவிரமாக கையாளப்பட்டிருந்தாலும்/கையாளப்பட்டாலும், அந்த பிரச்சாரங்கள் இது வரை வெற்றி பெற்றதில்லை. அதற்கு எதிர்மறையாக, தொடர்ந்து அதிக அளவில் மக்கள் இஸ்லாத்தை தழுவி தான் வருகின்றார்கள். இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. இறைவன் நாடினாலன்றி இனி மேலும் அந்த சிலர் வெற்றி பெற போவதில்லை.

இஸ்லாம் தொடர்ந்து முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளின் உள்ளங்களை ஈர்க்கும். சகோதரர் காலித் யாசின் ஒருமுறை குறிப்பிட்டது போல, நாம் தாவாஹ் என்னும் உள்ளங்களை துளைக்கும் குண்டை என்றும் நம்முடன் வைத்திருப்போம். அது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல ஒவ்வொரு முஸ்லிமின் கடமையும் கூட.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர் --- குரான் 3:104 

இறைவன் நம் சமூகத்திற்கு தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் இயக்கங்களையும், அறிஞர்களையும் தொடர்ந்து தந்தருள்வானாக...ஆமீன்.

இஸ்லாமிய இளைஞர்கள் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Please Note: 
மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. முழுமையாக படிக்க கீழே கொடுக்கப்படுள்ள சுட்டியை சுட்டவும்.
 
My sincere thanks to:
1. "The Independent" daily.

References:
1. The Islamification of Britain: record numbers embrace Muslim faith - Jerome Taylor and Sarah Morrison, The Independent, dated 4th January 2011. link
2. Islamic Education and Research Academy. link  
3. Federation of Student Islamic Societies. link

                                                                                                    நன்றி : சகோ.ஆஷிக் அஹமத்
அனுப்பியவர் : sp abdul malick

jeudi 15 septembre 2011

புதிய முஸ்லீம்களை மேடையேற்றி கவுரவிக்களாமா?

கேள்வி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை மேடையேற்றி கௌரவித்து விழாக்கள் நடத்த இஸ்லாம் அனுமதிக்கிறதா?

shaik shaik abdul rahman – india

பதில்ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்பது அவருடைய சுயவிருப்பத்தை பொருத்து நடக்கும் ஒரு செயல்பாடு. இஸ்லாம் தான் நேரான வழி என்று ஒருவர் அறிந்து கொண்டால் அவர் இஸ்லாத்தை தனது வழிமுறையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் இப்படி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை கவுரவித்து விழாக்கள் நடத்துவதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் எங்கும் வழிகாட்டுதல் கிடையாது. நபியவர்கள் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்த காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஸஹாபாக்கள் எவரையும் அவர்கள் மேடையேற்றி கவுரவப்படுத்தவுமில்லை, விழாக்கள் நடத்தவுமில்லை.

ஒருவருக்குறிய கவுரவம் என்பதே அவர் இஸ்லாத்தை ஏற்று அதன்படி நடப்பதுதானே தவிர அவருக்காக விழாக்கள் நடத்தி அவரை மேண்மைப்படுத்துவது அல்ல.

ஆக இப்படியான காரியங்களை நாம் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

பதில் : ரஸ்மின் MISc

vendredi 29 juillet 2011

தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் பேர்நெல் இஸ்லாத்தை தழுவினார் !

வேன் பேர்நெல்(நடுவில்)





தென் ஆப்ரிக்காவில் உள்ள போர்ட் எலிசபத்த்தில் பிறந்த 22 வயது, தென் ஆப்ரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் பேர்நெல்(Wayne Dillon Parnell) 28/7/2011 வியாழக்கிழமை அன்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.இவர் தென் ஆப்ரிக்கா சர்வேதச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்(Left-arm medium-fast) என்பது குறிப்பிடத்தக்கது.

பேர்நெல் கிறிஸ்துவ மார்க்கத்திலிருந்து இஸ்லாத்தை தழுவி இருக்கிறார்.இவருடைய பெயரை வலீத் ,பொருள் புதிதாக பிறந்த மகன் என்று தனது பெயரை மாற்றிக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

"வெய்ன் இரண்டு மாதங்களுக்கு முன்பே இஸ்லாத்தை பின்பற்ற முடிவு செய்துவிட்டார்," என்று தென் ஆப்ரிக்கா அணி மேலாளர் டாக்டர் முகம்மது மொசாஜி தெரிவித்துள்ளார்.

ஹாஷிம் ஆம்லா , இம்ரான் தாகிர் போன்ற சக வீரர்களின் வற்புறுத்தலினால்தான் பேர்நெல் இஸ்லாத்தை தழுவினார் என்ற வதந்தியை மொசாஜி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இது அவருடைய சொந்த முடிவு எனவும் மொசாஜி கூறினார்.
மொசாஜியின் மறுப்பை ஆதரிக்கும் வகையில் தென் ஆப்ரிக்காவின் மற்ற அணி வீரர்களும் ஹாஷிம் ஆம்லா , இம்ரான் தாகிர் , பேர்நெலை எந்த விதத்திலும் கட்டாயம் படுத்தவில்லை.ஆம்லாவின் ஒழுக்கம் ,சுற்றுப்பயணத்தின் போதும் தினசரி தொழுகை,மதுபான கொண்டாட்டங்களில் பங்கேற்காதது ,தென் ஆப்பிரிக்க அணியின் விளம்பரதாரரான பீர் கம்பெனியை விளம்பரப்படுத்த மறுத்தது போன்ற இவரின் செயல் அனைவரையும் ஈர்க்கத்தான் செய்தது.

பேர்நெல்லுடைய சக விளையாட்டு வீரர்கள் ,கடந்த IPL(Indian premier League) போட்டியில் "பேர்நெல் மது அருந்தாததை வைத்தே அவர் தன் மதத்தை மாற்றுவதில் எவ்வளவு மும்முரமாக இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டோம்" என்று தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம் :

ஒரு முஸ்லிமின் ஒழுக்கத்தை பார்த்தே மாற்று மதத்தினர் இஸ்லாத்தை நேசிக்க ஆரம்பிக்கின்றனர்.நாமும் இஸ்லாத்தின் ஒழுங்குகளை பேணி நமக்கு நன்மை தேடிக் கொள்வதோடு பல மாற்று மத சகோதரர்கள் நேர்வழி பெற உதவுவோம்.


நன்றி : sport24.co.za

vendredi 25 mars 2011

இஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா ! அல்ஹம்துலில்லாஹ்


நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகையும்,பாடகருமான "பூஜா லாமா" ஐந்து மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார் அல்ஹம்துலில்லாஹ்.இவருடைய வயது 28 என்பதும் இவர் புத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது துபாய் கத்தார் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது காத்மாண்டு என்ற இடத்தில இஸ்லாத்தை தழுவினார். 

பேட்டி ஒன்றில், இஸ்லாத்தை தழுவிய பிறகு பூஜா லாமா என்ற தனது பெயரை "ஆம்னா ஃபாரூகி" என்று மாற்றிக் கொண்டதாக கூறினார்.மேலும்"இஸ்லாம் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் மனித நேயத்தின் அடிப்படையில் தீர்வு அளிக்கிறது.இஸ்லாத்தின் அழகு தனக்கு நேர் வழி காண்பித்தது இல்லையெனில் நான் இருளிலேயே இருந்திருப்பேன்.இஸ்லாம் அமைதியான மதம் என்பதை நான் உலகுக்கு கூற விரும்புகிறேன்." என்பதாக கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் "நான் காரிருளில் வாழ்ந்து வந்தேன் ,தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றேன்.இஸ்லாம் என் வாழ்வில் ஒளி ஏற்றியது நான் இப்பொழுது ஆபாசம்,மது ,புகை அகத்தமான உணவுகள் உண்பது அனைத்தையும் விட்டு விட்டேன்.இஸ்லாத்தை பற்றி உலகம் கூறும் அனைத்தும் அவதூறு என்பதை உணர்ந்து கொண்டேன்" என்றார் அவர்.

பூஜா லாமா என்ற தனது பழைய பெயரை கொண்டு தன் பழைய வாழ்கையை நினைவு படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.இஸ்லாத்தை ஏற்ற பின் தனது நடிக்கும் தொழிலையும்,குடி,புகை போன்ற தீய பழக்கங்களை விட்டு விட்டார் ஆனால் இவர் ஆபாசமாக நடித்த படங்களைக்காட்டி இந்த பெண்ணின் மனதை நோகடித்துக் கொண்டிருக்கும் அவலமும் ஒரு புறம நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.அந்த பெண்ணிற்கு நேர் வழி காட்டிய அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும்.