இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5
கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!
அரபு மொழி பயிற்சி
அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி
குரானைத் தொட்டு முத்தமிடலாமா?
திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை
மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)
தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)
நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...
தொழுகை முறை
'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812
FRTJ ஃபிரெஞ்சு
ஏகத்துவ பிரசாரத்தை ஃபிரெஞ்சு மொழி பேசும் மக்களுக்கும் எத்தி வைப்பதற்காக ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பிரெஞ்சு மொழியில் ஒரு இணையதளத்தை துவக்கியுள்ளோம்.அல்ஹம்துலில்லாஹ் ! ஃபிரெஞ்சு மொழி பேசும் மக்களிடையே இந்த இணையதள முகவரியை கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.WWW.FRTJFR.BLOGSPOT.COM
mercredi 31 juillet 2013
லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய பிரார்த்தனை
mardi 30 juillet 2013
lundi 29 juillet 2013
நோன்பு திறக்கும் துஆ
நோன்பு
திறக்கும் துஆ மறு ஆய்வு தமிழகத்தில் நோன்பு துறக்கும் துஆவாக அல்லாஹும்ம
லக்க சும்த்து... என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது
விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹும்ம லக்க
சும்த்து... என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில் பதிவு
செய்யப்பட்டுள்ளது. அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அலீ
(ரலி) ஆகிய நான்கு நபித்தோழர்கள் வழியாகவும் முஆத் பின் ஸஹ்ரா என்று ஒரு
தாபியி வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவை அனைத்தும்
பலவீனமான செய்திகளாகும். அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க
அஃப்தர்த்து இந்த வாசகத்தை முஆத் பின் ஸஹ்ரா என்ற தாபியி அறிவிக்கும்
செய்தி حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ حُصَيْنٍ عَنْ
مُعَاذِ بْنِ زُهْرَةَ أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ قَالَ اللَّهُمَّ لَكَ صُمْتُ
وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ அபூதாவூத் (2011), முஸனஃப் இப்னு அபீ ஷைபா
பாகம்: 2, பக்கம்: 511, பைஹகீ பாகம்: 4, பக்கம்: 239, ஷுஅபுல் ஈமான்-பைஹகீ (3747),
அத்தஃவாத்துல் கபீர்-பைஹகீ (426), அஸ்ஸுஹ்த் வர்ரகாயிக்-இப்னுல் முபாரக்
(1388,1390), அஸ்ஸுனனுஸ் ஸகீர்-பைஹகீ (1102), பழாயிலுல் அவ்காத்-பைஹகீ
(141), அல்மராஸில்-அபூதாவூத் (95) ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து நூல்களிலும் முஆத் பின் ஸஹ்ரா என்பவர், நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் அல்ல. நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான எந்தச் செய்தியாக இருந்தாலும் அதை
நேரடியாகப் பார்த்து அல்லது கேட்டு அறிவித்தால் மட்டுமே அது ஏற்றுக்
கொள்ளப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாத ஒருவர்
அறிவித்தால் அது பலவீனமான செய்தியாகும்.jeudi 18 juillet 2013
ரமழான் மாதம் தொடர்பான ஆதாரமற்ற செய்திகள்.
அருள்மிகு ரமழான் மாதம் நம்மை முன்னோக்கி வரக்கூடிய இந்நேரத்தில் அந்த மாதம் தொடர்பாக பதியப்பட்டுள்ள ஆதாரமற்ற செய்திகளை நாம் அறிந்து கொள்வது சாலச்சிறந்ததாகும்.dimanche 14 juillet 2013
ரமளான்
ரமளான்இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும.;நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான ். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும் நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது (2:185).
நாம் பதினோரு மாதங்கள் செய்யும் பாவங்களை அழித்து நன்மையின் பக்கம் நம்மை அழைக்கும் மாதம் இந்த ரமழான்.
முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப் படும் மாதம்.
ரமழான் மாதத்தில் நம்மிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்றால் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப் படும் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.
யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901) முஸ்லிம் (1393)
அருள் வாயல்கள் திறக்கப் படும் மாதம்.
“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898),முஸ்லிம் (1956)
“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899),முஸ்லிம் (1957)
நம்மை பாவங்களில் இருந்து காப்பாற்றி நன்மையை மாத்திரம் செய்வதற்று இந்த மாதம் தூண்டுவதால் தான் இந்த செய்திகளை நபியவர்கள் சொல்கிறார்கள்.
சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு ஷைத்தான்கள் விளங்கிடப் படும் மாதம் இது இந்த மாதத்தில் அதிகமாக நன்மைகளை செய்வதில் நாம் அதிகம் கவணம் செலுத்த வேண்டும்.
அதிக நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்
நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) , நுல்: முஸ்லிம் (2119)
ரமழான் மாத நோன்பு எனக்குறியது அதற்கு நனே கூலி கொடுக்கிறேன் என்று இறைவன் கூறுகிறான் இந்த மாத்த்தில் நாம் தீய பேச்சுக்கள் பேசுவதை விட்டும் நம்மை பாதுக்காத்துக் கொள்ள வேண்டும்.
யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)
உம்ரா செய்தால் ஹஜ் நன்மை.
ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.
ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)
சுவர்க்கத்தில் தனி வாசல்.
சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு �® �வரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி)
நூல்: புகாரீ (1896) முஸ்லிம் (2121)
இறைவனுக்கு மிக விருப்பமான வணக்கம்.
நோன்பு இறைவன் மனிதனுக்கு கட்டளையிட்ட வணக்கங்களிலேயே மிகவும் விருப்பமானதாகும்.
“நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நுல்: புகாரீ (1894)
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும்இ ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
(அல்குர்ஆன் 97:1-5)
எனவே இந்த ரமழானை நாம் சுவர்க்கம் செல்லும் வழியாக அமைத்துக் கொள்ள முயல்வோமாக.
நன்றி ரஸ்மின் .misc (sltj)
அனுப்பியவர் அமீன் ஆஷிக்
தவறான அறிவிப்பு
இந்த வருடம் பிரான்சில் ரமலான் பிறையை வழக்கத்திற்கு மாறாக இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்து விட்ட காரணத்தினால் பெரும் குழப்பம் நிலவியது. இதற்க்கு காரணம் (CFCM) என்ற அமைப்பின் மார்க்கத்திற்கு முரணான வகையில் எடுத்த முடிவே காரணம்.ஏனென்றால் ஆங்கிலேய காலண்டர்lundi 8 juillet 2013
பிறை பார்க்காமல் நோன்பு நோர்க்கலாமா?
"ரமளானுக்கு முதல் நாளும் அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது; அந்நாள்களில் வழக்கமாகத் நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால்அந்நாளில் நோன்பு நோற்கலாம்!" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும்
வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.






