புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

jeudi 7 avril 2011

முகத்திரை சட்டத்தின் நெறிமுறைகள்


ஃபிரான்சில் பொது இடங்களில் பெண்கள் முகம் மறைக்கக் கூடாது என்ற சட்டம் ஏப்ரல் 11 முதல் அமலுக்கு வருகிறது என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்த சட்டத்திற்கான நெறிமுறைகளை கடந்த வாரம் பிரெஞ்சு உள்துறை அமைச்சர் Claude Gueant கையெழுதிட்ட ஆவணம் அனைத்து அமலாக்க நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.அதில் முகத்திரை அணிபவர்களின் அடையாளத்தை சோதிப்பது பற்றியும் அபராதம் விதிப்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அந்த ஆவணத்தை பிரெஞ்சு மொழியில் PDF வடிவில் பார்க்க இங்கே சொடுக்கவும்.

LE Figaro என்ற செய்தித்தாளில் வெளியான ஒரு செய்தியில் அந்த ஆவணத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது :

காவல்துறை அதிகாரிகளுக்கு யாரையும் கட்டாயப்படுத்தி முகத் திரையை அகற்ற எந்த அதிகாரமும் இல்லை.முகத்திரையை அணிந்திருப்பவரே அதை அகற்ற வேண்டும் அல்லது அவர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவருடைய அடையாளத்தை சோதனைக்கு உட்படுத்தப்படும்.

எந்த நிலையிலும் ஒரு பெண் முகத்திரை அணிந்திர்ந்தார் என்ற காரணத்திற்காக மட்டும் அவரை காவலில் வைக்க முடியாது. ஆனால் அவர் 4 மணி நேரம் வரை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படலாம்.மேலும் இதற்காக 150 யூரோ அபராதம் வசூலிக்கப் படுவது மட்டுமல்லாமல் குடியுரிமை படிப்புக்காக அவர் அனுப்பப் படுவார்.

இந்த சட்டம் பூங்காக்கள், கடைகள், திரையரங்கம், உணவகங்கள் மற்றும் பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து பொது இடங்களுக்கும் பொருந்தும் என்பதாக அந்த ஆவணம் தெரிவிக்கிறது.ஆயினும் வீடு,ஹோட்டல் அறைகள், கார்ப்பரேட் வளாகங்கள், தனியார் வாகனங்கள் மற்றும் வழிப்பாட்டு தளங்களில் முகத்தை மறைப்பது கூடும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எந்த வகையான முகத்திரையை பிரான்ஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது என்பதை பார்க்க இங்கே சொடுக்கவும் (க்ளிக் செய்யவும்).

யாரையும் முகத்தை மறைக்கும்படி வற்புறுத்தினால் அதற்க்கு கடும் சிறை தண்டனை வழங்கப்படும் என்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிரான்சில் சுமார் 2,000 முஸ்லிம் பெண்கள் முகத்திரையை அணிந்து ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.இந்த சட்டம் சுற்றுலாவுக்காக வரும் பெண்களுக்கும் பொருந்தும் என்பதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.சவுதி அரேபியா மற்றும் பல அரபு நாடுகளில் உள்ள பெண்கள் அதிகமாக பிரான்சுக்கு விஜயம் செய்கிறார்கள் என்பதுமட்டுமல்லாமல் இவர்கள் தங்கள் செல்வங்களை அதிகமாக செலவிடக் கூடியவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.



(மேல் குரிப்புட்டுள்ள செய்திக்கும் ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்திர்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை.மொழிபெயர்ப்பில் ஏதாவது பிழை இருந்தால்  தயவு செய்து எங்களிடம் தெரிவிக்கவும்.)