
மேற்படி நபிமொழியைப் படித்த பின்பாவது பிறந்தநாள் விழாவினை ஆதரிக்கக் கூடிய சகோதரர்கள் கிறிஸ்த்தவர்களுக்கு ஒப்பாகக் கூடிய பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை விட்டொழிக்க முன் வர வேண்டும்.
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று(நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன் 49:16)
‘நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி(முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்’ (அல்குர்ஆன் 33:06)
மேலும், ஒரு மனிதனின் பெற்றோர், உற்றார், உறவினர், சொத்து, செல்வங்கள் அனைத்தையும் விட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நேசத்திற்குரிய வர்களாக மாறாத வரை அவர் இறை நம்பிக்கையாளராக முடியாது என்பதை பின்வரும் நபிமொழி மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் உமர் பின் அல்கத்தாப்(ரழி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிரவுள்ள எல்லாவற்றையும்விட நீங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று சொன்னார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இல்லை என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக உம்மை விடவும் நானே உமக்கு மிகவும் பிரியமானவனாக ஆகும் வரை(நீர் உண்மையான இறை நம்பிக்கையாளர் ஆக முடியாது) என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்களை நோக்கி உமர்(ரழி) அவர்கள், இப்போது அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைவிடவும் தாங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்போதுதான் உமரே! (சரியாகச் சொன்னீர்கள்) என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹிஷாம்(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6632)
இன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும்
வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.







