புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


vendredi 17 juin 2011

நபிமார்கள் வரலாறு 5 (ஆதம் நபி வரலாறு 1)


இந்த உலகைப் படைத்து பாதுகாத்து ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய ஏக இறைவன் அல்லாஹ் உலகில் வாழ்வதற்குறிய சிறப்பான படைப்பாக மனிதனை ஏற்படுத்தினான்.

ஆனால் மனிதனோ தான் நினைத்தவாறு வாழ்ந்து உலக வாழ்வுக்குப் பிறகுள்ள நிறந்தரமான மறுமை வாழ்வில் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக மனிதனை சீர் திருத்தம் செய்வதற்கு காலத்திற்குக் காலம் நபிமார்களை தூதர்களை அனுப்பி மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை கற்றுத் தந்தான்.

மனிதப் படைப்பை இறைவன் ஏற்படுத்தியதில் முதல் படைப்பாக ஆதாம் என்ற ஆதாமையும் அவருக்குத் துணையாக ஏவாள் என்ற ஹவ்வா அவர்களையும் ஏற்படுத்தினான்.

இந்த ஆதம் (அலை)அவர்களைப் பற்றி வரலாறு என்ற பெயரில் பலர் பல புனைக் கதைகளையும் தங்கள் சுய எண்ணங்களையும் எழுத்தாக்கியுள்ளனர்.

குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் நபிமார்களின் வரலாற்றை தொகுக்கும் இந்த முயற்சியில் ஆதம்(அலை)அவர்களின் வரலாற்றை முதலாவதாகப் பார்ப்போம்.

இந்தத் தொடரில்.....
  • முதல் மனிதர் ஆதாமா? ஏவாளா?
  • ஆதம் எங்கு இறக்கப்பட்டார்?
  • ஆதம் இலங்கையில் இறக்கப்பட்டாரா?
  • இலங்கை முஸ்லீம்களின் பூர்விகம் என்ற புத்தகத்திற்கு பதில்.
  • ஆதம் நபியின் மொழி தமிழா?
  • இலங்கையையும் இந்தியாவையும் பிரிப்பது ஆதாம் பாலமா?

mercredi 15 juin 2011

கிரகணத் தொழுகை

தலைப்பிறை பற்றி முடிவு செய்வதற்கான ஆதாரங்களில் சூரிய சந்திர கிரகணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எவரது மரணத்திற்காகவோ, பிறப்புக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
நூல்: புகாரி 1042

பிறையை தீர்மானிப்பது

பிறையை எப்படித் தீர்மானிப்பது என்பதைப் பற்றிய ஆய்வில் கிரகணம் குறித்த மார்க்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவது அவசியமாகும். முதல் பிறை, பௌர்ணமி, அமாவாசை போன்றவை பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படும் மாற்றங்களாகும்.

இதே போல் சூரிய, சந்திர கிரகணங்களும் பூமி, சந்திர சுழற்சியை அடிப்படையாகக் கொண்டே நிகழ்வதால் கிரகணத்தைப் பற்றி நாம் எடுக்கும் முடிவுகள் பிறை விஷயத்திலும் பிரதிபலிக்கும்.

இதைக் கவனத்தில் கொண்டு கிரகணம் குறித்து ஆராய்வோம்.கிரகணம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் தொழுவது நபிவழி என்பதை மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது. இன்று அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்படுவதை நாம் தொலைக் காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

mardi 14 juin 2011

முனாஃபிக்குகளின் மறுமை நிலை என்ன ?

முனாஃபிக்குகளின் மறுமை நிலை என்ன ?
  • முனாஃபிக்குகளின் மறுமை நிலை என்ன ?
  • பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்


    lundi 13 juin 2011

    சுன்னத்தான நான்கு ரகாத் தொழுகையை இரண்டு இரண்டாக தொழலாமா ?

    சுன்னத்தான நான்கு ரகாத் தொழுகையை இரண்டு இரண்டாக தொழலாமா?
    • சுன்னத்தான நான்கு ரகாத் தொழுகையை இரண்டு இரண்டாக தொழலாமா ?
    • லுஹா தொழுகையை எப்படி பிரித்து தொழுவது ? 
    • பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்

    ஹஜ் பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பாஸ்போர்ட்டை அடுத்த மாதம் 25-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்

    புதுடெல்லி, ஜுன்.13-

    இந்திய ஹஜ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை அடுத்த மாதம் (ஜுலை) 25-ந் தேதிக்குள் அந்தந்த மாநில ஹஜ் கமிட்டியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.

    அகில இந்திய ஹஜ் கமிட்டியின் மாநாடு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில், வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதர், ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதர், பல்வேறு மாநிலங்களின் ஹஜ் கமிட்டியின் தலைவர்கள், மத்திய ஹஜ் கமிட்டியின் உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

    மேற்கண்ட தகவலை, இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் தலைவருமான `பிரசிடெண்ட்' அபூபக்கர் தெரிவித்தார்.

    - செய்தி : தினத்தந்தி

    samedi 11 juin 2011

    இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 3

    ஃபிரான்சில் 11/06/2011 அல்லாஹ்வின் அருளால் ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்தினர் மூன்றாவது முறையாக (பெண்களுக்காக) நடத்திய இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது.இது முதன் முறையாக பெண்களுக்காக நடத்தப் பட்ட நிகழ்ச்சி ஆகும்.இந்நிகழ்ச்சியில் மார்க்கம் சம்பந்தப் பட்ட கேள்விகளுக்கு சிறந்த முறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் p.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதிலளித்தார்கள்.இந்த நிகழ்ச்சி ஆன்லைன்பிஜே இணையத்தளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப் பட்டது.இதில் பல பெண்கள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றனர்.. இனியும் இதுபோன்ற நிகழ்சிகளை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள் .

    நிகழ்ச்சியின் நடுவே ஒரு கிருத்துவ சகோதரி கலந்து கொண்டு கேள்விகள் கேட்டு தெளிவு பெற்று சென்றார் . அவருக்கு பிரார்த்தனை (துஆ செய்யும் முறைகள் ) என்ற தலைப்பில் ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்தினரால் தொகுக்கப்பட்ட பிரசுரம் அன்பளிப்பு செய்யப் பட்டது ,மேலும் அனைவருக்கும் வழங்கப் பட்டது .பின்பு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது .

    - ஃபிரான்ஸ் தௌஹீத் ஜமாத்

    சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் – மாநிலத் தலைவர் பேச்சு!

    சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் – மாநிலத் தலைவர் பேச்சு!
    Download Video
    • இன்ஷா அல்லாஹ் சட்ட மன்றும் கூடும் முதல் நாள் சட்மன்ற முற்றுகைப் போராட்டம் – மாநிலத தலைவர் பேச்சு!

    செய்தி : TNTJ.NET