இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5
கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!
அரபு மொழி பயிற்சி
அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி
குரானைத் தொட்டு முத்தமிடலாமா?
திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை
மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)
தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)
நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...
தொழுகை முறை
'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812
FRTJ ஃபிரெஞ்சு
ஏகத்துவ பிரசாரத்தை ஃபிரெஞ்சு மொழி பேசும் மக்களுக்கும் எத்தி வைப்பதற்காக ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பிரெஞ்சு மொழியில் ஒரு இணையதளத்தை துவக்கியுள்ளோம்.அல்ஹம்துலில்லாஹ் ! ஃபிரெஞ்சு மொழி பேசும் மக்களிடையே இந்த இணையதள முகவரியை கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.WWW.FRTJFR.BLOGSPOT.COM
lundi 7 octobre 2013
துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பது சரியா?
ஆஷூராவுடைய நோன்பு (துல்ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் நோன்பு நோற்பது ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது ஃபஜர் தொழுகைக்கு முன்னால் உள்ள இரண்டு ரக்அத்கள் இந்த நான்கு நல்லறங்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விட்டதே இல்லை.
அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி)
நூல் : நஸாயீ (2373)
(துல் ஹஜ்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும். என்று நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும் தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவரைத் தவிர) என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி (969)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நோன்பு நோற்று ஒரு போதும் நான் கண்டதில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2186)
தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா?
ஒருவர் மக்கா சென்று வர சக்தி பெற்றால் அவர் மீது ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களுக்குக் கூடுதலாக ஒரு நிபந்தனை உள்ளது. அவர்கள் ஹஜ் செய்ய வேண்டுமென்றால் ஒன்று, அவள் தன் கணவருடன் செல்ல வேண்டும். அல்லது அவள் தனது தந்தை, மகன், சகோதரன் போன்ற திருமணம் முடிக்க ஹராமான ஆணுடன் செல்ல வேண்டும். ஒரு பெண் மணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட உறவுகளை அரபியில் மஹ்ரம் என்று கூறுவர். ஒரு பெண் மக்கா சென்று வர பொருளாதாரம், உடல் ஆரோக்கியம் போன்ற வசதிகளைப் பெற்றுள்ளார்; ஆனால் அவளுடன் செல்வதற்குக் கணவனோ அல்லது மஹ்ரமான துணையோ இல்லை என்றால் அவளுக்கு ஹஜ் கடமையில்லை. இது தான் அந்தக் கூடுதல் நிபந்தனையாகும்.'திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக் கூடாது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1086, 1087
'ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். திருமணம் செய்யத் தகாத ஆண் உறவினருடன் தவிர எந்தவொரு பெண்ணும் பயணம் மேற்கொள்ள வேண்டாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்ட போது ஒரு மனிதர் எழுந்து 'அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்ய நாடுகிறார்; நான் இன்னின்ன போர்களில் பங்கெடுக்க நாடுகிறேன்' என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராக' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1862, 3006, 3061, 5233
(கஅபா எனும்) அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97)
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'அதீயே! நீ ஹீராவைப் பார்த்ததுண்டா?' என்று கேட்டார்கள். 'நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால் அதைப் பற்றி எனக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது' என்று பதிலளித்தேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'நீ நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நீ நிச்சயம் பார்ப்பாய்! ஒட்டகச் சிவிகையில் அமர்ந்து இருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவில் இருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்ச மாட்டாள்' என்று சொன்னார்கள். 'அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பி விட்ட தய்யி குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?' என்று நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'நீ நீண்ட நாள் வாழ்ந்தால் குஸ்ரூ (பாரசீகப் பேரரசன் கிஸ்ரா)வின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதைப் பார்ப்பாய்' என்று சொன்னார்கள். நான், '(மாபெரும் வல்லரசுக்குச் சொந்தக்காரரான) கிஸ்ரா பின் ஹுர்முஸா (வெற்றி கொள்ளப் படுவார்)?' என்று கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'கிஸ்ரா பின் ஹுர்முஸ் தான்' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)
நூல்: புகாரி 3595
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது போலவே, 'ஒட்டகச் சிவிகையில் இருக்கும் பெண் ஒருத்தி ஹீராவிலிருந்து கஅபாவை வலம் வருவதற்காக அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவளாகப் பயணம் செய்து வருவதை (என் கண்களால்) நான் பார்த்தேன்' என்று அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி 3595)
நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (நூல்: முஸ்லிம் 3771)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் அருந்தியதை நான் பார்த்தேன் என்று அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி 5615, 5616)
ஹாஜி - யார் ?
இன்று திறப்பு விழா காணும் பிரியாணி ஹோட்டல் சிறக்க வாழ்த்துகின்றோம் என்று விளம்பர போஸ்டர்கள் வீதிகளில் ஓட்டப் படுவதை பார்த்திருக்கின்றோம்.ஆனால் அந்தப் போஸ்டர்களை எல்லாம் மிஞ்சும் விதமாக,காசிம் மரைக்காயரின் ஹஜ் பயணம் சிறக்க வாழ்த்துகின்றோம் என்று வழியனுப்பு விழா போஸ்டர்களும்,ஹஜ்ஜுக்குச் சென்று திரும்பி வரும்போது, ஹாஜி பக்கிர் லெப்பையை வரவேற்கிறோம் என்று வரவேற்பு போஸ்டர்களும் கண்ணைக் கவரும் விதத்தில் அச்சடிக்கப் பட்டு ஒட்டப்படுகின்றன.அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குரான்3:97)
வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும் உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாரும், ஸக்காதைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப் படவில்லை. இதுவே நேரான மார்க்கம். (அல்குரான் 98:5)
வணக்கத்தை உளத் தூய்மையுடன் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனை நான் வணங்க வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டுள்ளேன்; முஸ்லிம்களில் முதலாமவனாக நான் ஆகவேண்டுமெனவும் கட்டளையிட்டுள்ளேன் எனக் கூறுவீராக! என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனைக்கு அஞ்சுகிறேன் என்றும் கூறுவீராக! உளத் தூய்மையுடன் எனது வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனையே வணங்குவேன் எனவும் கூறுவீராக! (அல்குரான் 39:11-14)
dimanche 29 septembre 2013
இஸ்லாத்தின் அடிப்படையை உணர்த்திய நபித்தோழி
5283 حَدَّثَنَا مُحَمَّدٌ أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ حَدَّثَنَا خَالِدٌ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ زَوْجَ بَرِيرَةَ كَانَ عَبْدًا يُقَالُ لَهُ مُغِيثٌ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ خَلْفَهَا يَبْكِي وَدُمُوعُهُ تَسِيلُ عَلَى لِحْيَتِهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعبَّاسٍ يَا عَبَّاسُ أَلَا تَعْجَبُ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ وَمِنْ بُغْضِ بَرِيرَةَ مُغِيثًا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ رَاجَعْتِهِ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ تَأْمُرُنِي قَالَ إِنَّمَا أَنَا أَشْفَعُ قَالَتْ لَا حَاجَةَ لِي فِيهِ رواه البخاريபரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்ததை இப்போதும் நான் காண்போன்றுள்ளது.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? என்று கேட்டார்கள். (முஃகீஸீடமிருந்து பரீரா பிரிந்துவிட்டபோது) நபி (ஸல்) அவர்கள் முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா? என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (இல்லை) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன் என்றார்கள். அப்போது பரீரா (அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள் : புகாரீ (5283)
மார்க்கத்தின் அடிப்படைய ஆதாரங்கள் என்ன? என்பதை மிகத் தெளிவாக விளக்கும் ஹதீஸ் இது! மார்க்க விஷயத்தில் படைத்தவன் மட்டுமே கட்டளையிட முடியும் வேறு எவரும் கட்டளையிட முடியாது. அப்படி கட்டளையிட்டால் அதை ஏற்கத் தேவையில்லை என்பதையும் இச்சம்பவம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. முதலில் இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதைக் காண்போம்.
பரீரா (ரலி) அவர்கள் ஆரம்பத்தில் அடிமையாக இருந்தார்கள். அப்போது அவர்கள் முஃகீஸ் என்ற நபித்தோழரை திருமணம் செய்திருந்தார்கள். இவர்களும் அடிமையாகவே இருந்தார்கள். இந்நிலையில் பரீரா (ரலி) அவர்களை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள். இதனால் பரீரா (ரலி) அவர்கள் சுதந்திரமானவர்களானார்கள். இஸ்லாத்தின் சட்டப்படி ஒருவர் அடிமையிலிருந்து விடுதலையானால் அவர் விரும்பினால் முந்தைய கணவருடன் வாழலாம், விரும்பினால் அவரை விட்டுவிடவும் செய்யலாம். இதன் அடிப்படையில் பரீரா (ரலி) அவர்கள் முஃகீஸ் (ரலி) அவர்களுடன் வாழ விரும்பவில்லை. ஆனால் முஃகீஸ் (ரலி) அவர்களோ பரீரா (ரலி) அவர்கள் மீது அளவுகடந்த அன்பை வைத்திருந்தார்கள்.
அவர்களுடன் வாழ விரும்பினார்கள். ஆனால் பரீரா (ரலி) அவர்கள் தொடர்ந்து மறுத்துவந்தார்கள். எனினும் பரீரா (ரலி) அவர்கள் பின்னால் அழுது கொண்டே சென்று தன்னுடன் வாழுமாறு கோரினார்கள். ஆனாலும் பரீரா (ரலி) அவர்கள் ஏற்கவில்லை.
மஃகீஸ் (ரலி) அவர்கள், பரீரா (ரலி) அவர்கள் மீது வைத்திருந்த அன்பைக் கண்டு இரக்கமுற்ற நபி (ஸல்) அவர்கள் சேர்ந்து வாழ்ந்தால் என்ன? என்று பரீரா (ரலி) அவர்களிடம் கூறினார்கள். இதைக் கேட்ட பரீரா (ரலி) அவர்கள், இது அல்லாஹ்வின் கட்டளையா? அல்லது உங்கள் சொந்த விருப்பமா? என்று கேட்கிறார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இது என் சொந்த விருப்பம்தான், நான் பரிந்துரைதான் செய்கிறோன். இது மார்க்க சட்டம் அல்ல! என்று தெளிவுபடுத்திய போது முஃகீஸ் எனக்குத் தேவையில்லை என்று கறாறாக கூறிவிட்டார்கள். இதைத்தான் மேற்கூறிய ஹதீஸ் எடுத்துரைக்கிறது.
மார்க்கத்தில் கட்டளையிட அதிகாரம் உள்ளவன் நம்மை படைத்த இறைவன் மட்டுமே! அவனுக்கே முழு அதிகாரமும் உள்ளது என்ற கருத்தையே இந்த சம்பவம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். அவன் தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்தவன்'' என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6 : 57)
படைத்தவனின் கட்டளைகள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. அவற்றை பார்த்தே நாம் எந்த முடிவையும் மார்க்க விஷயத்தில் எடுக்க வேண்டும். அவன் இறக்கிய வேத வசனங்களை விட்டுவிட்டு மனிதக் கூற்றுகளையும் யூகங்களையும் உலக நடைமுறைகளையும் பின்பற்றினால் நாமே நஷ்டவளிகளே என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் (ஏக இறைவனை) மறுப்பவர்கள். (அல்குர்ஆன் 5 : 44)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 5 : 45)
அல்லாஹ் அருளியதன் அடிப்படை யில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள். (அல்குர்ஆன் 5 : 47)
படைத்தவன் இறக்கியது என்று கூறும் போது திருக்குர்ஆன் மட்டுமல்ல! அத்துடன் அதை விளக்குவதற்கு நபி (ஸல்) அவர்களையும் அனுப்பியுள்ளான். அவர்கள் கூறிய சட்டத்தையும் நாம் ஏற்றவேண்டும்.
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். (அல்குர்ஆன் 16 : 44)
இந்த வசனத்தின் படி நபி (ஸல்) அவர்களின் விளகத்தையும் நாம் ஏற்க வேண்டும். மேலும் திருக்குர்ஆன் அல்லாத வஹீயையும் (சுன்னாவையும்) அல்லாஹ் இறக்கியுள்ளான்.
நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருந்தனர். (அல்குர்ஆன் 3 : 164)
இவ்வசனத்தில் இறைத்தூதர் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு ஞானம் என்று கூறப்பட்டுள்ளது நாம் ஹதீஸ் என்று கூறுவதைத்தான். எனவே திருக்குர்ஆனோடு ஆதாரப்பூர்வமான ஹதீûஸயும் பின்பற்றுவது கட்டாயமாகும். நபி (ஸல்) அவர்களின் கூற்றை ஏற்று நடப்பது அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடப்பதைப்போலவாகும்.
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 4 : 80)
மேற்கூறிய ஆதாரங்களின் அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் இரண்டே இரண்டுதான்! இந்த இரண்டு மட்டுமே பின்பற்றப்படுவதற்கு தகுதியானதாகும். எவ்வளவு பெரிய மனிதரின் கூற்றாக இருந்தாலும் அந்த கூற்றை ஏற்று நடப்பது யாருக்கு கட்டாயம் இல்லை.
இதற்கு சிறந்த உதாரணம்தான் பரீரா (ரலி) அவர்களின் சம்பவம். முஃகீஸ் (ரலி) அவர்களுடன் சேர்ந்து வாழுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறிய யோசனையை பரீரா (ரலி) அவர்கள் இது மார்க்கச்சட்டமா? அல்லது உங்கள் சொந்தக் கருத்தா? என்று வினவி நபி (ஸல்) அவர்களின் சொந்தக் கருத்து என்று கூறப்பட்ட போது நபிகளாரின் கூற்றையே அவர்கள் ஏற்கவில்லை,
ஏனெனில் அது படைத்தவனின் கட்டளையாக நபிகளார் கூறாததுதான்.
இவ்வுலகத்தில் மிகச்சிறந்த மாமனிதர் நபி (ஸல்) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது. அவ்வாறு இருந்தும் கூட, அவர்களின் சொந்தக் கூற்றைக் கூட ஏற்று நடக்க வேண்டிய அவசியம் இல்லை என்றால்
இவ்வுலகத்தில் வாழும் மற்றவர்களின் கூற்று எவ்வளவு மதிப்புடையாத இருக்கும்? ஆனால் இன்று ஷைக், மூரீத் என்ற பெயரில் மனிதனை பக்குவபடுத்துகிறோம் என சில போலி ஷைக்மார்கள் உலா வருகின்றனர்.
அவரிடம் பைஅத் (உடன்படிக்கை) எடுத்துவிட்டால் அவர் சொன்ன அடிப்படையில்தான் நாம் நடக்க வேண்டுமாம். திருமணம் மற்று ஏனைய அனைத்துக் காரியங்களையும் அவரிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டுமாம். இப்படி பலர் மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் பரீரா (ரலி) அவர்கள் நபிகளார் சொந்தக் கூற்றாக சொன்ன விசயத்தை ஏற்க மறுத்தார்கள், அதற்காக நபிகளார் கோபப்படவில்லை. நபிகளாரின் கூற்றைக் கூட நாம் இவ்விசயத்தில் ஏற்க வேண்டியதில்லை நம் விருப்படி நடக்கலாம் என்றால் இன்று ஷைகுமார்கள் எம்மாத்திரம் ? சிந்தித்துப்பாருங்கள்.
மார்க்க விசயத்தில் பரீரா (ரலி) அவர்களைப் போன்று இன்றைய பெண்களும் ஆண்களும் திகழ்ந்தால் மொத்த மூடநம்பிக்கைகளையும் உடைத்தெறிந்து திருக்குர்ஆன் நபிமொழிகளின் அடிப்படையில் ஓரிறைக் கொள்கைகளை இலகுவாக நிறைவேற்றிவிடலாம்.
TNTJ
jeudi 19 septembre 2013
மாற்று மதத்தினருக்கு தாவா
துணை தலைவர் சகோதரர் அமீன் ஆஷிக் அவர்களால் இஸ்லாம் பற்றிய விளக்கங்கள் கூறப்பட்டு, சகோதரர் P.J அவர்களால் மொழி பெயர்ப்பு செயப்பட்ட அல் குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.
jeudi 12 septembre 2013
விளம்பரமாகும் ஹஜ்
ஹாஜிகள்
மக்காவிற்குப் பயணமாகும் நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.
இலட்சக்கணக்கில் பணத்தை செலவழித்துச் செய்கின்ற இந்த ஹஜ் எனும் வணக்கம்
பாழாகிவிடக்கூடாது, பயனற்றதாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக ஹாஜிகளின் அன்பான
கவனத்திற்கு மார்க்கம்
கூறும் அறிவுரைகளை அளிக்கின்றோம்.
இன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும்
வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.








