புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

jeudi 7 avril 2011

எந்த வகையான முகத்திரையை பிரான்ஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது?


ஹிஜாப் அணிவதில் பல வகை உள்ளது.அதில் எந்த ஹிஜாபை ஃபிரான்ஸ் அரசு தடை செய்கிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.இந்த படத்தில் உள்ள நான்கு முறையான ஹிஜாபையே(தலையை மறைப்பது) அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.இதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

(குறிப்p : இந்த அனைத்து வகையிலும் உடலை மறைப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.முகத்தை மறைப்பதில் தான் ஒவ்வொரு வகையும் வேறுபடுகின்றது.)

  1. ஹிஜாப் : முகத்தை மறைக்காமல் காது,தலைமுடி மற்றும் கழுதை மறைப்பதே  இந்த வகையை சேரும்.இந்த முறை தான் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் வழக்கத்தில் உள்ளது.
  2. நிகாப் : உடல் முழுவதையும் மறைத்து கண்களுக்கு மட்டும் மெல்லிய துணியை பயன்படுத்துவதையே நிகாப் என்கின்றனர்.இது அரபு நாடுகளில் குறிப்பாக சவுதி அரேபியாவில் நடை முறையில் உள்ளது.
  3. சாடோர் : இந்த வகை ஈரான் பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.படத்தை பார்த்து இதன் வடிவமைப்பை தெரிந்துக்கொள்ளுங்கள். 
  4. புர்கா : இந்த முழு அளவிலான ஆடை ஆப்கானிஸ்தான் பகுதியிலும் இந்தியாவில் சில பகுதியிலும் அதிகமாக நடைமுறையில் உள்ளது.உடல் முழுவதையும் மறைத்து கண்களுக்கு மட்டும் வலைகளை கொண்டிருக்கும் வகையே புர்கா எனப் படுகிறது.


நிகாப் மற்றும் புர்கா வகையையே ஃபிரான்ஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது.முகத்தை மறைத்து தங்களுடைய அடையாளத்தை மறைப்பதினாலேயே இந்த வகையை ஃபிரான்ஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது.



(மேல் குரிப்புட்டுள்ள செய்திக்கும் ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்திர்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை.மொழிபெயர்ப்பில் ஏதாவது பிழை இருந்தால் தயவு செய்து எங்களிடம் தெரிவிக்கவும்.)