புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


jeudi 4 avril 2013

சுன்னத் தொழுகை


உபரியான வணக்கங்கள்  -சுன்னத் தொழுகை

அல்லாஹ் தன்னை வணங்குவதற்காக மனித சமுதாயத்திற்கு சில வணக்கங்களைக் கடமையாக ஆக்கியுள்ளான். இந்தக் கடமையான வணக்கங்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக நிறைவேற்றியே ஆக வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது அதற்காக அல்லாஹ் நற்கூலியும், அவற்றை நிறைவேற்றாதவர்களுக்குத் தண்டனையும் வழங்குகின்றான்.
ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் தன்னுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக உபரியான வணக்கங்களைச் செய்து கொள்வதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளதோடு ஆர்வமூட்டியும் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போன்ற உபரியான வணக்கங்களை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன். நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி
உபரியான வணக்கங்கள் புரிவது இறைவனிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி நமது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வதற்கு வழி வகுக்கும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.
கடமையான வணக்கங்களை நிறைவேற்றும் போது மனிதர்கள் என்ற முறையில் குறைபாடுகள் ஏற்படலாம். இந்தக் குறைபாடுகள் அல்லாஹ்விடத்தில் நம்மைக் குற்றவாளிகளாக ஆக்கி விடக்கூடாது. எனவே கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளுக்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வழியில் உபரியான வணக்கங்கள் புரிவது கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை ஈடுசெய்வதாக அமைந்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி, "என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்" என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அறிவிப்பவர் : தமீமுத் தாரி (ரலி),
நூல் : தாரமீ
கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி விடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன. எனவே கடமையான வணக்கத்தை நிறைவேற்றி விட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடாமல் உபரியான வணக்கங்களையும் நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாக நாம் ஆக வேண்டும்.
இஸ்லாம் கூறும் வணக்க வழிபாடுகளில் முதன்மையானது தொழுகை என்பதை அறிவோம். அந்த அடிப்படையில் அன்றாடம் ஐவேளை தொழுவது ஒவ்வொருவருக்கும் கட்டாயக் கடமையாகும். இவை தவிர உபரியான தொழுகைகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்கும் முன்போ, அல்லது பின்போ வழமையாக சுன்னத் தொழுகைகளை தொழுது வந்துள்ளனர். அந்தத் தொழுகைகளைப் பற்றியும் அவற்றின் சிறப்புகளையும் பார்ப்போம்.
யார் இரவிலும், பகலிலும் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவருக்காக சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரலி),
நூல் : முஸ்லிம்
லுஹருக்கு முன் நான்கு ரக்அத்துக்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், பஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்துக்கள் ஆகிய சுன்னத்தான பன்னிரண்டு ரக்அத்துகளை யார் தொழுகின்றார்களோ அவருக்காக சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) ,
நூல் : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா
நபி (ஸல்) அவர்கள் பஜ்ருடைய சுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரியான தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி
பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகள் இந்த உலகம் இன்னும் அதில் உள்ளவை அனைத்தை விடவும் மிகச் சிறந்தவையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : முஸ்லிம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரை சுபுஹுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழக் கண்டார்கள். அப்போது அவர்கள், "சுபுஹ் தொழுகை இரண்டு ரக்அத்துகள் தான்" என்று சொன்னார்கள். அதற்கு அவர், "சுபுஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லை. அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்" என்று பதிலளித்ததும், நபி (ஸல்) அவர்கள் மவ்னமாகி விட்டார்கள்.
அறிவிப்பவர் : கைஸ் பின் அம்ர் (ரலி),
நூல் : திர்மிதீ, அபூதாவூத்
யார் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லையோ அவர் அவ்விரு ரக்அத்துகளையும் சூரியன் உதித்த பின் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : திர்மிதி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்துகளையும், ஃபஜ்ரு தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்துகளையும் விடவே மாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி
யார் லுஹருக்கு முன்பு நான்கு ரக்அத்துகளும் பின்பு நான்கு ரக்அத்துகளும் தொழுகின்றாரோ அவருக்கு நரகத்தை அல்லாஹ் தடுத்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரலி),
நூல் : திர்மிதி
அஸருக்கு முன் நான்கு ரக்அத்துகள் தொழும் மனிதருக்கு அல்லாஹ் அருள் செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : திர்மிதீ, அபூதாவூத், இப்னு மாஜா
மக்ரிபுக்கு முன் நீங்கள் தொழுங்கள். மக்ரிபுக்கு முன் தொழுங்கள். மக்ரிபுக்கு முன் விரும்பியவர்கள் தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் அதை ஒரு சுன்னத்தாகக் கருதக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் அல் முஸ்னி (ரலி),
நூல் : புகாரி
நான் உக்பா பின் ஆமிர் (ரலி) யிடம் சென்று, "அபூதமீம் மக்ரிபுக்கு முன் இரண்டு ரக்அத் தொழுகிறார்களே! இது உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் இவ்வாறு செய்து வந்தோம்" என்று விடையளித்தார்கள். "இப்போது ஏன் விட்டு விட்டீர்கள்?" என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், "அலுவல்களே காரணம் என்றார்கள்.
அறிவிப்பவர் : மர்ஸத் பின் அப்துல்லாஹ்,
நூல் : புகாரி
நபி (ஸல்) அவர்கள் மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதை வலியுறுத்திச் சொல்லவில்லை என்றாலும் விரும்பியவர்கள் தொழுமாறு கட்டளை இட்டுள்ளார்கள். ஆனால் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மக்ரிபுக்கு முன்னால் சுன்னத் தொழுவது நடைமுறையில் இல்லை.
குறிப்பாக ஹனபி மத்ஹபில் மக்ரிப் பாங்கு சொல்லப் பட்டவுடனேயே இகாமத்தும் சொல்லி தொழுகையைத் துவக்கி விடுகின்றனர். இதனால் யாரும் முன் சுன்னத் தொழ முடியாத நிலை ஏற்படுகின்றது. இது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாற்றமானதாகும். மற்ற தொழுகைகளைப் போல் மக்ரிபுடைய பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் முன் சுன்னத் தொழுவதற்கான இடைவெளியை ஏற்படுத்துவது அவசியமாகும்.
ஒவ்வொரு பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரலி),
நூல் : புகாரி, முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுது விட்டு என்னிடம் வந்து நான்கு அல்லது ஆறு ரக்அத்துகள் ஒரு போதும் தொழாமல் இருந்ததில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : அஹ்மது, அபூதாவூத்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜும்ஆவில்) உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஸுலைக் அல் கத்பானி வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "நீ வருவதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழுதாயா?" என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். "நீ இரண்டு ரக்அத்துகளைச் சுருக்கமாகத் தொழுது கொள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா, ஜாபிர் (ரலி),
நூல் : இப்னு மாஜா
இப்னு உமர் (ரலி) ஜும்ஆ தொழுகையை நீட்டித் தொழுவார்கள். ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்துகளை தன் வீட்டில் தொழுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைச் செய்தார்கள் என்றும் கூறுவார்கள்.
அறிவிப்பவர் : நாபிஃ , நூல் : அபூதாவூத்
உங்களில் ஒருவர் ஜும்ஆ தொழுதால் அதன் பின்பு நான்கு ரக்அத்துகள் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம், திர்மிதி, நஸயீ
இந்த அடிப்படையில் கடமையான தொழுகைகளின் முன், பின் சுன்னத் தொழுகைகளை பேணி தொழுவோமாக!
                                                                                         எம். ஷம்சுல்லுஹா
                                                                                               onlinepj       

mardi 26 mars 2013

அன்பளிப்பு செய்வோம்


       
        நபிகளாரின் உதாரணங்கள்


அன்பளிப்பு செய்வோம்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

தன் அன்பளிப்பை திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.

அறிவிப்பவர்     : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்                        : புகாரி (2622,6975)

புகாரியின் (2623) ஆவது அறிவிப்பில் தம் தர்மத்தை திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.... என்று இடம்பெற்றுள்ளது.

உலகத்தில் வாழும் மனிதர்கள் ஒருவர் மற்றவருக்கு உதவும் மனப்பான்மையுடன் இருக்குவேண்டும். இவ்வாறு உதவி செய்யும் மனிதர்கள் சில நேரங்களில் தன் உதவியை பெற்றவர்கள், இவர்களை மதிக்காத போது அல்லது இவர்களின் கட்டளையை, ஆலோசனையை ஏற்காத போது தான் செய்த உதவியை சொல்லிக்காட்டுகிறார்கள். இவ்வாறு செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டதாகும். இதனால் நாம் செய்த உதவிக்கு இறைவனிடம் கிடைக்கும் நன்மைகள் முற்றிலும் இல்லாமல் போய்விடும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:264)

செய்த தர்மங்களை சொல்லிக்காட்டுவது போல் தான் தந்த அன்பளிப்புகளையும், தர்மத்தையும் திரும்ப கேட்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கிடையில் ஏற்பாடு சண்டைகள் இதற்கு காரணமாக அமைகின்றது. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தாம் செய்த தர்மங்கள், அன்பளிப்புகள் இவற்றை திரும்பத் தருமாறு கேட்பது மிகப்பெரிய இழிசெயலாகும். மேலும் தாம் செய்த தர்மங்களையும் அன்பளிப்புகளையும் அன்றே மறந்துவிடவேண்டும். இதன் கூலியை மறுமைநாளில்தான் எதிர்பார்க்கவேண்டும். இதற்கு மாறாக செய்த தர்மங்களையும் அன்பளிப்புகளையும் திரும்ப கேட்டால் அவர் எவ்வளவு இழிவானவர் என்பதைத்தான் நாம் முதலில் எடுத்துக்காட்டிய உதாரணத்தில் கூறியுள்ளார்கள்.

தான் தின்ற பொருளை வாந்தி எடுத்து அதையே உட்கொள்ளும் நாயையை எப்படி நாம் அறுவருப்பாக காண்போமோ அதைப் போன்றே கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெறுபவனை இஸ்லாம் பார்க்கிறது. எனவே செய்கின்ற எந்த காரியமாக இருந்தாலும் இறைதிருப்பதிக்காக மட்டுமே செய்யவேண்டும். இதுவே மறுமை வெற்றிக்கு பயனளிக்கும்.

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப் பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும்  நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்'' (எனக் கூறுவார்கள்.) எனவே அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முகமலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான். (அல்குர்ஆன் 76:8 #11)

அன்பளிப்பை திரும்ப பெறக்கூடாது என்றாலும் தந்தை மட்டும் தன் மகனுக்கு செய்த அன்பளிப்பை பெற்றுக் கொள்ள இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

அன்பளிப்பை கொடுத்து அதனை திரும்பப்பெறுவது ஒரு தந்தை தன்மகனுக்கு கொடுக்கின்ற விஷயத்தில் தவிர எந்த ஒரு முஸ்லிமுக்கு அது  ஹலால் (அனுமதி)இல்லை

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்                      : திர்மதி (1220),நஸயீ (3630),

அன்பளிப்புத் தொடர்பாக இன்னும் சில விவரங்களை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் அவற்றையும் காண்போம்.

    அன்பளிப்பின் சிறப்பு:

நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்பு செய்து நேசத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

அறிவிப்பவர்  : அபூஹ‎ýரைரா (ரலி)

நூல்                     :அல்அதபுல்முஃப்ரத்(594)

நாம் பிறருக்கு ஒரு பொருளையோ பணத்தையோ கொடுத்து அன்பளிப்பு செய்வதால், நம்மின் மீது தவறான எண்ணமும் கோபமும் கொண்டவர் ஒருவர், இவர் நம் நலனில் அக்கரை கொண்டிருக்கிறார் என்று இதன் மூலம் எண்ணுவார். இதனால் இருவருக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கள் வழி ஏற்படும்.

முதலில் யாருக்கு அன்பளிப்புச் செய்வது

அன்பளிப்புச் செய்வதற்கு ஆளைத் தேடிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. நமக்கு மிக அருகாமையில் இருப்பவருக்கு பொருளைக் கொடுத்து மிக இலகுவான முறையில் நன்மைகளை பெறுவதற்கு நபியவர்கள் வழிமுறையை காட்டியுள்ளார்கள் .

நான் நபியவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டுக்காரர்கள் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் (முதலில்) அன்பளிப்பு செய்வது என்று கேட்டேன் அதற்கு நபியவர்கள் அவ்விருவரில்  யாருடைய வாசல் உன்வீட்டுக்கு அருகில் உள்ளதோ அவருக்கு அன்பளிப்பு செய் என்றார்கள்

அறிவிப்பவர்      : ஆயிஷா(ரலி)

நூல்                         : புகாரி  (2595)

    பிள்ளைகளுக்கு நீதமாக அன்பளிப்புச் செய்தல்

பத்து மாதம் எல்லா பிள்ளைகளை சுமந்திருந்தாலும் தாய், தந்தை, சில குழந்தைகள் மீது மட்டும் அதிக பாசம் வைத்திருப்பார்கள். இந்த பாசம் மற்ற குழந்தைகளை விட இந்த குழந்தைகளுக்கு அதிக அக்கரையும் கவனிப்பும் செலுத்த காரணமாக அமைந்து விடுகிறது. அத்துடன் விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுப்பதிலும் ஊக்கத்தை தருகிறது. இவ்வாறு சில குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்து சில குழந்தைகளை மட்டும் கவனிப்பதும் கூடாது. அன்பளிப்பு செய்வதில் அனைத்து குழந்தைகளிடம் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ளவேண்டும்.

நுஃமான் பின் பஷீர்(ரலி) அவர்களை அவர்களுடைய தந்தை நபியவர்களிடம் அழைத்துச்சென்று எனக்கு செந்தமான அடிமையை எனது இந்த மகனுக்கு அன்பளிப்புச்செய்கின்றேன் என்று சொன்னார்கள். அதற்கு நபியவர்கள் உன்பிள்ளைகள் அனைவருக்கும் இதைப்போன்று அன்பளிப்‎பு செய்துள்ளீரா?  என்று கேட்க, அதற்கு அவர் இல்லை என்றார். நபியவர்கள் அன்பளிப்பை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர்(ரலி)

நூல்                    : புகாரி (2586)

    பிரதிஉபகாரம்

அன்பளிப்பு வாங்குவது சுயமரியாதையை இழக்கும் நிலை என்று சிலர்  கருதி அன்பளிபபை மறுப்பார்கள். ஆனால் நபியவர்களோ அன்பளிப்புப் பொருளை வாங்குவதோடு மட்டும் இல்லாமல் அதற்கு பிரதி உபகாரம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள்.

நபியவர்கள் அன்பளிப்பை வாங்குபவர்களாகவும் அதற்கு பதில் உபகாரம் செய்பவர்களாகவும் இருந்தார்கள்.

அறிவிப்பவர்     : ஆயிஷா(ரலி)

நூல்                        : புகாரி (2585)



ஏழைகள் தரும் சிறிய அன்பளிப்பு சிறிதாக இருந்தாலும் அந்த அன்பளிப்பையும் முகமலர்ந்து ஏற்க வேண்டும்.

நபியவர்கள் கூறினார்கள் :

முஸ்லிமான பெண்களே! ஒரு அண்டைவீட்டுக்காரி மற்ற அண்டை வீட்டுக்காரிக்கு ஒரு ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) கொடுத்தாலும்  அவள் அலட்சியம் செய்யவேண்டாம்

அறிவிப்பவர்     : அபூஹ‎ரைரா(ரலி)

நூல்                        : புகாரி (2566)

    மறுக்கக் கூடாத அன்பளிப்பு

நபியவர்கள் வாசனை திரவியத்தை நிராகரிப்பதில்லை.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்                    : புகாரி (2582)

    லஞ்சம்

உங்களுக்கிடையே (ஒருவருக் கொருவர்) உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள்! (அல்குர்ஆன் 2:188)

நபியவர்கள் லஞ்சம் வாங்குபவரையும் கொடுப்பவரையும் சபித்துள்ளார்கள்.

  அறிவிப்பவர்     : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)  
   நூல்                       :  திர்மிதி (1257)

மார்கத்தில் தடைசெய்யப்பட்ட லஞ்சமாக தரும் பொருட்களை அன்பளிப்பாக வாங்கவோ கொடுக்கவோ கூடாது.
                                                                                                                                               TNTJ

vendredi 15 mars 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 5

                              கேள்வி: சுவற்றில் தயமம் செய்யலாமா? ஜும்மா தொழுகையை தனியாக தொழுவது கூடுமா?

      jeudi 14 mars 2013


                                  கேள்வி: பிரான்ஸ் (வெளிநாட்டில் ) இருக்கும் நாங்கள் எங்கள் சொந்த நாடான இந்தியாவுக்கு வந்து அதன் பிறகுதான் ஹஜ் செய்ய வேண்டும் என்கிறார்கள் அது சரியா?

          vendredi 14 décembre 2012

          இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -பதில் அளிப்பவர் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள்


          இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 5

                                                              கேள்வி: 3 :அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்துவிட்டு நிறைவேற்ற  முடியாவிட்டால் அதன் பரிகார சட்டம் என்ன?
             

              dimanche 2 décembre 2012

              இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -பதில் அளிப்பவர் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள்


              இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 5

                                                                  கேள்வி: 3 :தொழுகையில் ஸலாத்திற்கு  சைகையால் பதில் கூறலாமா?
                 

                  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -பதில் அளிப்பவர் சகோதரர் அப்பாஸ் அலி அவர்கள்


                  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 5

                                                                      கேள்வி: 3 :தொழுகையிலும் மற்ற நேரங்களிலும் சஜ்தா  வசனங்கள் ஓதப்பட்டால் சஜ்தா செய்ய வேண்டுமா?