புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


Affichage des articles dont le libellé est நபிகள் நாயகம்(ஸல்). Afficher tous les articles
Affichage des articles dont le libellé est நபிகள் நாயகம்(ஸல்). Afficher tous les articles

dimanche 10 novembre 2013

இறுதி நபி



எனக்கும் எனக்கு முன் சென்ற நபிமார்களுக்கு உதாரணம் அழகாக அழங்கரித்து ஒரு வீட்டைக்கட்டி விட்டு
 ஒரு மூலையில் செங்கல் அளவிற்க்கு இடத்தை விட்ட ஒரு
 மனிதனைப்போன்று. மக்கள் அந்த வீட்டை சுற்றிப்பார்த்து ஆச்சிரியம் அடைந்து அந்த செங்கல் பதிக்கப்பட்டு இருக்கக்கூடாதா ? என்று கேட்கலானார்கள் நான் தான் அந்த செங்கல்  நான் தான் நபிமார்களின் முத்திரையானவன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா  (ரலி)    நூல்: புகாரி(3535)

                
தனக்கு பின்னால் வஹியோ தூ‎தரோ  வரவேண்டியதில்லை என்பதை முன்அறிவிப்பு செய்யும் விதமாக வீட்டை தூதுத்துவத்துக்கும் குறையை முழுமைப்படுத்துகின்ற செங்கல்லை  தனக்கு உதாரணமாக கூறியுள்ளார்கள். இன்னும் நபிமார்களின் முத்திரை என்றும் சாதாரணமான மக்களுக்கு விளங்கும் விதமாக கூறியுள்ளார்கள். ஒரு பொருளை முத்திரை  (சீல்)  வைத்து அடைத்து விட்டால் அது திறக்கப்படாமல் தான், நாம் பயன்படுத்தமுடியும். அதுபோலத்தான்  தூதுத்துவம் என்பதும்,   தான் வந்ததால் முத்திரையிடப்பட்டுவிட்டது எனவே தூதுத்துவம் அடைக்கப்பட்ட பொருளைப்போன்று ஆகிவிட்டது என்பதை கு:றிக்கும் விதமாக நபியவர்கள் மிக நுட்பமான உதாரணத்தை கூறியுள்ளார்கள். இந்த உதாரணத்தின் மூலம் வருங்காலத்தில் எந்த நபியும் வர வாய்ப்பு இல்லை என்பதை முஸ்லிம்கள் உறுதியாக நம்பவேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளார்கள். பிற்காலத்தில் தானும் ஒரு நபிதான் என்று வருபவர்களை நம்பக்கூடாது என்பதற்கும் இந்த உதாரணத்தின் மூலம் அறிவுரை நபிகளார் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இன்னும் நபியவர்கள் இந்த கருத்தை வலுப்படுத்தும் விதமாக கூறியுள்ள செய்திகள் ஏராளம் உள்ளன.

எனக்கு பின் எந்த நபியும் ரஸூலும் இல்லை

தூதுத்துவமும் நபித்துவமும் முற்றுபெற்று விட்டது எனக்குப்பின்னால் எந்த நபியும் ரஸூலும் இல்லை.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் நூல்         : திர்மிதி(2198)

                      

 நபியவர்களுக்குரிய தனிப்பெயர்

எனக்கு பல பெயர்கள் உண்டு; நான் முஹம்மது (புகழப்பட்டவர்) ஆவேன். இன்னும் நான் அஹ்மத் (இறைவனை அதிகம் புகழ்பவர்) ஆவேன். நான் மாஹீ (அழிப்பவர்) ஆவேன், அல்லாஹ் என் மூலம் இறை மறுப்பை அழிப்பான். நான் ஹாஷிர் (ஒருங்கிணைப்பவர்) ஆவேன்; நான் ஆகிப் (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன் என்று நபிகளார் கூறினார்கள்.

 அறிவிப்பவர்  : ஜுபைர்  பின் முத்யிம் (ரலி) நூல்கள்          : புகாரீ (4896), முஸ்லிம் (4342)

              

அல்ஆகிப் (இறுதியானவன்) என்ற தன் பெயரை விளக்கும் போது எனக்கு பின்னால் எந்த நபியும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ள செய்தி கூடுதலாக முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

நபி(ஸல்) அவர்களுக்குரிய தனிச்சிறப்பு

நபியவர் கூறினார்கள் பிற நபிமார்களைவிட ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்.

1 நான் ஒருங்கிணைந்த (பொருள்களை குறிக்கும்) சொற்கள்  வழங்கப் பட்டுள்ளேன்.

2 (எதிகளின் உள்ளத்தில் என்னைப்பற்றிய) பயம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றிஅளிக்கப்பட்டது

3 போர்பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

4 எனக்கு பூமிமுழுவதும் தூய்மையானதாகவும் பள்ளிவாயில் களாகவும் ஆக்கப்பட்டுள்ளது

5 நான் மனிதஇனம் முழுவதும் தூதராக அனுப்பப்ட்டுள்ளோன்

6 என்னுடன் நபிமார்கள் முற்று பெற்று விட்டார்கள்

 அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்   இப்னுமாஜா (43)

 

அல்லாஹ் எல்லா நபிமார்களுக்கும் அற்புதங்களையும் தனிச்சிறப்புகளையும் வழங்கியிருக்கிறான் அந்த வகையில் நபியவர்கள் தனக்குரிய தனிச்சிறப்புகளைப்பற்றிகூறும் போது பிறநபிமார்களுக்கு இல்லாத தனிச்சிறப்பாக தன்னோடு நபிமார்களின் வருகை முடிந்து விட்டது என்பதை குறிப்பிட்டு கூறுகிறார்கள் ஏனென்றால் நபியவர்கள் வரை ஒரு நபிக்குப்பின் மற்றொரு நபி என்று தான் இருந்தது. அவர்கள் வருகைக்கு பிறகு அது தடைசெய்யப்பட்டுவிட்டுது.

கலீஃபாக்கள் வருவார்கள்

நபிமார்கள் பனூ இஸ்ரவேலர்களை நிர்வகிப்பவர்களாக இருந்தனர்.ஒரு நபி மரணிக்கும்  போது அவருக்கு பின்னால் மற்றோரு நபி வருவார் எனக்கு பின்னால் எந்த நபியும் இல்லை கலீஃபாக்கள் அதிகமாக வருவார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா  (ரலி)   நூல் : புகாரி (3455)

நபியவர்கள் பனூ இஸ்ரவேலர்களின் சமூதாயத்தை நபிமார்கள் வந்த நிலையைப் பற்றி தன்னுடைய சமூதாயத்தோடு  ஒப்பிட்டு கூறும் போது அந்த சமூதாயத்தில் ஒரு நபிக்குப் பின் மற்றொரு நபி தொடர்ந்து வருவார்.ஆனால் தன் சமு‏தாயத்தில் இறைத்தூதர்கள் வரமாட்டார்கள் கலீஃபாக்கள் மட்டும் தான் வருவார்கள் என்பதை தெளிவாக கூறியுள்ளார்கள்  .

மேலும் திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்கள் இவ்வுல அனைத்து மக்களுக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று மிகத் தெளிவாக கூறுகிறது.

உம்மை மனித குலத்துக்குத் தூதராக அனுப்பியுள்ளோம். (அல்குர்ஆன் 4:79)

158. ""மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். (அல்குர்ஆன் 7:158)

இந்தக் குர்ஆன் மூலம் உங்களையும், இதை அடைவோரையும் நான் எச்சரிக்கை செய்வதற்காக இது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது'' (அல்குர்ஆன் 6:19)

இந்த திருக்குர்ஆனின் போதனைககள் யாருக்கெல்லாம் கிடைக்கிறதோ அவர்கள் அனைவருக்கும் நபிகளாரே இறைத்தூதர் என்று இவ்வசனம் கூறுகிறது.

இன்னும் இதுபோன்ற பல வசனங்கள், நபி (ஸல்) அவர்கள் தான் இவ்வுலக அனைவருக்கும் இறைத்தூதர் என்று தெளிவுபடுத்துகிறது.

பொய்யர்களின் வருகை

நபி(ஸல்) அவர்களின் புகழழுக்கு ஆசைப்பட்டும் மக்களிடத்தில் ஆன்மீகத்தின் பெயரால் பணம் பறிக்கவேண்டும் என்ற நோக்கத் தோடும் தனக்காக ஒரு கூட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நபி(ஸல்) அவர்களுக்கு பின் முஸைலமா  போன்ற பொய் நபிகளும் இன்றைய காலத்தில் மிர்சாத் குலாம்,ரஷாத் கலீபா போன்ற போலித் தூதர்களும் தங்களை நபியன்று வாதிட்டனர் இவர்களைப்பற்றி நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இணைவைப்பாளர்களோடு சேர்ந்து கொண்டு சிலைகளை வணங்கும் வரையும் என்னுடைய சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் வந்து அவர்கள் அனைவரும் தன்னை நபியன்று வாதிடுகின்றவரையும் மறுமைநாள் ஏற்படாது  அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரலி)  நூல்: புகாரி(3535)

                       

நபியவர்கள் கூறினார்கள் நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற நிலையில் விட்டுச்செல்கிறேன் இதன் இரவும் பகலைப்போன்றது அழிந்து நாசமாகக்கூடியவனைத்தவிர வேறுயாரும் வழிதவறமாட்டார்கள்

அறிவிப்பவர்  : இர்பால் பின் ஸாரயா ரலி) நூல்  : இப்னுமாஜா (43)

திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் நேரடியாகவும் உதாரணம் மூலமும் நபி(ஸல்) அவர்களே இறுதித் தூதுவர், அவர்களுக்கு பிறகு எந்த நபியும் வரமுடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள். எனவே தெளிவான வழிகாட்டுதலை பின்பற்றி நடப்போம்.

                                                                                                                  அர்ஷத் அலீ, பனைக்குளம்

dimanche 23 septembre 2012

நபிகள் நாயகத்தை பற்றிய படம் - ஒரு மிகப்பெரிய சூழ்ச்சி

சமீபத்தில் நாம் உயிரினும் மேலாக மதித்து வரும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை தரக்குறைவாக சித்தரித்து சினிமா வெளியிட்டதையும் பிரான்ஸ் நாட்டில் வாரப் பத்திரிக்கையில்   நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை தரக்குறைவாக சித்தரித்து கார்ட்டூன் படமும் வெளியிட்டுட்டதையும் அதன் விளைவாக உலக மக்களிடையே பலத்த கொந்தளிப்பையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்.இந்த இரு சம்பவங்களும் எதனால் ஏற்ப்பட்டது? இதன் வேர் என்ன ?இதன் தாக்கம் என்ன? என்பதை பார்த்தொமேயானால் ஒன்றை தெளிவாக அறிந்து கொள்ள முடியும், உலகளவில் இஸ்லாத்தின் வளர்ச்சி அபரிதமாக கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளம்போல் பரவி வருகிறது, இதை நேரடியாக தடுக்க திராணியற்றவர்கள் மீடியாவை தவறான முறையில் நமக்கு எதிராக பயன்படுத்தியுள்ளார்கள் ஏனென்றால் நேருக்கு நேர் நின்று போரிட தகுதியும் தைரியமும் இல்லாத புறமுதுகு காட்டிவரும் கோழைகளால் இவ்வாறுதான் செய்ய முடியும்.

மேலும் எந்த ஒரு தனி முஸ்லிமையோ, தனி இயக்கத்தையோ, தலைவரையோ, அல்லது (இஸ்லாமிய) நாட்டையோ தாக்கி பேசினால் உலக முஸ்லிம்களிடையே எந்த கலவரத்தையும் ஏற்படுத்த முடியாது. மேலும் வளர்ந்துவரும் இஸ்லாத்தில் வளர்ச்சியை கட்டுப் படுத்த ஒரே வழி உலக முஸ்லிம்கள் தங்களது உயிரினும் மேலாக மதித்து வரும் மாநபி (ஸல்) அவர்களை விமர்சித்தால் மட்டுமே அதன் விளைவுகள் உலகெங்கும் பிரதிபலிக்கும் என்பதை அறிந்தே திட்டமிட்டு செயல்பட்டுள்ளார்கள். இதை அறியாத ஒரு சிலர் பொதுசொத்தை சேதப் படுத்துவது, வன்முறைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் இது போன்ற அசம்பாவிதங்களை காரணம் காட்டியே இஸ்லாமியர்கள் அனைவரும் இப்படிதான் என்றும் அவர்களின் மதமும் இப்படிதான் போதிக்கிறது என்றும் நடுநிலையாளர்களின் மனங்களில் வெறுப்பை விதைக்கின்றார்கள்.

குறிப்பாக அமெரிக்கா,லண்டன் மற்றும் பிரான்சில் மிக அதிகளவில் இஸ்லாத்தின்பால் கவரப்பட்டு மாறிவருகிறார்கள் அவர்களை அதிலிருந்து திசை மாறவைத்து குழப்பி மனதை மாற்ற மீடியா ஒன்றுதான் வழி மேலும் உலக மீடியா இஸ்லாத்தை எதிர்ப்பவர்களின் கைகளில் இருப்பதால் அதை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார்கள் இந்த சூழ்ச்சியை நாம் தெளிவாக புரிந்து கொண்டு நாம் வன்முறையில் ஈடுபடாமலும் அமைதியான முறையிலும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். மீடியாவை கொண்டே அதற்க்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும். ஒவ்வொருவரும் facebook மற்றும் இணையதளங்கள் வாயிலாகவும், துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் மேலும் உள்ளூர் தொலைகாட்சிகள் போன்ற அணைத்து மீடியாக்களையும் பயன்படுத்தி இஸ்லாத்தின் தவறான புரிதல்களை களைய வேண்டும் தவறான பிரசாரத்திற்கு பதிலடியும் கொடுக்க வேண்டும்.

நமது கோபத்தை தவறான வழியில் வெளிப்படுதிவிடகூடாது அது இஸ்லாத்தின்பால் கவரபபட்டவர்களின் மனங்களில் வெறுப்பை ஏற்படுத்திவிடும் அவர்களில் சூழ்ச்சிக்கு பலியாகிவிடக்கூடாது. மேலும் அல்லாஹ்விடம் பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் உதவி தேடுவோமாக, அல்லாஹ்வின் பிடி கடுமையானது.

குறிப்பு : நபிகள் நாயகத்தை பற்றி இழிவாக உருவாக்கப்பட்ட படத்தை, பிரபல வீடியோ ஷேரிங் இணையதளமான யூட்யூப் நீக்கப் மறுப்பதால்,கூகிள்(Google) பொருட்கள் அனைத்தையும் தவிர்க்கவேண்டும்.நாமும் FRTJ இணையதளத்தை Bloggerஇலிருந்து மாற்ற இருக்கிறோம்.
நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (அல் குர்ஆன் 3:200)
கட்டுரை : இன்சாப் 
ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர்