புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


lundi 5 août 2013

ஸக்காத்தை ரமழானுக்குப் பின் கொடுக்களாமா?

கேள்வி : ஒருவருக்கு சக்காத் கொடுக்க நினைத்த பணத்தை ரமழான் மாதத்தில் கொடுக்காமல் அதை பேங்க் ஒன்றில் தேபோசிட் செய்து பிறகு அந்த பணத்துக்கான தேவை அவர்களுக்கு வரும் பொது அதை மீள எடுத்து கொடுக்க Mudiyuma thayavusithu pathil தரவும்.

Nawass, srilanka,Eravur.

பதில் :  ஸக்காத் என்பது

ஸகாத் என்ற அரபி வார்த்தைக்கு வளர்ச்சியடைதல், அதிகமாகுதல், தூய்மைப்படுத்துதல் போன்ற பல அர்த்தங்கள் உள்ளன. ஒருவன் கடமையாக்கப்பட்ட இந்த ஸகாத்தை வழங்குவதின் மூலம் அவனுடைய செல்வமும் உள்ளமும் பரிசுத்தமாகிறது. அல்லாஹ் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் பாக்கியங்களை அதிகப்படுத்துகிறான். இதன் காரணமாகத் தான் முஸ்லிம்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து கணக்கிட்டு குறிப்பிட்ட விகித்தாச்சார அடிப்படையில் வழங்க வேண்டிய கட்டாய தர்மத்திற்கு ஸகாத் என்று இறைவன் பெயர் சூட்டியுள்ளான். ஸகாத் என்பது செல்வ வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமையாகும். நபி (ஸல்) அவர்களின் ஏராளமான ஹதீஸ்களும் திருமறை வசனங்களும் ஸகாத் கட்டாயக் கடமை என்பதைப் பல்வேறு கோணங்களில் நமக்கு எடுத்துரைக்கின்றன.

ஸக்காத் கட்டாயக் கடமை.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:60)
இவ்வவசனத்தில் கூறப்படும் தர்மங்கள் என்பது கட்டாயக் கடமையான ஸகாத்தைக் குறிப்பிடுவதாகும். ஏனெனில் இவ்வசனத்தின் இறுதியில் "இது அல்லாஹ்வின் கட்டாயக் கடமை'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஸகாத் மார்க்கத்தின் மிக முக்கியமான ஒரு அம்சம் என்பதைப் பின்வரும் வசனம் தெளிவுபடுத்துகின்றது.
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம். (அல்குர்ஆன் 99:5)
நபியவர்களின் உபதேசம்.
ஒருவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவனுக்குத் தொழுகை எப்படி கட்டாயக் கடமையாகி விடுமோ அது போல் ஸகாத்தும் கட்டாயக் கடமையாகி விடும். அவன் கண்டிப்பாக தன்னுடைய செல்வத்திலிருந்து ஸகாத்தை கணக்கிட்டு வழங்கியாக வேண்டும். முஆத் (ரலி) அவர்களை நபியவர்கள் யமன் தேசத்திற்கு ஆளுநராக அனுப்பும் போது இந்த உபதேசத்தைச் செய்தே அனுப்பி வைக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் என்ற உறுதி மொழியின்பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதற்காக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 1395
ஸகாத் என்ற அற்புதக் கடமை வறுமை ஒழிப்பிற்குரிய ஒரு அற்புத ஆயுதமாகும். இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தித் தான் நபியவர்கள் வறுமையை விரட்டியடித்தார்கள். நபியவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் வறுமையை இல்லாமல் ஆக்கிக் காட்டினார்கள். ஸகாத்தின் முக்கியமான நோக்கம் வறுமையை இல்லாமல் ஆக்குவது தான் என்பதை முஆத் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் செய்த உபதேசத்திலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. செல்வத்தில் ஸகாத் தவிர வேறு கடமையில்லை

நம்முடைய செல்வத்திலிருந்து நாம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மம் ஸகாத் மட்டும் தான். இதனை நிறைவேற்றாவிட்டால் அதற்குரிய தண்டனையை நாம் மறுமையில் அனுபவித்தாக வேண்டும். ஏனைய தான தர்மங்கள் நாம் நம்முடைய செல்வத்திலிருந்து விரும்பிச் செய்பவையாகும். செய்தால் நமக்கு இறையருள் அதிகம் கிடைக்கும். செய்யாவிட்டால் தண்டனை கிடைக்காது. ஆனால் ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால் மறுமையில் தண்டனை உண்டு. இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)'' என்றார்கள். அவர் "இதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?'' என்று கேட்க, "இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், "இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?'' எனக் கேட்க, "இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், "இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிர'' என்றார்கள். அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்'' என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 46
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன் (அல்குர்ஆன் 9:60)
திருக்குர்ஆன் 9:60 வசனத்தில் ஸகாத் வழங்கப்படுவதற்குத் தகுதியானவர்களாக எட்டு வகையினரை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

அவர்கள் 1. யாசிப்பவர்கள் 2. ஏழைகள். 3. ஸகாத்தை வசூல் செய்பவர்கள் 4. உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்கள் 5. அடிமைகளை விடுதலை செய்வதற்கு 6. கடன் பட்டவர்கள் 7. அல்லாஹ்வின் பாதையில் செலவிடுதல் 8. நாடோடிகள். ஆகியோராவார்கள்.

ஸக்காத்தைப் பொருத்தவரையில் ரமழானில் தான் கொடுக்க வேண்டும் என்ற எந்தக் கட்டளையும் மார்க்கத்தில் சொல்லப்படவே இல்லை. ஸக்காத் கொடுப்பதற்கு மாதங்கள் எதுவும் மார்க்கத்தில் குறிப்பிடப்படாமல் ஸக்காத் கொடுக்கும் படி ஏவப்பட்டிருப்பதில் இருந்து நமக்கு எப்போது ஸக்காத் கடமையாகிறதோ அப்போதுதான் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

ஸக்காத் பணத்தை டெப்பாசீட் செய்து பின்பு அதனைக் கொடுப்பதற்கு மார்க்கத்தில் எந்த வழிகாட்டலும் சொல்லப்படவில்லை. மாறாக நமது செல்வம் ஸக்காத்தின் அளவை எட்டியவுடன் அதை வசூலிப்பவர்களிடன் அதனை கொடுத்து ஸக்காத் பெறத் தகுதியான 8 கூட்டத்தில் யாருக்கேனும் அந்த செல்வத்தை பங்கிட்டுக் கொடுக்க செய்ய வேண்டும்.

மரணம் என்பது யாருக்கு எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கின்ற காரணத்தினால் ஸக்காத்தை உரியவர்களுக்கு அதற்குறிய நேரத்தில் கொடுத்து நமது கடமையை நிறைவேற்றிக் கொள்வதுதான் சிறப்பானதாகும்.

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

பதில் : ரஸ்மின் MISc

தஸ்பீஹ்தொழுகை ஓர் ஆய்வு

தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் ஒரு ரக்அத்துக்கு75தஸ்பீஹ்கள் வீதம் நான்கு ரக்அத்களில்300தஸ்பீஹ்கள் ஓதி தொழும் வழக்கம் சில பகுதிகளில் காணப்படுகிறது. நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படும் செய்திகளை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரைப் பயன்படுத்தி யாராவதுஇட்டுக்கட்டி சொல்லி இருப்பார்கள் என்று உறுதியாகத் தெரிந்தால்,அல்லது சந்தேகம் ஏற்பட்டால் அது போன்ற செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்று கருதி அதை விட்டு . தஸ்பீஹ் தொழுகை தொடர்பாகப் பல ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்துமே பலவீனமானவை என்று அறிஞர்களில் ஒரு சாரார் கூறுகின்றனர்.
 சில அறிஞர்கள் தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் பெரும்பாலான ஹதீஸ்கள் பலவீனமாக உள்ளன. ஆயினும் சில ஹதீஸ்கள் மட்டும் ஏற்கத் தக்கதாக உள்ளன என்று கூறுகின்றனர். 
தஸ்பீஹ் தொழுகை தொடர்பான கீழ்க்காணும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமனவை என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் ஒருமித்து கூறுகின்றனர். அதாவது கீழ்க்காணும் ஹதீஸ்கள் பலவீனமானைவை என்பதை இரு சாராரும் ஒப்புக் கொள்வதால் இது குறித்து ஆய்வு தேவை இல்லை. மேலோட்டமாக அறிந்து கொண்டாலே போதுமானது.
அபூ ராஃபிவு (ரலி) அறிவிக்கும் செய்தி
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ الْعُكْلِيُّ حَدَّثَنَامُوسَى بْنُ عُبَيْدَةَحَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ مَوْلَى أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ
 بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ عَنْ أَبِي رَافِعٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْعَبَّاسِ يَا عَمِّ أَلَا أَصِلُكَ أَلَا أَحْبُوكَ أَلَا أَنْفَعُكَ قَالَ بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ يَا عَمِّ صَلِّ أَرْبَعَ رَكَعَاتٍ تَقْرَأُ فِي كُلِّ رَكْعَةٍ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ فَإِذَا انْقَضَتْ الْقِرَاءَةُ فَقُلْ اللَّهُ أَكْبَرُ وَالْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ خَمْسَ عَشْرَةَ مَرَّةً قَبْلَ أَنْ تَرْكَعَ ثُمَّ ارْكَعْ فَقُلْهَا عَشْرًا ثُمَّ ارْفَعْ رَأْسَكَ فَقُلْهَا عَشْرًا ثُمَّ اسْجُدْ فَقُلْهَا عَشْرًا ثُمَّ ارْفَعْ رَأْسَكَ فَقُلْهَا عَشْرًا ثُمَّ اسْجُدْ الثَّانِيَةَ فَقُلْهَا عَشْرًا ثُمَّ ارْفَعْ رَأْسَكَ فَقُلْهَا عَشْرًا قَبْلَ أَنْ تَقُومَ فَتِلْكَ خَمْسٌ وَسَبْعُونَ فِي كُلِّ رَكْعَةٍ هِيَ ثَلَاثُ مِائَةٍ فِي أَرْبَعِ رَكَعَاتٍ فَلَوْ كَانَتْ ذُنُوبُكَ مِثْلَ رَمْلِ عَالِجٍ لَغَفَرَهَا اللَّهُ لَكَ قَالَ يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَسْتَطِيعُ أَنْ يَقُولَهَا فِي كُلِّ يَوْمٍ قَالَ فَإِنْ لَمْ تَسْتَطِعْ أَنْ تَقُولَهَا فِي كُلِّ يَوْمٍ فَقُلْهَا فِي جُمْعَةٍ فَإِنْ لَمْ تَسْتَطِعْ أَنْ تَقُولَهَا فِي جُمُعَةٍ فَقُلْهَا فِي شَهْرٍ فَلَمْ يَزَلْ يَقُولُ لَهُ حَتَّى قَالَ فَقُلْهَا فِي سَنَةٍ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي رَافِعٍ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) யை நோக்கி, என் பெரிய தந்தையே! உங்களுடன் உள்ள உறவுக் கடனை நிறைவேற்றட்டுமா? உங்களுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் வழங்கட்டுமா? உங்களுக்கு நான் பயனுள்ளதைக் கூறட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி), ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என் பெரிய தந்தையே! நீங்கள் நான்கு ரக்அத்கள் தொழுங்கள்! ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து அத்தியாயத்தையும் இன்னொரு அத்தியாயத்தையும் ஓதுங்கள்! ஓதி முடித்ததும் அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ் வலாயிலாஹ இல்லல்லாஹ் என்று ருகூவிற்கு முன் 15தடவை கூறுவீராக! பின்னர் ருகூவு செய்து அதில் 10தடவை அதனைக் கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி அதிலும் பத்து தடவை கூறுவீராக! பின்னர் ஸஜ்தாச் செய்து அதிலும் பத்து தடவை கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி, அதிலும் 10தடவை கூறுவீராக. பின்னர் ஸஜ்தாச் செய்து அதிலும் 10தடவை அதனைக் கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி எழுவதற்கு முன்னால் பத்து தடவை அதனைக் கூறுவீராக! ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வாறு எழுபத்து ஐந்து தடவைகள் வீதம் நான்கு ரக்அத்துகளிலும் மொத்தம் முன்னூறு தடவைகள் செய்தால் அடர்ந்த மணல் எண்ணிக்கையளவு உமது பாவங்கள் இருந்தாலும் அல்லாஹ் உம்மை மன்னித்து விடுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி) அல்லாஹ்வின் தூதரே! தினமும் இதைச் செய்ய யாருக்கும் இயலுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் உமக்குச் செய்ய இயலாவிட்டால் வாரம் ஒரு முறை செய்வீராக! ஒரு வாரத்தில் ஒரு முறை செய்ய இயலாவிட்டால் ஒரு மாதத்தில் ஒரு தடவை செய்வீராக! இவ்வாறு சொல்லிக் கொண்டே வந்து ஒரு வருடத்தில் ஒரு தடவை செய்யுமாறு கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூராஃபிவு (ரலி)
நூல் திர்மிதீ (444)
இந்தச் செய்திஇப்னுமாஜா (1376),பைஹகீ (அஸ்ஸுனுஸ் ஸுக்ரா)தப்ரானீ (அல்முஃஜமுல் கபீர்) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடரில்அனைத்து நூற்களிலும் மூஸா பின் உபைதா பின் நஷீத் அர்ரபதீ என்பவரே இடம் பெறுகிறார்.
தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதரவு தெரிவிக்கும் அறிஞர்கள் உட்பட அனைத்து அறிஞர்களும் மூஸா பின் உபைதா பலவீனமானவர் என்பதில் ஒத்த கருத்தில் உள்ளனர்.எனவே மேற்கண்ட ஹதீஸ் ஆதாரமாகக் கொள்ளத் தக்கதல்ல.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி
حدثنا محمد بن سفيان الأبلي حدثنا حبان بن هلال أبو حبيب حدثنا مهدي بن ميمون حدثناعمرو بن مالكعن أبي الجوزاء قال حدثني رجل كانت له صحبة يرون أنه عبد الله بن عمرو قال قال لي النبي صلى الله عليه وسلم ائتني غدا أحبوك وأثيبك وأعطيك حتى ظننت أنه يعطيني عطية قال إذا زال النهار فقم فصل أربع ركعات فذكر نحوه قال ثم ترفع رأسك يعني من السجدة الثانية فاستو جالسا ولا تقم حتى تسبح عشرا وتحمد عشرا وتكبر عشرا وتهلل عشرا ثم تصنع ذلك في الأربع الركعات قال فإنك لو كنت أعظم أهل الأرض ذنبا غفر لك بذلك قلت فإن لم أستطع أن أصليها تلك الساعة قال صلها من الليل والنهار قال أبو داود حبان بن هلال خال هلال الرأي قال أبو داود رواه المستمر بن الريان عن أبي الجوزاء عن عبد الله بن عمرو موقوفا ورواه روح بن المسيب وجعفر بن سليمان عن عمرو بن مالك النكري عن أبي الجوزاء عن ابن عباس قوله وقال في حديث روح فقال حديث عن النبي صلى الله عليه وسلم حدثنا أبو توبة الربيع بن نافع حدثنا محمد بن مهاجر عن عروة بن رويم حدثني الأنصاري أن رسول الله صلى الله عليه وسلم قال لجعفر بهذا الحديث فذكر نحوهم قال في السجدة الثانية من الركعة الأولى كما قال في حديث مهدي بن ميمون
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நீ என்னிடம் நாளை வா! நான் உனக்கு பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பளிப்பை வழங்குகிறேன்; உனக்கு நன்மையைத் தருகிறேன்; உனக்கு ஒரு கொடையை அளிக்கின்றேன் என்றார்கள். எனக்கு ஏதோ அன்பளிப்பைத் தருவார்கள் என்று எண்ணினேன். (அப்போது) பகல் சாயும் போது நீ எழு! நான்கு ரக்அத்கள் தொழு! பின்னர் உனது தலையை இரண்டாவது ஸஜ்தாவிலிருந்து உயர்த்தி சரியாக அமர்ந்து கொள்! ஸுப்ஹானல்லாஹ் 10தடவை, அல்ஹம்து லில்லாஹ் 10தடவை, அல்லாஹு அக்பர் 10தடவை லாயிலாஹ இல்லல்லாஹ் 10தடவை கூறாமல் எழாதே! பின்னர் இதைப் போன்று நான்கு ரக்அத்திலும் செய்! இவ்வுலகத்தில் உள்ளவர்களிலேயே மிகப் பெரிய அளவு பாவத்தை நீ செய்திருந்தாலும் இவ்வாறு செய்தால் உனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றார்கள். நான் அந்நேரத்தில் தொழ முடியவில்லையானால்? என்று கேட்டதற்கு பகலில் அல்லது இரவில் ஏதாவது ஒரு நேரத்தில் தொழுது கொள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: அபூதாவூத் (1105)
இந்தச்செய்தி பைஹகீ என்ற நூலிலும் (எண்4698) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அம்ரு பின் மாலிக் என்பவர் பலவீனமானவர். இவர் பலவீனமானவர் என்பதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. தஸ்பீஹ் தொழுகையை ஆதரிக்கும் அறிஞர்களும் இதை ஒப்புக் கொள்கின்றனர்.
ஜஃபர் பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி
مصنف عبد الرزاق - (ج 3 / ص 123)
5004 -عبد الرزاق عن داود بن قيس عن إسماعيل بن رافع عن جعفر بن أبي طالب أن النبي صلى الله عليه و سلم قال له ألا أهب لك ألا أمنحك ألا أحذوك ألا أوثرك ألا ألا حتى ظننت أنه سيقطع لي ماء البحرين قال تصلي أربع ركعات تقرأ أم القرآن في كل ركعة وسورة ثم تقول الحمد لله وسبحان الله والله أكبر ولا إله إلا الله فعدها واحدة حتى تعد خمس عشرة مرة ثم تركع فتقولها عشرا وأنت راكع ثم ترفع فتقولها عشرا وأنت رافع ثم تسجد فتقولها عشرا وأنت ساجد ثم ترفع فتقولها عشرا وأنت جالس ثم تسجد فتقولها عشرا وأنت ساجد ثم ترفع فتقولها عشرا وأنت جالس فتلك خمس وسبعون وفي الثلاث الأواخر كذلك فذلك ثلاث مائة مجموعة وإذا فرقتها كانت ألفا ومائتين وكان يستحب أن يقرأ السورة التي بعد أم القرآن عشرين آية فصاعدا تصنعهن في يومك أو ليلتك أو جمعتك أو في شهر أو في سنة أو في عمرك فلو كانت ذنوبك عدد نجوم السماء أو عدد [ ص 124 ] القطر أو عدد رمل عالج أو عدد أيام الدهر لغفرها الله لك
உமக்கு அன்பளிப்பு வழங்கவா? உபகாரம் செய்யவா? தானம் செய்யவா? (இந்த நற்செயலுக்கு) உன்னைத் தேர்வு செய்யவா? வழங்கட்டுமா? வழங்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் பஹ்ரைன் நாட்டின் செல்வத்தை வழங்குவார்கள் என்று எண்ணினேன். நீ நான்கு ரக்அத்கள் தொழு! ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா அத்தியாயத்தையும் மற்றொரு அத்தியாயத்தையும் ஓது! பின்னர் அல்ஹம்து லில்லாஹ் வஸுப்ஹானல்லாஹ் வல்லாஹு அக்பர் வலாயிலாஹ இல்லல்லாஹு இதை 15தடவை கணக்கிட்டு (ஓதிக்) கொள். பின்னர் நீர் ருகூவு செய்த நிலையில் அதை 10தடவை கூறு! பிறகு தலையை உயர்த்தி நின்ற நிலையில் அதை 10தடவை கூறு! பின்னர் ஸஜ்தா செய்த நிலையில் அதை 10தடவை கூறு! பின்னர் தலை உயர்த்தி அமர்ந்த நிலையில் அதை 10தடவை கூறு! பின்னர் ஸஜ்தா செய்த நிலையில் அதை 10தடவை கூறு! பின்னர் தலையை உயர்த்தி அமர்ந்த நிலையில் அதை 10தடவை கூறு!. இவை மொத்தம் 75தடவையாகும். இதைப் போன்று மீதமுள்ள மூன்று ரக்அத்திலும் செய். இவற்றின் மொத்தம் 300ஆகும். இந்த தஸ்பீஹை (1.அல்ஹம்து லில்லாஹ் 2.ஸுப்ஹானல்லாஹ் 3.அல்லாஹு அக்பர் 4.லாயிலாஹ இல்லல்லாஹு என்று நான்காக) பிரித்து எண்ணினால் மொத்தம் 1200ஆகும். பாத்திஹா அத்தியாயத்திற்குப் பிறகு இருபது ஆயத்துகள் அல்லது அதை விட அதிகமாக ஓது! இத்தொழுகையை பகல் அல்லது இரவில் அல்லது வாரத்தில் ஒரு நாள், அல்லது மாத்தில் ஒரு நாள், வருடத்தில் ஒரு நாள் அல்லது வாழ் நாளில் ஒரு நாள் தொழு! (அவ்வாறு தொழுதால்) உனது பாவங்கள், வானத்தின் நட்சத்திரம் அளவிற்கு அல்லது மழைத் துளிகள் அளவிற்கு அல்லது அதிகமான மணல் அளவிற்கு அல்லது காலத்தின் நாட்கள் அளவிற்கு இருந்தாலும் அல்லாஹ் உனது பாவங்களை மன்னிப்பான்.
அறிவிப்பவர்: ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி)
நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (5004)
இந்த ஹதீஸின் முதல் அறிவிப்பாளரான ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே ஹிஜ்ரீ 8ஆம்ஆண்டு நடந்த மூத்தா போரில் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். (பார்க்க புகாரீ ஹதீஸ் எண்4260, 4261மற்றும் பத்ஹுல் பாரீ)
ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாக ஒருவர் அறிவிப்பதானால் அவர் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். அதாவது நபித்தோழராக இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன்பே ஜஃபர் மரணித்து விட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பிந்தியவர் ஜஃபரைப் பார்த்திருக்கவோ ஜஃபரிடமிருந்து கேட்டிருக்கவோ முடியாது.
ஆனால் இந்த ஹதீஸை ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) கூறியதாக அறிவிப்பவர் இஸ்மாயீல் பின் ராஃபிவு என்பவராவார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்தவர் அல்லர்.
மேலும் இவர் பலவீனமானவரும் கூட. அஹ்மத் பின் ஹன்பல், யஹ்யா பின் மயீன், அபூ ஹாத்தம் ராஸீ, அப்துல்லாஹ் பின் முபாரக் உள்ளிட்ட அறிஞர்கள் இவரைப் பலவீனர் என்று கூறியுள்ளனர். இவ்வாறு இரண்டு பலவீனங்கள் உள்ளதால் இந்த ஹதீஸும் ஆதாரமாகக் கொள்ளத் தக்கதல்ல.
இந்த ஹதீஸ்கள் பலவீனமானவை என்று தஸ்பீஹ் தொழுகையை ஆதரிப்பவர்களும் ஒப்புக் கொள்வதால் இவற்றை ஆதாரமாகக் காட்டி தஸ்பீஹ் தொழுகையை நியாயப்படுத்த முடியாது.
கீழ்க்காணும் ஹதீஸ்களைத் தான் ஆதாரபூர்வமானது எனக் கூறி தஸ்பீஹ் தொழுகையை நியாயப்படுத்துகின்றனர். எனவே இவற்றைக் குறித்துத் தான் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
அனஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ أَخْبَرَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ حَدَّثَنِي إِسْحَقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ أُمَّ سُلَيْمٍ غَدَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ عَلِّمْنِي كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي صَلَاتِي فَقَالَ كَبِّرِي اللَّهَ عَشْرًا وَسَبِّحِي اللَّهَ عَشْرًا وَاحْمَدِيهِ عَشْرًا ثُمَّ سَلِي مَا شِئْتِ يَقُولُ نَعَمْ نَعَمْ قَالَ وَفِي الْبَاب عَنْ ابْنِ عَبَّاسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَالْفَضْلِ بْنِ عَبَّاسٍ وَأَبِي رَافِعٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَقَدْ رُوِيَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ حَدِيثٍ فِي صَلَاةِ التَّسْبِيحِ وَلَا يَصِحُّ مِنْهُ كَبِيرُ شَيْءٍ
உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். தொழுகையில் நான் ஓதுவதற்குச் சில வாசகங்களை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பத்து தடவை அல்லாஹு அக்பர் என்று கூறு! பத்து தடவை ஸுப்ஹானல்லாஹ் என்று கூறு! பத்து தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறு! பின்னர் நீ விரும்பியதைக் கேள்! என்றார்கள். நான் சரி! சரி! என்றேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: திர்மிதீ (443)
இதே செய்தி ஹாகிம்1191, நஸயீ1282, அஹ்மத்11762 ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றாலும் இதற்கும் தஸ்பீஹ் தொழுகைக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. இந்த ஹதீஸின் வாசகங்களைக் கவனித்தால் இதை விளங்கிக் கொள்ளலாம்.
தஸ்பீஹ் தொழுகைக்கும் இந்த ஹதீஸுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்றாலும் இதை தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாக சிலர் ஏன் எடுத்துக் காட்டுகிறார்கள் என்றால் இமாம் திர்மிதீ அவர்கள் இந்த ஹதீஸை தஸ்பீஹ் தொழுகை என்ற பாடத்தில் பதிவு செய்திருப்பதால் தான்.

இந்த ஹதீஸை தஸ்பீஹ் தொழுகை என்ற தலைப்பில் இமாம் திர்மிதீ கொண்டு வந்துள்ளதை இமாம் இராகீ அவர்கள் ஆட்சேபணை செய்துள்ளார்கள். இந்த ஹதீஸை தஸ்பீஹ் தொழுகை என்ற பாடத்தில் கொண்டு வந்திருப்பது ஆட்சேபணைக்குரியதாகும். ஏனெனில் இது ஐவேளைத் தொழுகைக்குப் பிறகு தஸ்பீஹ் சொல்லுவது தொடர்பாக வந்த செய்தியாகும் என ஹாஃபிழ் இராக்கீ கூறுகிறார்கள் (நூல்: துஹ்பத்துல் அஹ்வதீ)
இந்த ஹதீஸை தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாகக் காட்டுபவர்கள் அந்த ஹதீஸின்படி தஸ்பீஹ்களை கூறுவதில்லை. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்ட முடியாது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி
المستدرك على الصحيحين ج1/ص464
حدثناه أبو علي الحسين بن علي الحافظ إملاء من أصل كتابه ثنا أحمد بن داود بن عبد الغفار بمصر ثنا إسحاق بن كامل ثنا إدريس بن يحيى عن حيوة بن شريح عن يزيد بن أبي حبيب عن نافع عن بن عمر قال وجه رسول الله صلى الله عليه وسلم جعفر بن أبي طالب إلى بلاد الحبشة فلما قدم اعتنقه وقبل بين عينيه ثم قال ألا أهب لك ألا أبشرك ألا أمنحك ألا أتحفك قال نعم يا رسول الله قال تصلي أربع ركعات تقرأ في كل ركعة بالحمد وسورة ثم تقول بعد القراءة وأنت قائم قبل الركوع سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله خمس عشرة مرة ثم تركع فتقولهن عشرا تمام هذه الركعة قبل أن تبتدئ بالركعة الثانية تفعل في الثلاث ركعات كما وصفت لك حتى تتم أربع ركعات هذا إسناد صحيح لا غبار عليه ومما يستدل به على صحة هذا الحديث استعمال الأئمة من أتباع التابعين إلى عصرنا هذا إياه ومواظبتهم عليه وتعليمهن الناس منهم عبد الله بن المبارك رحمة الله عليه
நபி (ஸல்) அவர்கள்,ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களை எத்தியோப்பியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் திரும்பி வந்த போது அவர்களை நபி (ஸல்) அவர்கள் கட்டியணைத்தார்கள், இரு கண்களுக்கு இடையில் முத்தமிட்டார்கள். பின்னர் உமக்கு அன்பளிப்பு வழங்கவா? நற்செய்தி கூறவா? உபகாரம் செய்யவா? காணிக்கை தரவா? என்று கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே! ஆம் என்றேன். நான்கு ரக்அத்கள் தொழு! அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து அத்தியாயத்தையும் ஒரு (துணை) அத்தியாயத்தையும் ஓது! பின்னர் ஓதி முடித்ததும் நீ நின்ற நிலையில் ருகூவுக்கு முன்னர் ஸுப்ஹானல்லாஹ் வல்ஹம்து லில்லாஹ். வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று 15தடவை கூறு! பின்னர் ருகூவு செய்! பின்னர் அதை 10தடவை கூறு! பின்னர் ருகூவில் இருந்து எழுந்து அதை 10தடவை கூறு! இரண்டாம் ரக்அத்தைத் துவங்குவதற்கு முன்னர் இந்த ரக்அத் முழுவதற்கும் இவ்வாறே செய்து கொள்! நான்கு ரக்அத்துகளை நீ முடிக்கின்ற வரை நான் வர்ணித்ததைப் போன்று (மீதமுள்ள) மூன்று ரக்அத்திலும் (இவ்வாறே செய்!)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: ஹாகிம் (1196)
தஸ்பீஹ் தொழுகையை ஆதரிப்பவர்கள் இதை முக்கியமான ஆதாரமாக முன் வைப்பார்கள். ஏனெனில் இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம் ஹாகிம் அவர்கள் இது ஆதாரப்பூர்வமானது; இதன் மீது எந்தப் புழுதியும் படியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் ஹாகிம் அவர்களின் நூலின் அறிவிப்பாளர் தொடரை மேலாய்வு செய்யும் இமாம் தஹபீ அவர்களும் ஹாகிம் கூற்றை வழி மொழிகிறார். எனவே இது ஆதாரப்பூர்வமானது என்று தஸ்பீஹ் தொழுகையை ஆதரிப்பவர்கள் வாதிடுகின்றனர்.
ஹாகிம் அவர்களும் தஹபீ அவர்களும் கூறுவது கவனக் குறைவால் ஏற்பட்ட முடிவாகும்.
இச்செய்தியில் ஏழாவது அறிவிப்பாளராக இடம்பெறும் அஹ்மத் பின் தாவூத் பின் அப்துல் கஃப்ஃபார் என்பார் பெரும் பொய்யரும் ஹதீஸ்களை இட்டுக்கட்டி கூறுபவருமாவார்.
இந்த ஹதீஸ் சரியானது என்று முடிவு செய்துள்ள தஹபீ அவர்களே தமது மீஸானுல் இஃதிதால் எனும் நூலில் இமாம் தாரகுத்னீ, மற்றும் சில அறிஞர்கள் இவரைப் பொய்யர் என்று கூறியுள்ளனர் என்று விமர்சித்துள்ளார்கள். அதை மறந்து விட்டு இந்த ஹதீஸ் சரியானது என்கிறார்.
ميزان الاعتدال - الذهبي - (ج 1 / ص 96)
370 -أحمد بن داود بن عبد الغفار، أبو صالح الحرانى ثم المصرى.كذبه الدارقطني وغيره.ومن أكاذيبه: روى عن أبى مصعب، عن مالك، عن نافع، عن ابن عمر أن النبي صلى الله عليه وسلم قال: مفتاح الجنة المساكين، والفقراء هم جلساء الله.وحدث عن أبى مصعب، عن مالك، عن جعفر، عن آبائه بحديث آخر كذبوله عن أبى مصعب، عن مالك، عن يحيى بن سعيد، عن عروة، عن عائشة، عنرسول الله صلى الله عليه وسلم: وجبت محبة الله على من أغضب فحلم.وهذا موضوع.
(நூல்: மீஸானுல் இஃதிதால் பாகம்1,பக்கம்232)
ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள்,அஹ்மத் பின் தாவூத் பின் அப்துல் கஃப்ஃபார் என்பவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்கள். அஹ்மத் பின் தாவூத்என்பவர் முற்றிலும் பலவீனமானவராவார். இவரைப் பொய்யர் என்று (ஹதீஸ் கலை வல்லுனர்கள்) குற்றம் சுமத்தியுள்ளனர்.
تلخيص الحبير - ابن حجر - (ج 4 / ص 96)
ورواه الحاكم من حديث بن عمر وفيه أحمد بن داود الحراني وهو ضعيف جدا اتهموه بالكذب وعن أبي جحيفة قال قدم جعفر من أرض الحبشة فقبل النبي صلى الله عليه و سلم ما بين عينيه الحديث بطوله رواه الطبراني
(நூல்: தல்கீஸுல் ஹபீர் பாகம்4,பக்கம்96)
ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் அஹ்மத் பின் தாவூத் என்பவரைப் பற்றி தனது லிஸானுல் மீஸான் என்ற நூலில்இவ்வாறு கூறுகிறார்கள்.
لسان الميزان - ابن حجر - (ج 1 / ص 368)
وأخرج الحاكم في المستدرك من طريق أحمد بن داود الحراني عن إسحاق بن كامل عن إدريس بن يحيى عن حيوة بن شريح عن يزيد بن أبي حبيب عن نافع عن بن عمر رضي الله عنهما حديث صلاة التسبيح وتعليمه لجعفر بن أبي طالب وقال صحيح لا غبار عليه وتعقبه شيخنا في ذيله بل هو مظلم لا نور عليه وأحمد بن داود كذبه الدارقطني
ஜஅஃபர் பின் அபீ தாலிப் (ரலி) அவர்களுக்கு தஸ்பீஹ் தொழுகையைக் கற்றுக் கொடுத்ததாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை (இமாம் ஹாகிம் அவர்கள்) ஆதாரப்பூர்வமானது,அதன் மீது எந்த (பலவீனம் என்ற) புழுதியும் படியவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் இது இருள் நிறைந்ததாகும். ஒளியுடையது அல்ல. (இதில் இடம் பெறும்) அஹ்மத் பின் தாவூத் என்பவரை இமாம் தாரகுத்னீ பெரும் பொய்யர் என்று விமர்சித்துள்ளார் என்று அந்நூலின் ஓர உரையில் எங்கள் ஆசிரியர்கள் அதை விமர்சனம் செய்துள்ளனர்.
(நூல்: லிஸானுல் மீஸான் பாகம்1, பக்கம்368) எனவே தஸ்பீஹ் தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி பலவீனமானதாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் செய்தி
حدثنا عبد الرحمن بن بشر بن الحكم النيسابوري حدثناموسى بن عبد العزيزحدثنا الحكم بن أبان عن عكرمة عن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قال للعباس بن عبد المطلب يا عباس يا عماه ألا أعطيك ألا أمنحك ألا أحبوك ألا أفعل بك عشر خصال إذا أنت فعلت ذلك غفر الله لك ذنبك أوله وآخره قديمه وحديثه خطأه وعمده صغيره وكبيره سره وعلانيته عشر خصال أن تصلي أربع ركعات تقرأ في كل ركعة فاتحة الكتاب وسورة فإذا فرغت من القراءة في أول ركعة وأنت قائم قلت سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر خمس عشرة مرة ثم تركع فتقولها وأنت راكع عشرا ثم ترفع رأسك من الركوع فتقولها عشرا ثم تهوي ساجدا فتقولها وأنت ساجد عشرا ثم ترفع رأسك من السجود فتقولها عشرا ثم تسجد فتقولها عشرا ثم ترفع رأسك فتقولها عشرا فذلك خمس وسبعون في كل ركعة تفعل ذلك في أربع ركعات إن استطعت أن تصليها في كل يوم مرة فافعل فإن لم تفعل ففي كل جمعة مرة فإن لم تفعل ففي كل شهر مرة فإن لم تفعل ففي كل سنة مرة فإن لم تفعل ففي عمرك مرة حدثنا محمد بن سفيان الأبلي حدثنا حبان بن هلال أبو حبيب حدثنا مهدي بن ميمون حدثنا عمرو بن مالك عن أبي الجوزاء قال حدثني رجل كانت له صحبة يرون أنه عبد الله بن عمرو قال قال لي النبي صلى الله عليه وسلم ائتني غدا أحبوك وأثيبك وأعطيك حتى ظننت أنه يعطيني عطية قال إذا زال النهار فقم فصل أربع ركعات فذكر نحوه قال ثم ترفع رأسك يعني من السجدة الثانية فاستو جالسا ولا تقم حتى تسبح عشرا وتحمد عشرا وتكبر عشرا وتهلل عشرا ثم تصنع ذلك في الأربع الركعات قال فإنك لو كنت أعظم أهل الأرض ذنبا غفر لك بذلك قلت فإن لم أستطع أن أصليها تلك الساعة قال صلها من الليل والنهار قال أبو داود حبان بن هلال خال هلال الرأي قال أبو داود رواه المستمر بن الريان عن أبي الجوزاء عن عبد الله بن عمرو موقوفا ورواه روح بن المسيب وجعفر بن سليمان عن عمرو بن مالك النكري عن أبي الجوزاء عن ابن عباس قوله وقال في حديث روح فقال حديث عن النبي صلى الله عليه وسلم حدثنا أبو توبة الربيع بن نافع حدثنا محمد بن مهاجر عن عروة بن رويم حدثني الأنصاري أن رسول الله صلى الله عليه وسلم قال لجعفر بهذا الحديث فذكر نحوهم قال في السجدة الثانية من الركعة الأولى كما قال في حديث مهدي بن ميمون
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களைப் பார்த்து, அப்பாஸே! என் பெரிய தந்தையே! நான் உங்களுக்கு வழங்கட்டுமா? அன்பளிப்பு கொடுக்கட்டுமா? உங்களுக்கு கைமாறு இல்லாமல் கொடுக்கட்டுமா? உங்களுக்குப் பத்து விஷயங்களை கற்றுக் கொடுக்கட்டுமா? அதைச் செய்தால், நீங்கள் முன்னால் செய்த பாவங்களையும், பின்னால் செய்த பாவங்களையும், புதிய பாவங்களையும், பழைய பாவங்களையும், வேண்டுமென்றே செய்த பாவங்களையும், தவறுதலாகச் செய்த பாவங்களையும், சிறிய பாவங்களையும், பெரிய பாவங்களையும், இரகசியமாகச் செய்த பாவங்களையும், பகிரங்கமாகச் செய்த பாவங்களையும் இந்தப் பத்து வகையான பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். நீங்கள் நான்கு ரக்அத்கள் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் ஃபாத்திஹா அத்தியாயமும் இன்னொரு அத்தியாயமும் ஓத வேண்டும். முதல் ரக்அத்தில் ஓதுதல் முடிந்ததும் நிலையில் இருக்கும் போது ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹ வல்லாஹு அக்பர் என்று 15தடவை கூறுங்கள். பிறகு ருகூவு செய்யுங்கள். ருகூவு செய்த நிலையில் மேற்சொன்ன தஸ்பீஹை10தடவை சொல்லுங்கள். பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி 10தடவை அந்த தஸ்பீஹை கூறுங்கள். பின்னர் ஸஜ்தாவிற்குச் செல்லுங்கள். அங்கு ஸஜ்தாச் செய்த நிலையில்10தடவை அந்த தஸ்பீஹை செய்யுங்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தி அந்த தஸ்பீஹை10தடவை கூறுங்கள். பின்னர் ஸஜ்தாச் செய்து அந்த தஸ்பீஹை10தடவை கூறுங்கள். பின்னர் தலையை உயர்த்தி அந்த தஸ்பீஹை10தடவை கூறுங்கள். இதுஒவ்வொரு ரக்அத்திலும் (மொத்தம்)75ஆகும். இதை நான்கு ரக்அத்திலும் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு தடவை செய்ய முடிந்தால் அவ்வாறே செய்யுங்கள். அவ்வாறு முடியவில்லையானால் வாரத்திற்கு ஒரு முறை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் மாதத்தில் ஒரு தடவை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் வருடத்தில் ஒரு முறை செய்யுங்கள். அதுவும் முடியவில்லையானால் வாழ்நாளில் ஒரு முறை செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் அபூதாவூத் (1105)
இந்த ஹதீஸ் தான் தஸ்பீஹ் தொழுகை தொழலாம் என்பவர்கள் வலிமையான ஆதாரமாகக் காட்டக்கூடிய செய்தியாகும். இந்தச் செய்தியின் தரம் என்ன? ஹதீஸ் கலை அறிஞர்கள் இச்செய்தி தொடர்பாக என்ன கருத்து கூறுகிறார்கள் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
தஸ்பீஹ் தொழுகை தொடர்பான செய்திகள் ஏராளமாக வந்துள்ளன. அதில் சரியானது இக்ரிமா வழியில் வந்துள்ள இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியாகும் என்று ஹாபிழ் முன்திர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (துஹ்பத்துல் அஹ்வதீ)
இக்ரிமா,இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பாளர் தொடரைப் போன்று அழகிய தொடர்,தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக வேறு எதிலும் அறிவிக்கப்படவில்லை என்று இமாம் முஸ்லிம் குறிப்பிடுகிறார்கள்.
(துஹ்பத்துல் அஹ்வதீ)
இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் இச்செய்தியில் இடம் பெறும் மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் யார் என அறியப்படாதவர் என்று விமர்சித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தியை இட்டுக்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் போது ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் யார் என அறியப்படாதவர் என்று சொல்லும் இப்னுல் ஜவ்ஸீன் கூற்று தவறானதாகும். ஏனெனில் இமாம் நஸயீ, இப்னுமயீன் ஆகியோர் இவரை நம்பகமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்று பதிலளிக்கிறார்கள்.
(துஹ்பத்துல் அஹ்வதீ)
இந்த ஹதீஸ் ஏற்கத்தக்கது என்று மேற்கண்ட அறிஞர்கள் கூறி இருந்தாலும் மற்றும் பல அறிஞர்கள் தக்க காரணங்களுடன் இதை பலவீனமானது என்று கூறியுள்ளனர்.

ميزان الاعتدال - الذهبي - (ج 4 / ص 212)
8893 -موسى بن عبد العزيز [ د، ق ] العدنى، أبو شعيب القنبارى (2) ما أعلمه روى عن غير الحكم بن أبان، فذكر حديث صلاة التسبيح.روى عنه بشر بن الحكم، وابنه عبدالرحمن بن بشر، وإسحاق بن أبى إسرائيل،وغيرهم.ولم يذكره أحد في كتب الضعفاء أبدا، ولكن ما هو بالحجة قال ابن معين: لا أرى به بأسا.وقال النسائي: ليس به بأس.وقال ابن حبان: ربما أخطأ.وقال أبو الفضل السليمانى: منكر الحديث.وقال ابن المدينى: ضعيف.قلت: حديثه من المنكرات لاسيما والحكم بن أبان ليس أيضا بالثبت.وله خبر آخر بالاسناد في القول إذا سمع الرعد - مروى في الادب للبخاري.
பலவீனமானவர்கள் பட்டியலில் இவரை ஒருவரும் குறிப்பிடவில்லை. ஆனால் இவர் ஆதாரமாகக் கொள்ளத்தக்கவர் அல்லர். இவரிடம் நான் எந்தக் குறையும் காணவில்லை என்று இப்னு மயீன் கூறுகிறார். இவரிடம் குறை இல்லை என்று நஸயீ கூறுகிறார். இவர் சில நேரத்தில் தவறாக அறிவிப்பவர் என்று ஹாகிம் கூறுகிறார்
இவர் ஹதீஸ் கலையில் மறுக்கப்பட்டவர் என்று அபுல் ஃபழ்ல் அவர்கள் கூறுகிறார்கள்.
இப்னுல் மதீனீ அவர்கள் இவர் பலவீனமானவர் என்று குறிப்பிடுகிறார்கள். (இமாம் தஹபீ) நான் கூறுகிறேன், இவருடைய ஹதீஸ்கள் மறுக்கப்படுவைகளில் உள்ளதாகும். குறிப்பாக அல்ஹகம் பின் அபான் என்பவர் மூலம் அறிவிப்பவை. (இச்செய்தியை அவர் அல்ஹகம் பின் அபான் மூலமே அறிவித்துள்ளார்.) மேலும் அவரும் (அல்ஹகம் பின் அபான் என்பவரும்) உறுதியானவர் இல்லை.
(நூல் : மீஸானுல் இஃதிதால் பாகம்6,பக்கம்550)
تقريب التهذيب : ابن حجر - (ج 2 / ص 552)
6988-موسى ابن عبد العزيز العدني أبو شعيب القنباري بكسر القاف وسكون النون ثم موحدة والقنبار حبال الليف صدوق سيء الحفظ من الثامنة مات سنة خمس وسبعين ر د س
மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் நல்லவர் எனினும் மனன சக்தியில் கேளாறு உள்ளவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார்கள்.
(நூல் தக்ரீபுத் தஹ்தீப் பாகம்1,பக்கம்552)
தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக இவ்வாறு பல விதமான விமர்சனங்களைக் குறிப்பிடும் ஹாபிழ் இப்னு ஹஜர் இறுதியாக இவ்வாறு கூறுகிறார்கள்.
تلخيص الحبير - ابن حجر - (ج 2 / ص 7)
وأما صلاة التسبيح فرواه أبو داود والترمذي وابن ماجة وابن خزيمة كلهم عن عبد الرحمن بن بشر بن الحكم عن موسى بن عبد العزيز عن الحكم بن أبان عن عكرمة عن بن عباس قال قال رسول الله صلى الله عليه و سلم للعباس يا عباس يا عماه ألا أمنحك ألا أحبوك الحديث بطوله وصححه أبو علي بن السكن والحاكم وادعى أن النسائي أخرجه في صحيحه عن عبد الرحمن بن بشر قال وتابعه إسحاق بن أبي إسرائيل عن موسى وأن بن خزيمة ورآه عن محمد بن يحيى عن إبراهيم بن الحكم بن أبان عن أبيه مرسلا وإبراهيم ضعيف قال المنذري وفي الباب عن أنس وأبي رافع وعبد الله بن عمر وغيرهم وأمثلها حديث بن عباس قلت وفيه عن الفضل بن عباس فحديث أبي رافع رواه الترمذي وحديث عبد الله بن عمرو رواه الحاكم وسنده ضعيف وحديث أنس رواه الترمدي أيضا وفيه نظر لأن لفظه لا يناسب ألفاظ صلاة التسبيح وقد تكلم عليه شيخنا في شرح الترمذي وحديث الفضل بن العباس ذكره الترمذي وحديث عبد الله بن عمرو بن العاص رواه أبو داود قال الدارقطني أصح شيء في فضائل سور القرآن قل هو الله أحد وأصح شيء في فضل الصلاة صلاة التسبيح وقال أبو جعفر العقيلي ليس في صلاة التسبيح حديث يثبت وقال أبو بكر بن العربي ليس فيها حديث صحيح ولا حسن وبالغ بن الجوزي فذكره في الموضوعات وصنف أبو موسى المديني جزءا في تصحيحه فتباينا والحق أن طرقه كلها ضعيفة وإن كان حديث بن عباس يقرب من شرط الحسن إلا أنه شاذ لشدة الفردية فيه وعدم المتابع والشاهد من وجه معتبر ومخالفة هيئتها لهيئة باقي الصلوات وموسى بن عبد العزيز وإن كان صادقا صالحا فلا يحتمل منه هذا التفرد وقد ضعفها بن تيمية والمزي وتوقف الذهبي حكاه بن عبد الهادي عنهم في أحكامه وقد اختلف كلام الشيخ محيي الدين فوهاها في شرح المهذب فقال حديثها ضعيف وفي استحبابها عندي نظر لأن فيها تغييرا لهيئة الصلاة
தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக வரும் அனைத்து வழிகளும் பலவீனமானவையாகும் என்பதே உண்மையான கருத்தாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ், ஹஸன் என்ற தரத்தின் நிபந்தனைக்கு நெருக்கமாக இருந்தாலும் அது ஷாத் ஆகும் (நம்பகமான அறிவிப்புக்கு மாற்றமானது) இந்தச் செய்தியில் கடுமையான தனிக் கருத்துக்கள் இருப்பதாலும் இதனை வலுப்படுத்தும் வகையில் சான்றுகளும் மற்ற அறிவிப்புகளும் இல்லாததாலும் மற்ற தொழுகையின் முறைக்கு மாற்றமாகவும் இதன் முறை இருப்பதாலும் (இச்செய்தி பலவீனம் அடைகிறது)
மூஸா பின் அப்துல் அஸீஸ் என்பவர் உண்மையாளராகவும் நல்லவராகவும் இருந்தாலும் இவர் தனித்து அறிவிக்கும் இச்செய்தியை ஏற்க முடியாது. இவரை இப்னு தைமிய்யா, மிஸ்ஸி ஆகியோர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(நூல்:தல்கீஸுல் ஹபீர், பாகம்2, பக்கம்8)
ஒட்டு மொத்தமாக இந்த விமர்சனங்களைக் கவனிக்கும் போது மூஸா பின் அப்துல் அஸீஸ் நல்லவர் என்றாலும் அவரிடம் நினைவாற்றல் குறைவு உள்ளது. சில நேரங்களில் இவர் தவறாக அறிவித்து விடுவார். குறிப்பாக அல்ஹகம் பின் அபான் வழியாக அறிவிக்கும் செய்திகளில் இந்தக் குறைபாடு இருக்கிறது என்று அறிந்து கொள்கிறோம். ஒரு அறிவிப்பளாரைப் பற்றி குறையாகவும் நிறையாகவும் விமர்சனம் வந்து, அந்தக் குறை தக்க காரணத்துடனும் இருந்தால் குறை கூறும் விமரசனத்துக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அனைவரும் ஏற்றுக் கொண்ட விதியின் அடிப்படையில் இது பலவீனமான செய்தி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
தஸ்பீஹ் தொழுகை என்பது ஏனைய தொழுகை போல் இல்லாமல் பல முறைகளில் மாற்றமாக அமைந்துள்ளது. அவ்வாறு இருக்கும் போது அதை நடைமுறைப்படுத்த சரியான, ஆதாரப்பூர்மான ஹதீஸ்கள் இருக்க வேண்டும். ஆனால் எந்தக் குறையும் இல்லாத செய்திகள் இல்லை. பல அறிவிப்புகள் இருந்தாலும் அனைத்திலும் குறைகள் நிறைந்து கிடக்கின்றன. மேலும் பல அறிவிப்புகள் தஸ்பீஹின் எண்ணிக்கை பற்றியும் அதைச் சொல்ல வேண்டிய இடங்கள் பற்றியும் மாற்றமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றன. எனவே தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் தொழுகை கிடையாது, அதற்கு ஆதாரப்பூர்மான ஹதீஸ்கள் இல்லை என்று பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுவே சரியான கருத்தாகும்.
மற்ற அறிஞர்கள் சுட்டிக்காட்டாத இன்னொரு குறையும் இதில் காணப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தாலும் அவர்களின் பேச்சு நடை உயர்ந்த தரத்தில் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஹதீஸின் மொழி நடை அந்தத் தரத்தில் அமையவில்லை.
என் பெரிய தந்தையே! உங்களுடன் உள்ள உறவுக் கடனை நிறைவேற்றட்டுமா? உங்களுக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் வழங்கட்டுமா? உங்களுக்கு நான் பயனுள்ளதைக் கூறட்டுமா?
நான் உனக்கு பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பளிப்பை வழங்குகிறேன்;உனக்கு நன்மையைத் தருகிறேன்; உனக்கு ஒரு கொடையை அளிக்கின்றேன்
உமக்கு அன்பளிப்பு வழங்கவா? உபகாரம் செய்யவா? தானம் செய்யவா? (இந்த நற்செயலுக்கு) உன்னைத் தேர்வு செய்யவா? வழங்கட்டுமா? வழங்கட்டுமா?
உமக்கு அன்பளிப்பு வழங்கவா? நற்செய்தி கூறவா? உபகாரம் செய்யவா? காணிக்கை தரவா?
தஸ்பீஹ் தொழுகை பற்றிய அனைத்து ஹதீஸ்களும் சொல்லி வைத்தது போல் இந்த நடை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நாம் கூட ஒரு செய்தியை இது போல் கூற மாட்டோம். ஒரே செய்தியை பத்து வகையான வார்த்தைகளைப் பயன்படுத்தி கூறினால் அது மக்களுக்கு வெறுப்பாகத் தோன்றும். மிகச் சிறந்த சொல்லாற்றல் பெற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மற்ற ஹதீஸ்களுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது அந்த நடையில் இருந்து வெகு தூரம் விலகியதாக் உள்ளதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
                                                                                                                                                      TNTJ

தராவிஹ் தொழுகை சுன்னத்தா ?ஃபர்ளா ?வாஜிபா ?

கேள்வி : Assalamu allikkum zee tharvih thoulghai sunnathha ? and parla ? and vajeeba ?

தமிழாக்கம் : அஸ்ஸலாமு அலைக்கும் ஜீ ,தராவிஹ் தொழுகை சுன்னத்தா ?பர்ளா ?வாஜிபா ?
- Abdulrazak sharfudeen. U.A.E

பதில் : இரவுத் தொழுகை கட்டாயம் தொழ வேண்டும் என்ற சட்டம் இஸ்லாத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால் கடமையான தொழுகைக்கு அடுத்ததாக சிறப்பித்து சொல்லப்பட்ட, அதிக நன்மையைப் பெற்றுத்தரக் கூடிய தொழுகை இரவுத் தொழுகைதான்.
"ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 2157
இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2. கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.

இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரீ 990
ஆக இரவுத் தொழுகை ஒரு சுன்னத்தான தொழுகையாகும், தொழுதால் நிறைய நன்மைகளையும், சிறப்புக்களையும் பெற்றுத் தரும் தொழுகையாகும். கட்டாயமாக தொழவேண்டும் என்ற சட்டம் சொல்லப்படவில்லை. 

மனிதனைப் பொருத்தவரையில் நிறைய பாவங்கள் செய்யக்கூடியவனாக இருப்பதினால், இது போன்ற தொழுகைகளை தொழுவதின் மூலம் நமது பாவங்களை நாம் சுத்தப்படுத்திக் கொள்ள முடியும்.

பதில் : ரஸ்மின்  MISc

mercredi 31 juillet 2013

லைலதுல் கத்ர்


ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)
முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)
லைலத்துல் கத்ரு எந்த நாள்?
லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)
நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.
ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700)
மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

லைலதுல் கத்ர் 27வது இரவா?

லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றாகத் தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவு தான் என்று முடிவு செய்து பெரிய விழாவாகக் கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் பார்ப்போம்.
லைலதுல் கத்ரு இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி), நூல்: அபூதாவூத் (1178)
இது போன்ற சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் லைலத்துல் கத்ர் இரவு 27வது இரவு தான் என்று கூறுகின்றனர்.

இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம் 27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு மாற்றமாக நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர் இரவு என்பது நபி (ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப் பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின் ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் 27 என்று குறிப்பிட்டுள்ளது போல் 23 என்றும் வந்துள்ளது. அவற்றை பாருங்கள்.
ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி), நூல்: அஹ்மத் (15466)
இதைப் போன்று 21, 23, 25 என்று மூன்று இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.
“ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல் கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில், இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2021
இதைப் போன்று 23, 29 இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.
“லைலதுல் கத்ரு இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2022
இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன் சரியான கருத்து என்ன? என்பதற்கு இமாம் ஷாஃபீ அவர்கள் தெளிவான விடையை கூறியுள்ளார்கள்.
இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், “நபியவர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா?’ என்று கேட்கும் போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள்” என்று கூறுகிறார்கள். (திர்மிதீ 722)
அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 23வது இரவில் தேடுங்கள்’ என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்திருப்பார்கள். எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும் ஹதீஸ்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.

- TNTJ.NET

லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய பிரார்த்தனை


ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?' என்று நான் கேட்டேன். அதற்கு, 'அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி' என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي

அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வஃப அஃபுஅன்னீ

பொருள்: 'இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!'

mardi 30 juillet 2013

நோன்பின் சட்டங்கள்

நோன்பின் சட்டங்கள்

  • பதில் அளிப்பவர் : பி.ஜைனுல் ஆபிதீன்
  • தவறான வாதங்களும் தக்க பதில்களும் 1
  • உரை : பி.ஜைனுல் ஆபிதீன்



    lundi 29 juillet 2013

    நோன்பு திறக்கும் துஆ

    நோன்பு திறக்கும் துஆ மறு ஆய்வு தமிழகத்தில் நோன்பு துறக்கும் துஆவாக அல்லாஹும்ம லக்க சும்த்து... என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹும்ம லக்க சும்த்து... என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அலீ (ரலி) ஆகிய நான்கு நபித்தோழர்கள் வழியாகவும் முஆத் பின் ஸஹ்ரா என்று ஒரு தாபியி வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவை அனைத்தும் பலவீனமான செய்திகளாகும். அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து இந்த வாசகத்தை முஆத் பின் ஸஹ்ரா என்ற தாபியி அறிவிக்கும் செய்தி حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ حُصَيْنٍ عَنْ مُعَاذِ بْنِ زُهْرَةَ أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ قَالَ اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ அபூதாவூத் (2011), முஸனஃப் இப்னு அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511, பைஹகீ பாகம்: 4, பக்கம்: 239, ஷுஅபுல் ஈமான்-பைஹகீ (3747), அத்தஃவாத்துல் கபீர்-பைஹகீ (426), அஸ்ஸுஹ்த் வர்ரகாயிக்-இப்னுல் முபாரக் (1388,1390), அஸ்ஸுனனுஸ் ஸகீர்-பைஹகீ (1102), பழாயிலுல் அவ்காத்-பைஹகீ (141), அல்மராஸில்-அபூதாவூத் (95) ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நூல்களிலும் முஆத் பின் ஸஹ்ரா என்பவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான எந்தச் செய்தியாக இருந்தாலும் அதை நேரடியாகப் பார்த்து அல்லது கேட்டு அறிவித்தால் மட்டுமே அது ஏற்றுக் கொள்ளப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாத ஒருவர் அறிவித்தால் அது பலவீனமான செய்தியாகும்.
     மேலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் முஆத் பின் ஸஹ்ரா என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது இப்னு ஹிப்பான் அவர்கள் வழக்கம். எனவே இப்னு ஹிப்பான் மட்டும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்பதில்லை. எனவே முஆத் பின் ஸஹ்ரா என்பவர் யாரென அறியப்படாததால் இச்செய்தி மேலும் பலவீனமடைகிறது. அபூ ஹுரைரா (ரலி) வழியாக அறிவிக்கப்படும் இன்னொரு ஹதீஸ் முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. مصنف ابن أبي شيبة - كتاب الصيام حدثنا محمد بن فضيل ، عن حصين ، عن أبي هريرة ، قال : كان النبي صلى الله عليه وسلم إذا صام ثم أفطر ، قال : اللهم لك صمت ، وعلى رزقك أفطرت முதல் அறிவிப்பாளராக முஹம்மத் பின் ஃபுலைல் என்பாரும் இரண்டாவது அறிவிப்பாளராக ஹுசைன் என்பாரும் மூன்றாவது அறிவிப்பாளராக அபூ ஹுரைரா (ரலி) அவர்களும் குறிப்பிடப்பட்டுள்ளனர். முதல் அறிவிப்பாளரான முஹம்மத் பின் ஃபுலைல் இரண்டாம் அறிவிப்பாளரான ஹுசைன் காலத்தில் வாழ்ந்தவர் அல்லர். இவர் ஹிஜ்ரி 295 ஆம் ஆண்டு மரணித்தார். ஹுசைன் ஹிஜ்ரி 136ல் மரணித்தார். இருவரது மரணத்துக்கும் இடையே 159 ஆண்டுகள் இடைவெளி உள்ளன. எனவே இருவரும் சம காலத்தில் வாழ்ந்திருக்க முடியாது. எனவே இந்த ஹதீஸும் பலவீனமானதாகும்.       லக்க சும்த்து வலா ரிஸ்க்கிக்க அஃப்தர்த்து வதகப்பல் மின்னீ இன்னக்கஸ் ஸமீவுல் அளீம் المعجم الكبير للطبراني - من اسمه عبد الله حدثنا محمد بن عبد الله الحضرمي ، ثنا يوسف بن قيس البغدادي ، ثنا عبد الملك بن هارون بن عنترة ، عن أبيه ، عن جده ، عن ابن عباس قال : كان النبي صلى الله عليه وسلم : إذا أفطر قال : لك صمت ، وعلى رزقك أفطرت فتقبل مني إنك أنت السميع العليم * இந்த வாசகம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீயின் அல்முஃஜமுல் கபீர் பாகம்: 10, பக்கம்: 292ல் இடம் பெற்றுள்ளது. 
    இதில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரைக் கடுமையாக ஹதீஸ் கலை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இவரும் இவருடைய தந்தையும் பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும், இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாத்தம் அவர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுபவர் என்று இப்னு ஹிப்பான் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்த செய்தி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களுக்குரிய லிஸானுல் மீஸான் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியும் ஆதாரமற்றதாகி விடுகிறது. المعجم الأوسط للطبراني - باب العين حدثنا محمد بن إبراهيم ، ثنا إسماعيل بن عمرو البجلي ، نا داود بن الزبرقان ، نا شعبة ، عن ثابت البناني ، عن أنس بن مالك قال : كان النبي صلى الله عليه وسلم إذا أفطر قال : بسم الله ، اللهم لك صمت ، وعلى رزقك أفطرت لم يرو هذا الحديث عن شعبة إلا داود بن الزبرقان ، تفرد به : إسماعيل بن عمرو * பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து இந்தச் செய்தி அனஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீ அவர்களுக்குரிய அல்முஃஜமுல் அவ்ஸத் பாகம்: 16, பக்கம்: 338லும், அல்முஃஜமுஸ் ஸகீர் பாகம்: 3, பக்கம்: 52லும், கிதாபுத் துஆ பாகம்: 2, பக்கம்: 488லும் அபூநுஐம் அவர்களுக்குரிய அஹ்பார் உஸ்பஹான் பாகம்: 9, பக்கம்: 141லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை இடம் பெற்றிருக்கும் அனைத்து நூல்களிலும் தாவூத் பின் ஸிப்ரிகான் என்பவர் இடம் பெற்றுள்ளார். ஜவ்ஸஜானீ அவர்கள், இவர் ஒரு பொய்யர் என்றும் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர்என்று யஃகூப் பின் ஷைபா, அபூ ஸுர்ஆ அவர்களும். இவர் நம்பகமானவர் இல்லை என்று இமாம் நஸயீ அவர்களும் பலவீனமானவர்என்று அபூதாவூத் அவர்களும் மேலும் பலரும் விமர்சனம் செய்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்) எனவே இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல!   அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலைக்க தவக்கல்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து المطالب العالية للحافظ ابن حجر العسقلاني - كتاب السحور باب إجابة الدعاء عند الفطر - حديث : 1121;8191       وقال الحارث ، حدثنا عبد الرحيم بن واقد ، ثنا حماد بن عمرو ، عن السري بن خالد بن شداد ، عن جعفر بن محمد ، عن أبيه ، عن جده ، عن علي ، قال : قال لي رسول الله صلى الله عليه وسلم : يا علي ، إذا كنت صائما في شهر رمضان فقل بعد إفطارك : اللهم لك صمت ، وعليك توكلت ، وعلى رزقك أفطرت ، يكتب لك مثل من كان صائما من غير أن ينقص من أجورهم شيئا இந்த வாசகம் அலீ (ரலி) அவர்கள் மூலம் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் அல்மதாலிபுல் ஆலிய்யா பாகம்: 3, பக்கம்: 408லும், முஸ்னதுல் ஹாரிஸ் பாகம்: 2, பக்கம்: 256லும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியில் இடம் பெறும் ஆறாவது அறிவிப்பாளர் ஹம்மாத் பின் அம்ர் அந்நஸீபி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்லும் பொய்யர் என்று கடுமையாகக் குற்றம் சுமத்தப்பட்டவராவார். இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று இமாம் புகாரீ அவர்களும், இவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸயீ அவர்களும், ஹதீஸ்களை இட்டுக் கட்டுபவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும், முற்றிலும் பலவீனமானவர் என்று இமாம் அபூஹாத்தம் அவர்களும், பொய்யர் என்றும் இட்டுக்கட்டிச் சொல்பவர் என்றும் பிரபலமானவர்களில் இவரும் ஒருவர் என்று இப்னு மயீன் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். (நூல்: லிஸானுல் மீஸான்) 
    இதைப் போன்று ஐந்தாவது அறிவிப்பாளர் அஸ்ஸரிய்யு பின் காலித் என்பவர் யாரென அறிப்படாதவர் என்று இமாம் தஹபீ தனது மீஸானுல் இஃதிதால்என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்தச் செய்தியும் பலவீனமடைகிறது. ஆக மொத்தத்தில் அல்லாஹும்ம லக்க சும்து ... எனத் தொடங்கும் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை. தஹபள்ளமவு... என்று ஆரம்பிக்கும் துஆ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஹபள்ளமவு... என்று ஆரம்பிக்கும் இந்த துஆவை ஓதியதாக حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى أَبُو مُحَمَّدٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ أَخْبَرَنِي الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي ابْنَ سَالِمٍ الْمُقَفَّعَ قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ يَقْبِضُ عَلَى لِحْيَتِهِ فَيَقْطَعُ مَا زَادَ عَلَى الْكَفِّ وَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتْ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ அபூதாவூத் 2010, ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நாம் கூறினோம். நமது உரைகளிலும் கட்டுரைகளிலும் நூல்களிலும் இதைத் தெரிவித்தோம். எதன் அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்து அறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார். ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள். மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதை வழிமொழிந்தோம். இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர்கள் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது. ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம் பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம். மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள். ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை. ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம் நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான் அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது நமக்குத் தெரிய வருகின்றது. மேலும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத் தன்மை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா என்று ஆய்வு செய்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை. இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ அவர்கள் மட்டும், இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார் என்று குறிப்பிடுகின்றார். இப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார். ஹாகிம் அவர்களின் இந்த விதிமுறையை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர். வேறு எந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தவில்லை. எனவே யாரென்று அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல. இதன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை என்பது உறுதியாகின்றது. சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376) நபிமொழிக்கேற்ப பிஸ்மில்லாஹ் கூறுவது தான் சரியான நடைமுறை ஆகும். ஏற்கனவே ஒரு கருத்தைச் சொல்லி விட்டால் அது தவறு என்று தெரிந்த பின்னர் அதில் பிடிவாதமாக இருப்பதும், பொருந்தாத காரணம் கூறி நியாயப்படுத்துவதும் இறையச்சத்திற்கு எதிரானதாகும். நமது கவுரவத்தை விட மார்க்கம் முக்கியமானது என்ற அடிப்படையில் இதைத் தெளிவுபடுத்துகின்றோம். 
    onlinepj