புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

lundi 14 février 2011

அயோத்தி வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு எதிர்த்து அன்சாரி இன்று அப்பீல்

லக்னோ:அயோத்தி ராமர் கோவில் நில விவகாரத்தில், அலகாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஹாஷிம் அன்சாரி இன்று சுப்ரீம் கோர்ட்டில், மேல் முறையீடு செய்கிறார். அயோத்தியில் ராமர் கோவில் உள்ள, நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு 60 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பாபர் மசூதி இடிப்புக்கு பின் அங்குள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. ஒரு பகுதி நிலம் அக்ஷரா பரிஷத்துக்கும், மற்றொரு பகுதி நிலம் ராமர் கோவில் கட்டுவதற்கும், மீதமுள்ள பகுதி முஸ்லிம் அமைப்புக்கு சொந்தம் என தீர்ப்பு கூறியது.எனினும் இதில் தீர்ப்பில் முஸ்லிம்களும், அக்ஷரா பரிஷத் தலைவர் துறவி ஞானதாசும் திருப்தியடையவில்லை. கோர்ட்டுக்கு வெளியே இந்த பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, அயோத்தி முஸ்லிம் அமைப்பின் தலைவர் ஹாஷிம் அன்சாரியும்(90) ஞானதாசும் முயற்சி செய்தனர். இந்த முயற்சி பலன் அளிக்காத காரணத்தால், ஹாஷிம் அன்சாரி, சுப்ரீம் கோர்ட்டில் இன்று, அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்கிறார்.

                                                                                                            தினமலர் 14-02-2011