இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் 5
கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் (FRTJ) பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் மிகுந்த வரவேற்புடன் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!
அரபு மொழி பயிற்சி
அரபு மொழி பயிற்சி
ஆசிரியர் : பி.ஜைனுல் ஆபிதீன்
திருக்குர்ஆனை எளிதில் ஓதுவதற்காக நடத்தப்பட்ட சிறப்பு அரபு மொழி பயிற்சி
குரானைத் தொட்டு முத்தமிடலாமா?
திருமறைக் குர்ஆனைப் பற்றிய சரியான தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் பலர் குர்ஆனைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். அப்படி முத்தமிடுவதை ஒரு வணக்கமாகக் கூட நினைக்கிறார்கள். குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தை என்ற காரணத்தினால் தான் குர்ஆன் மகத்துவம் அடைகிறது..
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இறுதி பேருரை
மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)
தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)
நபி வழி தொழுகை வீடியோ தொழுகை மற்றும் உளு செய்யும் முறை செயல் முறை - கோவை ரஹ்மத்துல்லாஹ் வீடியோ - TNT...
தொழுகை முறை
'நெற்றி, இரு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் - நெற்றியைக் குறிப்பிடும் போது தமது கையால் மூக்கையும் சேர்த்து அடையாளம் காட்டினார்கள் - ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ 812
FRTJ ஃபிரெஞ்சு
ஏகத்துவ பிரசாரத்தை ஃபிரெஞ்சு மொழி பேசும் மக்களுக்கும் எத்தி வைப்பதற்காக ஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக பிரெஞ்சு மொழியில் ஒரு இணையதளத்தை துவக்கியுள்ளோம்.அல்ஹம்துலில்லாஹ் ! ஃபிரெஞ்சு மொழி பேசும் மக்களிடையே இந்த இணையதள முகவரியை கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.WWW.FRTJFR.BLOGSPOT.COM
lundi 13 janvier 2014
ஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
lundi 6 janvier 2014
தாவா பணி
lundi 30 décembre 2013
பெண்கள் பயான் நிகழ்ச்சி -28/12/2013
அல்ஹம்துலில்லாஹ்
dimanche 22 décembre 2013
மாதாந்திர பயான் நிகழ்ச்சி
குழந்தை பிறப்பிலிருந்து திருமணம் முடித்து கொடுக்கும் வரை பிள்ளை பேறு சடங்குகள் தொடர்ந்து மௌத்து ஹத்தம், பாத்திஹா என்று நமது சமுதாயத்தில் புரையோடி கிடக்கின்ற பித் அத்துகளை பட்டியலிட்டு சுட்டி காட்டினார்கள் .
dimanche 15 décembre 2013
வெற்றிபெற்றோர்
இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்களில் அதிகமானோர் அல்லாஹ்வை
மறுத்தும் அவனுக்கு இணைவைத்தும் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் சொற்ப
நபர்களே அவனை நம்பிக்கைக் கொண்டு அவனது தூதருக்கு கீழ்படிந்து வாழ்ந்து
வருகிறார்கள். அல்லாஹ் நம்மை இந்த சொற்பக் கூட்டத்தைச் சார்ந்தவர்களாக
ஆக்கியுள்ளான். அவனுக்கே புகழனைத்தும்!இஸ்லாத்தின் சட்டங்களை மக்களுக்கு கற்றுத் தந்த நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாட்களில் சில காரியங்களை செய்தவர்களை வெற்றியாளர்கள் என்று கூறியுள்ளார்கள். மறுமையில் வெற்றிப் பெறுவதற்கு அந்த முக்கியமான காரியங்களை நபிமொழிகளிலிருந்து தொகுத்துத் தருகிறோம். தாங்களும் அக்காரியத்தை செயல்படுத்தி வெற்றிபெற்றோர்களாக மாறுங்கள்!
கடமையான காரியங்களை சரியாக நிறைவேற்றுவோர்
நஜ்த் என்ற ஊரைச்சார்ந்த ஒருவர் பரட்டைத் தலையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒழித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளைத் தொழுகைகள் என்றார்கள். உடனே அவர் அத்தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா? என்று கேட்டார். அதற்கவர்கள் நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு எதுவும் இல்லை என்றார்கள். அடுத்து ரமலான் மாதம் நோன்பு நோற்பதுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் அதைத்தவிர வேறு ஏதேனும் (நோன்பு) கடமையுண்டா? என்றார். அதற்கவர்கள் நீ விரும்பிச் செய்தாலே ஒழிய வேறு இல்லை என்றார்கள். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஸகாத்தைப் பற்றியும் சொன்னார்கள். அதற்கவர் அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என்மீது கடமையா? என்றார். அதற்கவர்கள் நீராக விரும்பிச் செய்தாலேத் தவிர வேறு தர்மங்கள் கடமையில்லை என்றார்கள். உடனே அந்த மனிதர் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன். குறைக்கவும் மாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது இவர் கூறியதற்கேற்ப நடந்து கொண்டால் வெற்றியடைந்து விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த நபிமொழியின் இறுதியில் அப்போது இவர் கூறியதற்கேற்ப நடந்து கொண்டால் வெற்றியடைந்து விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நாம் ஆழ்ந்து நோக்க வேண்டும். குறைந்தபட்சம் கடமையான காரியங்களையாவது சரிவர நிறைவேற்ற வேண்டும். அதில் குறைவைத்தால் அவர் வெற்றியடைய முடியாது என்பதை மேற்சொன்ன ஹதீஸிலிருந்து விளங்கலாம்.இது போன்றே மற்றோரு சம்பவமும் அபூதாவுதில் இடம் பெற்றுள்ளது.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடத்தில் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (தொழுகையில் ஓதுவதற்கு ஏதேனும் சூராவை) கற்றுத்தாருங்கள் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அலிஃப் லாம் ரா எனத்தொடங்கும் சூராக்களில் மூன்றை ஓதுவீராக என்று கூறினார்கள். அதற்கு அவர் நான் வயது முதிர்ந்தவனாக ஆகி விட்டேன். எனது உள்ளம் (அதை மனனம் செய்ய இயலாதவாறு) கடினமாகிவிட்டது. எனது நாவும் (ஓதுவதற்கு) கடினமாகிவிட்டது. என்று கூறினார். அதற்கு நபியவர்கள் ஹாமீம் என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓது! என்று கூறினார்கள். அதற்கு அவர் தான் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார். நபி (ஸல்) அவர்கள் சப்பஹ அல்லது யுசப்பிஹூ என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓதுவீராக! என்று கூறியபோதும் தான் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார். பிறகு அவர் அல்லாஹ்வின் தூதரே! (அனைத்து விஷயங்களையும்) உள்ளடக்கிய ஒரு சூராவை எனக்கு கற்றுத்தாருங்கள் என்று கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் இதா ஸýல்லித்தில் அர்லு ஸில்ஸôஹா என்ற சூராவை முழுமையாக ஓதிக்காண்பித்தார்கள். அம்மனிதர் உண்மையுடன் உங்களை அனுப்பியவனின் மீது சத்தியமாக இதற்கு மேல் ஒருபோதும் நான் அதிகமாக்கமாட்டேன் என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று விட்டார். அதற்கு நபியவர்கள் ருவைஜில் வெற்றிபெற்றுவிட்டார் என்று இரு முறை கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
மார்க்கத்தின் கட்டளைகளை பின்பற்றுவதில் ருவைஜில் (ரலி) அவர்கள் எவ்வளவு ஆர்வப்பட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். வயதான காலத்திலும் தொழுகையை நிறைவேற்றியவர்களாக இருந்த ருவைஜில் (ரலி) அவர்கள் தொழுகையில் அதிகம் ஓத முடியவில்லை என்பதற்காக அதை விட்டுவிடாமல் அதை நிறைவேற்ற முயற்சி எடுத்ததும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய முறையை அப்படியே பின்பற்றுவேன் என்று கூறியதும் அவர்களை வெற்றியாளராக மாற்றியுள்ளது. எனவே நாமும் கடமையான காரியங்களை சரிவர நிறைவேற்றவும் அதை செயல்படுத்த ஆர்வமும் கொள்ளவேண்டும்..
நபிவழியை மட்டும் பின்பற்றியவர்
“ஒவ்வொரு (நற்) செயலுக்கும் ஆர்வம் வேண்டும். (நற்காரியங்களில் கொள்ளும்) அனைத்து ஆர்வத்திற்கும் ஒரு வரையரை உள்ளது. யாருடைய வரையரை எனது வழிமுறையைச் சார்ந்ததாக உள்ளதோ அவர் வெற்றி பெற்றுவிட்டார். எவருடைய வரையரை மற்றதைச் சார்ந்ததாக இருக்கின்றதோ அவர் அழிந்துவிட்டார்
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.“
இறந்தவர்களுக்கு 1,3,7,40 மற்றும் வருட பாத்திஹாக்கள், மவ்லிதுகள், தர்ஹா வழிபாடுகள் போன்ற காரியங்கள் நபிவழியைச் சார்ந்ததா? அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இருக்கிறதா? ஒன்றும் கிடையாது இருந்தும் நாம் அதை பின்பற்றிவருகிறோம்.
நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத எந்த மார்க்க அமலும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படாது. அதை செய்பவர்கள் நிச்சயம் நன்மை பெறமுடியாததோடு தண்டனையும் பெறுவார்கள்.
(திருக்குர்ஆன், நபிகளார் காட்டித்தராத) ஒவ்வொரு புதிய காரியங்களும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
எனவே வெற்றியாளராக மார்க்க கடமைகளில் திருக்குர்ஆன் நபிமொழிகளை மட்டும் முன்மாதிரிக் கொண்டும் அமல்களைச் செய்வோம்.
உள்ளதை வைத்து போதுமாக்கிக் கொள்பவர்
நமது இஸ்லாமியப் பெண்கள் பலரிடத்தில் இந்தப் பண்பு இருப்பதில்லை. கண்ணில் காணும் பொருட்கள் அனைத்தையும் விரும்பி அதை வாங்கித் தருமாறு தங்கள் கணவனை நச்சரிப்பார்கள். அவன் நல்ல முறையில் அவர்களை கவனித்து தேவையானதை வாங்கித் தந்தாலும், இது போதாது இன்னும் வேண்டும் என்று புலம்பிக் கொண்டே இருப்பார்கள். தனது குடும்ப வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடத்தில் பிறப்பதில்லை. ஆடம்பரமான வாழ்க்கையே விரும்புவார்கள்.
பக்கத்து வீட்டில் உள்ளப் பெண்மணி வசதியுள்ளவராக இருப்பார். அவர்கள் வீட்டில் உள்ள பொருட்களைப் போன்றே நம் வீட்டிலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும் அதை பெறுவதற்கு வட்டி உட்பட பல மார்க்கம் தடை செய்த காரியங்களை செய்வதும் இன்று வாடிக்கையாகிவிட்டது. இருப்பதை பொருந்திக் கொண்டு அதற்கேற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் நிச்சயம் மறுமையில் வெற்றியடைவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்பதை பின்வரும் பொன்மொழி நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.
யார் இஸ்லாத்தை ஏற்று போதுமான அளவு செல்வம் வழங்கப்பட்டு அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் வெற்றிபெற்றுவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உறுதியுள்ளவர்கள்
இஸ்லாத்தை ஏற்ற பின்னர் அதில் உறுதியாக இருப்பது மிகமுக்கியமான ஒன்றாகும். இஸ்லாத்தை ஏற்பதில் முனைப்புக்காட்டியதைப் போல் அதை பின்பற்றுவதிலும் அதன் கொள்கை கோட்பாடுகளை பற்றிய நம்பிக்கையிலும் மிக உறுதியாக இருக்கவேண்டும். இன்பங்கள் வரும்போது ஏற்றுக் கொள்வதைப் போல் துன்பங்கள் வரும்போது அதையும் ஏற்று பொறுமையுடன் இருப்பதும், இறைவனைப் பற்றி தவறாக எண்ணாமல் இருப்பதும் அவசியமாகும்.
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நம் நம்பிக்கையை அசைத்துப் பார்க்கவரும், அப்போது நமது நம்பிக்கை உறுதிபெறவேண்டும். பிரச்சனைகள் தொடர்ந்து வருவதால் இறைவனை மறந்து மார்க்கத்தின் சட்டங்களை பின்பற்றாமல் வழிதவறிவிடக்கூடாது.
அல்லாஹ் சிலருக்கு குழந்தை தராமல் சோதனை செய்யும் போது படைத்தவனிடம் கேட்காமல் தர்ஹாக்களுக்கச் சென்று இணைவைத்தல் என்ற பெரும்பாவத்தில் சிக்கிவிடுகிறோம். இது படைத்தவனின் மீது கொண்டுள்ள உறுதியின்மையை காட்டுகிறது. இவ்வாறு நடந்துகொள்பவர்கள் நிச்சயம் வெற்றியடைய மாட்டார்கள். கொள்கையில் உறுதிதான் வெற்றிக்கு அடிப்படை என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
உறுதியாக இருங்கள். வெற்றியடைவீர்கள். உங்களுடைய நற்காரியங்களில் சிறந்தது தொழுகையாகும். நம்பிக்கைக் கொண்டவனைத் தவிர வேறு எவரும் உளூவைப் பேண மாட்டார்கள்.
தொழுகையைப் பேணியவர்
ரமலான் மாதம் வந்து விட்டால் பள்ளிவாசல்களில் அலைமோதும் கூட்டத்தை காணலாம். தொழுவதற்கு இடப்பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு மக்கள் தொழுவதற்கு ஆர்வப்பட்டு பள்ளியை நோக்கி விரைந்து வருவார்கள். ஆனால் ரமலான் முடிந்து விட்டால் பள்ளிவெறிச்சோடிக் கிடக்கும்.
தொழுகையை ரமலானில் மட்டும் நிறைவேற்றினால் போதும் என்று நினைப்பதே இதற்கு காரணம். காலையில் எழுந்து வேலைக்கு செல்பவர்கள் இரவு வீடு திரும்புவார்கள். 24 மணி நேரத்தையும் இந்த அற்ப உலகத்திற்காக செலவிடுபவர்கள் ஆனால் படைத்த இறைவனை வணங்குவதற்காக சிறிது நேரம் கூட ஒதுக்க மனம் வருதில்லை.
ஆண்களுக்கு ஜமாத் தொழுகையை இஸ்லாம் வலியுறுத்திச் சொன்னதைப் போல் பெண்களுக்கு வலியுறுத்திச் சொல்லவில்லை. அவர்கள் வீட்டில் இருந்து கொண்டேத் தொழ அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப் பெற்றும் பலப் பெண்கள் தொழுவதில்லை. வீடுகளில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு காலத்தை விரையமாக்குகிறார்கள். இல்லையென்றால் தெருக்களில் அமர்ந்து கொண்டு வீண் பேச்சுக்களை பேசுகிறார்கள். பாங்கு சொல்லப்பட்டால் பாங்கிற்கு மரியாதை செய்வதாக எண்ணிக் கொண்டு தலையில் துணியைப் போடுவார்கள். ஆனால் அவர்கள் பாங்கிற்கு செய்ய வேண்டிய உண்மையான மரியாதை தொழுகையை நிறைவேற்றுதல் என்பதை விளங்குவதில்லை.
நம்மில் பலர் வயதானவர்கள் தான் தொழ வேண்டும். நமக்கென்ன வயதா ஆகிவிட்டது என்று நினைக்கின்றார்கள். இறைவனை வணங்குவதற்கு வயதாக வேண்டும் என்று அவனும் கூறவில்லை. அவனுடைய தூதரும் சொல்லவில்லை.பருவ வயதை அடைந்துவிட்டால் ஐவேளைத் தொழுவது கடமையாகும்.
சிலர் ஒரு நாளைக்கு நான்கு வேளைத் தொழுவார்கள். ஆனால் ஃபஜர் தொழுகைக்கு வராமல் உறங்கிவிடுவார்கள். ஐந்து நேரம் தொழுபவர்கள் கூட அதற்குரிய நேரத்தில் முறையாக நிறைவேற்றுவதில்லை. காலம் தவறாமல் எந்தத் தொழுகையையும் விடாமல் தொழுபவர்கள் சமுதாயத்தில் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். மறுமையில் அல்லாஹ் முதன் முதலில் இந்தத் தொழுகையைப் பற்றித்தான் நம்மிடம் விசாரிப்பான். தொழுகையில் எந்த குறைபாட்டையும் நாம் வைக்காமல் நிறைவேற்றியிருந்தால் அதன் பின் வரும் கேள்விகளுக்கு சரியான பதிலை அவர் கூறிவிடமுடியும். முதல் கேள்வியிலே நாம் தோற்றுவிட்டால் அதன்பின்வரும் கேள்விகளுக்கு சரியான பதிலை கூறமுடியமால் நஷ்டமடைந்தவர்களாக ஆகிவிடுவோம்.
அடியானிடம் முதலில் விசாரிக்கப்படுவது அவனது தொழுகையைப் பற்றித்தான். அத்தொழுகை சரியாக அமைந்திருந்தால் அவன் வெற்றி பெறுவான். ஈடேற்றம் அடைந்து விடுவான். அது சரியாக இல்லாவிட்டால் அவன் நஷ்டமடைந்து விடுவான். கைசேதப்படுவான்.அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி)
நூல் : நஸாயி (461), திர்மிதீ (378)
மனத்தூய்மையுடன் நல்லறங்கள் புரிந்தவர்
ஒரு மனிதன் நல்லவனாகவும் தீயவனாகவும் ஆகுவதற்கு முக்கிய காரணமாக அவனுடைய உள்ளம் இருக்கின்றது. அனைத்து உறுப்புக்கள் நற்செயல்களைச் செய்யவும் அவைகள் தீமைபுரிவதற்கும் உள்ளமே காரணம். ஆகையால் நல்ல உள்ளம் உடையவராக ஒருவர் ஆகிவிட்டால் அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் நல்லதாக ஆகிவிடுகின்றது. உள்ளம் கெட்டுவிட்டால் உறுப்புக்கள் நற்காரியங்களைப் புரிந்தாலும் அதில் எந்தப் பலனும் இல்லை. ஆகையால் தான் உள்ளத்தை நல்லுள்ளமாக ஆக்கியவர் வெற்றிபெற்றுவிட்டதாகவும் அதை தீயஉள்ளமாக ஆக்கியவர் தோல்வியுற்றுவிட்டதாக அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகின்றான்.
உயிரின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நஷ்டப்பட்டார்.
உதாரணமாக ஒருவர் தான் கொடைவள்ளல் என்று புகழப்பட வேண்டும் என்பதற்காக தர்மங்களை செய்கின்றார். இவர் செய்யக்கூடிய செயல் நற்செயலாக இருந்தாலும் இவரது உள்ளத்தில் தவறானதை எண்ணிய காரணத்தினால் அந்த செயலுக்கு அணுஅளவும் நன்மை கிடைப்பதில்லை. அத்தோடு அவருக்கு தண்டனையும் வழங்கப்படும். அதே நேரத்தில் ஒருவர் அதிகம் தர்மம் செய்ய நினைக்கின்றார். ஆனால் தர்மம் செய்வதற்கு எதுவும் அவரிடம் இல்லை. இப்பொழுது அவர் இந்த நற்செயலை செய்யாவிட்டாலும் அவர் எண்ணிய நல்லெண்ணத்திற்காக அவருக்கு நன்மை வழங்கப்படுகின்றது.
100 கொலைகளை செய்தவர் இறுதியில் மனம் திருந்துகிறார். அவர் தன் உள்ளத்தை திருத்திக் கொண்டதைத் தவிர வேறு எந்த நன்மையும் செய்யவில்லை. இந்நிலையில் அவருக்கு மரணம் வருகிறது. இப்பொழுது அல்லாஹ் இவர் செய்த தீமையான காரியங்களைப் பார்க்காமல் அவரது உள்ளத்தைப்பார்த்து மன்னித்தான் என்ற செய்தியை நபிகளார் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ் நிறத்தைப் பார்த்தோ அல்லது அழகைப் பார்த்தோ மனிதர்களை நேசிப்பதில்லை. உள்ளத்தைப் பார்க்கின்றான். பார்ப்பதற்கு அறுவறுப்பாக கருப்பு நிறத்தில் உள்ள ஒரு நீக்ரோவின் உள்ளம் சரியானதாக இருக்கின்றது. அதே சமயம் ஆப்பிள் பழத்தைப் போன்று சிவப்பாக பார்ப்பதற்கு அழகாக உள்ள ஒருவனின் உள்ளம் மோசமானதாக இருந்தால் இவ்விருவரில் சிவப்பானவரை விட நீக்ரோவே அல்லாஹ்விடம் மதிப்பிற்குரியவராகவும் சிறப்பிற்குரியவராகவும் ஆகுகின்றார்.
இதற்கு உதாரணமாக அபூஜஹ்லையும், பிலால் (ரலி) அவர்களையும் குறிப்பிடலாம். அபூஜஹ்ல் உயர்ந்த குலத்தைச் சேர்ந்த பெரிய தலைவன். ஆனால் அவன் எண்ணங்கள் செயல்களை சரியில்லை. ஆனால் நீக்ரோவாக இருந்த பிலால் (ரலி) அவர்களின் உள்ளமும் செயல்களும் சிறந்ததாக இருந்தது. எனவே அவர்கள் இவ்வுலகத்திலேயே சுவர்க்கவாதி என்று நபி (ஸல்) அவர்கள் கூறிச்சென்றுள்ளார்கள்.
(புகாரீ 1149)
ஈமான் கொண்டு விட்டால் மறுஉலக வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம் என்று நம்மில் பலர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எப்படி நடந்தால் வெற்றிபெறுவார்கள் என்பதை அல்லாஹ் கூறுகிறான்.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர. தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 23 : 1#11)
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் வெற்றியடையும் கூட்டத்தில் ஆக்குவானாக.
அப்பாஸ் அலீ எம்.ஐ.எஸ்.ஸி
பேராசிரியர் இஸ்லாமியக் கல்லூரி, கடையநல்லூர்
jeudi 28 novembre 2013
பிரான்ஸ் மண்டல தௌஹீத் ஜமாத்தின் மசூரா
பிரான்ஸ் மண்டல தௌஹீத் ஜமாத்தின் மசூரா 23/11/2013 அன்று மதியம் சுமார் 3.30 மணியளவில் நமது பிரான்ஸ் மண்டல தலைவர் சகோதரர் ருக்னுதீன் அவர்களுடைய வீட்டில் நடைப்பெற்றது.
அன்றைய நிகழ்ச்சியின் தலைமை உரையாக FRTJ வின் தலைவர் சகோதரர் ருக்னுதீன் அவர்கள் துவக்கி வைத்தார்
அதற்கு பிறகு சகோதரர் முஹம்மத் இன்சாப் அவர்கள் "தௌஹீத்வாதிகள் என்றால் யார்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
பின்பு FRTJ யின் அடுத்தகட்ட செயல்பாடுகள் என்ன? மற்றும் ஆலோசனைகள், கருத்துக்கள் கேட்கப்பட்டது.
அதன் பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
5. FRTJ வெப்சைட்டை விரிவுபடுத்தவும், இன்னும் அதிக வசதிகளை ஏற்படுத்தி புதுப்பிக்கவும், நம் சகோதரர்கள் செய்யும் பயான்களை வீடியோவாக FRTJ வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யவும் அத்துடன் உலக நடப்புகளையும் சேர்த்து தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் FRTJ வெப்சைட்டை இயக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
7. FRTJ யில் பெண்களுக்கான பெண்களே செய்யும் தாவா பணி துவக்கலாம் , அதில் நமது சகோதரிகள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் சென்று பயான் மற்றும் தாவா பணி செய்வார்கள் அதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
10. புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கைக்கான ஏற்பாடுகளிலும் நம் சகோதரர்களை பங்களிக்கும் படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது
மசூராவை சிறப்பாக நடத்தி வைத்த எல்லா வல்லஅல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் அல்லாஹ் அக்பர்.
dimanche 24 novembre 2013
ஏகத்துவவாதிகளே! சிந்தியுங்கள்!
இறைவன் மனிதனைப் படைத்து அவன் நிம்மதி பெற வேண்டும் என்பதற்காக அவனிலிருந்தே அவனது ஜோடியைப் படைத்தான். அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். (அல்குர்ஆன் 7:189) ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்குத் துணை அவசியம் என்பதால் தான் மனிதனைப் படைத்ததோடு மட்டும் நின்று விடாமல் அந்த மனிதரிலிருந்தே அவனது ஜோடியையும் படைத்து, அவர்களில் இருந்து ஆண், பெண் என அதிகமானவர்களை இப்பூவுலகில் பரவச் செய்தான். இப்படிப் பல்கிப் பெருகியிருக்கும் மனிதர்களுக்குப் பல தேவைகளைக் கொடுத்துள்ளான். அந்தத் தேவைகளில் ஒன்று தான் திருமணம்.
எந்த ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் வழி தவறாமல் இருக்க, திருமணம் அவசியமாகும். திருமணம் செய்யாமல் எந்த மனிதராலும் வாழ முடியாது. இன்று நடைமுறையில், நாங்கள் திருமணம் செய்ய மாட்டோம்; திருமணம் செய்யாமலேயே எங்களால் மன இச்சையைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ முடியும் என்று சொன்ன எத்தனையோ பேர்கள் தங்களுடைய மன இச்சையைக் கட்டுப்படுத்த முடியாமல் தவறான வழிக்குச் சென்று, இந்தச் சமுதாயத்தின் முன் தலை குனிந்து நிற்பதைப் பார்க்கிறோம். எனவே ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும் அவர்கள் வழி தவறாமல் இருக்க திருமணம் மட்டுமே வடிகாலாகும்.
இஸ்லாம் இலகுவான மார்க்கம். அது இடக்கூடிய கட்டளைகளும் இலகுவானது தான். அது போல் திருமணத்தையும் இலகுவான ஒன்றாகத் தான் கூறுகின்றது. ஆனால் இஸ்லாமியர்களோ இந்தத் திருமணத்தை கடினமானதாக ஆக்கி விட்டார்கள். வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்று பழமொழி கூறுவார்கள். அது சரியாகத் தான் உள்ளது. ஒருவன் ஐந்து அல்லது ஆறு லட்ச ரூபாய்க்குள் வீட்டைக் கட்டி முடித்து விட வேண்டும் என்று நினைப்பான். ஆனால் அதையும் தாண்டி சென்று கொண்டே இருக்கும். அது போலத் தான் பெண்ணைப் பெற்றவர்கள், நமது பெண்ணுக்கு இவ்வளவு செலவழித்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட ஒரு தொகையை சேமித்து வைத்திருப்பார்கள்.
ஆனால் திருமணம் வந்தவுடன் அவர்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை விட பன்மடங்கு செலவாகும். இதனால் தான் பெண்ணைப் பெற்றவர்கள் ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்கும் நிலை உருவாகியுள்ளது. ஏனெனில் இன்று வரதட்சணை அந்த அளவுக்குப் பெருகியுள்ளது. டாக்டர் மாப்பிள்ளை என்றால் அதற்கு ஒரு விலை; எஞ்சினியர் என்றால் அதற்கு ஒரு விலை; சாதாரண மீன் கடையில் மீன் வெட்டுபவனுக்கு இன்றைய விலை ஒன்றரை லட்சம். அது மட்டுமா? நகை போட வேண்டும். சீர் வரிசை செய்ய வேண்டும்.
அதற்குப் பிறகு பெண் கர்ப்பமாகி விட்டால் அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை மருத்துவச் செலவும் செய்து, அந்தக் குழந்தைக்கும் தேவையான அனைத்துச் செலவுகளையும் செய்ய வேண்டும். இப்படி வரதட்சணை என்ற பெயரில் பிச்சை எடுக்கும் ஒரு கூட்டம் இருக்க, வரதட்சணை வாங்க மாட்டோம்; நாங்கள் மஹர் கொடுத்துத் தான் திருமணம் செய்வோம் என்று சபதம் ஏற்ற ஒரு கூட்டம் இருக்கின்றது. அவர்கள் தான் தவ்ஹீதுவாதிகள். ஏகத்துவம் சுடர் விட ஆரம்பித்த ஆரம்ப கால கட்டங்களில் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட மாப்பிள்ளைகளுக்குப் பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.
ஏனெனில் ஏகத்துவ மாப்பிள்ளைகள் தங்களுக்கு வரதட்சணை தர வேண்டாம்; நகை போட வேண்டாம்; பைக் தர வேண்டாம்; சீர் வரிசைகள் தர வேண்டாம்; ஆயிரக்கணக்கான பேருக்கு விருந்து வைக்க வேண்டாம்; நாங்களே மஹர் கொடுத்து, திருமணச் செலவு எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்; நீங்கள் பெண் மட்டும் தந்தால் போதும் என்று கூறும் போது, பெண் வீட்டார் சந்தேகக் கண் கொண்டு பார்க்க ஆரம்பித்தார்கள்.
வரதட்சணை கொடுத்து, சீர் வரிசைகள் கொடுத்து பெண்ணைக் கொடுத்தாலே சரியான முறையில் கவனிக்காமல் கொடுமைப்படுத்தும் இந்தக் காலத்தில் எதுவுமே வேண்டாம் என்று சொல்லக் கூடிய இவருக்குப் பெண்ணைக் கொடுத்தால் இவர் நமது பெண்ணை நல்ல முறையில் கவனித்துக் கொள்வாரா? அல்லது இவருக்கு ஏதேனும் குறைகள் இருக்குமோ? என்றெல்லாம் யோசித்து ஏகத்துவ மாப்பிள்ளைகளுக்குப் பெண் தர மறுத்து வந்தார்கள்.
வல்ல நாயனின் மாபெரும் கிருபையால் ஏகத்துவக் கொள்கை வளர்ந்து விட்ட இந்தக் காலகட்டத்தில், ஏகத்துவ மாப்பிள்ளைக்கு நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு பெண் கொடுக்க முன் வருவதை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட ஒரு நல்ல காலத்தில் ஏகத்துவ மாப்பிள்ளைகள், தங்களது மாமன் மகள், மாமி மகள், சித்தப்பா மகள், பெரியப்பா மகள் என்று இணை வைக்கும் குடும்பத்தில் சென்று இணை வைக்கும் பெண்களைத் திருமணம் முடிக்கின்றார்கள். பெண்ணின் குடும்பத்தினர் தர்ஹாவாதியாகவும், தரீக்காவாதியாகவும் ஒட்டுமொத்த குடும்பமும் பக்கா ஷிர்க்கில் மூழ்கியுள்ள குடும்பத்தில் போய் இன்று சம்பந்தம் வைக்கிறார்கள்.
இவ்வாறு இணை வைக்கும் பெண்ணைத் திருமணம் செய்யும் ஏகத்துவவாதிகளிடம், "மார்க்கம் தெரிந்த பெண்களை விட்டு விட்டு, இணை வைக்கும் பெண்களை ஏன் திருமணம் செய்கிறீர்கள்?'' என்று கேட்டால், "அந்தப் பெண் திருமணத்திற்குப் பிறகு திருந்தி விடுவாள்; அவளிடம் மார்க்கத்தைச் சொல்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்; இதன் மூலம் அவளது குடும்பத்தாரும் திருந்தி விடலாம்'' என்று தாங்கள் செய்யும் காரியத்தை நியாயப் படுத்துகின்றார்கள்.
எதற்கெடுத்தாலும் குர்ஆன், ஹதீஸ் என்றும், அல்லாஹ்வும் அவன் தூதரும் கட்டளையிட்டபடி தான் செய்வோம் என்றும் கூறக் கூடிய இந்த ஏகத்துவவாதிகள், தான் மணம் முடிக்கப் போகும் மணப் பெண் எப்படியிருக்க வேண்டும் என்று இறைவன் திருமறையில் கூறுவதை சிந்திக்க மறந்து விடுகின்றார்கள். வட்டிப் பொருட்களைச் சாப்பிடுவது, அல்லாஹ் அல்லாத வர்களுக்காக அறுக்கப்பட்டதைச் சாப்பிடுவது, பன்றி இறைச்சியைச் சாப்பிடுவது ஆகியவற்றை எப்படி ஹராம் என்று அல்லாஹ் கூறுகின்றானோ அது போன்று இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்வதும் ஹராம் என்று கூறுகின்றான்.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்!
இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவு படுத்துகிறான். (அல்குர்ஆன் 2:221)
இணை வைக்கும் அழகான பெண்ணை விட, அழகு குறைந்த அடிமைப் பெண்ணே சிறந்தவள், அவளையே நீ திருமணம் செய்து கொள் என்று இறைவன் இந்த வசனத்தில் கூறுகின்றான். இந்த வசனத்தின் அடிப்படையில், இணை வைக்கும் பெண்கள் எவ்வளவு தான் அழகானவர்களாக இருந்தாலும் அவர்களைத் திருமணம் செய்வதே கூடாது என்றாகி விடும் போது, இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் திருந்தி விடுவார்கள் என்று சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
ஏகத்துவவாதிகளே! உங்களின் இந்த வாதத்தின் அடிப்படையில் நீங்கள் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம் அல்லவா? அவ்வாறு மாற்ற மதத்தைச் சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவளும் இஸ்லாத்திற்கு வரலாம். அவளது குடும்பத்தாரிடம் மார்க்கத்தைச் சொல்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும் அல்லவா? ஆனால் இதை நீங்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். அவர்கள் நிராகரிப்பாளர்கள், அவர்களை ஒரு இறை நம்பிக்கையாளன் திருமணம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாகவே இருக்கின்றீர்கள்.
பெயரளவில் முஸ்லிம் என்று இருந்து கொண்டு, செயலளவில் வரிக்கு வரி, முழத்துக்கு முழம், ஜானுக்கு ஜான் மாற்று மதத்தவர்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடிய இந்தப் பெண்களுக்கும் இதே அளவுகோலைப் பொருத்திப் பார்க்க மறுக்கின்றார்கள். நாம் ஏன் இவர்களை விட்டுப் பிரிந்தோம்? இவர்கள், முஹய்யித்தீனே என்றும், நாகூர் ஆண்டவரே என்றும் பிரார்த்திக்கின்றார்கள். முருகா என்றழைப்பதும், முஹய்யித்தீனே என்று அழைப்பதும் அல்லாஹ்வின் பார்வையில் ஒன்று தான். அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர்.
"அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்'' என்றும் கூறுகின்றனர். "வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்'' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:18)
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் "அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்கு வார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண் பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் >39:3)
இன்ஷா அல்லாஹ் வரும் 10-06-2012 அன்று மதியம் 2-00 மணிக்கு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேரடி மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். மார்க்கத்திற்கு முரணான விழாக்களும்
வரம்பு மீறிய செலவுகளும் என்ற தலைப்பில் TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் சைய்யது இப்ராஹீம் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.









