புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

dimanche 13 février 2011

valentines day (காதலர் தினம் ) கொண்டாடலாமா ? தலையங்கம் !

VALENTINE'S DAY (காதலர் தினம் ) கொண்டாடலாமா ?
 

VALENTINE'S DAY என்ற பெயரில் உள்ள VALENTINE என்பவர் யார் ,அவரது பெயரை காதலர் தினத்துக்கு ஏன் வைத்தார்கள் ,உங்கள் காதலுக்கும் அவருக்கும் எந்த விதத்திலாவது சம்பந்தம் உள்ளதா ? அவர் முஸ்லிமா அல்லது மாற்று மதத்தவரா ? இல்லை எனில் அவர் உங்களை சேர்த்து வைப்பாரா ? இதெல்லாம் மேலை நாட்டினரின் இயந்திரத்தனமான (formality)அன்பின் வெளிப்பாடு அல்லது விற்பனையாளர்களின் விளம்பர விற்பனை உத்தி ! எனவே logic ம் இல்லை ,மிக முக்கியமாக மார்க்கத்தில் அனுமதியும் இல்லை ,தடுக்கவும் பட்டிருக்கிறது ,



3456حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ رواه البخاري


அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
 
''உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள்.
 
‘எவர் பிறசமயத்தவர்களுக்கு ஒப்பாகிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மது)
 
காதல் என்ற பெயரில் ஆண் பெண் தனித்து இருப்பதையும் , தொலைபேசியில் வீண் பேச்சுக்களில் ஈடுபடுவதையும் , park , beech , cinema என்று சுத்துவதையும் மிக முக்கியமாக dating போவதையும் மார்க்கம் அனுமதிக்கவில்லை . மேலும் பொது இடங்களில் காதல் என்ற பெயரில் சுற்றி திரிந்து பின்னர் பிரிந்தவர்கள் ஏராளம் இந்த காரணத்தினால் பெண்களின் வாழ்கை பாதிக்கப்படுகிறது , கையால் மேற்கண்ட வகை காதலும் அவர்களின் காதலுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தினத்தை கொண்டாடுவதும் மாற்று மத கலாச்சாரமும் தெளிவான வழிகேடுமே ஆகும்,
 
காதலிப்பவர்கள் பெரும்பாலும் கொண்டாடுகிறார்கள் என்ற பட்சத்தில் இதை பார்த்தோமானால் இதை கொண்டாடுவதோ அல்லது வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதோ கூடாது ,
 
மேலும் காதல் என்றால் விருப்பம் ஒரு ஆண் ஒரு பெண்ணை அவளது குணத்தால் மற்றும் மார்க்க பற்றாலும் விரும்பி பெற்றோரின் அனுமதியுடன் திருமணம் செய்துகொள்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது விரும்பி திருமணம் செய்தல் பற்றியும் அறிந்து கொள்ளலாம்
 
நான் (ஒருமுறை) நபி( ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன், அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து , தம் அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணமுடிக்க போவதாக தெரிவித்தார் . அவரிடம்
 
அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் , "நீர் அந்த பெண்ணை பார்துவிட்டீரா ? " என்று கேட்டார்கள் . அதற்கு அவர் ' இல்லை' என்றார் . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"அவ்வாறாயின் , நீர் சென்று அவரை பார்த்துக்கொள்ளும் ! ஏனினில் , அன்சாரிகளின் கண்களில் சிறிது (குறை) உண்டு " என்று சொன்னார்கள் .
 
அபூஹுரைரா நூல் : முஸ்லிம் 2783


"செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும்.புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் அனாச்சாரம் ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்" என்று நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.


(அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி), நூல்: நஸயீ 1560)

صحيح مسلم حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح... وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ كِلاَهُمَا عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ - وَهَذَا حَدِيثُ أَبِى بَكْرٍ - قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ. فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ. فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ.


உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
 
(அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) , நூல்: முஸ்லிம் 70)
 
என்ற அடிப்படையில் நம் இதை எதிர்க்க வேண்டும் .