புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


Affichage des articles dont le libellé est விவாதம். Afficher tous les articles
Affichage des articles dont le libellé est விவாதம். Afficher tous les articles

mardi 3 mai 2011

விவாதத்திலிருந்து கிறிஸ்தவர்கள் தப்பி ஓட்டம்

ஜெர்ரி தாமஸ் என்பவர் பல இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்களை விவாதத்திற்கு அழைத்ததாகவும், யாரும் தன்னோடு விவாதம் செய்ய முன்வரவில்லை என்றும், குறிப்பாக ஜாகிர் நாயக் அவர்களை தான் விவாதம் செய்ய அழைத்து அவர் தன்னோடு விவாதம் செய்யாமல் ஓட்டமெடுத்து விட்டார் என்றும் அதற்கான ஆதாரங்களோடு தான் ஜாகிர் நாயக்கிற்கு விவாத அழைப்பு விடுத்து அவர் விவாதத்திற்கு வராமல் பின்வாங்கி ஓடிய செய்தியையும் கடித ஆதாரங்களுடன் தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த இடத்தில் ஜெர்ரி தாமஸ் என்ற இவர் விவாதம் செய்கின்றேன் என்ற பெயரில் கூத்தடிக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். அதாவது, ஜெர்ரி தாமஸ் என்பவரது பாஷையில் விவாதம் செய்வதென்பது என்னவென்றால், ஒரு தலைப்பை எடுத்துக் கொள்ள வேண்டுமாம்; அந்த குறிப்பிட்ட தலைப்பில் இவர் ஒரு மணி நேரம் உரையாற்றுவாராம்; நாம் ஒரு மணி நேரம் உரையாற்ற வேண்டுமாம்! இந்த இரண்டு மணி நேரத்தோடு விவாதம் முடிவடைந்து விடுமாம். என்னே அற்புதமான விவாத வழிமுறை(?). இந்த பாணியில் விவாதம் செய்ய இவர் அழைத்த விவாத அழைப்பையும் கூட ஜாகிர் நாயக் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நமக்கு இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஏனெனில் குர் ஆன ஹதீஸ் மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்பதைக் கொள்கையாகக் கொண்டவர்களால் மட்டுமே இவர்களுடன் விவாதம் செய்ய முடியும். கொள்கை சரி இல்லாமல் எவ்வளவு திறமை உள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் விவாதம் செய்ய மறுத்து ஓட்டம் பிடிக்கத் தான் செய்வார்கள்.

ஜெர்ரி தாமஸ் என்பவர் முஸ்லிம் இமாம்கள் அறிஞர்கள் என்ற பெயர் பெற்றவர்கள் உளறியவைகளை திரட்டி வைத்துக் கொண்டு அது தான் இஸ்லாத்தின் கருத்து என்று சித்தரிப்பது தான் இவரது வழி முறை. ஜாகிர் நாயக்கோ இன்னும் பலரோ இமாம்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை சொல்வதால் இமாம்களின் சில உளறல்களை ஜெர்ரி தாமஸ் போன்றவர்கள் எடுத்து வைக்கும் போது அவர்கள் வாயடைக்கும் நிலை ஏற்படும்.

mardi 19 avril 2011

விவாதிப்பது ஹராமா ? ஸில்மியின் ஸில்மிசத்திற்கு பதில். ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாம்!


அன்பின் சகோதரர்களே ! சத்தியத்தை தயங்காமல் எத்திவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமலும், இறைவனுக்கு மாத்திரமே அஞ்சியும் நாம் செயல்படுத்தி வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தங்களை மார்க்க அறிஞர்களாக மக்கள் மத்தியில் இனம் காட்டி தங்களின் பெயர்களை நீர் கொழும்பில் இருந்து யாழ்ப்பானம் வரை எழுதி வைத்துக் கொள்ளும் யஹ்யா சில்மி போன்றவர்கள் மார்க்கத்திற்கு விரோதமான ஸலப் கொள்ளை என்ற ஒரு புதிய வழிகெட்ட கொள்கையை பரப்ப முற்படுவதும் அதற்கெதிராக இறைவனின் உதவியால் குா்ஆன் சுன்னா அடிப்படையில் நாம் விளக்கம் சொல்லி வருவத ும் வாசகர்கள் அறிந்த ஒன்றுதான்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஸலபுக் கொள்கை என்ற பெயரில் குா்ஆனையும், நபியவர்களின் வழிகாட்டுதலையும் விட்டும் விலகி, ஸஹாபாக்களின் சொல் செயல்பாடுகளும் மார்க்கமாக மாறும் என்ற கொள்கையை மக்கள் மத்தியில் பரப்ப முயலும் சில்மி போன்றவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களுக்கெல்லாம் தொடராக நாம் பதில் கொடுத்து வந்தோம்.

அந்த பதில்களில் ஒன்றுக்குக் கூட குா்ஆன், சுன்னா அடிப்படையில் மறுப்புத்தர வக்கற்ற ஸ(க)லபிக் கும்பல் மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைக்க ஆரம்பித்துள்ளது.