கடந்த சனிக்கிழமை 21-12-2013 அன்று மதியம் 3 மணியளவில் FRTJ தலைவர்
சகோ ருக்னுதீன் அவர்கள் வீட்டில் பெண்களுக்கான மாதாந்திர பயான் நிகழ்ச்சி
சிறப்பான முறையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ! இதில் சகோதரி சபீனா
இன்சாப் அவர்கள் "வழிகெடுக்கும் பித் அத்துக்கள் " என்ற தலைப்பில்
சிறப்பாக உரையாற்றினார்கள்.
குழந்தை பிறப்பிலிருந்து திருமணம் முடித்து கொடுக்கும் வரை பிள்ளை பேறு சடங்குகள் தொடர்ந்து மௌத்து ஹத்தம், பாத்திஹா என்று நமது சமுதாயத்தில் புரையோடி கிடக்கின்ற பித் அத்துகளை பட்டியலிட்டு சுட்டி காட்டினார்கள் .
அதனை தொடர்ந்து FRTJ தலைவர் சகோதரர்
ருக்னுதீன் அவர்கள் "பொறுப்பு ஓர் அமானிதம் " என்ற தலைப்பில் உரை
ஆற்றினார்கள். எதிர் வரும் ஜனவரி 28 சிறை நிரப்பு போராட்டம் எதற்கு என்பது
பற்றியும் விளக்கப் பட்டது அதன் பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும் இதில் பெண்கள்
ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும்
வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.





