புதிய அறிவுப்புஇன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும் வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.
இறைவனால் கசப்பும் புளிப்புமாக மாற்றப்பட்ட சோலைகள் எங்குள்ளது? அந்த ஊரார் எதற்க்காக மற்றும் எங்கனம் அழிக்கப் பட்டனர் ? பதில் அளிக்க

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5


கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!

அரபு மொழி பயிற்சி


அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி

குரானைத் தொட்டு முத்தமிடலாமா?


திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை


மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)

தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)


நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...

தொழுகை முறை


'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812

FRTJ ஃபிரெஞ்சு


lundi 11 avril 2011

786 என்பதைப் பயன்படுத்தலாமா?



நியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்கைளைக் குறியீடுகளாகப் பயன்படுத்தலாயினர். (உம். அலிப் 1, பே 2, ஜீம் 3, தால் 4)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாகக் கூட்டினால் 786 வரும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாகக் கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியாததாகும். எண்கள் எழுத்துக்களாக முடியாது. அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஒருவர் 6666 வசனங்களைக் கொண்ட குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவர் குர்ஆனை ஓதியவர் என்று கருதப்பட மாட்டார். (குர்ஆன் வசனங்களின் எண்ணிக்கை பற்றி பல கருத்துக்கள் உள்ளன) அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சொன்னவராகவும், எழுதியவராகவும் ஆக மாட்டார்.

786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது. மோசமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளுக்கும் கூட இதே எண் வரலாம். ஹரே கிருஷ்ணா என்பதை எண்கள் அடிப்படையில் கூட்டினால் அதன் தொகையும் 786 தான்.

அப்துல் கபூர் என்பதற்குப் பதிலாக 618 என்று அழைத்தால் அதை அப்பெயருடையவர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப்பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி செய்வதாகும்.
அவனது திருப் பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும். முஸ்லிமல்லாதவர்கள் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும்.

ஏனெனில் காபிராக இருந்த ஒரு பெண்ணுக்கு சுலைமான் (அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று அவர்கள் எழுதியுள்ளார்கள்.

அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் வின் பெயரால்... என்னை மிகைக்க நினைக் காதீர்கள். கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்! (என்று அதில் உள்ளது.)(அல்குர்ஆன் 27:30)

நபிகள் நாயகம் (ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் செய்த கடிதத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்றே எழுதியுள்ளனர்.
பார்க்க : புகாரி 7, 2941, 4553


புஸ்ராவில் ஆளுநர் மூலம் ஹெர்குலிஸ் மன்னரிடம் கொடுப்பதற்காக திஹ்யா வசம் நபி(ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தம்மிடம் கொடுக்குமாறு மன்னர் ஆணையிட்டார். ஆளுநர் அதனை மன்னரிடம் ஒப்படைத்தார். மன்னர் அதனைப் படித்துப் பார்த்தார். அந்தக் கடிதத்தில்,
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... (
புகாரி 7-ஹதீஸின் சுருக்கம்)



அளவற்ற அருளாளன், கருணையன்புடையோன் அல்லாஹ்தவின் திருப்பெயரால்...இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்). (புகாரி 2941-ஹதீஸின் சுருக்கம்)

நாமும் அது போல் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்றே எல்லா நேரத்திலும் எழுத வேண்டும்.

நூல் : கொள்கை விளக்கம் 
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்

முகத்திரை பற்றி ஃபிரெஞ்சு பத்திரிக்கையில் வெளியான செய்தி


மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

நன்றி : DIRECTMATIN.NET

samedi 9 avril 2011

TNTJ மாநில பொது செயலாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய SDPI குண்டர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று(08-04-2011) இரவு ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொது கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொது செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் உரையாற்றி கொண்டு இருந்தார்.  சுமார் 9.40 மணியளவில் SDPI வேட்பாளர் உமர் கத்தாப் தலைமையில், SDPI குண்டர்கள், மாமா கட்சி நிர்வாகிகள் ஆகியோர், மாநில பொது செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். திட்டமிட்டு SDPI மற்றும் மாமா கட்சி குண்டர்களால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் உட்பட ஏழு பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த தாக்குதலை முன்னின்று நடத்திய உமர் கத்தாப், SDPI குண்டர்கள் மற்றும் மாமா கட்சியை சேர்ந்த சுமார் 25 குண்டர்களை கைது செய்யும் வரை நாம் அங்கிருந்து செல்வதில்லை என்று நம் ஜமாத்தினர் உறுதியுடன் இருந்தனர். இறுதியாக கோவை மாநகர கமிஷ்னர் சைலேந்திர பாபு சம்பவ இடத்திற்கு விரைந்தார். பின்னர் மாவட்ட செயலாளர் நவ்சாத் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சைலேந்திர பாபு, நம் மக்களை கலைந்து செல்லுமாறும் மேலும் ஆர். எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பை விட மோசமாக செயல்பட்ட SDPI மற்றும் மாமா கட்சி குண்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அதன் பின்னரே நம் மக்கள் கலைந்து சென்றனர்.

அரசியல் போதையில் அல்லாஹ் வை மறந்த ஜவாஹிருல்லாஹ்! – கூட்டனி கட்சி தலைவர்கள் முன்பு இன்ஷா அல்லாஹ் வார்தையை மென்டுமுழுங்கி பாதியாக்கிய அவலம்!

அரசியல் போதையில் அல்லாஹ் வை மறந்த ஜவாஹிருல்லாஹ்!
Download

நன்றி : TNTJ.NET

மமக வை புறக்கணிக்க வேண்டும் – ஏன் ? சேப்பாக்கம் பொதுக் கூட்ட வீடியோ 8-4-11

மமக வை புறக்கணிக்க வேண்டும் – ஏன் ? சேப்பாக்கம் பொதுக் கூட்ட வீடியோ.


Download

நன்றி : TNTJ.NET

jeudi 7 avril 2011

முகத்திரை சட்டத்தின் நெறிமுறைகள்


ஃபிரான்சில் பொது இடங்களில் பெண்கள் முகம் மறைக்கக் கூடாது என்ற சட்டம் ஏப்ரல் 11 முதல் அமலுக்கு வருகிறது என்று ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்த சட்டத்திற்கான நெறிமுறைகளை கடந்த வாரம் ஃபிரெஞ்சு உள்துறை அமைச்சர் Claude Gueant கையெழுதிட்ட ஆவணம் அனைத்து அமலாக்க நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.அதில் முகத்திரை அணிபவர்களின் அடையாளத்தை சோதிப்பது பற்றியும் அபராதம் விதிப்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அந்த ஆவணத்தை பிரெஞ்சு மொழியில் PDF வடிவில் பார்க்க இங்கே சொடுக்கவும்.

LE Figaro என்ற செய்தித்தாளில் வெளியான ஒரு செய்தியில் அந்த ஆவணத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது :

காவல்துறை அதிகாரிகளுக்கு யாரையும் கட்டாயப்படுத்தி முகத் திரையை அகற்ற எந்த அதிகாரமும் இல்லை.முகத்திரையை அணிந்திருப்பவரே அதை அகற்ற வேண்டும் அல்லது அவர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவருடைய அடையாளத்தை சோதனைக்கு உட்படுத்தப்படும்.

எந்த நிலையிலும் ஒரு பெண் முகத்திரை அணிந்திர்ந்தார் என்ற காரணத்திற்காக மட்டும் அவரை காவலில் வைக்க முடியாது. ஆனால் அவர் 4 மணி நேரம் வரை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படலாம்.மேலும் இதற்காக 150 யூரோ அபராதம் வசூலிக்கப் படுவது மட்டுமல்லாமல் குடியுரிமை படிப்புக்காக அவர் அனுப்பப் படுவார்.

இந்த சட்டம் பூங்காக்கள், கடைகள், திரையரங்கம், உணவகங்கள் மற்றும் பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து பொது இடங்களுக்கும் பொருந்தும் என்பதாக அந்த ஆவணம் தெரிவிக்கிறது.ஆயினும் வீடு,ஹோட்டல் அறைகள், கார்ப்பரேட் வளாகங்கள், தனியார் வாகனங்கள் மற்றும் வழிப்பாட்டு தளங்களில் முகத்தை மறைப்பது கூடும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எந்த வகையான முகத்திரையை பிரான்ஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது என்பதை பார்க்க இங்கே சொடுக்கவும் (க்ளிக் செய்யவும்).

யாரையும் முகத்தை மறைக்கும்படி வற்புறுத்தினால் அதற்க்கு கடும் சிறை தண்டனை வழங்கப்படும் என்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிரான்சில் சுமார் 2,000 முஸ்லிம் பெண்கள் முகத்திரையை அணிந்து ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.இந்த சட்டம் சுற்றுலாவுக்காக வரும் பெண்களுக்கும் பொருந்தும் என்பதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.சவுதி அரேபியா மற்றும் பல அரபு நாடுகளில் உள்ள பெண்கள் அதிகமாக பிரான்சுக்கு விஜயம் செய்கிறார்கள் என்பதுமட்டுமல்லாமல் இவர்கள் தங்கள் செல்வங்களை அதிகமாக செலவிடக் கூடியவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.



(மேல் குரிப்புட்டுள்ள செய்திக்கும் ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்திர்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை.மொழிபெயர்ப்பில் ஏதாவது பிழை இருந்தால்  தயவு செய்து எங்களிடம் தெரிவிக்கவும்.)


எந்த வகையான முகத்திரையை பிரான்ஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது?


ஹிஜாப் அணிவதில் பல வகை உள்ளது.அதில் எந்த ஹிஜாபை ஃபிரான்ஸ் அரசு தடை செய்கிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.இந்த படத்தில் உள்ள நான்கு முறையான ஹிஜாபையே(தலையை மறைப்பது) அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.இதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

(குறிப்p : இந்த அனைத்து வகையிலும் உடலை மறைப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.முகத்தை மறைப்பதில் தான் ஒவ்வொரு வகையும் வேறுபடுகின்றது.)

  1. ஹிஜாப் : முகத்தை மறைக்காமல் காது,தலைமுடி மற்றும் கழுதை மறைப்பதே  இந்த வகையை சேரும்.இந்த முறை தான் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் வழக்கத்தில் உள்ளது.
  2. நிகாப் : உடல் முழுவதையும் மறைத்து கண்களுக்கு மட்டும் மெல்லிய துணியை பயன்படுத்துவதையே நிகாப் என்கின்றனர்.இது அரபு நாடுகளில் குறிப்பாக சவுதி அரேபியாவில் நடை முறையில் உள்ளது.
  3. சாடோர் : இந்த வகை ஈரான் பகுதியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.படத்தை பார்த்து இதன் வடிவமைப்பை தெரிந்துக்கொள்ளுங்கள். 
  4. புர்கா : இந்த முழு அளவிலான ஆடை ஆப்கானிஸ்தான் பகுதியிலும் இந்தியாவில் சில பகுதியிலும் அதிகமாக நடைமுறையில் உள்ளது.உடல் முழுவதையும் மறைத்து கண்களுக்கு மட்டும் வலைகளை கொண்டிருக்கும் வகையே புர்கா எனப் படுகிறது.


நிகாப் மற்றும் புர்கா வகையையே ஃபிரான்ஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது.முகத்தை மறைத்து தங்களுடைய அடையாளத்தை மறைப்பதினாலேயே இந்த வகையை ஃபிரான்ஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது.



(மேல் குரிப்புட்டுள்ள செய்திக்கும் ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத்திர்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை.மொழிபெயர்ப்பில் ஏதாவது பிழை இருந்தால் தயவு செய்து எங்களிடம் தெரிவிக்கவும்.)